Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Abinayangalin Vizhigalil

Abinayangalin Vizhigalil 15

💞 நயம் – 15 💞

மெல்லிய பனி சாரலில் நனைந்து கொண்டே கதிரவன் தன் வேலையை ஆரம்பித்தான். வாடை காற்றில் மலர்கள் நாணி சிரிக்க தேயிலையின் சுகந்த மணம் அவன் நாசி தழுவியது. அவன் தோளை தொட்டு எழுப்பியது ஒரு பூந்தென்றல், கண் விழிக்கையிலே காபியோடு அபி ரெடியாக நின்று இருந்தாள், நான் கீழே போய் சாப்பிட எல்லாம் எடுத்து வைக்கின்றேன். நீங்க சீக்கிரம் வந்துருங்க என்றவளிடம்



Advertisement

அதுக்குள்ள குளிச்சுட்ட?, ஏன் இவ்வளவு அவசரம்.

Advertisement

Advertisement

நீங்க தான் காலையில் வேகமா போனும்னு சொன்னிங்க , இப்போ அதுக்குள்ள என்ன, அங்கே நேத்தே பயங்கர கூட்டமா இருந்ததுன்னு பாட்டி சொன்னாங்க. சீக்கிரம் போனா வேகமா வந்துரலாம்ல.

Advertisement

சேர்ந்து குளிக்கலாம்னு நினைச்சேன் ,அவ்வளவுதான் வேற ஒண்ணுமில்ல, என்றான் நமுட்டு சிரிப்புடன்.

அருவியில் சேர்ந்து குளிக்கலாம், இப்போ நல்ல பையனா கிளம்பி வாங்க பாஸ் என்றபடி வேகமாக சென்று விட்டாள்.

தங்கத்தாமரை மலரே அப்படின்னு அருவில தான் பாடணும் போல. ம்ம்ம்.,கிளம்புவோம் என்றபடி குளித்து முடித்து இதோ கிளம்பி விட்டார்கள் சின்ன சுருளி அருவிக்கு.

பாட்டி சொன்னது போலவே அந்த காலை வேளையிலே அத்தனை கூட்டம் அங்கே வரிசையாக நின்றது. நீர் வரத்து மிதமாக இருந்த நிலையில் குழந்தைகள் கூட்டம் ஆர்ப்பாட்டமாக குளித்து கொண்டு இருந்தது. ஏனோ அவர்களை கண்டவுடன் மனம் சிவா, விஷ்ணுவை தான் தேடியது. பசங்க வந்து இருந்தா நல்லா என்ஜாய் பண்ணி குளிப்பாங்க. அடுத்து வரும் போது அவர்களோடு வர வேண்டும் என குழந்தை மனம் அவர்களை தேடியது. ஆமாடா, ஹனிமூன் போனா குழந்தை வரும்னு சொல்வாங்க. நீ ஹனிமூனுக்கே குழந்தையோட வர நினைக்கிற என அவன் மனசாட்சி கிண்டல் செய்தது.

பின் நீராடி , உணவருந்தி, வெள்ளிமலைக்கு கிளம்பி விட்டார்கள். அவன் எண்ணியது போல ட்ரெக்கிங் போக அபி பயப்படவில்லை. அவனோட இயற்கையை ரசித்து மிக உற்சாகமாக இருந்தாள்.

உனக்கு பயம் இல்லையா, வேகமா ஏறி வர்ற, நடுவுல யானை எல்லாம் வந்தா என்ன பண்ணுவ.

நீங்க இருக்கும் போது எனக்கு என்ன பயம். யானை மேலே ஏத்தி உட்கார வைக்க மாட்டிங்களா? . அதுவும் இல்லாம எனக்கு ரன்னிங் ரேஸ் ரொம்ப பிடிக்கும். வந்தா கூட வான்னு கத்திட்டே ஓடிருவோம் , என்றால் கண் சிமிட்டி.

இப்படியே பேசி சிரித்து கொண்டு , புகைப்படம் எடுத்து, கொஞ்சி பேசி , அன்னியோன்யமாக என அன்றைய நாள் சுகமாக கழிந்தது.சீண்டல்கள், சிணுங்கல் என இன்னும் நெருங்கி விட்டனர். இரவு பொழுதினை சுகமாய் கழித்து காலையில் வீடு திரும்பினர்.

அவர்களின் ஜொலித்த முகங்களை கண்ட பெரியவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். இவர்களை மேகமலைக்கு அனுப்பிவிட்டு வீட்டினரும் பல திருத்தலங்களை கண்டு வந்திருந்தனர். சென்று வந்த இடங்களை எல்லாம் இவர்கள் சொல்லி முடிக்க, அதுவரை விளையாடி கொண்டு இருந்த சிவா, விஷ்ணு ஓடி வந்தார்கள். அர்விப்பா , நீங்க பிசினஸ் விஷயமா ஊருக்கு போனதா அம்மா சொன்னாங்க, ஆனால் நீங்க பால்ஸ் போனதா சொல்றிங்க, அப்போ என்னை ஏமாற்றி விட்டுட்டு போனீங்களா? என்றான் கோபமாய் விஷ்ணுக்குட்டி.

முழித்தவன் பவி முகத்தை பார்க்க, அதற்குள் அவள் அவனை தூக்கி கொண்டு , உங்க அர்விப்பா மீட்டிங் போய்ட்டு அப்படியே அங்க போய் குளிச்சுட்டு வந்தாங்க. உன்னை அடுத்து கூட்டி போவாங்க செல்லம் என்றாள் சமாளிக்கும் விதமாக.

கோகுலோ நமுட்டு சிரிப்புடன் அவனை பார்க்க, ஐயோ இவன்கிட்ட எப்படி எல்லாம் பொய் சொல்லி சமாளிக்க வேண்டிருக்கு, நமக்கு இன்னும் பயிற்சி வேண்டும் போல பசங்களோடு பேச என நினைத்தவன் , ஆமாண்டா செல்லம், நீங்க என்னை விட்டு எந்த எந்த கோயிலுக்கு எல்லாம் போனீங்க, சொல்லுங்க பார்ப்போம் என்றவுடன்

நாங்க குரங்கு கோயிலுக்கு போனோம், அங்க என்னோட முறுக்கை வேணும்னு கேட்டு என் ட்ரெஸ்ஸை பிடிச்சி பிடிச்சி இழுத்துச்சு. நான் கொடுக்கவே இல்ல, யாராவது நமக்கு கொடுத்த தானே வாங்கணும், பிடிங்கி திங்க கூடாதுல்ல, அந்த மங்கிக்கு ஒன்னும் தெரியல அர்விப்பா

என்றான் முகத்தை உம்மென வைத்து கொண்டு.

அவன் சொன்னதை கேட்டதும், அந்த மங்கிக்கு ஒன்னும் தெரியல, நம்ம அடுத்து போய் அவங்களுக்கு எல்லாம் முறுக்கு கொண்டு போய் கொடுப்போம் என்றான் சிரிப்பை அடக்கி கொண்டு.

முறுக்கு வேணாம், உடைச்சு சாப்பிட தெரியல, கீழ எல்லாம் கொட்டிருது, நம்ம லாலிபாப் வாங்கி தருவோம், நல்லா சப்பி சப்பி சாப்பிட ஈஸியா இருக்கும் என்றான் கர்மசிரத்தையாய்.

உன்கிட்ட மாட்டிகிட்டு அந்த அழகர்மலை மங்கி தான் பாவம். அதுவும் எவ்ளோ வேகமா கையை பிடிச்சி இழுக்குது, பயப்படாம குடுக்க மாட்டேன்னு நிற்கிறான். எங்களுக்கு தான் பயம் , எங்க கடிச்சி வைச்சிருமோனு , அப்புறம் வேற முறுக்கை கொஞ்சம் தூரமா தூக்கி போட்டு அந்த குரங்கை தான் பத்திவிட்டோம். அப்பவும் நம்ம குரங்கு விடாம முறுக்கை பிடிச்சிக்கிட்டு நிக்குது. அன்னிக்கு புல்லா இது நினச்சு நினச்சு சிரிச்சோம். இப்போ அதுக்கு லாலிபாப் கொண்டு போய் கொடுக்கணுமோ , விளங்கிடும் போடா என்றாள் பவி நகைத்து கொண்டே.

இப்போ என்ன புதுசா அர்விப்பா னு கூப்புடற, சித்தானு தானே சொல்லுவ என்றவுடன்,

சிவா உடனே ஒன்னு சித்தி, சித்தப்பானு சொல்லணுமாம், இல்லைனா அப்பா, அம்மானு சொல்லணுமாம், அதான் நாங்க இனிமே அபிம்மா, அர்விப்பானு கூப்பிட போறோம்.

குட் பாய், என்னை அப்பான்னு சொன்னது ரொம்ப பிடிச்சுருக்கு. இப்படியே கூப்பிடு.

இப்படியாக சிரித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் தங்கள் அலுவலகத்திற்கு அனைவரும் பறந்தனர். ஆண்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் தான் பவி அபியிடம் பேசவே முடிந்தது. அவளை அறையில் இழுத்துக் கொண்டு சென்றவள்.

என்னடி , இரண்டு நாள் எப்படி போச்சு நல்லா சுத்தி மட்டும் தான் பாத்தீங்களா ? வேற என்ன பண்ணீங்க ?என்றாள்.

நல்லா என்ஜாய் பண்ணோம் அக்கா. நிறைய விஷயங்கள் பேசி இன்னும் புரிஞ்சுக்கிட்டோம். எங்க கல்யாணம், மாமா பிசினஸ் நான் பார்த்ததுன்னு எல்லாமே அவரோட சொல்லிட்டேன்.அவர் மனசில தான் ரொம்ப வருத்தம் இருக்குது. ஊருக்கு போனதுல இருந்து தனியாவே வளர்ந்து லோனிலியா பீல் பன்றார். நம்ம பார்க்கிற ஆள் வேற ஆனா மனசில இன்னும் நிறைவேறா ஆசை நிறைய இருக்கு. அது ஒவ்வொன்னையும் கண்டுபிடிச்சி சரி பண்ணனும். ஆபிஸ் வேலை மட்டும் ரொம்ப யோசிச்சு பக்கா பிசினெஸ் மேனா இருக்கார். அப்பா பாசத்திற்கு ஏங்கும் பச்சப்புள்ள. அவரு அநாதை மாதிரி இருந்தேன்னு சொன்னவுடன் எனக்கு மனசே கலங்கி போச்சு. அவர் முன்னாடியே வருத்தப்பட்டா இன்னும் கஷ்டப்பட்டுவார்னு தான் அமைதியா இருந்தேன். முடிஞ்ச அளவு அவர் கூடவே நானிருந்து தான் அந்த வேதனையை குறைக்கனும்.

அவள் கூறியதை கேட்டதும் பவியும் அமைதியாக, என்கிட்டே பேசும்போது சொல்லுவான். என்ன பண்ண, மாமா அதைப்பத்தி யோசிக்கவே இல்லை. இப்போ அவரும் பீல் பண்ணி, இனிமேலாவது ரெண்டு பேரையும் சந்தோசமா வச்சுக்கணும்.

ஆமா ஊருக்கு போறது பத்தி என்ன பிளான். இன்னும் ஒருவாரம் தானே இருக்கு. என்ன பண்ண போறீங்க.

மாமாட்ட பேசிட்டு அவர் சொல்லுவாருக்கா எனக்கு என்னமோ திருப்பி அங்க போக மாட்டாருன்னு தான் தோணுது. இன்னைக்கு தான் பேசணும்னு சொன்னார் என்றவளாய், சரி நானும் ஆபிஸ் போறேன். நிறைய வேலை பெண்டிங் இருக்கு. அவர் லாயர் ஆபிஸ் போயிட்டு அங்க வந்துருவேன்னு சொல்லி இருக்கார். நான் கிளம்பிருவேன் என்றவளாய் வெளியே வந்து விட்டாள்.

இவள் இங்கே அவனை பற்றி வருத்தப்பட்ட வேளையில் அங்கே அவன் தன் தந்தையோடு பேச ஆரம்பித்தான். ஏம்பா இவ்ளோ நாளா என்கிட்டே உங்க ஹெல்த் கண்டிஷன் பத்தி ஒன்னும் சொல்லல. அத்தைங்க சொத்தை பிரச்சனை பத்தி சின்ன வயசில எதுவும் தெரியாது, பேச்சுவார்த்தை கிடையாதுன்னு மட்டும் சொல்லி இருந்திங்க, நான் வளர்ந்த பின்னாடியாவது சொல்லி இருக்கலாமே, நீங்களே கஷ்டப்பட்டு எல்லா சொத்தையும் மீட்டு இருக்கீங்க. ஆனால் நான் உங்களை தப்பா புரிஞ்சுகிட்டு நான் உங்களை இன்னும் கஷ்டப்படுத்தி இருக்கேன். சாரிப்பா எனறான் மன வேதனையுடன்.

விடுப்பா., நீயாவது சந்தோசமா இருக்கணும்னு நினைச்சி தான் எதையும் சொல்லல , கஷ்டப்பட்டு சொத்தை மீட்டேன், ஆனால் உன்னை பத்தி யோசிக்க மறந்துட்டேன், போனதை பத்தி பேசி இருக்கிற சந்தோசத்தை இழந்திட கூடாது. ஆமாம், உங்களை தனியா அனுப்பி வச்சா இதை பத்தி தான் பேசிட்டு இருந்திங்களா என்றபடி சிரித்தார்.

அடுத்த வாரம் லண்டன் போக வேண்டுமே. அபிக்கு விசா ரெடி பண்ணிட்டியா. இல்ல அப்புறம் அவளை கூட்டி போக போறியா? என்ன முடிவு பண்ணி இருக்கீங்க ?என்றார்.

இல்லைப்பா, எங்களுக்கு இங்க உள்ள பிசினஸ் எல்லாம் நம்ம கையில் கொண்டு வர வேலை இருக்குது. அதனால் நாங்க கொஞ்ச நாள் இந்தியாவில இருக்கலாமான்னு நினைக்கின்றேன். நீங்க தான் கொஞ்ச நாள் மட்டும் அங்க போக போறீங்க. அங்க உள்ள வேலை எல்லாம் நீங்க பார்த்துக்கோங்க. சில அரேஞ்மெண்ட்ஸ் நான் பண்ண சொல்லி போறேன், இன்னும் மூணு மாசத்தில் அது எல்லாம் முடிஞ்சுரும். அப்புறம் நீங்களும் இங்கேயே வந்துரலாம். இனிமே அங்கே போக வேண்டாம். உங்க உடம்பு சரியில்ல, இங்கேயும் அங்கேயும்னு ஓடிக்கிட்டு இருந்தது போதும். எப்பவும் போல இந்தியாவிலேயே இருந்துரலாம். தேவை பட்டா மட்டும் நான் அங்க போய் பார்த்துகிறேன். எல்லா டீலும் ஆன்லைன் மாத்திரலாம். அதனால் ஒன்னும் பிரச்சனை வராது. இது தான் நான் பண்ணனும்னு நான் நினைக்கின்றேன், நீங்க என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.

நானும் இத தான் யோசித்தேன். வயசான காலத்துல சொந்த ஊரிலிருக்கிறது தான் திருப்தி. சந்தோசம் எல்லாமே. இனிமே நீங்களே எல்லாம் பார்த்துக்கோங்க. நாங்க பிரீயா இருக்கோம். உங்க அம்மாவும் இதை தான் சொன்னாள். நாங்க மட்டும் ஊருக்கு போறோம். டிக்கெட் போட்டுவிடு. இப்போ தான் சந்தோசமா இருக்கு.

இவர்களின் முடிவை கேட்டதும் மொத்த குடும்பமும் மகிழ்ந்தது. தன் மகள் தன்னை விட்டு நெடும் தூரம் செல்ல போகின்றாள் என்ற வருத்தத்தில் இருந்த பிரியா மிக மனம் மகிழ்ந்தார்.

நாட்கள் கடந்த நிலையில், இங்கே உள்ள அனைத்து தொழில்களையும் தன் வசம் கொண்டு வந்து விட்டான்.

நிர்வாகத்தில் வரும் ஒவ்வொரு இடத்திலும் முதலில் கேமரா பொறுத்த செய்தான். கழிப்பறை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் பொருத்தி இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு எவ்வித தவறுகளும் நடக்க வாய்ப்பில்லை. மேலும் அதனை கண்காணிக்க என்றும் ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தான். தன் தொலைபேசியில் அதனை பார்வையிடுமாறு அமைத்துக் கொண்டான். இதனால் வேலை இடத்தில் வெட்டிபேச்சுக்கள் குறைந்தன. வேலைகள் தொய்வில்லாமல் நடக்க தொடங்கியதால் லாபமும் அதிகரித்தது. அதன் ஒரு பகுதியை அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக அறிவித்தான்.

அதே போன்று குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும். மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தாமதமாக வருவதற்கு அனுமதி, அதிகம் வந்தால் சம்பளம் பிடித்தம், வேலை நேரம் தவிர்த்து அவர்களின் ஒவ்வொரு மணிநேரத்திற்கு கூடுதல் சம்பளம் என பலவற்றை அறிவித்தான். நியாயமாக இருந்ததால் இந்த திட்டத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை.

தொழில் வளர்ந்தது, அபியும் அவனோடு இணைந்தே பணியாற்றினாள். அதனால் வேளை பளு என்ற நிலை ஏற்படவில்லை. தன் அத்தை வீட்டிற்கு அருகிலேயே விற்பனை செய்யப்பட்ட வீட்டினை வாங்கி தானும் அங்கேயே குடிபெயர்ந்து விட்டான்.

 இவ்வாறாக அவன் ஓட்டம் மாதங்களை கடந்து நின்றது. அவனின் பின்னால் அவளும் ஓடி ஓடி கலைத்தாள். அவளின் ஓட்டத்தை நிறுத்த வேண்டுமென விதியும் துரத்தியது.

💞💞💞

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள் நீங்கும் இடத்து.

Life is she to my very soul when she draws nigh;

Dissevered from the maid with jewels rare, I die!

ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள்‌ கூடும்‌ போது உயிர்க்கு வாழ்வு போன்றவள்‌; பிரியும்‌ போது உயிர்க்குச்‌ சாவு போன்றவள்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!