Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 15

அத்தியாயம்                14

இந்த துர்காவின் எண்ணங்களுக்கு அந்த நேரத்தில் ஏதோ ஓர் தேவதை சதாஸ்து சொல்லிக் கொண்டிருந்தது. அவளையே புதிதாக பார்த்துக் கொண்டிருந்தவனை, அழைத்து சென்றது, ஒரு குரூப்.

துர்காவும் எழுந்து சென்றாள், உறவில் ஒருவன் வந்து துர்காவிடம் “அக்கா, உங்க ரூம்ல தான் சீட்டு விளையாட போறோம் நீங்க இங்கயே படுத்துக்கங்க” என்றவிட்டு சென்றுவிட்டான்.



Advertisement

இதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது, இப்படி தான் விசேஷ நேரங்களில் நடக்கும், துர்காவும் எதுவும் சொல்லாமல் தன் அம்மாவுடன் உறங்க சென்றாள். குழந்தைகள் நித்யாவுடன் வீட்டிற்கு சென்றாயிற்று.

விடியற்காலை மூகூர்த்தம் ஆதலால், 3மணி போல் தன் ரூமிற்கு தயாராக சென்றாள். அதற்கு ஒரு மணி நேரம் முன்பு தான் மகி உறங்க ஆரம்பித்திருந்தான்.

அது ஒரு நல்ல விசாலாமான அறை, இரண்டு படுக்கைகள் கொண்ட பெட் நடுவில் இருக்க, இடது புறம் டிரெஸ்ஸிங் டேபிள்லுடன், மினி ப்ரிட்ஜ் இருந்தது.

Advertisement

கட்டிலின் விளிம்பு வரை அவனின் கால்கள் நீண்டு கிடந்தது, அடர் நீல நிற சார்ட்ஸ், அதே நிற டி-ஷர்ட்டில், நிமிர்ந்து படுத்திருந்தவன், தன் நிலை கலையாமல் உறங்கிக் கொண்டிருந்தான் மகி.

Advertisement

நல்ல உறக்கத்தில் இருப்பதை ஒரு பார்வை பார்த்தவள், ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள், குளித்து முடித்து இவள், வெளியே வந்த சத்தத்தில் விழித்தவன். அவளை பார்த்தான்.  நைட்டியுடன் தான் வெளியே வந்திருந்தாள்.

“என்ன அதுக்குள்ள ரெடியாகிட்ட” என்றான் அவளை பார்த்து, இவள் ஏதோ தன் கணவன் புரியாத மொழி பேசியது போல் திரு திருவென விழித்து நின்றாள். மகியை பார்த்த டெஷன் தான் துர்காவிற்கு.

இவளின் இந்த பார்வை அவனை என்ன செய்ததோ, அவளை ஒரு மார்க்கமாக பார்த்தே பாத்ரூம் சென்றான். துர்கா புடவை மட்டும் கட்டி அங்கு கீழே சென்றாள் போதும், அழகு நிலைய பெண்கள் வந்திருந்தனர், மற்ற அலங்காரங்களுக்கு.

Advertisement

இவளும் புடவை கட்ட தொடங்க, வந்து விட்டான் மகி, இவளின் இந்த நிலை பார்த்து, கொஞ்சம் நிலை தடுமாறினான், அவன் கண்கள் அதை காட்டிக் கொடுத்தன, இவள் கட்டிலுக்கு எதிர்புறம் திரும்பி நின்று கொண்டாள், திருமணமாகி இத்தனை வருடங்களில் இது போல் நடந்ததில்லை. திணறி போனாள், ஏனென்றே தெரியாமல் கைகள் நடுங்கியது.

திருமணமாகி இத்தனை வருடங்களில் துர்கா, தனது வேலை செய்யும் இடத்தில் மகி இருந்ததே இல்லை. எங்கே அவள் எழும் முன் தான் இவன் கிளம்பி விட்டிருப்பானே.

மேலும் ஒரு ஆசையோ, புரிதலோ, நேசமோ எதன் அடிப்படியும் இவர்களிடம் கிடையாது. திருமணம் என்ற பந்தமும், கணவன் மனைவி என்ற உறவும் மட்டுமே இவர்களிடம்.

இதை இப்போது தான், இந்த கொஞ்ச நாட்களாக தான் துர்கா உணர்ந்தாள், அதை நெறி செய்யவே இப்போது நினைக்கிறாள். ஆனால், இந்த நேரம் தான் கொஞ்சம் கடந்து கொண்டிருக்கிறதோ.

ஆனால், வெளியே வந்த மகிக்கு அவளை இந்த நிலையில் பார்க்கவும், முன்தின இரவிலிருந்து அவளை பற்றிய சிறு நினைவில் இருந்தவனுக்கு, கொஞ்சம் கணவன் எனும் எண்ணம் இயல்பாய் எழுந்தது, ‘இது ஒரு அற்புதமான தருணம் விட்டு விடாதே’ என மனது குரல் கொடுக்க.

இன்னொரு புறம், ‘வேண்டாம் அன்னிக்கே கையவே தொட விடல, பார்த்து, திரும்பிக்க போறா, உனக்கு தான் சங்கடம்’ என போர் கொடி தூக்கியது இன்னொரு மனது. இப்படி மகியிடமும் போராட்டம் தான்.

கடந்த இரண்டு வருடங்களாக, எல்லாவகையிலும் தன்னை விலக்கி வைத்த கணவன் தான், ஆனால் நான் அவரை விலக்க நினைக்கவில்லை, உன்னை பிடிக்கவில்லை என சொல்லியவர் தான்.

ஏதோ இந்த பத்து நாட்களாக தான் என்னுடன் நெருங்குகிறார். ஆனால் இப்போது என்னால் முடியாது, நெருங்குகிறார் தான் புரிகிறது, ஆனால், இப்போது ஏற்கவே முடியாது.

எத்தனை நாட்கள் பாராமுகம் இந்த ஒரு வாரத்தில் சரியாக வேண்டுமா, ‘நீ இல்லை என்றாலும் எனக்கு எதுவும் இல்லை என்னை விட்டு போ’ என்றவரிடம் இளக முடியுமா.

இப்போது நான் அப்படி செய்தாள், இத்தனை வருடம் இவர் செய்த செய்யலை நான் ஏற்றது போல் ஆகாதா, பின்பும் இது தொடராதா. இதே யோசனை அவளிடம்,

எத்தனை நாட்கள் அவளை பார்க்கவில்லை என்றால் என்ன, இப்போதும் நான் அவள் கணவனே என, இத்தனை வருடங்கள் வாழ்ந்த திமிரில் அவள் அருகில் சென்றான் மகி.

அவனின் ஒவ்வெரு அடிக்கும் இவளிடம் ஒரு அதிர்வு தான் வந்தது. தன் புடவையை கட்ட முடியவில்லை அவளால், அவளின் உடல் மொழி மாறியது. அவள் கைகளெல்லாம் ஈரம்,

திருமணமான புதிதில் அவனை முழுவதுமாக நம்பிய அவள் மனம், இப்போது சண்டித்தனம் செய்தது. அவளின் கண்ணீர் வழி உயிர் கரைந்தது. ‘நான் என்ன செய்கிறேன்….’  என ஒரே வித சிந்தனை, அதனால் வந்த பதட்டம். என துர்கா முற்றிலும் மாறி நின்றாள்.

அருகில் வந்திருந்த மகி இதை உணர்ந்தான்.

ஏதோ தோன்ற “ஸ்ரீ “ என்றான் மென்மையான குரலில். திரும்பவில்லை அவள், அவளின் தோள் தொட்டு திருப்ப, அவள் கண்ணில் கண்ணீர், ‘என்னை நெருங்கி வந்து விடாதே’ என்ற செய்தி இருந்ததோ அதில்..

கண்டு கொண்டான் மகி, மனைவியின் கண்ணில் அப்படி ஒரு செய்தியை பார்த்ததும் அந்த இடத்தில் அடி வாங்கியது மகியின் திமிர், அவளை நிராகரித்த அந்த அலட்சியமும் தான்.

செயலற்று நின்றான். எத்தனை இருந்து என்ன, இந்த நொடியை கடக்கவே முடியவில்லை அவனால்

‘அத்தனை பேர் எதிரில் என்னை விட்டு போக மாட்டேன்’ என்றவள், இப்போது கலங்குகிறாள். ‘அப்படியென்றால், எவ்வளவு தூரம் தன்னால் அவள் காயம் பட்டிருக்க வேண்டும்.’ முதல் சிந்தனை தன் மனையாள் குறித்து.

துர்காவிற்கு, கட கடவென கண்ணீர் கண்கள் தாண்டியது. அவனின் இந்த செயலற்ற தன்மையை அவளால் பார்க்க முடியவில்லை, தன் நிலை குறித்து தன்னை  தானே திட்டிக் கொண்டாள்.

ஏற்கவும் முடியாமல், அவனை தூர நிறுத்தவும் முடியாமல்.. ‘ஏதாவது செய்யேன், ஏதாவது பேசேன்’ என்னும் விதமான பார்வையை தன் கணவன் மீது வீசிக் கொண்டிருக்க

அவள் கணவனோ, முதல் பார்வையில் இருந்தே இன்னும் மீளாதவனாக ‘நான் அவ்வளவு கொடுமையானவனா’ என்ற பார்வையை  தான் பார்த்தான்…

அதில் துர்காவிற்கு என்ன புரிந்ததோ “சாரி பாவா” என அவன் நெஞ்சில் சாய்ந்து ஒரே அழுகை,

யார் யாரை தேற்ற முடியும். இங்கு எந்த வார்த்தையும் அபத்தமோ.

மகிக்கு என்ன நடக்கிறது என புரியவும் கொஞ்சம் நேரம் ஆனது. தன் மனையாள், தன் மீது சாய்ந்து அழுதுக் கொண்டிருப்பது இப்போது தான் உணர முடிந்தது.

‘எல்லா வகையிலும் என்னை மட்டுமே பார்க்கிறாள்’ பெரிய நிறைவு வந்தது அவன் மனதில்.

நெஞ்சிலிருந்து அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் கண்ணில் கரை காணாத நேசம் கண்ணீர் வழி வழிந்தது. அதை பார்த்தவனது மனம், ‘நான் இன்னமும் தோற்கிறேன்’ என்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு, அவளின் நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தம். அவன் தாடியை தாண்டி வந்து விட்டிருந்தது. அத்தனை அழுத்தத்தையும், அத்தனை மென்னையையும் ஒரே நேரத்தில் தந்தது போல் ஒரு முத்தம்…

எல்லாவற்றிற்கும் மன்னிப்பு கேட்டதா, உன்னிடம் நான் தோற்றுவிட்டேன் என்றதா, ஏதோ உறுதியை கொடுத்ததா, தெரியவில்லை, தந்த அவனிற்கு. ஆனால், அவளிற்கு அது அத்தனையையும் அந்த முத்தம் சொன்னதாக இருந்தது.

துர்கா “நான்.” என ஏதோ சொல்ல வர. “ஷ்” என்றான் அவள் உதட்டின் மேல் விரல் வைத்து. சிறிது நேரம் அவள் முகம் பார்த்து அவளின் கைகளை தன் கைகளுடன் பிணைத்துக் கொண்டு நின்றான். ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடமிருந்து. கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான்.

அவளின் அரை குறை உடை பார்த்து, ஒரு டவல் எடுத்து வந்து அவள் மேல் போட்டான். கண்ணீர் வழியும் கண்களை துடைத்தான். நீர் கொண்டு வந்து கொடுத்தான் குடிக்க. ஆனால் ஏதும் பேச முற்படவில்லை.

இப்போது மிகவும் நிதனாமாக செயல்பட்ட அவனை ‘இப்படியெல்லாம் செயல்பட தெரியுமா’ என அவள் பார்த்திருக்க….

அருகில் வந்தான் மகி, என்ன என இவள் பார்த்திருக்க, அணைத்திருந்தான் அவளை, முன்பு இருந்த ஒதுக்கத்திற்கெல்லாம் இப்போது ஈடு செய்பவன் போல் இறுக்கமாக அனைத்திருந்தான். ஷன நேரத்தில் அவளை விடுவித்தவன், அவள் கன்னம் தட்டி, அவளை பார்த்த மகி, அந்த இடம் விட்டு வெளியே சென்றுவிட்டான்.

துர்காவும், எதையும் சொல்லாது அவன் சென்றதையே பார்த்திருந்தாள். அவளிற்கு என்ன பேச வேண்டும் என்ன செய்ய வேண்டும் தெரியவில்லை.

ஆனால் அவளின் கண்களில் இப்போது கண்ணீர் இல்லை, மனதின் ஏதோ ஒரு பாகத்தில் தோன்றியது “நான் ஈஷ்வரை தொலைக்கவில்லை” என்று.

பிறகு சிறிது நேரம் அப்படியே அமர்ந்து கொண்டாள், அவள் போன் அலறிய பின்பு தான் சுதாரித்து எழுந்தாள்

பின்பு ஒரு அழகான புன்னகையுடன் தயாராகி வெளியே வந்தாள், அது வரை அந்த காரிடாரில், விடியும் வான் நோக்கி கைகட்டி தவமிருந்தான் மகி.

வந்தவள் அவனிடம் ஏதும் சொல்லாமல் தலையசைத்து விடைபெற்று சென்றாள். இவனும் அப்படியே யோசனையுடனே விடை கொடுத்தான்.

நேரம் சென்றது, இனிமையான மூகூர்த்த நேரமும் வந்தது கீர்த்திவாசன் மங்களநாண் கொடுத்து தன்னவளாக சந்தோஷியை ஏற்றான்.

வெளிவட்டாரங்கள் அதிகம் இல்லாது சொந்தம் மட்டும் அந்த மண்டபத்தை நிறைத்திருந்தது. ஒவ்வொருவர்க்கும் ஏதோ ஒரு நல்ல மனநிலை, ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் அங்கு உணர முடிந்தது.

மகி முன் வரிசையில், பட்டு வேட்டி, சாக்லேட் கலர் லினன் ஷர்டில் அமர்ந்திருந்தான். ஆனால் கண்கள் மட்டும் அடிக்கடி தன் மனையாளை தேடிய வண்ணம் இருந்தது.

அழகான மஸ்ட்டட் வண்ணபட்டில் வைர ஜிமிக்கைகள் காதில் ஆட, காலையில் மகியின் புது கவனிப்பும் சேர்ந்து கொள்ள, துர்கா பம்பரமாகவே சுழன்று கொண்டிருந்தாள்.

நித்யாவின் கண்ணிலும், ராஜேஷின் கண்ணிலிருந்தும் இவர்கள் தப்ப முடியவில்லை. நித்யா எல்லாம் சரியானால் சரி தான் என்றிருக்க, ராஜேஷ்க்கு கொஞ்சம் யோசனை தான்.

ஏதோ கொஞ்சம் பரபரப்பான சூழல் அங்கே, கொஞ்சம் கூட்டம் சேர்ந்தது, ஒருவர் மிக சிம்பிள்ளாக வெள்ளை வேட்டி சட்டையில் நரைத்த தலையுடன் மேடை நோக்கி வந்து கொண்டிருந்தார், அவரின் பின்னால், கம்பீர நடையுடன் வந்து கொண்டிருந்தான் விவேகன். அவனை தொடர்ந்து இன்னும் கொஞ்சம் ஆட்கள்.

விவேகனும், அவரின் தந்தையும் தான்  வந்திருந்தனர்.

துர்காவின் தந்தை கீழே இறங்கி வந்து வரவேற்றார். மகியும் முன் வரிசையில் இருந்ததால், விவேகனின் தந்தைக்கு அழகாக வணக்கம் கூறி மேடை நோக்கி கை காட்டினான்.

விவேகனிடம் “வாருங்கள்” என்றவன். மரியாதை நிமித்தமாக அவனுடன் சென்றான் மேடைக்கு.

அங்கு இருவரும் மணமக்களை வாழ்த்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். துர்காவின் தந்தைக்கும், விவேகனின் தந்தைக்கும் நல்ல பழக்கம் ஆதலால் குடும்ப உறுப்பினர்களிடம் அவர் சகஜமாக பேசினார்.

மகியும் விவேகனுனம் பேசிக் கொண்டிருக்க, துர்கா அங்கேயே இருப்பதாள். மகி அவனிடம் “என் மனைவி” என அவளை அறிமுகம் செய்தான். அப்போது துர்கா “வணக்கம்” என்றாள்.

அந்த சமயம் விவேகனின் செயலாளர் கதிர், விவேகனின் முழங்கையை சுரண்ட விவேகன் வாய் இருக்க மாட்டாமல் “இவர்கள் உங்களுடன் பிசினஸ் பார்க்கிறார்கள் போல” என்றான்.

இந்த தேவையில்லாத கேள்வியில் மகியின் புருவம் சற்று மேலே உயர்ந்தது. ஆனாலும் எதுவும் சொல்லாமல் “இப்போது தான் பழகுகிறார்கள்” என்றான் சற்று சிரித்தவாறே.

மகி, தன்னை நக்கல் செய்து சிரிப்பதாகவே அப்போது தோன்றியது விவேகனுக்கு. மேலும், எவ்வளவு பெரிய செய்யலை அசால்டாக, உன் மனைவியை வைத்து செய்து விட்டாய், என் காரியத்தை கெடுக்க பார்த்தாயா? என்ற எண்ணமும் எழுந்தது. அது முகத்தில் தெரிந்ததோ.

மகி “என்ன விவேகன், என்னாச்சு” என்றான்.

விவேகனும் “ஒண்ணுமில்லை” என்றுவிட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தான்.

இப்படியாக திருமணம் இனிதாக முடிய, எல்லா சடங்குகளும் முடிந்து வீடு வந்து சேர்ந்தனர் மணமக்கள். மகி, அதன் பிறகு ஷோ ரூம் கிளம்பிவிட்டான்.

நெருங்கிய சொந்தம் மட்டும் வரதராஜன் வீட்டில் இருந்தது. அகில் நித்யா அப்போதே மேட்டூர் கிளம்பியதால், ராஜேஷ், வைதேகி, பெரியம்மா, குழந்தைகள் என இவர்கள் மட்டும் வீடு வந்து சேர்ந்தனர் மாலை.

இரண்டு நாள் கமல், தலை கால் புரியாமல் ஆடியதில், அவனிற்கு தான் லேசான காய்ச்சல் போல் உடல் சுட்டது. சர்வேஷிற்கு கூட பெரியம்மா பார்த்தால் போதும் ஆனால் கமல், அம்மாவை தான் தேடுவான்.

எனவே வைதேகி, துர்காவிடம் சொல்லியே சென்றார் “எவ்வளவு நேரமானாலும், வீடு வந்து விடு தங்கவேண்டாம் “ என்றார்.

துர்காவிற்கு, தன் அம்மாவிட்டில் வேலை இருப்பதாள், அவளும் “நான் அவருக்கு போன் செய்து, அவருடன் வரேன்” என்றாள் இன்று காலையில் தோன்றிய இணக்கத்தில்.

&&&&&&&&                &&&&&&&&&&&&&&                  &&&&&&&&&&

விவேகனுக்கு நேற்று மாலை தான், விவரம் தெரியும் சங்கரலிங்கம், வைப்வ்வின் மாமா வந்து விவேகனிடம் விஷயத்தை சொல்லி இருந்தார்.

உமா மகேஸ்வரி இத்தனை நாள் யாரிடமும் சொல்லாலமல் அமைதி காத்தவர். தன் மகன் ஊரிலிருந்து வரவும் கொஞ்சம், கட்டுபாட்டை இழந்தாரோ என்னமோ,,,

தன் மகனிடம் “யார் என்ன சொன்னாலும் கேட்க கூடாது, நான் ஒரிடத்திற்கு கூட்டி போவேன் அங்கு சென்றுதான் கையெழுத்து இட வேண்டும்” என கிட்ட தட்ட அவனிடம் மிரட்டும் நிலையில் சொல்லி இருக்கிறார்.

இயல்பிலேயே நல்ல சுபாவம் அவருடையது. எப்படி தன் கணவர் கொடுத்த வாக்கு வீண் போகலாம் என்ற ஆற்றாமை வேறு.

மேலும் என்ன இருந்தாலும் பணத்தை வாங்கி விட்டு, இல்லை என்று மறுப்பது எவ்வளவு பெரிய பாவம் அது அடுத்த தலைமுறையையும் துரத்தும் என்ற எண்ணம் கொண்ட ஒரு சாதாரண தாய்.

பழி, பாவத்திற்கு அஞ்சும் மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்களோ.

அதானல், தன்னையும் மீறி ஒரு வார்த்தை சொல்லிவிட்டார் தன் மகனிடம். ஆனால் 19 வயதே ஆன வைபவ்விற்கு உலகம் என்பது தன் மாமனை தாண்டியே இருந்தது.

அதனால் இந்த செய்தி அப்படியே தன் மாமனிடம் ஒப்புவித்து விட்டான் வைபவ். சங்கரலிங்கமும், தான் செய்யும் வேலைக்கு உண்மையாக இருந்தார். எனவே, இந்த செய்தி கதிரிடம் சொல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!