Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 21

கீதம் 💜 21

காலையில் பொழுது புலர்ந்தும் எழும்புவதற்கு சோம்பல் பட்டு, வெறுமனே சுகமாய் பக்கத்தில் முகம் காட்டி மூச்சு காற்று நெற்றியில் உரச, படுத்து கொண்டிருந்தவன் கன்னத்தை வருடி, அவன் மீசை ஓரத்தை வருடி விட்டு , கையால் முத்தம் கிள்ளி ” சோ ஸ்வீட், மை டார்லிங், மை லவ் ” ரசித்து கொண்டிருந்தாள்.



Advertisement

 இரவு முழுவதும் அவளும் உறங்காமல், அவனும் உறக்கத்தை தொலைத்து, அவளுக்காக பார்த்து பார்த்து செய்ததை கண்டவள் மனம் கனிந்து லயித்தது. தன் வாழ்வின் அடுத்த கட்டம் அவனோடு மகிழ்ச்சியாய் நகர்வதை எண்ணி, மெதுவே ஒருக்களித்து படுத்திருந்தவளுக்கு வயிற்றில் பசி எடுக்க ஆரம்பித்தது.

Advertisement

மாமியார் இருந்து இருந்தால் டீ போட்டு வைத்திருப்பார்கள். போனதும் குடிக்கலாம். அவர் ஊருக்கு சென்று விட்டதால் தானே சென்று போட வேண்டுமே என சோம்பேறித்தனப்பட்டு பக்கத்தில் படுத்து இருந்த ஜீவனை மெதுவே தோளை தட்டி எழுப்பினாள்.

Advertisement

” ராஜேஷ்.., ராஜேஷ்.., அவளின் குரலில் புரண்டு படுத்தவன் கண்ணை கூட திறந்துபார்க்காமல் அழிச்சாட்டியம் செய்ய

Advertisement

” டேய்!, எந்திரிடா ” என அடித்து எழுப்பினாள்.

” என்னம்மா., நைட் புல்லா தூங்கவே விடலை. காலையிலேயே ஏன் இப்படி எழுப்புற? ” கொட்டாவி விட்டபடி கண்ணை கசக்கி கொண்டு கேட்டான் ராஜேஷ். IT கம்பெனி ஒன்றினை திறன்பட நடத்தி கொண்டிருக்கும் அழகன். ஒரு வருடத்திற்கு முன் தாலியை கட்டி அவளுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த உத்தமன்.

” நானும் தானே தூங்கலை. உனக்கு மட்டும் எப்படி தூக்கம் வருது. எந்திரிடா. ” அவளின் அதட்டலில்

” இப்போ எந்திரிச்சு என்ன பண்ண போறோம். பேசாம படு. ஏழு மணி போல் எந்திரிக்கலாம். சமாதானம் செய்தவனை கோபமாய் பார்த்தவள்.

” எனக்கு பசிக்குது., எந்திரிச்சி டீ போட்டு கொடு.., ” என்ற உடனே

” சாரிடா., பசிக்குதா ., இரு ரெண்டு நிமிஷம் டக்குனு போய் சட்டுனு போட்டு கொண்டு வரேன்..,” விழுந்தடித்து கொண்டு ஓடியவனை வாஞ்சையாய் பார்த்து கொண்டிருந்தாள் தர்ஷி..,

அவளின் மருத்துவமனைக்கு அருகில் தான் இவனது அலுவலகமும் இருக்க, அடிக்கடி நடந்த தற்செயல் சந்திப்பில் இவனை பிடித்துவிட, ஆரவிடம் சொல்லி தன் லவ் மேரேஜ்யை, பெற்றோர் சம்மதத்துடன் அரேஜூடு மேரேஜ் ஆக மாற்றிவிட்டாள்.

மாமியார் அருமையான குணம். மகள் போல இவளை தாங்கி கொள்கிறார். பணக்காரன் என்ற பகட்டு சிறிதும் இன்றி அனைவரிடமும் சிரித்து பேசி பழகும் குணம் கொண்டிருப்பதாலேயே இவளுக்கு அவனை மிகவும் பிடித்தது.

அவள் காதலின் பரிசு வயிற்றில் எட்டு மாத கருவை சுமந்து கொண்டு, தாய்மையின் அழகில் மிளிர்ந்து கொண்டு இருக்கிறாள். இரவில் நித்திரை என்பதே சுத்தமாக இப்போது இல்லை. எப்போது தூக்கம் வருமோ அப்போது சிறிது ஓய்வு. நேரம் காலம் பார்க்காமல் பசியும் வருகிறது.

அவள் தூங்காமல் முழித்து கொண்டு இருப்பதால் இவனும் பேசி கொண்டே இரவில் நெடு நேரம் கழித்தே உறங்குவது வழக்கம்.

அவளின் நினைவை கலைக்கும்படி பட்டென உதை விழுந்ததில் ” ஸ்.. ஆ.அம்மா! ” வயிற்றில் கை வைத்து மெல்ல கத்தியவள்

” டேய் செல்லம்! பசிக்குதா, புட் பால் விளையாட ஆரம்பிச்சுட்ட. கொஞ்சம் வெயிட் பண்ணு. அப்பா வந்த உடனே நம்ம டீ குடிப்போம் ” வயிற்று பிள்ளையோடு பேசி கொண்டிருந்தவள் அருகில் வந்தவனோ.,

 ” மெதுவா எந்திரிமா..,” அவளின் தோளை மெல்ல தூக்கி தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டு அவள் எழும்புவதற்கு உதவி செய்தான்.

” டீ குடி., அப்போ தான் டயர்ட்நெஸ் குறையும் . “அவளின் கையில் கோப்பையைத் திணித்து விட்டு ” இன்னும் கோல்ட் இருக்கா., வீவர் எதுவும் இல்லையே ” என்றவன் அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்து ” ஒன்னும் இல்லை., கொஞ்சம் ரெஸ்ட் எடு. இன்னைக்கு ஓபி பார்க்க வேண்டாம். ” என்றான்.

” வர வர பாதி நாள் நானே போறதில்லைனா எப்படிடா ரன் பண்ண முடியும்? நான் கிளம்புறேன் ” என்றாள் சலித்து கொண்டு.

” அதுலாம் நான் போய் மத்த வேலை எல்லாம் சேத்து பார்த்துகிறேன். ஓபியை வேற டாக்டர் மாத்தி பார்க்க சொல்லுவோம். இனிமே போக வேண்டாம்.”

” எனக்கு ஒன்னும் இல்லை. மழை வந்ததால் கோல்ட் . அவ்வளவு தான்.”

” நேத்தே அம்மா சொன்னாங்க கேட்டா தானே, ஐஸ் கேக்கு வேணும்னு அடம்.., இதுல பாட்டு வேற பாடுற.,”

” நான் என்ன பாடுனேன்., நீங்களா தானே ஆசையா வாங்கிட்டு வந்திங்க..,’

” மழை ஓரம் வீசும் காத்து, மனசோடு பாடும் பாட்டு கேக்கு தா., கேக்கு தா., னு மழை வந்தவுடனே நீ தானே பாடுன., அதான் கொண்டு வந்து கொடுத்தேன்.

என் பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டு நான் வாங்கி தராம இருப்பேனா., ” என்றான் ராஜேஷ்.

” அச்சோ.., என் செல்லத்துக்கு என் மேல என்ன பாசம்., ” நெட்டி முறித்தவளை கண்டு.,

” ஓய் , டாபிக்க மாத்தி தப்பிக்க பார்க்குறியா.., இனி போக கூடாதுன்னு கூடாது தான்.,” இவர்களின் செல்ல சண்டைக்கு நடுவே போனின் அலறல் கேட்டவுடன் எழுந்து அதை சென்று எடுத்தாள் தர்ஷி..,

” டேய்.., மச்சி.., குட் மோர்னிங் ” என கத்த போனவள் குரல் அடுத்தடுத்து வந்த தும்மலால் பேச முடியாமல் போனது. இத்தனை நேரம் அவனோடு பேசி கொண்டிருந்ததில் கொஞ்சமாக சரியான கோல்ட் மீண்டும் படுத்தி எடுக்க தொடங்கிவிட்டது.

” என்னம்மா ஆச்சி.., ” என்றவன் அங்கு பதற.,

” மச்சினு ஆன் பண்ணாலே மச்சான் தானே, கொடு நானே பேசுறேன்..,” என்றபடியே போனை கையில் வாங்கி கொண்டு ” மச்சான்., என்ன பண்ணுறீங்க.., ” என்றான் ஆரவ்விடம்.

” ஹ்ஹ்ம்., ரெடி ஆகி சாப்பிட உட்கார போனேன்., இவட்ட பேசாம கிளம்பிட்டேன்னா திட்டுவாளே. அதான் கால் பண்ணேன். என்னாச்சு அவளுக்கு? திடிர்னு எப்படி கோல்ட் வந்தது. நேத்து பேசும் போது கூட நல்லா தானே இருந்தா ? என்றான்.

” லொட லொடன்னு பேசிட்டு இருக்கிற பொண்டாட்டி கொஞ்ச நேரம் பேசாம இருக்குறாளேன்னு நானே சந்தோஷத்தில் இருக்கேன். நீங்க வேற ” என்றான் நக்கலாய்.

” பாத்து ராஜேஷ், நாளைக்கு அதெல்லாம் சேர்த்து வச்சு பேசுவா., என இவனும் கலாய்க்க.

” டேய்! ., நான் பேச முடியாம இருந்தா.,” அதற்குள் ஹஸ்.., ஹஸ்., என்று தும்மல் வர பக்கத்தில் இருந்த தலையணையை தூக்கி அவன் மேலே அடித்தாள்.

” பேச்சு பேச்சா இருக்கணும். நோ வயலென்ஸ் ஓகே .., ” என்று சமாதான புறாவை பறக்க விட்டு அவள் அருகில் சென்று ராஜேஷ் அணைக்க.

அவளின் டேய்! என்ற கத்தலில் நேற்றைய இரவு நந்திதா நடந்து கொண்டவை இவன் முன் வந்தது. அவளும் கோபம் வந்தால் டேய்னு தானே கூப்பிடுவாள். அவளின் நினைவில் இவன் மௌனம் சாதிக்க.,

” பாரு., நீ பண்ண அழிச்சாட்டியதில் மச்சான் போனை கட் பண்ணிட்டாங்க போல .,” என்றவன் போன் கனெக்சன் ஆனில் இருக்க., “ஹலோ மச்சான்., ஹெலோ., “என மீண்டும் கத்தியதில் சுய உணர்வு பெற்றவன்

” சாரி.,லைன் ப்ராப்ளேம்.., அவ டேப்லெட் போட்டாளா .., ?” என்றான் பொறுப்பான நண்பனாய் மாறி.

” ம்ம்ம்., நைட் போட்டா., இப்போ கொஞ்சம் பரவாயில்லை. நேத்து திடிர்னு செம மழை. கிளைமேட் சேன்ஞ் ஆனது அவளுக்கு சேரல போல. நீங்க கவலை படாதீங்க, நான் பார்த்துகிறேன். ” என்றான் கனிவாய்.

” டேக் கேர். அவளை பார்த்துக்கோங்க. நான் டூ டேஸ் கான்பிரென்ஸ் போறேன். பேச முடியாது. சொல்லிருங்க அவகிட்ட. “

” பொண்டாட்டி தொல்லை இல்லாம ஜாலியா என்ஜோய் பண்ணுங்க., நான் தான் மாட்டிகிட்டு முழிக்கிறேன்.” குறும்புடன் கண் சிமிட்டி சொல்ல.

” ஜாலியா.., நானா! ஹா… ஹா.. ” என சிரித்தவன் கையில் தீஞ்சு போன பிரெட்ட உட்கார்ந்து தின்னுட்டு இருக்கேன். இதுல என்ன ஜாலி “. என்றான் வேடிக்கையாய்.

” உங்களை யாரு மச்சான் கல்யாணம் பண்ணாம ஓடி போக சொன்னது? பண்ணிட்டு ஓடி போயிருந்தா இந்த கஷ்டம் இருக்குமா..,?” ராஜேஷ் கேட்டா கேள்வியில் அவள் தான் மீண்டும் கண் முன்னாள் வந்தாள். போலாமே.., என சிரித்து கொண்டே பாடிய முகம் கண்ணில் தெரிய பேசா சிற்பம் ஆனான்.

“!!!”

“ஹெலோ !”

“!!!”

அவனின் பதில் சொல்லா நிலையினை கண்டு ” என்னப்பா அப்போ அப்போ உன் மச்சி இன்னைக்கு ப்ரிஸ் ஆகி நிக்கிறாரு , எங்காவது வசமா சிக்கிட்டாரு போல ” என்றான் கேலியாய் தர்சியிடம்.

” ஹலோலோலோ ” காது ஜவ்வு கிழிய கத்த அப்போது தான் சுயம் பெற்றான்.

” சாரி.., எல்லாம் எடுத்து வச்சிட்டே பேசிட்டு இருக்கேன். அடுத்து பேசலாமே ..,” என கட் செய்தவன் முகத்தை கைகளால் மூடி நெற்றியிலிருந்து கொண்டு வந்து ஆசுவாசமாய் மூச்சு விட்டான்., ” என்ன இன்னைக்கு அவளை நினச்சு நினச்சு நிற்க ஆரம்பிச்சேட்டேன். முத்தி போச்சு போல. எப்படி என்கிட்டே வருவ” என சிறிது நடை பயின்றவன் சற்று மனம் லேசாகி, பின்னே தான் கிளம்பி வெளியே சென்றான்.

அங்கோ தர்ஷியிடம்., ” ஏய்., அவருக்கு ஒரு கல்யாணம் பண்ணி அனுப்பி இருக்கலாமே. பாரு மனுஷன் தவிச்சுட்டு நிற்கிறார். நீ தானே இத பார்க்கணும். என்னடா பண்ணலாம்., ” என்றவாறே ஆலோசனை செய்ய ஆரம்பித்து விட்டனர் இருவரும்.

” ம்ம்., நான் சொன்னா அவன் எங்க கேக்குறான்., நம்ம கல்யாணத்துக்குனு நாலு நாள் ராம்நாடு வந்தவன், அடுத்து எட்டி கூட பார்க்க மாட்டேன்குறான். போன செம் லீவுல கூட வரல. ரம்யாக்கு லீவு விட்டதும் அவங்கள அங்க வர சொல்லிட்டேன். என்னை பார்க்க கூட இன்னும் வரல. கேட்டா படிப்பு, வேலையாம். ஏன் தான் இப்படி இருக்கனோ.,? ” அவனோடு இருந்தவள் அவனை காண முடியா நிலையில் பாசத்தில் தவிக்க.

” ஒன்னு பண்ணுவோம்., நாளைக்கே ஊர்க்கு போவோம்., அம்மா ஒரு பொண்ணு சொன்னாங்க தானே., அவங்கட்ட பேசி முடிச்சு இந்த லீவுல கல்யாணம் பண்ற மாதிரி பிளான் எல்லாம் போட்டுருவோம். நீ அத்தைகிட்ட பேசு. ” முடிவாய் ராஜேஷ் சொல்வதை கேட்டவள் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

 அவளும் இவன் திருமணம் செய்ய வேண்டும் என எத்தனை முறை சொல்கிறாள். கேட்காமல் தட்டி கழிப்பவனை இப்படி தான் மாட்டிவிட வேண்டும் என முடிவு செய்து ” அம்மா.., என்ன பண்ணுறீங்க., ” என அப்போதே பேச்சை தொடக்கி விட்டாள்.

 யாரின் நினைப்பு யாரை வெல்லுமோ.,? கொல்லுமோ? யாரறிவார்?

நந்திதாவோ இரவு முழுவதும் அவனை எண்ணி தவித்தவள், காலையில் வேலைக்கு வந்தும் அவன் தன்னை கண்டு கொண்டால் தன் தவிப்பு அவனை எட்டிவிடும் என கேமரா ஸ்விட்சினை ஆன் செய்யவே இல்லை. பணிகளின் மத்தியில் தவிப்போடு தொடர்ந்தாள்.

” மேடம்!. உள்ளே வரலாமா.,? கேட்ட குரலில் தலை உயர்த்தி பார்த்தவள்

” உள்ள வாங்க .,., ஏன் பெர்மிஷசன் எல்லாம் கேட்டு வெளியே நிற்குரீங்க., ” கந்தன், மற்றும் கையில் ஒரு வயது மகனோடு புன்னகை முகமாய் உள்ளே வந்தாள் குடிகார கணவனுக்காக கையை வெட்டி கொண்ட பெண். திருந்திய கணவனோடு மகிழ்வாய் வாழ்ந்ததில் பத்து வருடங்கள் கழித்து மகனும் பிறக்க உற்சாகமாய் வலம் வருகிறார்கள்.

” ரமேஷ் செல்லம்! எங்க வந்திங்க., ? என்றவள் கொஞ்சலில் முகத்தை தாயின் கழுத்தில் தேய்த்து கொண்டு, மெதுவே முகம் பார்த்தவன் சிரித்தான்.

” என்ன அண்ணா! எப்படி வேலை எல்லாம் போகுது. ” என்றவளிடம்

” ஜோரா போகுதுங்க மேடம். என் ஊருல நிறைய பேரு அங்க வேலைக்கு சேர்ந்துட்டாங்க. நல்லா இருக்கோம். “

சிறிது நேர நல விசாரிப்புகளுக்கு பிறகு.

‘ மேடம்., எங்க ஒன்னு விட்ட அக்கா ஒருத்தங்களுக்கு ரொம்ப நாளா குழந்தையே இல்லை. அவங்களுக்கு தத்து பிள்ளை எடுத்து வளர்க்க ஆசை. டாக்டர் சார் கிட்ட கேட்டோம். அவரு உங்களை பார்க்க சொன்னாரு..,” என்றான் கந்தன்.

“ஓ., அவங்களுக்கு என்ன வயசு ஆகுது?”

” நாற்பது, நாற்பத்தஞ்சு கிட்ட இருக்கும். ஏம்மா.,?”

” ஓகே. ஏன் கேக்குறேன்னா தத்து எடுத்துட்டு சில பேர் வளர்க்க முடியாம திருப்பி கொண்டு வந்து விடுறாங்க . இவங்க அப்படி பண்ண மாட்டாங்கன்னு உறுதியா தெரிஞ்சா தான் அவங்க கிட்ட குழந்தையை கொடுப்பாங்க. இல்லைனா நானே வாங்கி தர மாட்டேன். “

” அவங்க நல்லா பார்த்துப்பாங்க. ரொம்ப நாளா பிள்ளை இல்லாமல் தவிச்சுட்டு நிர்க்குறாங்க., தயவு பண்ணி உதவி பண்ணுமா., உனக்கு புண்ணியமா போகும். ” கந்தன் கெஞ்சி கேட்க.

” சரி. திங்கள் கிழமை காலையில் அவங்கள கூட்டிகிட்டு வாங்க. நான் பார்த்து பேசிட்டு திருப்தியா தெரிஞ்சா மட்டும் தான் உதவி பண்ணுவேன். இது குழந்தை விஷயம். சட்டுனு எல்லாம் முடிவு எடுக்க முடியாது அண்ணா.’ மேலும் பல விஷயங்களை கூறி அவர்களை அனுப்பி வைத்தவள் மணி பார்க்க எட்டு மணி என்று காட்டியது. கிளம்பி வீட்டுக்கு சென்றவளை இரு கண்கள் மேலிருந்து அவள் வீட்டுக்குள் செல்வதையே பார்த்து கொண்டே நின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!