Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 26

கீதம் 💜 26

ஏசியின் குளிரிலும் அவள் மூக்கின் அருகே படர்ந்த மூச்சு காற்றின் உஷ்ணம் அவளை சூடேற்றியது. கண்களை மெதுவே திறக்க முடியாமல் திறந்து பார்த்தாள். அவளை ஒட்டி உரசி படுத்து இருந்தான். காற்றில் படபடத்து இருந்து அவனின் முடி கற்றைகள்  அவள் நெற்றியை தழுவி  தழுவி மீண்டன. தூங்கும் போது கூட அவன் சிரிப்பது போன்ற பிரமை முகத்தை பார்க்கையில் தோன்றியது. இரண்டு நாட்களாக இரவில் அவளை சிறிதும் விட்டு நகராமல் படுத்தி எடுக்கிறான். இன்றும் விழித்து விட்டால் விடவே மாட்டேனேன தவிக்க விடுவான் என்று மெதுவே அவனை நகர்த்தி, சத்தம் போடாமல் எழுந்து  குளியல் அறைக்குள் சென்று புகுந்திட்டாள்.



Advertisement

ஆனந்தமாய், அமைதியாய் ஒரு குளியலை முடித்து, தலைக்கு துண்டை   கட்டி கொண்டு, நைட்டீயுடன் வெளியே வந்தாள். அவன் உறக்கத்தை கண்டதும் ” அப்பாடா.., இன்னும் எந்திரிக்கல, வேகமா சேலையை மாத்துவோம்., ”  மனதில் எண்ணியபடியே உடுப்பினை மாற்ற ஆரம்பித்தாள்.

இரு தினமாக  குளிக்க வைப்பதும் அவனே. சேலையை உடுத்த வைப்பதும் அவனே. அவிழ்ப்பதும் அவனே. பின் கட்டி விடுவதும் அவனே என அவளை படுத்தி எடுத்து விட்டான். சிணுங்கினாலும், அடித்தாலும் கூட அவள் பேச்சை கேட்பதே இல்லை. உனக்கு நான் தான் செய்வேன் என பிடிவாதம் செய்யும் மீசை வைத்த குறும்பு  குழந்தையையை என்ன செய்வதென புரியாமல் தான் இவளும் முழிக்கிறாள்.

Advertisement

Advertisement

தங்கள் அறைக்குள் மட்டும் சேட்டை செய்து விட்டு குறும்பு கண்ணனாய் இருப்பவன், வெளியே சென்றால் கம்பிரமான டாக்டர் தோரணையில் அடக்க ஒடுக்கமாய் இருப்பான். அவனா இவன் என இவளுக்கே தோன்ற செய்கிறான். இத்தனை நாட்கள் நல்ல பிள்ளையாய் கண்ணியம் காத்தவன் தன்னிடம் மட்டுமே காதல் கண்ணனாய் திகழும் போது பேதையும் என்ன செய்திட முடியும்.

” சேலை கட்டும்

Advertisement

பெண்ணுகொரு வாசம்

உண்டு கண்டுகொண்டேன்

கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…”

பாடும் குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தால், பள்ளி கொண்ட பெருமாளை போல சாய்ந்து படுத்து, கைகளை தலைக்கு அண்டை கொடுத்து, அவளை ரசித்து பார்த்து பாடி கொண்டு இருந்தான் ஆரவ். இவள் பார்த்ததும் காற்றில் முத்தம் வேறு கொடுத்து கலவரப்படுத்தி, கண்ணை வேறு அடித்து காட்டி, விசிலும் அடிக்க  இவளுக்கோ தலை கிறுகிறுத்து விட்டது.

இப்பயே ஆரம்பிச்சிட்டானே என முகம் சிவந்தாலும் ” நீங்க தூங்கலையா., எப்போ எந்திரிச்சிங்க..,?” அவனை கண்டதும் தடுமாறிய மனதை  அடக்கி கொண்டு கேட்க.

” நீ என்னை விட்டுட்டு போன அடுத்த நிமிஷமே எந்திரிச்சிட்டேன்  . ஒரு நாளாவது கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாம்னு நினைச்சேன். பட் இது கூட நல்லா தான் இருக்கு. நான் பண்ணும் போது சிலது மிஸ் ஆகும். இப்போ நிறுத்தி நிதானமா ரசிச்சி பார்த்தேன். இந்த பீல் கூட ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு. ” குறும்புடன் பதில் சொன்னவனை கண்டு கடுப்பானாலும்

” உன்னை.., ரொம்ப படுத்துறடா .., ” அவன் அருகே வந்து தலையை களைத்து, தோளில் தட்டி,  செல்லமாய் கோபிக்க

அவளின் நெருக்கத்தில் புத்தம் புது பூவின் வாசம் உணர்ந்தவன் அள்ளி நுகர ஆசை கொண்டான். அவளை இழுத்து தன் மேல் சாற்றி கொண்டு முத்தமழை பொழிய  ” அச்சோ.., விடுங்க ..,” திமிறி விலக முற்பட்டாள்.

” நான் சும்மா தான் பார்த்துட்டு இருந்தேன். நீ தான் என்னை இப்போ படுத்துற., இப்படி காலையில பிரீ ஷோ கிடைச்சா, எவனாவது விடுவானா? ” மீண்டும் இழுத்து அணைக்க.

” ப்ளீஸ், விடுங்க,  எனக்கு இன்னைக்கு ரெண்டு அப்பாய்ன்ட்மென்ட் இருக்கு. அல்ரெடி புக் பண்ணது. நானும் ரெண்டு நாளா கீழேயே போகல., இன்னைக்கு கண்டிப்பா போகணும். ப்ளீஸ்டா.., ” கெஞ்சி கொஞ்சி தான் அவன் பிடியில் இருந்து விடுபட முடிந்தது.

பணிநிமித்தம் என்றதும் அவளை விட்டவன், “ஓகே. இப்போ விடுறேன், பட் இன்னைக்கு ஈவினிங் பிளைட். கிளம்பி வர ரெடியா இரு, ” சொல்லியபடியே பாத்ரூமில் நுழைய

” அரு!.., எங்கே போறோம்? என்கிட்டே ஒண்ணுமே சொல்லல.” கத்தியவளை கண்டு கதவை திறந்து எட்டி பார்த்தவன்

” என்கூட வரணும்னு சொல்லி தானே மேரேஜ் பண்ணேன். கேள்வி எல்லாம் கேட்காதே., டிரஸ் பேக் பண்ணி வைக்குறேன்., கிளம்பறோம்., ” என்றவனின் பதிலில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் “

” நீங்க பேக் பண்ண போறிங்களா? அதுக்குள்ள கனடா போறோமோ., ” முனங்கியவள் தலையை துவட்டியபடி யோசனையில் ஆழ்ந்தாள்.

அவனோடு கிளம்பி செல்வதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. அனைத்து வேலைகளையும் முடித்து விட்டால் தான். இன்று மட்டுமே சில எஞ்சிய வேலைகளை முடித்து விட்டால் போதும் . அதன் பின் கவலை இல்லை. புதிதாய் வந்த பெண்ணுக்கு சாவித்திரி உதவி செய்து பார்த்து கொள்வதாய் தான் முடிவு செய்திருந்தனர்.

திடுமென கிளம்ப சொல்லியதால்  அனைவரையும் விட்டு பிரிய போகிறோம் என்ற கவலை அவளின் மனதை அரிய தொடங்கியது. ” ” இன்னைக்கு மட்டும் தான் இங்கு இருப்போமா., அம்மா, வைபவ், மாமா, அத்தை, ரம்யா., எல்லாரையும் விட்டு போகனுமா?  இவ்ளோ நாளா இருந்த ஹாஸ்பிடல் விட்டும் போகனுமா?” நினைக்கும் போதே கண்ணில் இருந்து கண்ணில் வழிய தொடங்கி விட்டது. அடக்கி கொண்டு நின்றிருந்தாள்.

பிரிவினை பற்றி தெரியும் தான். மனதளவில் தயாராய் இருந்தாலும் திடுமென உரைத்ததில் சற்று தடுமாறி தான் போனாள். தன் போக்கில் யோசனையில் இருந்தவள் அவன் குளித்து வந்ததை கூட கவனிக்க வில்லை.  துண்டை இடுப்பில் கட்டி கொண்டு வெற்று மார்புடன் வந்தவன் அவளை பின்னிருந்து இறுக்கி அணைத்து, முகுகில் முத்தம் வைத்ததை கூட அவள் உணரவே இல்லை. முத்தம் நகர்ந்து கழுத்தில் வாசம் பிடித்து, கைகள் முகத்தை தொட்டு திருப்பும் போது தான் சுயம் வந்தது.

அவனோ அவள் எதுவும் சிணுங்காமல், பதில் சொல்லாமலே இருப்பதால்   ” என்னடா., ” என புருவம் சுருக்கி பதற்றத்துடன் கேட்க. அவளோ பதில் சொல்ல கூட இல்லை. ” நந்திதா! .., ” கன்னம் தட்டி, மெதுவே குரல் உயர்த்த.

“ம்ம்ஹ்ம்., ஒண்ணுமில்ல., ” என்றாள்

“அதுக்குள்ள என்னாச்சி, ரெடி பண்ணாம யோசனையில் நிற்கிற., கேஸ் பார்க்கணும்னு சொன்ன., ? ” அவளை தள்ளி நிறுத்தி சிகை கோதியபடி வினவ.

“இன்னைக்கு ஊருக்கு போய் தான் ஆகணுமா., கொஞ்ச நாள் கழிச்சு போலாமே., ” தயங்கியபடி அவனிடம் பேச.

” ஏன் இன்னைக்கு கிளம்பி போறதுல உனக்கு என்ன பிரச்சனை. கண்டிப்பா போய் தான் ஆகணும். இதுக்கு மேல டைம் இல்லடா .” அவள் எடுத்து வைத்த டிரஸ் மாற்றியபடி பேச்சை தொடர.

” இல்லை. இவங்கள எல்லாம் பிரிஞ்சி போறது ரொம்ப. .,கஷ்டமா இருக்கு, போக வேணாமே.,  “

அவள் வேண்டாமே என சொன்னதை கேட்டவுடன் கோபம் எட்டி பார்க்க தொடங்கியது பிரிய வேண்டுமே என கஷ்டப்பட்டதில் அதிகரித்து விட்டது. ” இத்தனை நாள் அவங்க கூட தானே இருந்த. என்கூட வர சொன்னா மட்டும் யோசிக்கிற, வேணாங்கிற.,” கடுப்புடன் கேட்க.

 ” ஒரு த்ரீ டேஸ் கழிச்சி போவோமே.,”

” லிசன், எனக்கு அடுத்து டைம் எல்லாம் சுத்தமா இல்லை. இப்போ போனா தான் உண்டு. “

அவள்  இன்னமும் தயங்குவதை கண்டவனுக்கோ ஆத்திரம் வந்தது. ” உன்கிட்ட அப்போவே கேட்டேன் தானே. இவங்கள எல்லாம் விட்டு நான் கூப்பிட்டா என்கூட வருவியான்னு, அப்போ தலையை ஆட்டிட்டு, இப்போ வரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? விளையாடுறியா? ” கோபத்தில் சற்று குரல் உயர்த்தி தான் கத்தி விட்டான்.

அவன் கத்தியதும் தான்  இதற்கு மேல் மறுத்தால் அழகல்ல என உணர்ந்து ” சரி, கிளம்பலாம்., ரெடி பண்றேன்.” சுருதி இறங்கிய குரலில் பேச.

“அவ்ளோ ஒன்னும் கஷ்டப்பட்டு என்கூட வர வேணாம். இவங்களயே  கட்டிகிட்டு அழு. உன்மேல் பைத்தியம் புடிச்சி சுத்திட்டு இருக்கேன்ல. என்னை சொல்லணும்.,”  முகம் திரும்பி நின்றவனோ ” இதுக்கே இவ்ளோ யோசிக்கிறா, கனடா போக என்ன சொல்வாளோ.., ” மனதில் அப்போதே யோசனை ஆரம்பித்துவிட்டது.

” சாரி..,” தயங்கிய படி சொன்னவளை பார்த்தவன் இன்னமும் முகம் பார்க்கவில்லை.

“!!!!”

“அரு.., ப்ளீஸ்.,”

” இன்னும் எத்தனை நாள் இப்படியே சொல்லிட்டு இருப்ப. உனக்கு நான் எப்போவும் முக்கியமே இல்லை. போடி,” விடுவிடுவென்று கதவை நோக்கி செல்ல.

அவன் பின்னே வந்தவள் ” டேய்., நில்லுடா.., ஒன்னும் சொல்லாம வா.., வா., னு சொன்னா., எனக்கு என்ன தெரியும். ? “

” சர்பிரைசா உன்னை கூட்டி போகலாம்னு நினச்சா, என்னை  டென்ஷன் தான் ஆக்குற..,” கொஞ்சம் தணிந்த குரலில் பேச ஆரம்பித்தான்.

” சரி போகலாம்., அம்மா வீட்டுல இன்னும் கொஞ்சம் ட்ரெஸ் எல்லாம் எடுக்கனும். மதியம் போய் எடுத்துக்கலாமா? ” கேள்வி கேட்டவளை புரியாமல் பார்த்து

” இப்போ அது எதுக்கு? நம்ம வீட்டுக்கு போகும் போது தானே தேவைப்படும். வந்து எடுத்துக்கலாம்.”

” அப்போ நம்ம கனடா போகலையா..,”  அதிர்ந்து  கேட்டவளை பார்த்தவன்

” ஓ மேடம், அங்க போக போறோம்னு தான் பீலிங் ஆப் இந்தியாவா இருந்திங்களா? ”  நக்கலாய் கேட்க.

” ம்ஹ்ம்ம்..,” என்றவுடன் கோபம் மறைந்து  சிரிப்பு வந்தது.

” ஏய் உன்னோட..,” என சிரித்தவன் ” நம்ம போறது ஹனிமுன் ட்ரிப். டூ டேஸ் மணாலி போறோம்.” கண்ணடித்து, அருகே வந்து அவளின் முகம் பற்றினான்

” டென்ஷன் பண்ணாதே.. கொஞ்ச நேரம் மட்டும் பிரீயா விடுரேன்,  ஓடி போயிட்டு சீக்கிரம் வா.  அப்புறம் கொஞ்ச மட்டும் தான் நேரம் நமக்கு சரியா இருக்கும், பாஸ்ட்டா கிளம்பு. இல்லைனா விடவே மாட்டேன். ” அவன் அதிரடியில் என்ன சொல்வதென புரியாமல் முழித்தவள் “

” எல்லாமே அன் தி ஸ்பாட்ல டக்கு டக்குனு சொல்லுங்க., யோசிக்க கூட முடியல., இங்கேயே வேலை  ஒன்னும் பண்ண விடுறதில்ல. அங்க போய் ரூம்லயே இருக்கிறதுக்கு போய் தான் தீரணுமா. ஒன்னும் வேணா போடா..,”  சிலுப்பி கொண்டே ரெடி ஆனவளை கெஞ்சி, சாப்பாடு ஊட்டி விட்டு தான் அவனும் கிளம்பி வெளியே சென்றான்.

வேலை முடித்து நிமிர பிருந்தா நர்ஸ்  வந்து விட்டார்.

” என்ன மேடம் ரொம்ப பிஸியா? கீழே கூட வரமாட்டேன்கீறிங்களே..,”

” அக்கா, நீ வேற ஏன் மேடம்னு சொல்ற. எரிச்சல கிளப்பாதே. எப்பவும் போல பேசுக்கா.”

” என்ன இருந்தாலும் நீங்க  இப்போ ஹாஸ்பிடல் ஓனர். என் குட்டி தங்கச்சி இல்லையே. மரியாதை கொடுத்து தான் ஆகணும்.”

 ” அப்படிங்களா, அப்போ வேலை நேரத்தில் என்ன வெட்டி பேச்சு. கிளம்பி போய் வேலைய பாருங்க. உங்க  தங்கச்சின்னா மட்டும் பேசுங்க..,” என  முறைத்தவளை பார்த்து சிரித்தவர்

“என் செல்லம்., உன்னோட நல்ல குணத்தை பார்த்து தான் சார் அவங்க பையனுக்கு கட்டி வச்சிருக்காரு…,” அவள் கன்னம் கிள்ளி கொஞ்சியவர்

“சரி. இப்போ சொல்லு, எங்க மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துகிறாரா.”

” ம்ஹ்ம்ம்..” என்றவளின் புன்னகைத்த முகம் பார்த்தவர்

” ஊருக்கு போய் என்ன பண்ண போற? நீயும் படிக்க போறியா..,”

” இல்லைக்கா. அவர் வேற யோசனை பண்ணி இருக்காராம். அங்க போய் சொல்றேன்னு சொன்னார். எப்படியும் போய் செட்டாகி தானே வேற யோசிக்கனும். இப்போதைக்கு ஆன்லைன் கன்சல்டிங் மட்டும் பார்க்க போறேன்.”

சிறிது நேரம் பேசி கொண்டிருந்தவள் ” அக்கா லேட்டாச்சு. நான் கிளம்புறேன். அவரு தேடுவாரு..,”  என்றதும் கேலியாக சிரித்தவர்.

” யாரோ ஒருத்தி இங்க இருந்து வீட்டுக்கு  போகவே மாட்டேன்னு  அடம் பிடிப்பா. அந்த நல்லவளை பார்த்தா கொஞ்சம் வர சொல்லு..,” என கேலி செய்ய சிரித்தபடி வெளியேறினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!