Skip to content
Post Views: 124
விருத்தாசலத்தின் வீட்டின் சுவரில் அவரின் படம் மாட்டப்பட்டு மாலை அணிவித்திருந்தினர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இவ்வுலகை விட்டு மறைந்தவரின் நினைவு தினம் இன்று.
படையலிட்டு சாமி கும்பிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் அவரது மகனான சுந்தரம் செய்து கொண்டிருந்தார். பிரசிடண்ட் ஐயா, என்ற குரல் கேட்டு யாரது என்ற கேட்டுக்கொண்டே வெளியே வந்தார் விருத்தாசலத்தின் மனைவியும், சுந்தரத்தின் அன்னையுமான காமாட்சியம்மாள். ஆயா நாந்தானுக கந்தன் என்றான், ஓ…. கந்தனா வாப்பா, எப்படி இருக்க, உன் பொண்டாட்டி புள்ளையலாம் சொகந்தான எனக் கேட்டார், நல்லாருக்கேனாத்தா, வூட்டுலயும் எல்லாரும் சொகமுங்க என்றார்,
“ஏத்தா விஜயா நம்ம கந்தன் வந்துருக்காப்ல பாரு”, குடிக்க காபித்தண்ணி கொண்டுவாத்தா எனக் குரல் கொடுத்தார். அச்சோ அதலாம் வேணாம்த்தா, வரும்போதுதா பெரியாத்தா கொடுத்தாக.. என்றான் கந்தன்.
அதனால என்ன அப்பு இங்கையும் கொஞ்சபோல குடி எனக் கூறிக்கொண்டு இருக்கும் போதே சுந்தரத்தின் மனைவி (அதாங்க நம்ம பூபதி அய்யா பொன்னு) விஜயா, வாங்கண்ண எப்படி இருக்கிங்க எனக் கேட்டுக்கொண்டே காபி டம்ளரை நீட்டினார். நல்லாருக்கேனாத்தா. புள்ளைகளாம் எங்க பள்ளிக்கூடத்துக்கா , “ம், பெரியவ வேலைக்குப் போயிடுச்சு, சின்னதுக ரெண்டும் காலேசுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் போயிருக்குங்க,
Advertisement
சரியாத்தா நாம்பாரு, வந்த வேலையை வுட்டுப்புட்டு பேசிட்டு கிடக்குதேன், வீட்டின் வெளியே சென்று நெல் மூட்டைகளை எடுத்து வந்து வெளி வாசலில் உள்ள திண்ணையில் வைத்தார். நான்கு மூட்டைகளும், வாழைத்தார், தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் என தான் கொண்டுவந்தவற்றை இறக்கி வைத்துவிட்டு,, அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்,
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்களின் நிலங்களில் என்ன அறுவடை செய்கின்றனறோ, அவற்றை துரைக்கும், ராஜபாண்டிக்கும் தங்களது உடன் பிறந்த ஒரே தங்கைக்கும் என மூன்று பங்காகப் பிரித்து விடுவார் பூபதி, அவரின் காலத்திற்கு பிறகும் அதையே தொடந்து கொண்டு இருக்கிறார் துரைப்பாண்டி.
ராஜபாண்டியின் பொருட்களை விற்று வரும் பணத்தை அவரின் வங்கிக் கணக்கில் சேர்ப்பித்து விடுவர். நீங்கள்தான் நிலத்திலிருந்து பாடுபடுகிறீர்கள் என் பங்கை தம்பியிடமே கொடுத்துவிடுங்கள் என பல முறை கூறினாலும், பூபதியும் சரி, துரையும் சரி இம்முடிவுக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. அப்படி அவர் ஆரம்பித்த பழக்கம் அவரின் காலத்திற்குப் பிறகு இன்றும் தொடந்து கொண்டு இருக்கிறது துரைப்பாண்டியின் மூலம். இன்று படையல் என்பதால் கந்தன் மூலம் பொருட்களை அனுப்பி வைத்தார். இல்லையேல் அவற்றுடன் தானும் வந்து பார்ர்த்துவிட்டுத்தான் செல்வார்.
Advertisement
கந்தன் கொண்டுவந்து இறக்கிய பொருட்களைப் பார்த்துக் கொண்டே பழைய நினைவலைகளுக்குள் சென்றார் காமாட்சியம்மாள். விருத்தாலம் குடும்பம் தான் காலம்காலமாக அவ்வூர்த் தலைவர்களாக இருந்து வருகின்றனர். தற்போது இவரது மகன் இக்காலத்திற்கேற்ப தேர்தலில் வெற்றி பெற்று பிரசிடெண்ட்டாக பதவியிலுள்ளார்.. விருத்தாசலத்திற்கும்,, காமாட்சியம்மாளுக்கும் பிறந்தவர்கள்தான் சுந்தரமும், சுகுணாவும். சுகுணாவிற்கும் ராஜபாண்டிக்கும் திருமண பேச்சுவார்த்தைகள் சென்றபோது, மகளின் நடவடிக்கைகளின் மாற்றம் கண்டு என்னவென்று விசாரித்த போதுதான் துரையை விரும்புவதைக் கூறினார். மகளைப் பற்றிய விஷயத்தை கூறாமல், இன்னும் எத்தனை நாள் காத்திருப்பது அதனால், துரையை தன் மகளுக்குக் கேளுங்கள் எனக் கணவரிடம் கூறி தனது அண்ணனிடம் பேச வைத்தார்.
Advertisement
விருத்தாசலம் அத்துடன் விடாமல் தனது அண்ணன் மகளை தன் வீட்டு மருமகளாக்கப் பேசியதுடன், தனது மகளையும் அவ்வீட்டு மருமகளாகப் பேசி முடித்திருந்தார். இரண்டு திருமண சேதியைக் கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடந்தார். அம்மகிழ்ச்சி என்றும் நீடிக்க வேண்டும் என கடவுளுக்கு அவசர வேண்டுதலை வைத்தார்.
சுந்தரத்திற்கும் விஜாவிற்கும் பிறந்தவர்கள் மூன்று பேர், மூத்தவள் பவித்ரா ( அப்பாட ஒரு வழியா நம்ம கதை நாயகி பேர் வந்துடிச்சுப்பா ) இரண்டாவது மதுமித்ரா, கடைக்குட்டி ரூபன். பவித்ரா கணிதத்தில் முதுகலை படித்துவிட்டு அவ்வூரில் உள்ள ஒரு கல்லூரியில் அசிஸ்டெண்ட் புரொபசராக பணிபுரிகிறாள், மதுமித்ரா பொறியியல் இரண்டாம் வருடமும், ரூபன் 12ஆம் வகுப்பிலும் உள்ளனர், இருவரும் தனது அக்காவின் மீது மிகுந்த பாசமுள்ளவர்கள், முன் ஏர் செல்லும் வழியில்தான் பின் ஏர் செல்லும் என்பதற்கிணங்க பவித்ராவின் குணங்களைப் பார்த்தே இருவரும் வளருவதால், குணத்திலும் சரி, படிப்பிலும் சரி மூவருமே சிறந்து விளங்கினர். தன் பேரன் பேத்திகளை நினைத்து மிகவும் பெருமை கொள்வார்.
ஏதோ யோசனையில் இருந்தவரை அம்மா நான் காலேஜிக்குக் கிளம்பறேன் என்ற பவித்ராவின் குரல் கலைத்தது. அம்மாடி கிளம்பிட்டையா, ஆமா அப்பத்தா, நீ என்ன ஹால் உக்கார்ந்துகிட்டு கனவு கண்டுகிட்டு இருக்கிற, ‘தாத்தா ராத்திரி கனவுல வரலேனு பகல்ல தூங்கி தாத்தாவ வரவெச்சி சண்டை கட்டிட்டிடு இருக்கிறியா என்ன’ என தன் அப்பத்தாவிடம் வம்பு பேசிக் கொண்டே தனது கைக்கடிகாரத்தைக் கையில் கட்டிக் கொண்டாள்,
Advertisement
அடிப்போடி போக்கத்தவளே, உங்க தாத்தா அப்பிடியே எங்கனவுல வந்துட்டாலும், ஆமா நீ என்ன இம்புட்டு சீக்கிரமா கிளம்பிட்ட, மதுவ அவளோட காலேஜில விட்டுட்டு அப்படியே நான் வேலைக்கு போகனும் அதான் என்றாள். சரிமா பார்த்து வண்டிய ஓட்டு, ஆமா உன் தம்பி என்ன பண்றான், இன்னும் சாருக்கு பொழுது விடியலையா எனக் கேட்டார்,
காலாண்டு பரிட்சை நடக்குது அப்பத்தா, ராத்திரி முழுக்க படிச்சிட்டு இப்பதான் தூங்கறான் எனச் சொல்லிக் கொண்டே வந்தாள் மது, என்னவோடிம்மா என்ன பள்ளிக்கொடமோ, என்ன பரிச்சையோ நா என்னத்த கண்டேன் என புலம்பியபடி, தன் மருமகளை அழைத்தார், என்னத்தை கூப்டீகளா எனக் கேட்டுக் கொண்டே அடுபங்கறையிலிருந்து வந்தார். புள்ளைக கிளம்பிட்டாக சாப்பாடு தாயாராகிடுச்சா எனக் கேட்டார். இதோ முடிஞ்சிது என உள்ளே சென்று டப்பாக்களை எடுத்து வந்தார், என்னம்மா இது மூனு பாக்ஸ் இருக்குது, இது யாருக்கு எனக் கேட்டாள் மது. கருப்பட்டி பனியாரம் செஞ்சேன், அதான் இத அப்டியே சுபாட்ட கொடுத்துட்டுப் போயிடுங்க என்றார். மது சரி என்று டப்பாவை வாங்கி பையில் வைத்தாள், போலாமாக்கா எனக்கேட்டும் எந்த பதிலும் சொல்லாத தன் அக்காவைப் போட்டு உளுக்கினாள் மது, தயங்கியபடியே ம் கிளம்பலாம் என வாசலுக்குச் சென்றனர் இருவரும்.
சுபா யார், பவித்ராவின் யோசனை என்ன என்பதை அடுத்துவரும் பகுதிகளில் பார்க்கலாமா!
( இந்த எபியிலையும் ஹீரோ சார் வரல… அடுத்த எபில கண்டிப்பா இழுத்துட்டு வந்துடமாட்டோம்……)
ஆரூயிராய் உன்னை நினைத்து – எப்பொழுது
என்னில் உன்னை நான் காண்பேனோ!
error: Content is protected !!