Skip to content
Post Views: 8,309
வேறு வழியின்றி இதற்கு முன் நடந்தது, முகுந்த் பிடிவாதம் பிடித்தது.. என அனைத்தையும் சொல்லி கடைசியாக அந்த பெண் யாரென்பதையும் சொல்லி முடிக்க,
“உங்க ரெண்டு பேருக்கும் இதுவரை எந்த சம்மந்தமும் இல்ல..
Advertisement
அந்த பொண்ணை பார்த்ததே இல்ல..
நீயும் இப்ப தான் இங்கே வந்திருக்கே..
Advertisement
Advertisement
சம்யுக்தா தொடங்கி அடுத்து அடுத்து எப்படி கரெக்ட்டா எல்லா புள்ளியும் அந்த பொண்ணை பாத்து போகுது..” என்றான் சுவாரசியம் கலந்த சீண்டலுடன்.
அவனின் பேச்சு தோரணை கண்டு புருவம் சுருங்க ரியான் பார்க்க,
Advertisement
“ஏற்கனவே நான் சொன்னது தான்டா தம்பி. நீ சம்யுக்தாவ கல்யாணம் பண்ண கேட்டப்போ.. அந்த பொண்ணை உன்னால அந்த ஸ்தானத்துல பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டே.
சம்யுக்தா அக்காவுக்கும், உனக்கும் இருக்கற மிகப்பெரிய ஒற்றுமை சிங்கிள் பேரண்ட் ங்கறது.
நீங்க ஏன் மிங்கிளாக கூடாது..?” என ஆர்வத்தோடு சந்தீப் கேட்க,
‘க்கும்.. அந்த புள்ள நேத்து என்னை பார்த்த பார்வைய பார்த்திருந்தா தெரியும்.
இப்படி நீ அவங்ககிட்ட சொன்னா.. வாய் மிஞ்சுமா ன்னு தெரியல..’ என மனதிலேயே நக்கலாக நினைத்துக்கொண்டவன்,
“சந்தீப் அப்பவும் சரி.. இப்பவும் சரி.. என்னோட ஒரே முடிவு எனக்கு என் மகன் மட்டும் போதும்.
அவன் என் கூட இருக்கறவரை.. வேற எந்த எண்ணமும் எனக்கு வராது..” என தீர்மானமாய் சொல்ல,
“அது இல்லடா..” என ஆரம்பித்தவன் தொடரும் முன்,
தந்தையின் இந்த இக்கட்டான நிலையிலிருந்து அவரை காக்க நினைத்தோ என்னவோ.. மெல்ல கண்திறந்தான் பிள்ளை.
அவன் எழுந்துவிட்டதை கண்டு சந்தீப்பும் அமைதியாகிவிட,
அவனறியாமல் ஒரு பெருமூச்சை வெளிவிட்டு குழந்தையிடம் சென்றான் ரியான்.
“முகுந்த்.. குட் மார்னிங்..” என்று புன்னகையோடு அவனின் அருகே அமர்ந்து தலை கோத,
உறக்க விழியோடு, புன்னகையை தந்து.. “குட் மானிங் ப்பா..” என்றவன், தன் கண்ணை அந்த அறை முழுவதும் சுழற்றினான்.
அங்கு சந்தீப் மட்டும் இருப்பதை கண்டு சோகமாய் முகத்தை வைத்து.. கேள்வியுடன் தந்தையை பார்த்தான் பிள்ளை.
அவனின் கேள்வி புரிந்தாலும், பதில் சொல்லாமல், “வாங்க.. நாம.. டாக்டர் வர்றதுக்குள்ள பிரஷ் பண்ணிட்டு வந்திடலாம்..” எனச்சொல்லி அவனை தூக்க,
மறுக்காமல்.. அவனுக்கு இசைந்த போதும் கண்கள் சோர்வை மட்டுமே பிரதிபலித்தது.
திரும்ப அறைக்கு வந்த உடன், சந்தீப்பும் அவனை நெருங்கி, “என்ன கண்ணா.. இப்படி பயப்படுத்திட்டே..” என வாஞ்சையாய் கேட்க,
“நா இல்ல.. ப்பா தான்.. பயப்படுத்தி..” என்று அழகாய் போட்டு கொடுத்தான் பிள்ளை.
“என்ன..! பயப்படுத்தினானா..?” என கேட்க,
‘ம்ம்..’ என மேலும் கீழும் தலையசைத்த முகுந்த், “ஃபேஸ் ரெட் கலர்ல ஆயி, சவுட் பண்ணி.. என்ன பீட் பண்ணாங்க..” என சொல்ல,
‘போச்சு..’ என நினைக்கும் முன், சட்டென ரியானின் முதுகில் ஒன்று வைத்த சந்தீப்,
“எதுக்குடா பிள்ளைய அடுச்சே..? கேட்க ஆள் இல்லை ன்னா..? எவ்வளவு தைரியம் உனக்கு.. கைய உடைக்கனும்.
உன்னை கண்ட்ரோல் பண்ணவாச்சும் ஒரு ஆளை புடுச்சு உன் வாழ்க்கையில விடனும்..” என எகிரிக்கொண்டு வர,
பேச்சு வாக்கில்.. நேற்று நடந்ததை சொன்னதும், தன் தந்தையை அடிப்பதை பார்த்தும்.. புதிதாக ஆள் என்றவுடன்.. பதறி தான் போனான் பிள்ளை.
“நோ.. நோ.. டோண்ட் பீட் மை ப்பா.. ப்பா யாரு வேணா..” என அவன் உதடு பிதுக்க,
அதன் பிறகே குழந்தை முன் தான் செய்த மடத்தனம் புரிந்தது சந்தீப்புக்கு.
சந்தீப்பிடமிருந்து விலகி, “உன்னை அப்பா அடிச்சேன் தானே..? அதுக்கு சும்மா பனிஸ்மெண்ட்டுக்கு பெரியப்பா அப்பாவ அடிச்சாங்க.
மத்தபடி.. விளையாட்டு தான் சொன்னாங்க கண்ணா. நீங்க பயப்படாதீங்க..” என மகனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சொல்ல,
இப்போது தந்தை கையிலிருந்து பெரிய தந்தையை முறைத்தான் அந்த பெரிய மனிதன்.
“அடேய்.. என்னடா இப்படி பார்க்கறே..?
உனக்காக தான்டா அவனை அடுச்சேன்..” என சோகமாக சந்தீப் கேட்க,
“திஸ் ஈஸ் ஏ பேட் ஹேபிட்..” என்றான் தந்தைக்கே புத்தி சொன்ன அந்த குமரனாக.
“சரி தான்.. இவங்கள நம்பி களத்துல இறங்கக்கூடாதுன்னு நினைச்சாலும் அடங்குதா.. எனக்கு..” என முணுமுணுத்து கொண்டு இருக்கும் போதே அறையின் கதவு திறந்தது.
முதலில் அமிழ்தினியாள் ஒரு கூடையோடு உள்ளே வர.. பின்னால் வந்த சம்யுக்தாவிடம் இருந்தாள் வெண்பா.
இனியாளை கண்டவுடன் தந்தையிடமிருந்து இறங்கி.. முடிந்தவரை வேகமாக நடக்க போனவன் தடுமாற..
“கண்ணா..!! தங்கம்..!!” என்றபடி,
ரியானும்.. இனியாளும் ஒரே நேரத்தில் குழந்தையை பிடித்திருந்தனர் அவன் உடல் நிலத்தை தொடும் முன்.
அவர்களின் சத்தத்தில் வெண்பா அதிர்ந்து தனது சித்தியின் முகம் பார்த்தாள்.
“அந்த குட்டி கீழே டொம்முன்னு விழுந்தா வலிக்குமில்ல.
அதான், உன் அம்மாவும்.. அவங்களும் பிடிச்சாங்க..” என அவளுக்கு சம்யுக்தா விளக்க,
“ஓ..” என தலையாட்டினாலும், அவளின் முகம் யோசனையோடே இருந்தது அந்த மூவரையும் பார்த்த படியே.
‘முகுந்த் தன்னை நிலைப்படுத்திக்கொண்டான்..’ என உறுதியானதுமே தான்.. இருவரும் தங்கள் நிலையை பார்த்தனர்.
முகுந்தின் மார்பில் ரியான் கரத்திற்கு மேல் இனியாளின் கரமெனில்,
முதுகு பக்கம் இனியாளின் கரத்தின் மீது ரியானின் கரம் பதிந்திருந்தது.
அதை உணர்ந்த நொடி அவசரமாக இருவரும் கைகளை விலக்கி தள்ளி நின்றனர்.
“யாருடா இந்த பொண்ணு..? சம்மந்தமே இல்லாம வந்தா.. முகுந்தை பிடிக்கறேன்னு உன் கைய பிடிக்கறா..?” என ரியானை மெல்லிய குரலில் கேட்க,
‘அப்ப சொன்னேனே அந்த பெண்..’ என கண்ணால் ஜாடைகாட்டினான் அண்ணனுக்கு.
‘அட நல்ல பொண்ணா தானே இருக்கு..’ என சந்தீப் நினைக்க,
அது அறிந்தது போல கண்ணாலேயே அதட்டினான் ரியான்.
முகுந்தும், ‘தடுமாறியதில் விழுந்திருந்தால்..’ என நினைத்து அமைதியாக நிற்க,
மற்றவர்கள் அவனை கவனிக்க ரியான் சந்தீப் செய்கையை யாரும் கவனிக்கவில்லை.
அந்த அறைக்குள் சிறிது அமைதி நிலவ, அந்த அமைதியை கலைத்தாள் பெரிய மனுஷி.
“சித்தா, இது யாரு..?” என முகுந்தை காட்டி கேட்க,
“இது முகுந்த்..” என சொல்ல,
சம்யுக்தாவிடமிருந்து இறங்கி முகுந்திடம் வந்து நின்று.. சில நொடி அவனை குறுகுறுவென பார்த்தவள்,
“நீ பாயா..? கேளா..?” என்றாள் சந்தேகமாய்.
எதை எதிர்பார்த்திருந்தாலும்.. இந்த கேள்வியை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
ஏனெனில் வெண்பா போட்டிருந்த பனியன் செட் போன்ற உடையை தான் அவனும் அணிந்திருக்க,
முகுந்தின் கருத்து அடர்ந்த சுருள் கூந்தல்.. அவனின் நெற்றி முழுவதும் பரவி கிடக்க,
ஆணாகினும்.. பெண் குழந்தை போன்ற அழகான நீண்ட ரப்பை கொண்ட இமைகள்.. என அவனை பெண் குழந்தையாகவும் நினைக்க வைக்கும் தான்.
அங்கு வந்த புதிதில், அவனுக்கு இங்கு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உடை வாங்க சென்ற கடையில் இருந்த அனைவரும்,
“பாப்பாக்கு என்ன பார்க்கறீங்க சார்..?” என கேட்டது இப்போது நினைவில் எழுந்தது ரியானுக்கு.
திருதிருவென விழித்த முகுந்த்,
“ஓய் ஆர் யூ ஆஸ்க்கிங் லைக் திஸ்..?” என அவனின் ஆஸ்த்தான ஸ்டைலுக்கு தாவ,
இப்போது விழிப்பது வெண்பாவின் முறையானது.
இரு குழந்தைகளின் இந்த பேச்சு, இதற்கு முன் நடந்த நிகழ்வை மறக்க வைக்க,
இனியாள் சங்கடத்தை துறந்து முகுந்தை பிடிக்கவென கீழே வைத்த பையை எடுத்த படி தங்கையிடம் சைகை காட்டினாள்.
அவசரமாக அதை வாங்கி அதிலிருந்த ஃப்ளாஸ்க்கையும், கவரிலிருந்த டம்ளர் இரண்டில் பாலை ஊற்றி ஒன்றை முகுந்துக்காக.. தன் அக்காவிடமும், மற்றதை ரியானிடமும் நீட்டினாள்.
“பேபி.. எதுக்கு இதெல்லாம்..?” என ரியான் தயங்க,
“அட.. பிடிங்க பாஸ். முகுந்தை பார்த்துட்டு.. எப்படியும் நீங்க காலைல இதுவரை எதுவும் குடுச்சிருக்க மாட்டீங்க தானே..?
அதான் அவனோட சேர்ந்து உங்களுக்கும் கொண்டு வந்தோம்..” என கட்டாயப்படுத்தி கொடுக்க, மறுக்க முடியா நிலையில் கையில் வாங்கினான்.
சந்தீப்புக்கு மனதில் சிறு குற்ற உணர்வு, ‘அட, இதை நம்ம யோசிக்கலையே..?’ என.
முகுந்தை தூக்கி மெத்தையில் அமர்த்திய இனியாள், இன்னுமொரு டம்ளர் கொண்டு பதமாக ஆற்றி அதை அவனுக்கு கொடுக்க,
ஆசையாய் அதை பருக வாய் வரை கொண்டு சென்றவன், அருகே அமர்ந்திருந்த வெண்பாவிடம் திரும்பி, “உன்க்கு..” என்றிட,
அழகாய் ஓர் புன்னகை வெண்பாவிடம்.
“முகுன்டா.. நா குதிச்சாச்சு.. நீ குதி.. உன்க்கு தா உவ்வான்னு சித்தா சொன்னா.. இத குச்சா ஸ்டாங்கா என்ன மாறி ஆளாம்.
அப்பறம் நாம சித்தா கூத சேந்து விளடலாம்.. சய்யா..?” என்றாள் தலையை ஆட்டி அழகு மழலை மொழியில்.
அதில் மலர்ந்த புன்னகையோடு ஒப்புதலாய் தலையசைத்த முகுந்தும் அமைதியாய் அதை பருகினான்.
பால் குடித்ததும், டம்ளாரை கழுவி கொண்டு வந்த ரியான், “பேபி.. நீங்க கிளம்புங்க..” என நாசுக்காக அவர்களை கிளப்ப பார்க்க.. அது முடியாது போனது.
அன்று மட்டுமல்ல.. அதன் பிறகான நாட்கள் எல்லாம்.. ரியானால் என்ன முயன்றும் தடுக்க முடியாது.. அவன் எதெல்லாம் நடந்துவிடுமோ..?! என அஞ்சினானோ..
அது ஒவ்வொன்றாய் நடக்கத்துவங்கியது.
error: Content is protected !!