Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 24.2

இந்தியா திரும்பியவனுக்கு முதலில் சந்தியா இல்லாத அலுவலகம் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. எல்லாரையும் போலத் தான் அவளும் என்று எண்ணியவனுக்கு ஒரு நாள் கூட அவள் இல்லாது சமாளிக்க இயலவில்லை. அவள் ஆடிட்டர் அலுவலகத்தில் சேர்ந்த விவரத்தை ஏற்கெனவே ஆரியா மூலம் அறிந்திருந்தவன் இந்தியாவுக்குத் திரும்பியதிலிருந்து அவளுக்குப் போன் செய்து பேசவே இல்லை.

 

செல்லும் முன்னர் அவள் கொடுத்த அதிர்ச்சி அப்படி. எனவே ஆரியாவையும் அவளிடம் தான் இந்தியா திரும்பிய விஷயத்தைக் கூறக்கூடாது என்று தடுத்திருந்தான் அவன். ஆனால் வெகுநேரம் அவ்வாறு இருக்க அவனால் முடியவில்லை. மாலையில் நான்கு மணி வாக்கில் ஆரியாவிடம் சொல்லிக்கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்பியவன், ஆடிட்டர் அலுவலகத்தை நோக்கிக் காரை செலுத்தினான் சூரியா.

 



Advertisement

உள்ளே நுழைந்தவனின் பார்வையில் சந்தியா படவில்லை. ஆடிட்டரின் அலுவலக அறைக்குள் நுழைந்தவன் அவருடன் அமெரிக்கப்பயணத்தைப் பற்றிப் பேசியபடி இரு நிறுவனங்களிடையேயான ஒப்பந்தத்தைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டான்.

அந்நேரத்தில் கையில் ஒரு கோப்புடன் உள்ளே நுழைந்த சந்தியா அங்கே அமர்ந்திருந்தவனைக் கண்டதும் திகைப்பில் சிலையானாள். பின்னர் “அண்ணா ஏர்போர்ட்ல நிக்கிறேனு கால் பண்ணதுமே நான் உனக்கு இன்ஃபார்ம் பண்ணிடுவேன் தியா” என்று வாக்களித்தவனின் முகம் மனதில் தோன்ற உள்ளுக்குள் மூண்ட எரிச்சலுடன் ஆடிட்டரிடம் கோப்பைக் கொடுத்தாள் சந்தியா.

சந்தியாவும் சூரியாவும் பேசிக்கொள்ளாதது ஆடிட்டருக்கே அதிசயம் தான். முன்னாள் மேலதிகாரி என்ற முறையில் சந்தியா அவனிடம் நலமாவது விசாரித்திருக்கலாம் என்று எண்ணியவரிடம் இருந்து விடைபெற்றவள் கடுப்புடன் அந்த அறையைக் காலி செய்து தனது மேஜைக்குத் திரும்பினாள்.

Advertisement

“யூ.எஸ் போறேனு என் கிட்ட சொல்லலை… இட்ஸ் ஓகே! தென் என்னோட ரிசல்ட் வந்ததுக்குக் கூட கால் பண்ணலை.. அது கூடப் பரவாயில்லை… ஆனா இந்தியாவுக்குத் திரும்புனதைக் கூட என் கிட்டச் சொல்லலை… கிரேட் இன்சல்ட் சந்தியா… இனிமே அந்த மார்ஸ்மாலோ கூட பேசவே பேசாதே” என்று பிடிவாதத்துடன் கூறியபடி மானிட்டரை வெறிக்க ஆரம்பித்தவளின் மொபைல் ரிங்டோன் ஒலிக்க ஆரம்பித்தது.

Advertisement

மொபைல் திரையைப் பார்த்தவள் சூரியாவின் பெயரைப் பார்த்ததும் இணைப்பைத் துண்டித்துவிட்டாள். அவன் மீண்டும் முயற்சிக்கவே எரிச்சலுடன் அழைப்பை ஏற்றவள் “இப்போ என்னடா வேணும் உனக்கு?” என்று எடுத்தவுடன் வெடிக்க ஆரம்பித்தாள்.

சூரியா “கேட்டா மட்டும் நீ குடுக்கவா போற?” என்று பதிலுக்குக் கேட்கவும் அவள் பொங்கிவிட்டாள்.

“ஹவ் டேர் யூ டு ஆஸ்க் மீ லைக் திஸ்? இப்போ நீ எதுக்கு கால் பண்ணுன? எனக்கு உன் கூட பேசவே இஷ்டமில்லை”

Advertisement

“ஐ னோ! உனக்கு என் கூடப் பேச பிடிக்காதுனு தெரியும்.. ஆனா பிரேக்கப் பண்ணுறதுக்கு முன்னாடி உன் கூட கொஞ்சம் பேசணும்னு நினைச்சேன்.. அதான் கால் பண்ணுனேன்… பட் உனக்கு என் குரலைக் கூட இஷ்டமில்லைங்கிறப்போ நான் என்ன பண்ணுறது?”

“வாட்? பிரேக்கப்பா? யாரு யாரை பிரேக்கப் பண்ண போறாங்க?”

“நான் நம்ம ரெண்டு பேரை பத்தி தான் பேசுறேன் பிரவுனி… உனக்கு இஷ்டமில்லைனா நான் இனி உன்னை டிஸ்டர்ப் பண்ணப் போறதில்லை… குட் பை” என்று அவன் இணைப்பைத் துண்டித்துவிட சந்தியாவுக்கு உள்ளுக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

வேகமாக ஆடிட்டரின் அலுவலக அறைக்குள் சென்று அவன் இருக்கிறானா என்று பார்த்தவள் அவன் காணாமல் போயிருக்கவே, ஆடிட்டரிடம் அவசரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று அனுமதி பெற்றுவிட்டு தனது ஹேண்ட்பேகை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்.

 

[the_ad id=”6605″]

 

அவள் வெளியேறி பார்க்கிங்கை அடையும் போதும் தான் சூரியாவின் கார் அங்கிருந்து வெளியேற, சந்தியா அதைக் கவனித்துவிட்டவள் வேகமாக அவளது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அவனது காரைத் தொடர்ந்தாள்.

சூரியா அவனது காரை அவளது வீடு இருக்கும் இடத்தை நோக்கிச் செலுத்தவே சந்தியா இவன் எங்கே தான் செல்கிறான் என்று புரியாமல் அவனைத் தொடர்ந்தவள் இப்போது தங்கள் வீட்டுக்குத் தான் செல்கிறான் என்று தெரிந்ததும் விடாமல் வீடு வரை தொடர்ந்தாள்.

இருவரும் ஒரே நேரத்தில் வாகனங்களை வீட்டின் முன்னே நிறுத்த, ஸ்கூட்டியிலிருந்து விறுவிறுவென்று இறங்கிய சந்தியா ஸ்டாண்ட் போட்டுவிட்டு அங்கே நின்ற காரின் கண்ணாடியை படபடவென்று தட்ட கண்ணாடியைக் கீழே இறக்கினான் சூரியா.

தன் எதிரே கோபத்துடன் நின்று கொண்டிருந்தவளைப் பார்த்ததும் மந்தகாசப்புன்னகையுடன் சீட்பெல்டைக் கழற்றியபடி காரை விட்டு வெளியே வந்தான் அவன். சந்தியா “பெரிய புன்னகைமன்னன்! ஆளும், மூஞ்சியும்” என்று வாய்விட்டே சத்தமாகச் சொல்லிவிட்டு நொடித்தபடி கேட்டைத் திறந்து வீட்டினுள் சென்றாள்.

சூரியா அவளைத் தொடர்ந்து உள்ளே வந்தவன் அவள் பேக்கைத் தூக்கியெறிந்த வேகத்தைக் கண்டு அவள் கடுங்கோபத்தில் இருக்கிறாள் என்பதை ஊகித்துவிட்டான்.

சந்தியா மூச்சுக்காற்றில் கூட அனலடிக்கிறதோ என்னுமளவுக்குக் கொதித்துப் போயிருந்தவள், தன்னெதிரே மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்று தன்னை கூரியவிழிகளால் நோக்குபவனை வெட்டுவது போல பார்த்துவிட்டு

“இப்பிடி போஸ் குடுக்கத் தான் அவசரமா என் வீட்டுக்கு வந்தியா?” என்று பல்லைக் கடித்தவாறு கேட்க சூரியா அதற்கு இல்லையென்று தோளை குலுக்கிப் பதிலளித்தான்.

“நான் வந்தது நம்ம பிரேக்கப் பண்ணிக்கலாம்னு சொல்லத் தான்” என்று தெளிவானக்குரலில் இயம்பிவிட்டுச் சாதாரணமாக நின்றவனை நம்ப முடியாமல் பார்த்தாள் சந்தியா.

“நீ அன்னைக்கு ஆன்ட்டி கிட்ட பேசுன எல்லா விஷயத்தையும் நான் கேட்டுட்டேன்… அன்னைக்கு அவசரத்துல நீ காலை கட் பண்ண மறந்துட்ட” என்று சூரியா கூறவும், சந்தியா மானசீகமாகத் தன் முட்டாள்தனத்தை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டாள்.

“காதலை கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாதுனு நான் புரிஞ்சுகிட்டேன் பிரவுனி… நீ உன் ஆசைப்படி உன்னோட புரஃபசனைப் பாரு… நான் என் வழியில போய்க்கிறேன்” என்று அழுத்தமானக் குரலில் தெளிவாகக் கூறிவிட்டுக் கிளம்ப எத்தனிக்க அவனைத் தடுத்து நிறுத்தியது சந்தியாவின் கரம்.

“நான் அன்னைக்கு அம்மா கிட்ட பேசுனது எல்லாமே கோவத்துல பேசுனது தான்… எதையும் மனசாற சொல்லலை சூரியா… ஐ லவ் யூ” என்று மெதுவாக உரைத்தவளின் புறம் திரும்பினான் சூரியா.

அவளது முட்டைக்கண்களை உருட்டி தன்னைப் பார்த்தவளிடம் “நீ இப்போ என்ன சொன்ன? என் காதுல லவ் அப்பிடினு ஏதோ விழுந்துச்சு” என்று அவன் புருவம் உயர்த்திக் கேலியாக கேட்க

சந்தியா அவனது கண்களை ஆழ்ந்து நோக்கியபடி “ஐ லவ் யூ சூரியா” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லவும் சற்று முன்னர் விடைபெற்ற மந்தகாசப்புன்னகை மீண்டும் அவன் இதழில் ஒட்டிக்கொண்டது. மனம் உற்சாகத்தில் துள்ளாட்டம் போட்டது.

இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “இஸிண்ட்? பட் உன்னை எப்பிடி நம்புறது பிரவுனி? நீ இப்போ லவ் பண்ணுறேனு சொல்லுவ… இன்னும் டூ டேய்ஸ் கழிச்சு எனக்கு உன்னைப் பிடிக்கலைனு சொல்லுவ… சோ……..” என்று அவன் இழுக்கவும்

சந்தியா அவசரமாக “நோ நோ! நான் நிஜமாவே உன்னை லவ் பண்ணுறேன்…  பிலீவ் மீ சூரியா… ஐ பிராமிஸ்” என்று சூடம் ஏற்றிச் சத்தியம் செய்யாதக் குறையாகச் சொல்ல

அதைக் கேட்டு தலையசைத்த சூரியா ஒரு விஷமப்புன்னகையுடன் “ஓகே! அப்போ ப்ரூவ் பண்ணு” என்று கூறவும் சந்தியா அதிர்ந்தாள்.

சட்டென்று மூண்ட எரிச்சலில் “ப்ரூவ் பண்ணனுமா? லவ் பண்ணுறேனு எப்பிடிடா ப்ரூவ் பண்ண முடியும்? நான் தான் சொல்லுறேன்ல, அதை நம்பாம எவிடென்ஸ் கேக்குற நீ… சரி! நீயே சொல்லு…  நான் என்ன பண்ணுனா நீ என் வார்த்தையை நம்புவ?” என்று எகிற

 

[the_ad id=”6605″]

 

சூரியா “நீ நிஜமாவே என்னை லவ் பண்ணுனா என்னை ஹக் பண்ணு பார்ப்போம்” என்று கரங்களை விரித்துக் காட்டி கண் சிமிட்டியபடி குறும்பாய் புன்னகைக்க

சந்தியா “அதெல்லாம் முடியாது” என்றாள் மறுப்பாய்.

சூரியா “ஓகே அப்போ நீ என்னை லவ் பண்ணலைனு நினைச்சுக்கிறேன்” என்றபடி கிளம்ப முயல எங்கே அவன் சென்றுவிடுவானோ என்ற பயத்தில் ஓடிச்சென்று அவனைக் கட்டிக் கொண்டாள் சந்தியா.

“போகாதே மார்ஸ்மாலோ! ஐ லவ் யூ… இப்போவாச்சும் நம்புடா” என்று சொன்னபடி தன்னைக் கட்டிக்கொண்டு தலையை மட்டும் நிமிர்த்தி தன் முகத்தை ஏறிட்டவளின் நெற்றியில் இதமாய் முத்தமிட்டான் சூரியா.

அவளை ஆழ்ந்து நோக்கியவாறு மொத்தக் காதலையும் கண்ணில் தேக்கி “ஐ லவ் யூ டூ” என்றபடி சூரியாவும் அவளை அணைத்துக்கொள்ள, அதில் மூழ்கிப் போனவளாய் காதலனின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் சந்தியா.

 

சாரல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!