Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 28

பகுதி 28

கருப்பு வர்ண கோட் சூட்டில்.. தந்தை. மகன் இருவரும் தயாராகி கொண்டிருந்தனர் பார்ட்டிக்கு செல்வதற்காக.



Advertisement

“ரியான் ரெடியா..‌? இப்பவே போனா தான் கெஸ்ட் வரும் போது ரிசீவ் பண்ண சரியா இருக்கும்..” என்ற படி உள்ளே வந்த சந்தீப்,

“பார்ரா..! அப்பாவும் புள்ளையும் கலக்கறீங்க..” என்று புன்னகையோடு பாராட்டை வழங்க வெக்க முறுவல் முகுந்த் முகத்தில்.

Advertisement

Advertisement

“மத்தவங்க எல்லாம் ரெடியா சந்தீப்..?” என ரியான், சந்தீப் முகம் பார்க்க தயங்கி கேட்க, 

“எல்லாரும் ரெடி. மலர் இனியாவையும் வெண்பாவையும்.. கூட்டிட்டு வர போயிருக்கா..” என்றவன், 

Advertisement

நமுட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு, “நான் தான் எதையும் பார்க்கலையே..!” என்று வேறு சொல்ல,

“டேய்..” என்ற ரியானின் முகத்தில் மீண்டும் வர்ணஜாலம். 

அதை கண்டு எதுவும் சொல்லாது மகிழ்ச்சியின் அடையாளமாய், தன்னோடு இறுக்கி அணைத்து விடுவித்தவன், “வா..” என்றபடி வெளியேற ரியானும் அவனோட வெளிவந்தான்.

அவர்கள் ஹாலுக்கு வரும் நேரம் சரியாக இனியா வெண்பாவோடு வர ரியானின் பார்வை ஆச்சரியத்தில் விரிந்தது.

ஒப்பனையே இல்லாமல் ஜொலிக்கும் இனியாளின் பளிங்கு முகத்தை அழகுகலை நிபுணர்கள் இன்னும் மெருகேற்றியிருக்க, 

அவள் அணிந்திருந்த ரெட் வொய்ன் கலர் டிசைனர் சேரி அவ்வளவு பாந்தமாய் அவளுக்கு பொருந்தி போனது.

அவளை அந்த கோலத்தில் பார்த்தவனால் கண்களை விலக்கிக்கொள்வதற்கு பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டிருந்தது.

அவனை விட அவளின் நிலை இன்னும் அந்தோ பரிதாபம் தான். 

இமை கொட்டாமல் ஆண்மையின் கம்பீரத்தோடு தன்னை பார்த்தவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வெக்கத்தால் முகம் சிவந்து நின்றிருந்தாள் இனியாள்.

சந்தீப்பிற்கு இதற்கு முன் ரியானோடு பேசிய நினைவுகள் அவர்களின் பார்வையில் உள்ளிருந்து எழுந்தது.

இனியாளை திருமணம் செய்வது என முடிவு செய்த மறுநாள் ரியானை அலுவலக அறையில் சந்தித்த சந்தீப்,

“ரியான், இந்த கல்யாணம்.. குழந்தைங்க உங்க கூடவே இருக்கனுங்கறதுக்காக செய்யறதா..?” என்றான் தம்பியை கூர்ந்து பார்த்து.

“ஏன்..? இப்போ இந்த கேள்விக்கு என்ன அவசியம்..?” என்றான் ரியானும் சளைக்காத பார்வையை பதிலாக்கி.

“இதுவரை நீ வாழ்ந்த லட்சணம் தான் தெரிஞ்சுடுச்சே எங்களுக்கு..! இனியாவது நீ நல்லபடியா வாழனும்டா. 

அதோட அந்த பொண்ணும் பாவம். 

ஜஸ்ட் குழந்தைங்களுக்காக ஒரு கல்யாணமுன்னு பண்ணிட்டு, அவங்களுக்காக மிச்சமிருக்கற வாழ்க்கையை வாழ.. தனியா உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை அமச்சுக்கோங்க. 

வீணா உங்க வருங்கால வாழ்க்கையை தொலச்சுடாதீங்க..” என்றான் அக்கறை மிகுந்த குரலில்.

அவனின் அக்கறையில் எப்போதும் போல மனம் கனிய, 

“டேய் அண்ணா, ரொம்ப யோசிக்காதே. 

அப்படி எல்லாம் என் வாழ்க்கையில மறுபடியும் ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

இது குழந்தைங்களுக்காகன்னு எல்லாரும் நினைக்கலாம். 

ஆனா உண்மையா இது இனியாவுக்காக தான்..” என்றதும், புரியாமல் விழித்த சந்தீப்பை கண்டு மென்னகை புரிந்த ரியான், 

“என்ன புரியலையா..? என்ன பாவம்டா அந்த பொண்ணு பண்ணுச்சு..? சின்ன பொண்ணுடா.. அவ.  

அவ அம்மா பண்ண தப்புக்கு.. அப்பா அவளுக்கு ஏன் தண்டனை கொடுத்தார்..?

அன்பு, பாசமுன்னு ஏங்குன பொண்ணை அதை காட்டியே ஒருத்தன் ஏமாத்த பார்த்திருக்கான். அதுக்கு அவ எப்படி பொறுப்பு..?

இது எல்லாத்துல இருந்தும் தப்பி.. தனக்காகன்னு நிம்மதியா ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருந்தவளை,

செய்நன்றிங்கறதை வச்சு ஏமாத்தி.. இப்படிப்பட்ட கொடுமையில சிக்கவச்சிட்டு மத்தவங்க எல்லோரும் போயிட்டாங்க. 

ஆனா அவ.. என்ன சுகத்தை தான் கண்டா..? 

கடைசிவரை குழந்தையை மட்டும் வச்சிட்டு தனிமையில வாழனுமின்னு என்னடா அவசியம்..?” என ரியானின் ஆதங்கம் மிக்க குரலை கண்ட சந்தீப்,

“சோ.. இது பரிதாபத்துல எடுத்த முடிவு..” என்றிட,

“நிச்சயமா இல்லை. இந்த முடிவுக்கு நா வர காரணி வேணுமுன்னா பரிதாபமா இருக்கலாம். 

ஆனா நான் கல்யாணம் பண்ணிக்க முழு காரணமும் இனியாவோட அப்பழுக்கு இல்லாத தூய மனசு.

ச்சே.. எப்படிப்பட்ட பொக்கிஷம் டா அவ.. ‘நன்றி கடன்..’ ன்னு அவளோட ஒட்டு மொத்த வாழ்க்கையையும் பலி கொடுத்து.. குழந்தைய பெத்துக்க தயாரானா.. 

ஏமாத்திட்டாங்கன்னு தெரிஞ்சும்.. என் மகளுக்காக அவ எடுத்த ரிஸ்க்.. அதுக்கு அவசியமே இல்லையே..!! 

யாரோ.. எப்படியோ போகட்டுமின்னு அவளால இருக்க முடியலயே..! 

இதெல்லாம் விட அன்னைக்கு குழந்தைய கொடுக்கமாட்டேன்னு ஏன் சொன்னா தெரியுமா..?

எனக்காக.. என்னோட பழைய வாழ்க்கையில நான் வாழ்ந்த லட்சணத்தை தெரிஞ்சுக்கிட்டவ.. 

கடைசிவரை கன்னித்தாயா அந்த குழந்தைங்கள வளர்த்துட்டு.. என்னை புது வாழ்க்கைய அமைச்சுக்க சொல்வாங்களாம்.. 

இப்படிப்பட்ட பொண்ணை விட.. நான் என்ன முட்டாளா..? 

ஏற்கனவே நான் தெரியாம பண்ண பாவத்துக்கு.. என் பெத்தவங்களை இழந்து நிற்கறது போதும், 

மறுபடியும்.. அந்த பொண்ணு மனசை நோகடுச்சு பாவத்தையும், சாபத்தையும் வாங்கிக்க நான் தயாரா இல்லை.

முதல்ல கிடைச்சது தவறா போனாலும், இப்போ கிடைச்சது பொக்கிஷமுன்னு தெரிஞ்சும் விட முடியாம தான், கல்யாணத்துக்கு அவளை ஒத்துக்க வச்சேன்..” என்ற ரியானின்‌ உறுதியில் நெஞ்சம் குளிர்ந்தாலும்,

“அதெல்லாம் சரி.. அந்த பொண்ணால உன்னை ஏத்துக்க முடியுமா..?” என்றான் சந்தீப் சந்தேகத்தோடு.

“ஏற்கனவே கிறுக்கல் விழுந்த சிலேடு.. என்னாலயே மாத்திக்க முடியும் போது, 

அவளோடது புது சிலேடு.. நல்ல அழுத்தமாவே என்னை பதிய வைக்க முடியும். 

என்னை பதியவும் வைப்பேன். எங்க கல்யாணம் நடக்கும் போது, எங்க மனசுல வேற எந்த கலங்கமும் இருக்காது. 

நீ வொரி பண்ணிக்காதே.. இந்த கல்யாணம் முழுக்க முழுக்க எங்களுக்காக தான்..” என்றவன் வாக்கு, 

மதியம் அவன் கண்ட காட்சியில் ஊர்ஜிதமாகியிருக்க, 

இப்போது அவர்களின் பார்வை இன்னும் மனதிற்கு நிறைவையே தந்தது அந்த உடன்பிறவா சகோதரனுக்கு. 

ரியானின் அந்த உறைந்த நிலையை கலைக்கவென வந்து சேர்ந்தாள் அவனின் செல்ல மகள்..

“ப்பா.. டூக்கு..” என கை நீட்டி நின்ற சிவப்பு ரோஜா மலரை கண்டவனின் கவனம் இப்போது மகளிடம் நிலை கொண்டது.

“வாவ்..! பட்டுக்குட்டிக்கு இந்த ரெட் கலர் ப்ராக் செம க்யூட்டா இருக்கே..!!” என சொல்லி அவளை அள்ளி அவளின் கன்னத்தில் முத்தமிட,

அந்த கேப்பில் தாயிடம் தஞ்சமாகியிருந்தான் அவர்களின் செல்ல மகன். 

அவளும், “ப்ரின்ஸ் மாதிரி இருக்க தங்கம்..” என அவனை கொஞ்ச கண்கள் பளிச்சிட்டது அந்த பெரிய மனிதனுக்கு.

அதன் பின் பார்ட்டி ஹால் வந்து சேர.. ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க மற்றதை பற்றி சிந்திக்க நேரமின்றி போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!