Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 6 2

 போலிஸ் டேஷனில் இருந்து கர்ணனுக்கு  போனில் அழைப்பு  வந்தது. வர சொல்லி. எடுத்து பேசியவர்  வர்ரேன்  சார், சரி சார் என்று போனை வைத்தார்.

யோகா நான் பேச வேண்டியதை ஸ்ரீ ஜெயம்  பேசுகிறார்  என்று  கேட்டு கொண்டு அமைதியாக இருந்தார். திவ்யாவை பார்க்க   பாவம் போல  இருந்தது.  அழுது, அழுது முகம் வீங்கி ,  வேணி அடித்த கைதடம்  கன்னத்தில்  சிவந்து  இருந்தது, கழைந்த  முடியை  சரி கூட செய்யாமல்  தலை சாய்ந்து  சோபாவில் அமர்ந்து இருந்தாள்.



Advertisement

கர்ணன் வேணியிடம் போலிஸ்  டேஷன்  போகனும்  வர சொல்லி இருக்காங்க  வா கிளம்பலாம்.

Advertisement

Advertisement

யோகா நாமா  சொல்ல  வேண்டியதே  சொல்லி விடுவேம் என்று திவ்யாவின்  அருகில் வந்தார்.

Advertisement

வேணி  எதுக்கு  இப்போ  என் பொண்ணு  பக்கத்துல  வர்ரீங்க. உங்க  சங்கத்தமே  வேண்டாம்  போலிஸ் டேஷன்  போயி  எல்லாத்தையும்  முடிச்சுக்கலாம்.

ஏய்  கிளம்புடி என்று மகளை அதட்ட.

பதறியவள் வேணியை  பார்க்க. வா  போலிஸ்  டேஷன்  போய்  இந்த  தாலி  கட்டுனவன் மூஞ்சியில  எரிஞ்சுட்டு  வரலாம்  வா  என்று இழுத்தார்.

திவ்யா  எல்லாரையும்  பார்த்தவள்  என்ன  செய்வது  என்று  தெரியாமல்  முழித்தாள்.

ஸ்ரீ ஜெயம் முடிஞ்சது , முடிஞ்சு போச்சு. ஆண்டவர் கனியிடம்  சேர்த்து  வைக்க  சொன்னார்.

நளினியும் ஸ்ரீ ஜெயம்  சொல்வது  சரிதான்  நீ கொஞ்சம் யோசி வேணி என்று சொல்ல.

வேணியும், கர்ணனும்  இல்ல வேண்டாம். தெரியாத   வீட்ல  குடுக்க முடியாது. அவன் என் பொண்ணா  ஆடு, மாடு  மாதிரி கழுத்துல  தாலி கட்டி தூக்கிட்டு  போயிருக்கான்.

அவன சும்மா விட   சொல்லுறீங்களா   என்று நளினியிடமும், ஸ்ரீ ஜெயமிடம்   சத்தமாக  கேட்க.

யோகா  வேணியின் அருகில் வந்து மன்னிச்சுருக்கம்மா  எங்க  பையன்  பண்ணுனது தப்பு தான் , அதுக்காக  நாங்க  எல்லாரும் மன்னிப்பு  கேட்டுகிறோம்.

எங்க  பையனுக்கு, உங்க பொண்ண  பிடிச்சுருக்க போய் தான்  தாலி கட்டி  இருக்கான். அவன் பண்ணுனது தப்பு தான். அதுக்காக  போலிஸ்  கம்பிளைன்டு   குடுக்குறது  சரியில்லைங்க.

 எங்க ஆண்டவர் கனி உங்க பொண்ணு திவ்யாவை  நல்லா பாத்துப்பான், நல்லா படிச்சுருக்கான், 3 னு  பர்னீச்சர் கடை ஷோரும்  வச்சுயிருக்கான், சொந்த  வீடு  இருக்கு . உங்க பொண்ணா ராணி மாதிரி பாத்துப்பான், என்னைய நம்பி   உங்க பொண்ண அனுப்பி வைங்க நாங்க  எங்க மக மாதிரி நல்லா பாத்துக்குறோம்.

வேணிக்கு  யோகா  பேசியது  கொஞ்சம்  மனம்  இறங்கினாலும். என் பொண்ணு விருப்பம் இல்லாமல்  உங்க பையன் எப்படி தாலி கட்டலாம்.

“யோகா”    ஆண்டவர்கனி   முதல், முதலில்  திவ்யாவை  பஸ்சில் வைத்து  பார்த்ததை  சொன்னார், பின்பு  ஊரில் சில  முறை  பார்த்தது. அப்பறம் மீனாட்சி மகள் உயிரை காப்பற்றியதை சொன்னவர்.  உங்க மகளை ரொம்ப பிடிக்க போயி தான்  இப்படி பண்ணிட்டான்.

அப்புறம்  திவ்யாவை நீங்க அன்புவுக்கு  கல்யாணம் பண்ண பேசி  வச்சது, அவனுக்கு  தெரிஞ்சு  தான் இப்படி பண்ணிட்டான்.  உங்க பொண்ண நல்லா பாத்துப்பான், என்னைய நம்பி  உங்க பொண்ண  எங்க வீட்டுக்கு அனுப்பி  வைக்க.

  கர்ணன், நீங்க பேசுறது  சரியாமா  அந்த பையனுக்கு பிடிச்சுருந்த  போதுமா,  எங்க  பொண்ணுக்கு பிடிக்க வேண்டாமா  அப்போ  பெத்த வங்க நாங்க  ஏதுக்கு இருக்கோம்.

 ஸ்ரீ ஜெயம்  கர்ணனிடம்  கொஞ்சம்  பொறுமையா  யோசிங்க, பொண்ணு  வாழ்க்கை நீங்க  எப்படியும்  திவ்யாவுக்கு  கல்யாணம் பண்ணுவீங்க தானே அது  ஏன் ஆண்டவர் கனியாக  இருக்க கூடாது.

அதுக்காக  என் பொண்ணு  சம்மதம்  இல்லாம அவன்  எப்படி தாலி கட்டலாம்.

மறுபடியும்  முதல்  இருந்தா  ஐயோ  என்ற நளினி. இங்கே பாருங்க நான் சொல்லியிருறேன் , அதுக்கு  அப்பறம்  நீங்க ரெண்டு பேரும்  முடிவு  எடுங்க. இப்போ திவ்யா  கழுத்தில்  யாரோ  ஒரு பொறுக்கி பயலோ, ரவுடிபயலோ, இல்ல வேல வெட்டியில்லாம  சுத்திட்டு  திரியுறவன்  தாலி  கட்டி இருந்த  நீங்க சொல்லுறது சரி.

ஆனா ஆண்டவர் கனி அப்படி இல்ல. எனக்கு தெரிஞ்ச வரைக்கும்  நல்ல  பையன் தான். யோசிச்சு  முடிவு எடுங்க.

நீங்க  போலிஸ்  ஸ்டேஷனுக்கு போயி தாலி  கழட்டி  குடுத்துட்டு வந்து என்ன பண்ண போறிங்க. கொஞ்ச  நாள்  கழிச்சு  மறுபடியும்  திவ்யாவுக்கு  கல்யாணம்  பண்ணுவீங்க தானே, அத  இப்போ  பண்ணத  நினைச்சுக்கோங்க. நம்ம மாரியம்மன்  கோவிலுல  வச்சு  கல்யாணம் நடந்து  இருக்கு விதியில்லனா இப்படி  நடக்காது.

நாளைக்கு திவ்யாவை  வேறா யாருக்கோ  கல்யாணம் பண்ணி குடுக்குறீங்கன்னு  வச்சுக்கோங்க, இந்த  விசயம் அந்த பையனுக்கு தெரிய வந்த   என்ன சொல்லுவான்.   உனக்கு ஏற்கனவே  ஒருதன்  கோவிலுல  வச்சு தாலி கட்டியிருக்கான்னு  சொன்னா. பொண்ணோட  வாழ்க்கை என்ன ஆகும், யோசிங்க.

வேணியும்  கர்ணனும்  சிறிது நேரம்   யோசித்தனர்.

 யோகா நளினி கையை பிடித்து   கண்களாலே  நன்றி சொல்ல.

  எல்லாம்  நல்லதாவே நடக்கும் என்றவர்.  திவ்யாவை  எழுந்துரு  வா  என்று  ரூம் அழைத்து சென்றவர். அவளை பார்க்க நேற்று விளக்கு பூஜைக்காக  கட்டிய புடவையில் இருந்தவளை. முதல்ல  குளி, இந்த  ட்ரெஸ் மாத்து என்று    ஒரு சுடிதாரை எடுத்து கொடுத்து  பாத்ரூம் அனுப்பி வைக்க.

அவளோ நிமிர்ந்து நளினியை பார்த்தாள், அந்த கண்ணீல்  கண்ணீரை  கண்டவர்.

அழாத  தைரியமா இருக்கனும். சரியா போய் குளிச்சுட்டுவா  போலிஸ் டேஷன் போகனும் என்று அவளை அனுப்பிவிட்டு.

 வெளியே வந்து  வேணியிடம்  திவ்யா  ரொம்ப  நொந்து  போயி இருக்கா  அவளை அப்படியே  விடுங்க, அவ  வாழ்க்கையை  அவ பாத்துப்பா  கொஞ்சம் உன் மக வாழ்க்கைகாக  விட்டு கொடு வேணி.

 என்னால  முடியல நளினி, என் பொண்ணு வாழ்க்கை என்று  அழுதவரை.

ஏய் வேணி  என்று  அவரை எல்லாரும் சமாதானம்  பண்ணியவர்கள். நாங்க இங்க தானே இருக்கோம்  பாத்துக்கலாம்.

கர்ணன் அன்பு எங்கே என்று விசாரிக்க.

அவனா  நேத்து  நைட் ஆபிஸ்ல இருந்து கால்  பண்ணி வர சொன்னாங்க. அதனால நைட் கடைசி ரயிலில்  ஊருக்கு போய்ட்டான்.

திவ்யா ஒரு சுடிதார் அணிந்து ரூம்பை விட்டு  வெளியில் வந்தாள்.

 கர்ணன் வேணியிடம்  என்ன முடிவு பண்ணலாம்  என்று கேட்டார்.

 எனக்கு விருப்பம் இல்ல, நளினியும், ஸ்ரீ ஜெயமும்  இரண்டு பேரும்  சொல்லுறது நாள கொஞ்சம் விட்டு பார்க்கலாமுன்னு  தோணுது.

அப்போ என்ன பண்ணுறது.

கேச  வாபஸ்  வாங்கியிருங்க என்றவர்.

 திவ்யாவிடம்   வந்து  அந்த  பையன் பேரு…

அவள் ஆண்டவர் கனி என்று சொல்ல.

 அப்போ அவனை உனக்கு தெரியும்..

ஆமாம் என்று தலையாட்ட.

அவனா வந்து  உன்கிட்ட பேசியிருக்கானா  இல்ல நீயே போயி  அந்த பையன் கிட்ட பேசுனீயா.

நானே தான் அவங்க கிட்ட  போயி பேசியிருக்கேன்.

 அப்போ  நீதான்    அவன் கிட்ட வான்டட  போயி பேசியிருக்க.

ஆமாம் என்று தலையாட்ட…

 கர்ணனிடம்   வந்த  வேணி  அவ நமக்கு வேண்டாம்.  போலிஸ் டேஷன்லே  விட்டுட்டு வந்துருங்க. இவளா, இவ தலையில  மண் அள்ளி  போட்டுருக்க.  எல்லாம்  இவ பண்ண வேல  என்றவர், திவ்யாவை பார்த்து இனி என் மூஞ்சுல  நீ முளிக்க கூடாது என்றவர்  ரூம் சென்று விட்டார்.

அம்மா, அம்மா சாரிமா என்று  அழுதவளை  நளினியும், யோகாவும் சமாதானம் பண்ணினார்கள், போலிஸ்  ஸ்டேஷனுக்கு  கர்ணன், ஸ்ரீ ஜெயம், யோகா திவ்யா என நான்கு  பேர் சென்றனர்.

போலிஸ் டேஷன்  வெளியே  ராமாசுப்புவும்,  பெரியசாமியும்  நின்று யாருக்கோ போன் பேசி கொண்டு  இருந்தனர்.

இவர்கள் வந்ததை பார்த்து அருகில் வந்தவர்கள்.

யோகாவிடம்  எல்லாம்  சொல்லிட்டீயா.

சொல்லிட்டேன் மாமா என்றவர். கர்ணனை பார்க்க.

அவரோ கேச வாபஸ்  வாங்கிக்கிறேன் என்றவர். போலிஸ் டேஷன்  உள்ளே  சென்றார். அவரின் பின்னே திவ்யாவும் சென்றாள்.

கர்ணன்  போலிஸ்கரரிடம் கேசை வாபஸ் வாங்க  எழுதி கொடுத்தார்.

சரி என்று அவரிடம்  எழுதி வாங்கியவர்கள்.

திவ்யாவிடம்  நீங்க விருப்பபட்டு தான்,  ஆண்டவர்கனியை கல்யாணம் பண்ணேன்னு எழுதி சைன் பண்ணுங்க என்று  போலிஸ்காரர்  ஒரு பேப்பரை தர.

அதை வாங்கியவள், அவர் சொன்ன படியே எழுதி தந்துவிட்டு யோகாவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

கர்ணன்  போலிஸ் டேஷனில் எல்லா வேலை முடித்து விட்டு, மகளை பார்க்காமல், ஸ்ரீ ஜெயமிடம் சேர்ந்து  வீட்டுக்கு செல்ல பார்க்க. அப்பா , அப்பா என்று பின்னாடியே வந்த மகளை ஏர்யெடுத்தும் பார்க்காமல் சென்றுகொண்டிருக்க,  ஸ்ரீ ஜெயம் தான்  திவ்யாவிடம் எல்லாம் சரியாகும்  வருத்தப்படாத டா  உனக்கு  ஏதாவது  உதவியின்னா  சித்தப்பாவுக்கு போன் போடு என்று  கர்ணனுடன் சேர்ந்து சென்று விட்டார்.

தன்னை எல்லாரும் வெறுக்கும் அளவிற்கு நான் என்ன செய்தேன். தன்னிடம்  ஒரு வார்த்தை பேசாமல் போகும் தந்தையை பார்த்து இருந்தவள், ஒரு முடிவு எடுத்தவளாக.  பக்கத்தில் நின்று இருந்த யோகாவிடம்  நான் வர்ரேன் ஆண்டி என்று கிளம்பபோனவளை,

எங்கே போறமா  உங்க வீட்டுக்கா.

எங்கேன்னு  தெரியல  ஆண்டி, ஆன!   உங்க  கூட  வர மாட்டேன், எங்க  வீட்டுக்கும்  போக மாட்டேன் என்றவள்,

அந்த  வழி போன  ஆட்டோவில் ஏறி சென்று  விட்டாள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!