Skip to content
Post Views: 1,170
” உன்னை உயிராய்
நினைத்ததால் தானே
உதறி செல்கிறேன் !
உயிருக்கு உயிர் தந்த
என் தந்தையின்
ஆசைக்காக
ஆத்மாவிற்காக
என் உயிரையும்
கொடுத்து பிறர்
உயிரை காப்பேன்!
எனக்கென்ன ஆனாலும்
தாங்குவதற்கு
மனதும் உள்ளது !
உடலில் வலுவுமுள்ளது !
கண் முன்னே
என்னால் உன்
கைகாயம் கண்ட பின்பு,
கதறி துடித்தேனடா !
விலக நினைத்தேனடா !
உயிரில் கலந்த
உணர்வு நீ !
உன் உடலில்
கொட்டிய குருதியில்
என் மொத்த உயிரும்
உறைந்ததடா !
உனக்காக மட்டுமே
உன்னை நீங்க
துடிக்கிறேன் !
துடித்தாலும்
அழிந்தாலும்,
என்னையே
அழித்து கொண்டாலும்
நீ மட்டும் இருக்க
வேண்டுமடா !
சந்தோசமாய் !
உனக்காக எரியும்
என் காதல் ஜோதியில்
காதலும் நீயே !
நெருப்பும் நீயே !
ஜுவாலையும் நீயே !
சாம்பலும் நீயே !
எரிய நினைத்தேன்.
அணைக்க வருகிறாயே !
நீ சொன்ன வார்த்தைகள்
ஒவ்வொன்றும் என்
மனதை குளிர்விக்கிறது !
அகத்தை நிறைக்கிறது !
என் மொத்த உயிரையும்
உன்னோடு எடுத்து கொண்டு
என்னை பிணமாக்கி
சென்றுவிட்டாயடா !
நீ வரும் வரை
உன் பார்வைக்காக
நானும் காத்திருப்பேன்
நாளும் தவமிருப்பேன்.
பிரிந்தவனே !
புரிந்து கொள் !
புரிந்தவனே !
வந்து விடு !அவனை பிரிந்து வருந்திய நாட்களில் மனம் நொந்து எழுதிய கவிதையை இரவு படித்து பார்த்தவள், அதையே நினைத்து கொண்டிருந்தாள். மனமோ இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்திட வேண்டும். உனக்கு மட்டுமே சொந்தமான என் காதலை யாருக்கும் கொடுத்திட மாட்டேன். விட்டு தரவே மாட்டேன் மனதில் உருப்போட்டு கொண்டு அன்றைய இரவையும் உறங்காமல் போர்வைக்குள் கழித்தாள்.
பக்கத்து அறையில் லைட் எரியும் வெளிச்சம் கண்ணில் பட போர்வையை விலக்கி, மணியை பார்த்தாள். விடிகாலை நான்கு மணி என்றது. ” வர வர சத்தம் காட்டாம எந்திரிச்சு போறானே..,” என்றபடியே எழுந்தவள் அவனை நோக்கி அறைக்குள் நுழைந்தாள்.
” வைபவ், என்னடா அதுக்குள்ள எந்திரிச்சிட்டா,” அவனின் தலையை வருடி மெல்லிய குரலில் கேட்க.
Advertisement
” ஸ்ரீ கா, நீயும் ஏன் எந்திரிச்ச, உனக்கு டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு தானே சைலன்டா வந்தேன்.” அக்காவின் தூக்கத்தின் மேலுள்ள அக்கரையில் அவன் கவலைப்பட.
” அதெல்லாம் நீ பக்கத்துல இல்லைனா எனக்கு தெரிஞ்சுரும். அதுக்குள்ள என்னடா நல்ல பிள்ளையா படிக்க உட்கார்துட்ட.,? ” தலையை கலைத்து விளையாடியபடி கேட்டவளை கண்டவன்
” ஆமாம்க்கா., இந்த வருஷம் போர்டு எக்ஸாம்ல. நான் நிறைய மார்க் வாங்கனும்னா காலையில் எந்திரிச்சு படிக்கணும்னு சார் சொன்னாங்க. அப்போ தான் நல்ல மார்க் எடுத்து ஸ்கோலர்ஷிப்ல பிரீயா படிக்கலாம்னு சொன்னார். அவரு மட்டுமில்ல வள்ளுவரே சொல்லி இருக்காரு ஸ்ரீகா.”
Advertisement
” அவரு என்ன சொன்னாரு? ” தெரியாதவள் போல இவள் கேள்வி கேட்க.
Advertisement
” கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
ஒருத்தங்க நல்லா படிச்சு முன்னேறி, அதன் படி நடக்க ஆரம்பிச்சா, யாரு தயவையும் எதிர்பார்க்காமல், சொந்த கால்ல தனிச்சு நிற்கலாம்னு சொல்லி இருக்காரு. நானும் அப்படி தான் வாழ போறேன் என்ற தம்பியை ஆச்சரியமாய் பார்த்தாள். இத்தனை தெளிவு வந்துவிட்டதே. இனி அவனை பற்றிய பயமில்லை என்ற நிம்மதியில்
” பாருடா உங்க சார் நிறைய நல்ல விஷயம் எல்லாம் சொல்லி தர்றாரே. அது படியே நட. “அவன் உச்சியில் முகர்ந்து முத்தம் கொடுத்தாள் .
Advertisement
” சரி. நீ படி, “சமையல் அறைக்கு செல்ல திரும்பியவளின் அருகே வந்தவன் அவள் இடுப்பை பற்றி கொண்டு ” அக்கா நீ இப்போ எல்லாம் நிம்மதியா தூங்கி ரொம்ப நாளாச்சு. உன் சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம். எங்கள நினச்சு நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்குவேன் அம்மாவை. ” அவளின் முகத்தை அண்ணாந்து பார்த்து சொன்னவனை கண்டவள் முகமோ அவனின் பாசத்தில் கரைந்தது.
அவனின் பதிலில் விரிந்த இதழில் சன்ன சிரிப்பு எட்டி பார்க்க.” என் தம்பி பெரிய மனுஷன் ஆகிட்டானே.,” அவனின் கன்னத்தை தட்டியவள் ” நல்லா படி ., அக்கா உனக்கு போய் டீ போட்டு கொண்டு வரேன்..”
இவன் கூட எல்லாத்தையும் புரிஞ்சிக்க கத்துக்கிட்டான். இனி லைவ்வை ஈஸியா சமாளிச்சுரலாம் என மனதில் எண்ணி கொண்டு, அவனுக்கும் டீயை கொடுத்து அமர்ந்து அவனுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள். இவர்களின் சம்பாஷணையை கேட்டு கொண்டிருந்த தாய் மனமோ அவர்களை எண்ணி மனம் நிறைந்து, ஆனந்த கண்ணீரில் கண்கள் கலங்கியது.
விடிந்த பின்னும் குளிக்க கிளம்பாது யோசனையாய் அமர்ந்து இருந்தவளை தட்டி, ” ஸ்ரீ, உன்னை யாரு இன்னைக்கு சீக்கிரம் எந்திரிக்க சொன்னது. போய் கொஞ்சம் தூங்கி எந்திரி. போ .., ” என்றவரை உற்று நோக்கியவள்
” டெய்லி எந்திரிக்க மாட்டேன்னு திட்டுவ., இன்னைக்கு என்ன புதுசா தூங்க சொல்லுற? “
” நல்லா தூங்கி எந்திரிச்சா தானே முகம் அழகா தெரியும். பாரு., டல்லா தெரியுது.. “
அவரின் பதிலில் கடுப்பை பார்த்தவள் ” அவனுக்கு என் மூஞ்சை பிடிச்சா என்ன? பிடிக்காட்டி என்ன? , கல்யாணமா நடக்க போகுது?.” அழுத்தி கேட்டாள்.
” இந்தாருடி, காலையில அபசகுனமா பேசாத.., பேச்சை பாரு. நானே இருக்கிற சாமிக்கு எல்லாம் வேண்டிட்டு இருக்கேன். கிளம்புடி.,” என்றவர்
அவள் குளித்து சுடிதாரை அணிந்து வர அதற்கும் ” அழகா சேலையை கட்டிட்டு வராம, இதென்ன இப்படி கிளம்பி வர ” முகத்தை சுளிக்க .
” அம்மா., ஏதாவது சொல்லிகிட்டே இருந்தா நான் வரவே மாட்டேன். சும்மா தானே பார்க்க வராங்க. அந்த மூஞ்சுக்கு இது போதும். ” அழிச்சாட்டியம் செய்து தான் இவளும் கிளம்பி கோயிலுக்கு வந்தாள்.
இதோ சொன்னப்படி அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு வந்துவிட்டனர். சயன கோலத்தில் காட்சி தரும் சாமியை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் ஜனசந்தடி இல்லாத இடத்தில் சென்று அமர்ந்து இருந்தனர். ” கொஞ்சம் லேட்டாகும்னு சொல்லிருக்காங்க. வெயிட் பண்ணுவோம். ” என்றபடி அமர்ந்தார் சுகந்தி.
யாரென நேற்றே கேட்டதற்கும் ” ஏன் வந்த தரகரை எல்லாம் பத்திவிட்ட மாதிரி இவங்கட்டையும் போய் வேணாம்னுன்னு சொல்ல நினைக்கிறியோ.? அதெல்லாம் நடக்காது. நாளைக்கு நேரில் பார்த்து யார் என்னனு நீயே தெரிஞ்சிக்கலாம். வெயிட் பண்ணு ” என்ற தாயை வெட்டவா, குத்தவா என முறைத்தவளை கூட நக்கலாய் பார்த்து நகர்ந்து விட்டார்.
” நீ என்ன சண்டித்தனம் பண்ணாலும் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேன். அவனுங்க வரட்டும். கேட்கிற கேள்வியில் துண்டை காணோம், துணிய காணோமுனு பத்தி விரட்டிவிடுறேன் பாரு ” என மனதில் சங்கல்பம் பூண்டு கொண்டு அமைதியாய் அமர்ந்து இருப்பதை போல நடித்து கொண்டு இருந்தாள்.
அவர்களை நோக்கி டாக்டர் பேமிலி வந்து கொண்டு இருந்தனர்.
” அம்மா. நான் யாரையும் கூப்புட கூடாதுனு சொன்னேன் தானே. சார் வந்தா ஒன்னும் சொல்லமா தலையாட்டுவேன்னு தப்புக்கணக்கு போட்டுட்டியா? உன்னை விட அவர்க்கு என்னை நல்லா புரியும். நான் சொல்றத தான் கேப்பாரு” என்ற மகளிடம் ஒன்றும் கூறாமல் மழுப்பலாய் சிரித்தார்.
ரவி, சாவித்ரி, ரம்யா உடன் நிறைமாத வயிற்றை தள்ளி கொண்டு நடக்க முடியாமல் மெதுவே நடை போட்டுவைத்து கொண்டிருந்தாள் தர்ஷி. இரு நாட்களுக்கு முன்பே அவள் வீட்டிற்கு வந்தது தெரியும், ஆதலால் நட்பாய் மெல்லிய புன்னகை சிந்தினாள் நந்திதா.
அவளும் முன்புறுவல் பூத்து, இவள் கைகளை வந்து பற்றி கொண்டு நின்றாள். தாய்மையின் பூரிப்பு அவளை இன்னுமே அழகாய் காட்டியது. இடது புறத்தில் ரம்யா வந்து நின்று கொண்டாள்.
” வாங்க சார். இன்னைக்கு OP பார்க்கலையா , கோயிலுக்கு வந்து இருக்கீங்க..?,” என்றபடி எப்போதும் போல பேசினாள்.
” ஊருக்கே ராஜாவா இருந்தாலும் என் பையனுக்கு நான்தானேம்மா பார்க்கணும். இன்னைக்கு அவன் கல்யாண விஷயம் பத்தி பேச வந்து இருக்கோம். அதான் லேட்டா போவேன்…,” சிரித்தபடி பதில் சொன்னார் ரவி.
அவனுக்கும் திருமணமா? என இமை மீறி வர துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு, ஒரு நொடி மனம் கலங்கியவள், சாவித்ரி புறம் திரும்பி ” மேம், உங்க ரொம்ப நாள் ஆசை நிறைவேற போகுதே. ரொம்ப சந்தோஷம் ” என்றாள் மனதை கல்லாக்கி கொண்டு.
” ஹ்ம்ம்., என் மனசுக்கு ஏத்த மருமக எனக்கு கிடைச்சிட்டா., ரொம்ப சந்தோசமா இருக்கு., நல்லா படிச்சி இருக்கா., அவனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா., அழகாவும் இருக்கா., இதை விட என்னம்மா வேணும்.” பெண்ணின் புகழை சாவித்திரி கூறுவதை கேட்டு
” ம்ம்ம்”, என தலையாட்டி வைத்தாள்.
” தம்பிக்கும் பொண்ணை பிடிச்சிருக்கா? ” என சுகந்தி கேட்க.
” ஹ்ம்ம்., அவனுக்கு பொண்ணை ரொம்ப புடிச்சி போச்சு. அடுத்த முகூர்த்தமே கல்யாணம் வைக்க சொல்லிட்டான். அவன் வந்து பார்த்து பேசணும்னு எந்த சம்பிரதாயமும் பார்க்க வேண்டாம். எங்களையே பேசி முடிங்க. நான் வந்து தாலியை மட்டும் கட்டுறேன்னு ஆரவ் ஓகே சொன்னதுக்கு அப்புறம் தானே வந்தோம் ” என இன்னும் அவளின் பிபியை கூட்டினாள் தர்ஷி.
” அழகான தேவதையை கட்டிக்க யாருக்கு தான் கசக்கும். எங்க அண்ணி மட்டும் ஓகேனு ஒரு வார்த்தை சொல்லட்டும். இப்போவே நான் அவங்கள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவேன்.” ரம்யாவின் பதிலில் இவள் காலில் வியர்வை ஊற்றாய் பெருகியது.
” உங்க பையனை கட்டிக்க யாருக்காவது கசக்குமா., அழகு, அறிவு, கம்பிரம், ஆஸ்தி, அந்தஸ்த்துன்னு எல்லாம் நிறைஞ்ச மகராசன். அவரை வேணாம்னு ஒரு வார்த்தை சொல்லட்டும், நானே சண்டை போட்டு கட்டி வச்சிருவேன்.” என்ற சுகந்தியின் பதில் கூட இவளின் காதுக்கு ஏறவில்லை.
அனைவரும் மாறி மாறி பேசி கொண்டு இருக்க, சுற்றம் மறந்து நின்றவளுக்கோ எதுவும் உணர முடியா நிலை. அவன் திருமணத்துக்கு சம்மதித்து விட்டான் என்ற வார்த்தையை கேட்டதுமே, இவள் தன்னிலையிலேயே இல்லை. இந்த பூமி பிளந்து உள்ளே சென்று விட மாட்டோமா என அந்த நொடியே நினைத்து விட்டாள். தன் கையை விட்டு அவன் போகின்றானே என்ற சிந்தனையே அவளை கட்டி போட்டுவிட்டது.
அவனுக்கு வேறு பெண்ணை மணம் புரிய சொன்னது அவனை பற்றி தெரியா பொழுதில். இப்போது அவன் நினைவோடு புருஷன் என உரிமையாய் புகைப்படத்தோடு வாழ்க்கை நடத்துகின்றாளே., இனி வேறொருத்தியின் கணவனை எப்படி தான் நினைக்க முடியும். அப்போ அவன் என்னை மறந்து விட்டானா ? பேசியது எல்லாம் பொய்யா ? என தவித்து கொண்டிருக்கையில்
ரவி, ” சரி வாங்க., உட்கார்ந்து பேசுவோம்” என்றதை கூட கவனிக்காமல் இருந்தவளை ரம்யா தோளில் தொட்டு, முகம் திருப்பி, கண் காட்ட, பொம்மை போல் அவள் பின்னே சென்று அமர்ந்தாள்.
” என்ன நந்து ஒண்ணுமே பேசாம இருக்குற, எந்த கோட்டையை பிடிக்க யோசனை பண்ணிட்டு இருக்குற?” சாவித்திரி அவளை உலுக்கி கேட்க.
தன்னை மறந்து இருந்தவள் சுயம் பெற்றாள். “அது.., ஒன்னும் இல்லை மேடம்., அம்மா எனக்கும் மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க. அம்மாவை விட்டு எப்படி போறதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்” என மழுப்பலாய் பதில் கொடுத்தாள்.
” ஒரே ஏரியால தானே இருக்க போற., டெய்லி போய் கூட பேசிட்டு வா. யாரு என்ன சொல்ல போறாங்க.,? சாவித்ரி சிரித்து கொண்டே சொல்ல.
” ஓஓ ., அம்மா உங்கட்டையும் சொல்லிட்டாங்களா., நல்லதா போச்சு., நீங்களே சொல்லுங்க மேடம், எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் .,
இப்படியே இருக்கேன். என்னை வற்புறுத்தி கல்யாணம் பண்ணா நான் எப்படி சந்தோசமா இருப்பேன்? என் மொத்த சந்தோஷமும் இவங்க மட்டுமே கொஞ்சம் அவங்களுக்கு எடுத்துச் சொல்லுங்க. ப்ளீஸ் !” என மன்றாடினாள்.
” உன் சந்தோஷம் என்னனு, உன்னை பெத்த அவங்களுக்கு புரியாதா? ஏன் கல்யாணம் பண்ணிட்டு உன் அம்மாவை பார்த்துக்க கூடாதா? சாவித்திரியின் பதில் கேள்வியில்.
” இல்லை. அம்மாவை விட்டு என்னால போக முடியாது.”
” சின்ன பிள்ளை மாதிரி பேசாதே., எல்லா பொண்ணுகளும் ஒரு வயசுக்கு பின்னாடி போய் தானே ஆகணும். இதுல உலக நியதிமா., என்றார்.
அப்போதும் மறுப்பாய் தலையாட்ட ” ஒழுங்கான உண்மை காரணத்தை சொன்னா? அவங்கட்ட பேசுறேன், சொல்லும்மா.,? “
” வேற என்ன காரணமிருக்கு. இது மட்டும் தான். எனக்கு கல்யாணம் வேண்டாம்.” மீண்டும் வற்புறுத்தி நந்திதா மறுத்தாள்.
error: Content is protected !!