அவர்களின் மற்றைய கரமோ இருவரையும் இணைத்திருந்தது அணைப்பாக..
வயிற்றில் இருக்கும் போதிருந்த பிணைப்பு போல.. இயல்பாக வந்திருந்தது அந்த நிலை.
அந்த இரு மழலை செல்வத்தையும் தாய் பறவை தன் குஞ்சை இறகால் அடைகாப்பது போல, தனது நீண்ட கரம் கொண்டு அரவணைத்து படுத்திருந்தான் ரியான்.
அவர்களை அவ்வாறு பார்க்க கவிதையாய் இருந்த போதும், ‘அதில் எனக்கு இடமில்லையே..?
நான் எப்போதும் தனி தானா..? தனிமை தான் என் விதியா..!’ என்ற எண்ணத்தால் அவளின் முகம் வாடிப்போனது.
இரவில் ரியான் அவளிடம் கணவனாய் உரிமையை நிலைநாட்டியிருந்தால் இப்படி தோன்றியிருக்காதோ.. என்னவோ..!
காலை முதல் அவளை சீண்டி மதியம் அவ்வளவு நெருக்கத்தை காட்டியவன் இரவில் இவளாக அணைத்த போதும்,
சிறிது நேரத்தில், “நேரா படு அம்மு..” என நாசுக்காக விலகி கொண்டது.. அவளுக்கு பெரும் வலியை கொடுக்க தான் செய்தது.
ஆனாலும், ‘பெண்ணாய் அவனிடம் தான் என்ன கேட்பது..?’ என்ற தயக்கம் படுத்த.. அவன் உறங்கி வெகு நேரம் ஆகி தான் அவள் உறக்கத்தை தழுவியிருந்தாள்.
இப்போதும் அதை நினைத்ததும் மனம் ஒருவிதமான அழுத்ததை கொடுக்க அவசரமாக எழுந்து குளியலறை புகுந்தாள்.
தனது வேலைகளை முடித்துக்கொண்டு ஒரு சுடிதாரை அணிந்தவள், வேகமாக சென்று பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு, மாமனார்.. மாமியாரையும் வணங்கியவள், கிட்சனுக்குள் நுழைந்தாள் காலை உணவை தயாரிக்கவென.
ஏற்கனவே ஒருமுறை மலருக்கு சமைக்க உதவ வந்து பழக்கம் இருக்க,
அதோடு நேற்று மலரும் பொருட்கள் எது.. எங்கு இருக்கும்.. எனக்காட்டியிருக்க தடுமாற்றமின்றி சமையலை செய்ய ஆரம்பித்தாள்.
பாதி சமையலை அவள் முடிக்கும் நேரம், “சாரி, ரொம்ப நாளுக்கு பிறகு நிறைவான ஒரு மனநிலை. அதான் கொஞ்சம் அசந்துட்டேன்.
இல்ல, நான் அவனை ரெப்ரஸ் செய்ய வச்சிட்டு வந்து ரெடி பண்ணிக்கறேன்..” என்றுவிட்டு அறையை நோக்கி விரைந்தான்.
குழந்தையை குளியலறை அழைத்து சென்றவன் அவனின் காலை நேரத்தேவைகளை முடித்து முகம் கழுவி ஹால் வர, இனியாள் ட்ரேயில் பால், சத்துமாவு கஞ்சி இரண்டையும் கொண்டு வந்து வைத்தாள்.
“ம்மா..” என தாவிய பிள்ளையை தூக்கியவள்,
“குட் மார்னிங் கண்ணா.. எழுந்தாச்சா..?
சரி, நீங்க சமத்தா கஞ்சிய குடிங்க. நான் போய் சமையலை பார்க்கறேன்.. சரியா..?” என புன்னகையோடு சொல்லி,
அவனின் கன்னத்தில் முத்தமிட்டு இறக்கிவிட அவனும் தந்தையிடம் சென்று அமர்ந்து கொண்டான்.
ரியானின் பார்வை தன்னை துளைப்பது புரிந்த போதும் அவனை நிமிர்ந்து பார்க்காமல், அவசரமாக அவ்விடம் விட்டு நகர்ந்தவளை கண்டவனுக்கு கடுப்பாகி போனது.
‘என்ன நினைச்சிட்டு இருக்கா இவ..? நேத்து இருந்ததுக்கு.. நேர் மாற திரியறா..! சம்திங் ராங்..’ என உள்மனம் உணர்த்த,
“கண்ணா.. இந்தாங்க இதை சமத்தா குடுச்சிட்டு உங்க டேப்ல ரைம்ஸ் பாருங்க.
அவசரமாக அடுப்பை அணைத்தவன், “ஏய்.. என்னடீ நினைச்சிட்டு இருக்க மனசுல..?
நானும் பொறுமையா பேசினா.. பதில் சொல்லாம..” என பல்லிடுக்கில் வார்த்தையை கடித்து துப்பியவன் அவளின் தாடையில் விரல் வைத்து நிமிர்த்த,
அவளின் முகமோ எப்போது வேண்டுமென்றாலும் கண்ணீரை பொழிவேன்.. என்ற வண்ணமிருந்தது.
அவளின்.. அந்த வலி மிகு முகத்தை கண்டவனுக்கு இருந்த கோபம் போய் கழிவிரக்கம் உண்டாக,
“அம்மூ.. என்னடாம்மா..! என்னன்னு சொன்னா தானே தெரியும்..?” என சொல்லி.. அவளின் தலையை தன் நெஞ்சோடு அணைத்து தலை முடியை வருடிவிட,
அவனின் டீசர்ட்டை தாண்டி சுட்டது அவளின் விழிநீர்.
அதில் இன்னும் பதறியவன், “என்ன.. ஏதுன்னு.. சொல்லாம அழுதா.. நான் என்ன அம்மு நினைக்க..?
எதாவது ஹெல்த் இஸ்யூவா..? இல்ல அம்மா பார்க்கனுமா..? என்ன வேணும்..?” என்றான் இன்னும் பதறி.
அவனின் அந்த அக்கறையும்.. பதறலும்.. தனக்கானது என்பதை உணர்ந்தவளுக்கு கொஞ்சமே கொஞ்சம் இதயத்திற்கு இதம் அளிக்க மெல்ல அழுகை குறைந்தது.
அவளின் கன்னம் இரண்டையும்.. இரு கரத்தால் பற்றி அவனின் முகம் பார்க்க செய்தவன், கட்டை விரல் கொண்டு விழி நீரை துடைத்தபடி அவளை பார்த்து ஆதுரமாக,
“இப்ப சொல்லு.. என்ன ஆச்சு.. என் அம்முக்கு..?” என்றிட,
“அது.. அது..” என திக்கியவள், காலையில் கண்டதையும்.. தன் உள்ள உணர்வையும் சொல்லிவிட்டு,
“குழந்தைக்காக கல்யாணம் பண்ணவ.. எதையும் எதிர்பார்த்திருக்க கூடாது தான்..
ஆனா, நான்.. தப்பா.. என்னை.. நீங்களும் அருவருப்பா நினைச்சிட்டீங்க.. அதான் விலக்கி..” என சம்மந்தமில்லாமல் சொன்ன போதும்.. அவனுக்கு முழுதாய் புரிந்துவிட,
அடுத்த கணம் அவளின் பேச்சை தனக்குள் வாங்கிக்கொண்டவன், அவள் விலகாத படி அவளின் கூந்தலில் விரல் நுழைத்து தன்னோடு பிணைத்துக்கொண்டான் அழுத்தமாக.
தன்னை, தன் தேடலை.. அவனின் கரங்கள் மெதுவாக அவளுக்கு உணர்த்த துவங்க, அவளின் விழிகளோ.. அதிர்ந்து.. பயந்து.. பின் மயங்கி.. என வர்ணஜாலம் காட்ட துவங்கியது.
அவளின் ஆடைக்கு மேலேயே.. அவனின் ஆதிக்கத்தை கண்டவளுக்கு.. அவனின் தேடலில் வேகம் இன்னும் புரியாமல் போகுமா..?!!
சில நிமிடத்திற்கு பின்.. ‘இனியும் இந்த நிலை நீடித்தால்.. முழுவதும் அவளை, தன் உடல் கேட்கும்..’ என்ற நிர்பந்தம் வந்த போது,
அவளை விட்டு விலகி தள்ளாடி.. தடுமாறியவளை பற்றி தூக்கி அடுப்பு திட்டில் அமர்ந்தியவன் அங்கிருந்த தண்ணீரை எடுத்து பருக வைத்தான்.
அதை அவள் குடித்து கொஞ்சம் ஆசுவாசம் ஆனபின்,
“இப்போ தெரிஞ்சதா.. உன்னை எனக்கு எவ்வளவு தூரம் தேட தோணுதுன்னு..?
இல்ல.. இன்னும் பலமா புரிய வைக்கனுமா..?” என்றான் கொஞ்சம் கடுப்பும் ஆற்றாமையுமாக.
அதில் எழுந்த குற்ற உணர்வில் அவள் தலை குனிய, “இங்கே பாரு அம்மு.. வீ ஆர் நாட் ஜஸ்ட் ஹஸ்பண்ட் அண்ட் வெஃய்ப்.. வீ ஆர் ஆல்சோ ரெஸ்பான்ஷிபில் பேரண்ட்ஸ் டூ..
முகுந்த்.. எப்ப தூங்குவான், எப்போ விழிப்பான்னு எனக்கு அத்துப்படி.. ஆனா, வெண்பா..?
அவள பத்தி எனக்கு என்ன தெரியும்.. சொல்லு..?
உனக்கு மட்டும் தான் தெரியும்.
ஆனா நீயும் உணர்ச்சிவசப்பட்டிருக்கும் நிலையில.. உன்னால என்னை தாண்டி அதையெல்லாம் யோசிக்க நான் விடமாட்டேன்.
அது நிச்சயமா.. நூறு சதவீதம் எனக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்.. எப்படி முதல் நாளே அப்படி ஒரு ரிஸ்க் எடுப்பேன் சொல்லு..?!
சப்போஸ் அவங்க எழுந்தா.. என்ன ஆகும்..? உன்னால கற்பனை பண்ணி பார்க்க முடியுதா..?!
அதை மனசுல வச்சிட்டு.. நீ தயங்கி, நானும் தவிச்சு.. அந்த மாதிரி எந்த தடையும் இல்லாம.. இயல்பா நம்ம தாம்பத்தியம் தொடங்கனுமுன்னு நினைச்சது தப்பா..?
நேத்து நைட் நீ நெருங்கி அணைச்சதுமே.. என்னோட கன்ட்ரோல் மிஸ் ஆகிடுமோன்னு பயம் வந்திடுச்சு.
அதனால தான் உன்னை விட்டு விலகினேனே தவிர, நீ நினைக்கற மாதிரி ஒரு தாட் எனக்கு தோனவே இல்ல.
அது மட்டுமில்ல மதியம் சேரி வேர் பண்ணுன்னு நா சொல்லியும், சுடிதார்ல கிட்ட வந்ததும் இல்லாம.. உரிமையா கிட்ட படுக்கவே தயங்கி நின்னது.. உனக்கு கொஞ்சம் டைம் வேணுமுன்னு நீ எதிர்பார்க்கறேன்னு எனக்கு தோணவச்சிடுச்சு.
நீ நினைக்கலாம்.. நா நெருங்கி அணைக்கலையான்னு..?
ஆசையில அணைக்கறதுக்கும், ஆறுதலுக்கு அணைக்கறதுக்கும் வித்தியாசம் தெரியாத கிட் இல்ல நானூ..
ஆனா.. நா சொன்னதும், ஏன் நா விலகனுமுன்னு.. நீ உரிமையா கேட்டிருந்தா, வெண்பா எப்போ எழுவான்னு உன்கிட்ட கேட்டு அதுக்கு ஏத்த மாதிரி உன்னையும் நான் தவிக்க விடாம பார்த்திருந்திருப்பேன்.