Skip to content
Post Views: 1,322
கீதம்
23
நந்திதாவை திருமணம் செய்ய சொல்லி ஒருவர் மாற்றி ஒருவர் வற்புறுத்தியபோதும் மாட்டேன் என மறுத்து கொண்டிருந்தவளை கண்டு
“அச்சோ. இப்படி கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லாதீங்க. அப்புறம் எங்க அண்ணனுக்கும் நடக்காது. ” என பேச்சு சுவாரஸ்யத்தில் தன்னை மறந்து முந்திரி கொட்டையாய் உண்மையை கூறி விட்டாள் ரம்யா .
அப்போ தான் நம்ம நந்துவிற்கு பல்பு எரிந்தது. ” என்ன சொன்னே? உங்க அண்ணனுக்கு ஏன் நடக்காது ? ” ரம்யாவை திரும்பி பார்த்து கேட்க.
Advertisement
” காதலிச்ச பொண்ணு, கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னா, அப்புறம் அவனுக்கு எப்படி கல்யாணம் நடக்கும் மேடம் ? என நக்கலாய் சிரித்தார் சாவித்ரி.
“அது…அது…” என திக்கி திணறி பேச முடியாமல் தடுமாறி நின்றாள்.
” போதும் விளையாண்டது. பாவம் என் மருமக ! உண்மையை சொன்னால் ஒத்துக்க போறாள். அவளை விடுங்கம்மா…”என்ற ரவியை விழி விரிய பார்த்தாள்.
Advertisement
” நாங்க தான் உன்னை பொண்ணு பார்க்க வந்தவங்க., என் பையனை பிடிச்சா மட்டும் ஓத்துக்கோ. உன்னை வற்புறுத்த மாட்டோம் ” என்றார் தன்மையாய். “
Advertisement
” இனியும் பொய் சொன்னா ஒத்துக்க மாட்டேன். எனக்கு அண்ணின்னா நீங்க மட்டும் தான். சரினு சொல்லுங்க” ரம்யாவும் கையை பிடித்து அழுத்த.
” உனக்கும் அவனை பிடிக்கும்னு எனக்கும் தெரியும். யார்கிட்டயும் சொல்லாம மறைக்க முடியாது. ” தர்ஷி அவளின் முகம் பற்றி கேட்க
” உன்னை மருமகளா நாங்க ஏத்துக்க மாட்டோமா ? தகுதி பார்த்து தான் பொண்ணு எடுக்கணும்னு நாங்க சொன்னோமா ? இப்படி ஒரு பொண்ணு மருமகளா கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும். வேணான்னு சொல்வேனா ” என்றவர் மேலும் தொடர்ந்து
Advertisement
“உங்க அம்மாட்ட கூட சொல்லாம மறைச்சு இருக்க ? ஏன் இப்படி தவிச்சுட்டு நிற்கிற, பதிலை சொல்லு.” சாவித்ரியின் அதட்டலில்.
அவளை சுற்றி நின்று அனைவரும் அவளை கேள்வி மேல் கேள்வி கேட்க, என்னவென கூற முடியாத மனநிலையில் தவித்து நின்றவள், தன் தாயை இறுக்கி கட்டிக் கொண்டாள். கண்கள் கலங்கி ஆனந்த கண்ணீர் திரள அத்தனை சந்தோசம். தான் நேசித்தவனை திருமணம் செய்ய போகின்றோம் என்ற ஆனந்தமா, பெரியோர்களே சம்மதித்து, தன்னை ஏற்றுக்கொண்ட உவகையா, என்னவென்று சொல்லுவாள். பாசமும், காதலும் இணைந்து தன்மேல் சந்தோச மழையை பொழியும் போது அதில் நனையாமல், அவள் மட்டும் குடை பிடிப்பாளா என்ன ?
” சாரிமா…உன்கிட்ட மறைச்சிட்டேன் அவரை நான் எப்படியும் கல்யாணம் பண்ண முடியாது. என் ஆசையை சொல்லி உன்னை வருத்தப்படுத்த விரும்பலை. நீங்க எனக்காகவே உயிரை பிடிச்சிட்டு வாழறீங்க. உங்கள என்னோட எந்த செயலும் காயப்படுத்த கூடாதுன்னு மட்டும் தான் நினைச்சேன். ப்ளீஸ்மா. நீ என்னை தப்பா நினைக்காதே. என்னால அதை தாங்கவே முடியாது” என கண்ணீர் விட்டவளை,
” ஒன்னை தப்பா நினைக்கலடி, என் வாழ்க்கையை நினைச்சு உன் வாழ்க்கையை வாழ மாட்டாம மருகுறதுக்கு தான் தவிக்குறேன்டா. மனசுக்கு புடிச்ச வாழ்க்கை கை நீட்டி வரும்போது வேண்டாம்னு சொல்லாதேம்மா. அண்ணன் நம்மள நல்ல பார்த்துக்குவாரு. அவர்ட்ட சரின்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லிரு, அப்பவே என் மனசு நிறைஞ்சு போயிரும். சொல்லுமா..,” என தலையை வருடி அன்பாக, கண்ணீருடன் மன்றாட, சரி என தலை தானாய் அசைந்தது.
” ஐ., பிளான் சக்ஸஸ் ..,” ரம்யா குதிக்க.
” அண்ணியாரே! தேங்க்ஸ்..,” என தர்ஷி சொல்லும் போது
” பன்னியாரே! இங்கிட்டு பாருடி ” என இடுப்பில் குழந்தையை வைத்து கொண்டு தூண் மறைவில் இருந்து ராஜி வெளியே வந்தாள். அவளை கண்டதும் நீயுமா என அதிர்ந்து விழி விரித்து பார்த்தாள்.
” அப்பாடி! ஒருவழியா ஒத்துக்கிட்டா..,” என தர்ஷியிடம் ஹைப்பை அடித்துவிட்டு இவள் புறம் திரும்பினாள்.
” உன் வாயில இருந்து இந்த வார்த்தையை புடுங்க என்ன எல்லாம் நான் பண்ண வேண்டிருக்கு., ஏண்டி இப்படி இருக்குற “
” உனக்கு எப்படி தர்ஷியை தெரியும்?” என்றவள் கேள்விக்கு ” அதெல்லாம் பெரிய கதை அப்புறம் சொல்றேன்.” ராஜி கூறியபடி கட்டி அணைக்க.
” ரெண்டு பேரும் பிரண்டுகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வந்து பிரண்டு ஆகிட்டோம்.. ” தர்ஷி மகிழ்வுடன் சொல்ல.
” என் அண்ணன் கால்ல விழ முடியல. அப்பாட்ட போய், நடந்ததை சொல்லி பேசி முடிச்சிட்டேன், எப்புடி., ? என கெத்தாய் ராஜி சிரிக்க.
” உங்களை சேர்த்து வைக்க எப்படி எல்லாம் பிளான் பண்ண வேண்டி இருக்கு. ஒழுங்கா அவன் ஊருல இருந்தப்போவே, நீ எங்கட்ட சொல்லியிருந்தா, இந்நேரம் எங்க பேர பசங்களோடு விளையாடிகிட்டு இருந்திருப்போம் . என்னமா…, நீங்க இப்படிடி…, பண்றீங்களேம்மா ? என சாவித்திரி சிரிக்க, அனைவரும் திருமணத்தை முடிவு செய்த மகிழ்வுடன் வீடு திரும்பினர்.
சாவித்ரி நந்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னதை மகனிடம் சந்தோசமாய் தெரிவித்தார்,
அவனோ ” என்ன திருகுதாளம் பண்ணீங்க?” என மெயின் பாயிண்டில் கை வைத்தான். “ஏற்கனவே உங்கட்ட சொல்லிருக்கேன். படிச்சு முடிச்சு நான் வர்றவரைக்கும் கல்யாணம் பத்தி பேச கூடாதுன்னு, திருப்பி ஏன்மா இப்படி பண்ணீங்க? “
” ஏன்டா, எனக்கு பிடிச்ச மருமகளை என் பையனுக்கு கல்யாணம் பண்ண எத்தனை வருசம்டா நான் வெயிட் பண்ணனும்? என் பையனுக்கு நான் தானே போய் பொண்ணு கேட்கணும். அதானே முறை. “
” இப்போ கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது. கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் பேசலாம்.”
” சரி. அப்போ நான் என் மருமகளுக்கு வேற நல்ல பையனை பார்க்குறேன்.” என்றார் கோபத்துடன்.
“ம்ம்மா! .., ” என்றான் பல்லை கடித்து கொண்டு.
” ஒரு வாரம் உனக்கு டைம் தரேன். அதுக்குள்ள சொல்லு. இல்லனா நான் வேற மாதிரி தான் முடிவு எடுப்பேன். வைடா போனை ” அவனுக்கும் கிடுக்கு பிடி போட்டு போனை அணைத்து வைத்து விட்டார்.
**
காலை எட்டு மணிக்கே கிளம்பி அன்பு இல்லம் வந்து விட்டாள் நந்திதா. தத்து எடுப்பதற்கு குழந்தையை காண வர சொன்னவரோடு, இவள் உரையாடி கொண்டு இருக்க, சிறிது நேரத்தில் சாவித்திரியும் அங்கே வந்து விட்டார். தன் மருமகளுக்கு பிறந்தநாள் கொண்டாட அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்க வந்ததாய் சொல்ல இவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
இத்தனை வருடத்தில் அவள் தனது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி எல்லாம் யோசித்தது இல்லை. திருமணம் முடிவாகி விட்டதால், புது பெண் சேலை அணிந்து தான் செல்ல வேண்டும், இன்று பிறந்தநாள் வேறு என தாய் வாங்கி வைத்த புது சேலையை தான் அணிந்து வந்திருந்தாள்.
அவள் நிறத்திற்கு அந்த லைட் ரோஸ் கலர் சேலை தூக்கலாய் தெரிந்தது. முகத்தில் புது களையுடன், ஜொலிப்புடன் மின்னி கொண்டிருந்தாள். கச்சிதமான உடலமைப்புடன், கம்பீரமாய் நளினமாய் சிரித்து, குழந்தைகளோடு குழந்தையாய் பேசி கொண்டிருந்தாள்.
இவர்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருக்க சிறிது நேரத்தில் காரில் இருந்து இறங்கி, அறையின் உள்ளே வந்த நெடியவன் ஒருவன் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்து கொண்டே வந்து நின்றான். கரும் ஊதா சட்டையும், கிரே பேண்ட் அணிந்து, கருப்பு கலர் கூலர் அணிந்து அவனும் அட்டகாசமாக தான் இருந்தான். ஏதோ வேலை விஷயமாக வந்திருப்பான் என பார்த்த சிலரும் அவனை கண்டு கொள்ளவில்லை.
கையில் குழந்தையை வைத்து கொண்டு ரோஜா குவியலாய் நின்றிருந்தவளை பார்த்தவன் மனமோ ரெக்கை கட்டி வானில் பறந்தது.
“ஒழுங்கா ஒரு பேரு சொல்லுங்கடா., பாப்பா நேம் ரெஜிஸ்டர் பண்ணனும். குவிக். குவிக். யாரு நல்ல பேரை சொல்றீங்களோ அவங்களுக்கு ஒரு உம்மா கிப்ட் ” என ஒரு கையில் குழந்தையை நெஞ்சோடு அணைத்து கொண்டு , மறுகையில் குட்டி பையனை சீண்டி கொண்டிருந்தாள் நந்து. பெரியோர் சிலர், குட்டிஸ் என ஐம்பது பேர் வரை அந்த ஹாலில் சுற்றி அமர்ந்திருந்தனர்.
பத்து நிமிடம் வரை அவளின் சேட்டைகளை கதவில் சாய்ந்து நின்று கொண்டு இருகைகளையும் பேண்ட்டில் உள் நுழைத்துக்கொண்டு ரசித்து பார்த்திருந்தான். விரியும் இதழை, கண்களை, அங்குலம் அங்குலமாக உன்னிப்பாய் கவனித்தான் என்பதை விட சைட்டடிதான் என்பதே பொருந்தும்.
சலசலவென பேசியவர்களின் சப்தங்களை எல்லாம் விட கணீர் குரலில் திடீரென நந்திதா என்றான். அவன் குரலை கேட்டவுடன் பட்டென்று திரும்பி பார்த்தாள். மகிழ்ச்சி, சந்தோஷம், பூரிப்பு, பிரமிப்பு, அதிர்ச்சி அத்தனையும் கலந்து விழி விரித்து பார்த்தவள், அவனை முழுதாய் இமையில் சிறையெடுத்தாள்.
அவனை கண்டு ஓட துடித்த பாதங்களை மண்ணில் அழுத்தி தன் உணர்வை அடக்கினாள். அவன் பெயரை கத்தி அழைக்க இதழ்கள் துடிக்க, சுற்றம் உணர்ந்து, ஓவியசிலை போல் அழகுற நின்றவள், அவன் உச்சந்தலை தொட்டு உள்ளங்கால் வரை பார்வையால் வருடி புத்துயிர் பெற்றாள்.
இத்தனையும் நடக்கும் போது மற்றவர் கவனம் புதியவன் மேல் இருக்க, பாவையவளோ அவனை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டே நின்றாள். அனைவரும் அவனையே பார்க்க கம்பீரமாய் அவனை நோக்கி நடந்து வந்தவன் “நந்திதா ஸ்ரீ ” என்று புருவம் தூக்கி பெயரை உச்சரித்துவிட்டு, ” பேபி பேரு நல்லா இருக்கா ” என்றான் அருகே குனிந்து குட்டிஸ்யிடம்.
” ம்ம்., நல்லா இருக்கு.” சிரித்தபடி தலையாட்ட .
” நீங்க யாரு?” என்றான் ஒரு வாண்டு.
அவன் பேசியதை சட்டை செய்யாமல் நிமிர்த்தவன் அவள் அருகே நெருங்கி சென்று நின்றான்.” ஓய்., அப்படி பார்க்காதே., அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது., ” மெதுவே சொல்ல.
விழி விரித்து பார்த்தபடி நின்றவள், கன்னம் செம்மையுற இமை குடை சாய்த்தாள்.
அவன் பேண்டை பற்றி இழுக்க. குனிந்து பார்த்தவனிடம் ” நீங்க யாரு அண்ணா ? ” மீண்டும் கேட்க.
நீயே பதில் சொல் என அவளிடம் கண்களை காட்டி ஜாடை சொன்னவன், அவள் பதிலை காண ஆர்வமாய் நாக்கை சுழட்டி உள்கன்னத்தில் முட்டி சிரிப்பை அடக்கியபடி நின்றான்.
குறும்புடன் பார்த்து கொண்டு இருந்தவனை பார்த்து மெல்ல சிரித்தவள் கம்பீரமாய் நிமிர்ந்து அனைவரையும் பார்த்து ” அவரு என் ஹஸ்பேண்ட் டாக்டர் ஆரவ். “
அவள் கூறியதை கேட்டு ஆச்சரியமாய் பார்ப்பதற்குள் அடுத்த அதிர்ச்சியாய், ” கண்ணா வந்துட்டியா,” என்றபடியே அவனின் கன்னம் தொட்டு வருடியவாறு ” இதை எல்லாருக்கும் நீயே உன் கையாலே கொடுப்பா., ” என ஸ்வீட் தட்டை அவன் கையில் நீட்டினார் சாவித்ரி.
“அம்மா!., நீங்க.., ” முழித்தவனை பேசவே விடாமல், ” கண்ணா., அவ ஆபீஸ் கிளம்பனும், இங்க மட்டும் கொடுத்துட்டு மருமகளை கூட்டிட்டு சீக்கிரம் நீ போ., நான் கோயிலுக்கு போயிட்டு வரேன்., ” என்பதாய் பேச்சை முடித்து வெளியேறி விட்டார்.
டாக்டர் மனைவி என்று சாவித்ரியை அனைவருக்கும் அங்கே தெரியும் ஆகையால் ” டாக்டர் வீட்டு மருமகள் ஆகிட்டியா., ? எப்போ கல்யாணம்?”
என்றவரிடம் அவள் சொன்ன பதிலை கேட்டு இன்னுமே மிரண்டான்.
” கூடிய சீக்கிரமே.., மாமா வந்து பத்திரிக்கை வைக்க வருவாங்க. எல்லாரும் வந்துருங்க” என்றவளிடம் ” அடியேய், உனக்கு நான் சர்ப்ரைஸ் கொடுக்க வந்தா எனக்கு நீங்க ஷாக் கொடுக்குறீங்களே., இது எப்போ நடந்தது? ” மனதில் எண்ணியபடி அவளை பார்க்க இமை மூடி திறந்தவள் ” கொடுத்துட்டு கார்ல வெயிட் பண்ணுங்க. நான் வர்றேன்.., ” வேறு எதுவும் கூறாமல் அடுத்த வேலையை பார்க்க ” வச்சி செய்யுறாளே., ” முனங்கி கொண்டே ஸ்வீட் கொடுக்க ஆரம்பித்தாலும் குழந்தைகளிடம் பேசி சிரித்து கொண்டே ஆர்ப்பாட்டம் செய்தபடி உற்சாகமாய் தான் கிளம்பி அங்கிருந்து சென்று காரில் அமர்ந்தான்.
நேற்று சாவித்ரி பேசி விட்டு வைத்த சில நொடியில் அவளிடம் இருந்து வந்த ” உந்தன் இதய கீதம் உன்னை காண துடித்து கொண்டிருக்கிறது. விரைந்து வருவாயா ” என்ற குறுஞ்செய்தியை படித்தவுடன் தான் காண்பது கனவா நனவா என திகைத்து விட்டான். எப்படி கிளப்பி வந்தான் என்று அவனுக்கே தெரியாது.
கான்பிரன்ஸ்காக வந்து இருந்தவன் அங்கிருந்தே கிளம்பி எமர்ஜென்சி என கூறி டிக்கெட் எடுத்து இந்தியா வந்து இருந்தான். காலையில் வந்திறங்கி வீட்டுக்குள் நுழையும் போதே
” என்னடா அதுக்குள்ள வந்துட்ட ” குறும்பு சிரிப்புடன் ரவி வரவேற்க.
” ப்பா., என மெலிதாய் சிரித்தவன் “அம்மா எங்கே., “என கண்களால் தேடி துலாவி ” இவ்ளோ காலையில எங்கேப்பா போனாங்க., “
” இன்னைக்கு மருமகளுக்கு பிறந்தநாள். நிறைய பிளான் பண்ணிட்டு, பாப்பாவை காலேஜ் விட்டுட்டு வெளியே போயிட்டு வரேன்னு எட்டு மணிக்கே அவளும் கிளம்பிட்டா. மேடம் ரொம்ப பிஸியா இருக்காங்க. ” என்றார் சிரித்து கொண்டே.
” ஓ., திடிர்னு எப்படிப்பா மேரேஜ் விஷயம் ஆரம்பிச்சாங்க. “
அவர் நேற்று காலையில் நடந்த கதையை எல்லாம் கூறி ” இனிமேல் டிலே பண்ண வேண்டாம். நந்துட்ட பேசிட்டு கான்போர்ம் பண்ணிக்கோ. எனக்கு op போகணும். ” தலையசைத்து விட்டு, சாப்பிட்டு கீழே சென்று அவளை தேட அன்பு இல்லத்துக்கு சென்றதாய் கூறினர். இங்கே அவன் வந்தால் அவனுக்கே ஷாக் கொடுக்கிறார்கள்.
காரின் அருகே வந்த சாவித்ரி ” என்ன சார் அடிச்சு புடிச்சு ஓடி வந்துட்டீங்க, வரமாட்டேன்னு சொன்னிங்க. ” என்றார் நக்கலாய்.
” ம்ம்மா!, ” என்றான் சிணுங்கி கொண்டே ஆரவ்.
” கண்ணா! அவளையும் சேர்த்து கஷ்டப்படுத்தாதே. போதும்டா, இனியாவது சேர்ந்து இருங்க. நீ வீட்டுக்கு கூட்டி போ. அம்மா அந்த கார்ல வரேன். வீட்டுல பேசிக்குவோம்., “” தனிமை கொடுத்து விலகி சென்றார்.
வந்தவளோ காரின் முன்பக்க கதவை திறந்து அவன் அருகே வந்து அமர்ந்தாள். நீண்ட நாட்களுக்கு பின் தன்னவளை தனக்கு மிகவும் பிடிக்கும் சேலையில் பார்த்தவன் கண்களோ ரசனையில் ஒளிர்ந்தது. நித்தமும் அவள் செய்யும் செயல்களை பார்த்தப்படியால் அவளை சீண்டி பார்க்க எண்ணி
” நாட் பேட். சொல்லாமலே என்கிட்ட வந்து உட்கார்ந்துட்ட ” புருவம் உயர்த்தி நமட்டு சிரிப்பு சிரிக்க.
” இப்போ என்னை யாரும் எதுவும் கேட்க முடியாது. ஆல் ரைட்ஸ் எனக்கும் இருக்கு. ” அவனை பார்த்தப்படி திரும்பி அமர்ந்து
” எத்தனை மணிக்கு வந்திங்க? சாப்பிட்டீங்களா? ” என்றவளிடம்
” எயிட் ஓ கிளாக் வந்தேன். ம்ம்., சாப்பிட்டேன்மா., ” பதிலை சொல்லிவிட்டு, ” யேய் டூ இயர்ஸ் கழிச்சு என்னை இன்னைக்கு தான் பார்க்குற? இப்படி தான் ரிசிவ் பண்ணுவியா? ” என்றான் வம்பாக.
” வேற என்ன பண்ணனும்? இறுக்கி கட்டி புடிச்சு, கன்னத்துல முத்தம் கொடுத்து, உருகி போய் நிற்கவா? ” அவளும் வாயடிக்க.
” பண்ணா நல்லா தான் இருக்கும். பண்ணலாமா? ” என கேட்க, முறைப்பை மட்டும் பதிலாய் பெற்றான்.
error: Content is protected !!