Skip to content
Post Views: 1,804
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் – 8
Advertisement
Advertisement
பெரியசாமிக்கும், பார்கவிக்கும் வைகாசியில் திருமணம் செய்யலாம் என்று பெரியவர்கள் முடிவு செய்தார்கள்.
Advertisement
ஆண்டவர்கனியும், திவ்யா அரிய நாச்சியும் ஒரே வீட்டில் இருந்தாலும், இருவரும் பேசி கொள்ளவில்லை பார்ப்பது மட்டுமே தான்.
Advertisement
ஆண்டவர் வீட்டில் இருந்தால் திவ்யா லட்சுமியின் அறையை விட்டு வெளியில் வர மாட்டாள்.
அவன் ஷோரும் சென்றவுடன் தான் வெளியே வருபவள், அனைவரிடமும் நன்றாக பேசி பழகினாள்.
யோகா இருவருக்கும் நடக்கும் கண்ணா முச்சியை பார்த்தும் பார்க்காமலும் இருந்து கொள்வார்.
ஆண்டவர் கனிக்கு திவ்யா தன் வீட்டிலே இருப்பதே போதும், அவளின் மனமும் மாறும் வரை காத்திருக்கலாம் என்று அமைதியாக இருந்தான்.
பெரியசாமிக்கும், பார்கவிக்கும் திருமணம் நடத்த நாள் குறிக்க, எட்டாயபுரத்தில் உள்ள ஜோசியரிடம் லட்சுமியும், யோகாவும் சென்றனர்.
இரண்டு பேரின் ஜாதக பொருத்தம் அமோகமாக இருக்க. இருவரின் திருமணத்திற்கு நாள் பார்த்து, வைகாசி முதல் தேதி குறித்து கொடுத்தார் ஜோசியர்.
பின்பு ஆண்டவர்கனி, திவ்யா ஜாதகத்தின் பொருத்தம் பார்க்க.
ஜோசியர் இருவரின் ஜாதகத்தை பார்த்து நல்ல பொருத்தம். இரண்டு பேரின் ஜாதக பொருத்தம் அமோகமாக இருக்க. நல்லா வாழுவாங்க. ஒரு தரம் திருச்செந்தூர் போயி முருகனுக்கு பன்னீர் அபிஷேகம் பண்ணி, கடலுல நீராடிட்டு வாங்க. குடும்பமா எல்லாரும் சேர்ந்து போங்க, நல்லது நடக்கும்.
லட்சுமியும், யோகாவும் ஜோசியர் சொன்னதற்கு சரி சொல்லி விட்டு. வீட்டிற்கு வந்து அனைவரிடமும் ஜோசியர் சொன்னதை சொல்லி கல்யாணத்துக்கு முன்னாடி நாம எல்லாரும் சேர்த்து திருச்செந்தூர் போகலாம் என்று சொல்ல.
ஆண்டவர் கனி முதலில் கல்யாணத்துக்கு பத்திரிக்கை அடிப்போம், அப்பறம் குலதெய்வம் கோவில் போயி முதல் கல்யாணம் பத்திரக்கை சாமிக்கு வச்சுட்டு, அப்படியே திருச்செந்தூர் போயி முருகனுக்கும் கல்யாணம் பத்திரிக்கை வச்சுட்டு வந்துரலாம் என்று சொல்ல.
அவன் சொல்லுவது சரி என்று பட.
அவர்களின் குலதெய்வம் கோவில் திருச்செந்தூர் பக்கத்தில்
இருப்பதால் அனைவரும் சரி என்றனர்.
கல்யாணத்துக்கு பத்திரிக்கை அடித்தனர். மீனாட்சி ஊரில் இருந்து விருதுநகர் வந்து இருந்தாள், அவள் இரண்டாவதாக கருவுற்று இருப்பதால், அனிகா, திவ்யாவோடு சேர்ந்து ஒட்டி கொண்டு திரிந்தாள்.
பெரிய ட்ராவலரில் அனைவரும் அவர்களின் குலதெய்வம் அருஞ்சுனை காத்த ஐயனார் கோவிலுக்கு நடு இரவு கிளம்பினார்கள்.
விடியற்காலை 6 மணி பூஜை கலந்து கொள்ள ஏற்பாடு செய்து இருந்ததால் நடு இரவு கிளம்பினார்கள்.
டிரைவர் பக்கத்தில் ராமசுப்புவும், பெரியசாமியும் அமர்ந்து கொள்ள.
இங்கே வண்டியினுள் முன்னாடி நான்கு பேர் அமரும் சீட்டில் லட்சுமி,யோகா, முருகேஷன் அமர்ந்து கொள்ள. அவர்களின் எதிரில் மூன்று பேர் அமர கூடிய சீட்டில் பார்கவியும் அஜய் உங்கார்ந்து கொண்டனர்.
அவர்களின் பின்னாடி மீனாட்சியும், அவளின் கணவன் சுந்தர் அமர்ந்து இருக்க, பின்னாடி நான்கு பேர் அமர கூடிய சீட்டு மட்டும் காலியாக இருந்தது.
திவ்யா, தூங்கும் அனிகாவை டிராவலருக்கு தூக்கி கொண்டு வந்தாள்.
மீனாட்சி அனிகாவை தன்னிடம் தர சொல்லி கேட்க.
வேண்டாம் அண்ணி பின்னாடி இடம் இருக்கு நான் படுக்க வச்சுக்கிறேன் என்றவள் அனிகாவை தூக்கிகொண்டு பின் சீட்டுக்கு சென்றாள்.
ஆண்டவர் வீட்டை பூட்டி விட்டு, ட்ராவலரில் ஏறி வண்டியை லாக் பண்ணிவிட்டு எல்லாரையும் பார்த்தவன், வண்டியை கிளம்ப சொல்லவா சித்தி என்றான்.
கிளம்பலாமா கனி என்றார் யோகா.
டிரைவரிடம் வண்டியை கிளம்ப சொல்லி விட்டு, அவனுக்கு உட்கார இடம் தேடினான்.
மீனாட்சி அண்ணனிடம் உனக்கு இடம் பின்னாடி கடைசி சீட் என்று சொல்லி சிரித்தாள்.
தங்கையின் தலையில் தட்டி விட்டு பின் சீட்டுக்கு வந்தான்.
திவ்யா அனிகாவை சீட்டில் படுக்க வைத்து கீழே விழாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
குழந்தையை சீட்டில் படுக்க வைத்தவுடனே சினுங்க, அவளை தட்டி கொடுத்து தூங்க வைத்து கொண்டு இருந்தாள்.
திவ்யா உங்கார்ந்து இருந்த கடைசி சீட்டின் சன்னல் ஓரம் பக்கத்தில் கொஞ்சம் இடம் மட்டுமே இருக்க. அந்த இடத்தில் திவ்யாவை இடித்துக் கொண்டு அமர்ந்தான் ஆண்டவர்கனி.
அவளோ அவனை முறைத்து பார்க்க.
என்ன முறைப்பு என்றவன். அவளின் தோள் மீது கை போட்டு தன்னிடம் இலுத்து கொள்ள.
ஆவென்று பார்த்தவள், அவனை வயிற்றில் ஒரு குத்து விட்டாள்.
ஐயோ என்று வயிப்பது போல் நடித்தவன். அனிகாவை எட்டி ஒரு பார்வை பார்க்க. அவள் நன்றாக அசந்து தூங்குவது தெரிய. திவ்யாவை பின் இருந்து தூங்கி தன் மடிமீது வைத்து, அணைத்து கொண்டான்.
அவளோ அனைவரும் இருக்க , இவன் நடந்து கொள்ளவதை நினைத்து பயந்து எட்டி பார்த்தாள், வண்டில் எல்லா லைட்டும் அனைத்து இருட்டாக இருந்தது..
ஆண்டவர்கனி சீட்டில் இருந்து கொஞ்சம் இறங்கி அமர்ந்திருந்தவன். திவ்யாவின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து கொண்டு, கொஞ்சம் நேரம்டி பிலீஸ் என்றான்.
அவளோ அவனிடம் இருந்து விழக பார்க்க கொஞ்சம் தள்ள. அவனோ இன்னும் அணைப்பை கூட்டினான்.
இவன் விடமாட்டான் என்று நினைத்தவள். அமைதியாக இருந்தாள்.
சிறிது நேரம் கழித்து அவளை விட்டவன். பக்கத்தில் உள்ள சீட்டில் உங்கார வைத்து, அவளின் கன்னத்தை பிடித்து முத்தம் வைத்து, அழகு பொண்டாட்டி என்றான்.
உன் அனுமதியில்லாம, என் சுண்டு விரலை கூட தொட மாட்டேன் என்றவன். இன்று நடந்து கொள்வது என்னவென்று அவனை பார்த்து முறைக்க.
என்னடி முறைப்பு! அன்னைக்கு இவன் சுண்டு விரலை கூட தொட மாட்டேன்னு சொன்னான், இன்னைக்கு கட்டி பிடிக்குறான்னு முறைக்குறீயா.
ஆமாம் என்று தலையாட்டியவளை.
நான் என்ன சொன்னேன். என் சுண்டு விரல் படாதுன்னு தானே சொன்னேன். என் சுண்டு விரல் உன் மேல பட்டுச்சு இல்லையே என்று கண்ணடிக்க.
அட பாவி பயலே, என்று மனதில் நினைத்தவள். அவனிடமிருந்து கொஞ்சம் தள்ளி உங்கார்ந்தாள்.
இது தான் சாக்கென்று அவளின் மடிமீது தலை வைத்து படுத்து விட்டவன். திவ்யாவின் கையை எடுத்து அவனின் தலை மீது வைத்து கோதி விட சொல்ல.
அவளோ முடியாது என்று கையை இழுத்து கொள்ள.
பண்ணுறீயா இல்லை நான் உனக்கு பண்ணவா.
வேண்டாம் என்றவள், ஆண்டவரியின் தலைமுடியை மெல்ல நீவி விட.
காலையிருந்து வேலை, வேலை என்று ஓடிக்கொண்டு இருந்தவன். ஐந்து நிமிடத்தில் தூங்கி விட்டான்.
அவனை பார்க்கவும் பாவமாக இருந்தது.
வண்டி சிறிது நேரம் கழித்து டீ குடிக்க நிற்றது.
அனைவரும் டீ குடிக்க இறங்கினார்கள்.
ஆண்டவர்கனி திவ்யாவின் இடுப்பை கட்டிக்கொண்டு சீட்டில் தூங்கி கொண்டு இருந்தான். அனைவரும் ஓய்வு அறை சென்று வர. திவ்யாவை அழைக்க அவள் வரலை, நீங்க போங்க நான் வரலை என்று ஆண்டவர்கனி சீட்டில் இருந்து கீழே விழாமல் பிடித்து இருந்தாள்.
வண்டியில் உள்ளவர் ஆண்டவர்கனி, திவ்யாவும் சேர்ந்து இருப்பதை பார்த்து சிரித்து விட்டு செல்ல.
இவளுக்கு வெட்கமாக இருந்தது. இவன் எழாமல் அசந்து தூங்கிகொண்டு இருக்க, எழுப்ப மனம் இல்லாமல் அமர்ந்து இருந்தாள்.
அனிகா முழித்து விட, மீனாட்சியின் கணவர் வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றான். செல்லும் போது ஆண்டவர்கனி, திவ்யாவின் மடிமீது தலை வைத்து தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து சிரித்து விட்டு சென்றான்.
வண்டி வெகுநேரம் நிற்க, ஆண்டவர்கனி மெல்ல தூக்கம் களைந்து, திவ்யாவின் மடிமீது இருந்து எழுந்தவன். என்ன வண்டி நிக்குது என்றான்.
எல்லாரும் கீழ டீ குடிக்குறாங்க என்றாள்.
உனக்கு வேணுமா.
இல்லை என்றவள், ரெஸ்ட் ரூம் போகனும்.
சரி வா என்று கீழே அழைத்து சென்றான். அனைவரும் இருவர் சேர்த்து வருவதை பார்த்து சந்தோச பட, மீனாட்சி அண்ணனை பார்த்து சிரிக்க.
திவ்யா ஒன்று பேசாமல் தலை குனிந்து, ரெஸ்ட் ரூம் எங்கே என்று கேட்டு சென்று வந்தாள்.
மீனாட்சியின் கணவன் என்ன மச்சான் நல்ல தூக்கமா.
ஆமா என்றான் ஆண்டவர் கனி.
ஆமாம், ஆமாம் என்று அனைவரும் ஒரே மாதிரி குரலில் பேச.
என்ன என்பது போல் மீனாட்சியிடம் கேட்டான்.
அண்ணனின் அருகில் வந்தவள், நீ அண்ணி மடியில தூங்குனத நாங்க பார்த்துட்டோம்.
என் பொண்டாட்டி மடியில நான் தூங்க கூடாத.
தூங்கு சாமி, தூங்கு உன்ன யாரு தூங்க வேண்டாமுன்னு சொன்னது என்றவள் அண்ணனை அணைத்து கொண்டவள். ரொம்ப சந்தோஷமா இருக்கு, உன்ன அண்ணியோட சேர்ந்து பார்க்க.
தங்கை பார்த்து சிரித்தவன். நாங்க ரெண்டு பேரும் நல்லா இருப்போம் டா என்றவன், மனைவியை பார்க்க. அவளோ சுந்தரிடம் இருந்த அனிகாவை தூக்கி வைத்துக்கொண்டு.
உனக்கு என்ன வேணும் என்று கடைக்கு தூக்கி சென்றாள்.
மீனாட்சி அண்ணனிடம் அண்ணி கடைக்கு போறாங்க பாருண்ணா, டீ வாங்கி குடு என்று அனுப்பி வைத்தாள்.
திவ்யாவின் பின்னாடி சென்றவன், ஏய் பொண்டாட்டி, டீ குடிக்குறீயா.
அவளோ வேண்டாம் என்று கூல்டிரிங் பாட்டிலை எடுத்து கொண்டவள். அனிகாவுக்கு பிஸ்கெட்டு, சிப்ஸ், சாக்லேட்டும் எடுத்து கொண்டு குழந்தையிடம் வேற எதுவும் வேணுமா அனிகுட்டி என்று இடுப்பில் அவளை வைத்து கொண்டு கடையை சுத்தி பார்த்து க்கொண்டு இருந்தாள்.
ஆண்டவர்கனி டீ குடித்து விட்டு திவ்யாவிடம் வேற ஏதாவது வேணுமா என்றான்.
போதும் என்றவள். வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் பின்னோடு வந்தவன். பின் சீட்டிற்கு சென்று அமர்ந்து கொள்ள.
அனிகா மீனாட்சியிடம் சாக்கிலேட்டை காண்பித்து அவளிடமே அமர்ந்து கொள்ள.
திவ்யா எல்லாருக்கும் கூல்டிரிங்ஸ், சாக்லேட் வேணுமா என்று கேட்டு குடுத்துவிட்டு . ஆண்டவர்கனியின் பக்கத்தில் சென்று அவனை தொடதவாறு அமர்ந்து கொள்ள வண்டி கிளம்பியது.
ஆண்டவர்கனியும், திவ்யாவும் அவர், அவர் போனை பார்த்து கொண்டு வந்தனர். சிறிது நேரம் கழித்து, திவ்யாவுக்கு தூக்கம் வர , கண்களை தேய்த்தவள், மொபைலை தன் ஹேன் பேக்கில் வைத்து விட்டு. சீட்டில் சாய்ந்து கண்களை மூடி தூங்கினாள்.
தூங்கி விழும் மனைவியை தன் மடி மீது சாய்த்து கொள்ள.
முளிப்பு வந்து எழுந்து கொள்ள பார்த்தவளை படுடி, சும்மா ஓவரா பண்ணாத படு என்று அவளை எழ விடாதவாரு பிடித்து கொண்டான்.
இவளுக்கும் தூக்கம் வேற வர. இவன் விட மாட்டான் என்றவள். வசதியாக அவன் மடிமீது நன்கு தலை வைத்து படுத்து தூங்கி விட்டாள்.
அவள் காலை எழும்போது ஆண்டவர்கனியின் குலதெய்வம் அருஞ்சுனை காத்த ஐயனார் கோவிலுக்கு வண்டி வந்து நின்றது.
விடியற்காலை சில்லேன்று காற்று வீச, பெரிய பெரிய ஐயனார் உருவ சிலைகள் கோவிலை சுத்தி இருந்தது. கோவில் பக்கத்தில் தாமரை பூ பூத்த தெப்பக்குளம் அழகாய் இருக்க. திவ்யா அரிய நாச்சி கோவிலில் அழகை பார்த்து கொண்டு இருந்தாள்.
அவளின் பின்னாடி வந்த ஆண்டவர்கனி, மனைவி ரசிப்பதை பார்த்தவன் போலாமா என்று கோவிலை பற்றி சொல்ல, கேட்டுக்கொண்டாள்.
அனைவரும் முதலில் தெப்ப குளத்தில் குளிக்க தாயாராக.
ஆண்டவர்கனியும், ராமசுப்புவும் கோவிலுக்கு வாங்கி வந்த பூஜை பொருள்களை வண்டியில் இருந்து எடுத்து கோவில் பூசாரியிடம் குடுத்து விட்டு வந்தனர்.
அனைவரும் தெப்பக்குளத்தில் குளித்து கொண்டு இருக்க.
பார்கவி எனக்கு இப்படி குளிக்க முடியாது என்று அறையிலே குளித்து வருவதாக சொல்லி சென்று இருந்தாள்.
அஜய், பெரியசாமியும் சேர்ந்து தெப்ப குளத்தில் குளிக்க.
ஆண்டவர்கனி மனைவியை தேடி வர.
அவளோ அனிகாவுடன் சேர்ந்து தெப்பகுளத்தின் படியில் அமர்ந்து குளித்து கொண்டு இருந்தாள்.
அவன் ஒரு முறை மட்டும் குளத்தில் முங்கி எழுந்து உடை மாற்ற சென்றான்.
error: Content is protected !!