Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 20

அத்தியாயம்                20

துர்கா உண்டு முடித்து கிளம்பியிருந்தாள். அவள் கிளம்பவும், வினோ அங்கு வந்தான். “வாடா வினோ“ என அவனை வரவேற்றான் மகி.

“ம்….., சாமி சார், இப்போ வந்துடுவார் மகி” என்றான் வினோ.



Advertisement

அவனை அறையிலிருந்து அழைத்து வந்து மகிக்கென வாங்கிய ஈசி சோபாவில் அமரவைத்தான் வினோ. கால் நீட்டிய படியே இருக்குமாறு உள்ளது அது.

தனது வீட்டையே இப்போது அலுவலகம் ஆக்கியிருந்தான் மகி. ராஜேஷ், அப்போது தான் தன் அறையிலிருந்து வெளியே வரவும் மகி, பார்த்தவன் “என்னடா நீ அண்ணி கூட போகல” என்றான்.

ராஜேஷ், ‘என்கிட்டே யாரும் எதுவும் சொல்லலையே’ என பார்த்திருந்தான். மகி அவன் முகம் பார்ப்பது புரிந்து. “நான் இப்போ தான் வரேன்” என்றவன், உணவு உண்ண சென்றான். மகி அவனிடம் “சரி சாப்பிட்டு ஓபன் டாக் போயிடு“ என்றான். ராஜேஷ் ‘சரி’ என தலையை ஆட்டினான்.

Advertisement

 சாமி சாரும் வந்து விட, நாளை சங்கத்தில் கொடுக்க வேண்டிய, புகார் பற்றியும் அதனை யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது பற்றியும் பேச தான் இந்த ஏற்பாடு. மகி இப்போது தீவிரமாக இறங்கிவிட்டான், விவேகனை சாய்ப்பதில்.

Advertisement

மகிக்கு, தன் மனைவியைதாக்க நினைத்த விவேகனை ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம். மற்ற படி அடுத்தவரை அழிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. அவன் தந்தையின் வளர்ப்பு அப்படி.

ஆனால் மனைவி மக்கள் என வரும் போது, இயல்பான ஆண் என்ற எண்ணம் எழும். அதன் வெளிப்பாடு தான் இந்த செயல்.

அங்கு துர்காவிற்கு, அலுவலகம் செல்லும் வரை ஒரே யோசனை ‘நாம் ஒன்னு கேட்டா, இவர் ஒன்னு சொல்றார்’ என்ன செய்வது, அவர் உள்ளத்திலிருந்து எதுவுமே வராதா ‘என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லவே மாட்டாரா, இப்படியே இந்த வாழ் நாள் ஓடிவிடுமா’ என்ற எண்ணம் தான் இருந்தது.

Advertisement

துர்கா என்ன தான் அவனிடம் தன் விருப்பத்தை காட்டாவிட்டாலும், இரு குழந்தைகளுக்கு தாய்யான, பின்னால் தான், அவளிற்கு இந்த வார்த்தை தேவையாக இருந்தது.

அவளை எல்லோர் எதிரிலும் ‘எப்போ பிடிச்சிருக்குன்னு சொன்னேன்’ என கேட்டது தான், தாங்க முடியவில்லை அவளால். அதற்காக ‘அவனை ஒதுக்கி வைக்க முடியமா என்றாலும் முடியாது’.

பின் என்ன, ‘எப்போதும் போல், தன் அன்பை தந்து, அவனிடம் எதுவும் எதிர்பார்க்காமல் இருக்கலாம்’ என்றாலும் முடியவில்லை. இதே எண்ணத்தில் தான் அலுவலகம் வந்தாள்.

அலுவலகம் வந்தவுடன் இதை பற்றி சிந்திக்க விடவில்லை அவளின் வேலை, அவளை முழுவதுமாக தன்னுள் இழுத்துக் கொண்டது.

மகி சொன்ன நபர்கள் வரவும், அவர்களுக்கு தேவையான விவரங்கள் சொல்லியவள், அவர்களிடமிருந்து கார் புக்கிங் செய்த பிறகே நிமிர்ந்தாள்.

அவள் வீடு வரும் போது மகி ஹாலிலேயே அமர்ந்திருந்தான். இயல்பாய் அவள் வாயிலிருந்து வந்தது “ஏன், பாவா தூங்கலையா” என்ற வார்த்தை தான்.

மகி இப்போது அவளை பார்த்து லேசாக சிரித்தான், ‘காலையிலிருந்து  எத்தனை தரம் கேட்பாள்’ என்ற நினைப்பில் அவளை பார்க்க.  துர்காவும் நாக்கை கடித்துக் கொண்டு அவனை பார்த்தாள். “போ, போய் சாப்பிட்டு வா” என்றான்.

வைதேகி, மகியுடன் அமர்ந்திருந்தார். கூடவே சர்வேஷ், காரில் இங்கும் அங்கும் சென்றுக் கொண்டிருந்தான். தன் அம்மாவை பார்த்ததும் “துக்கா” என்றான்.

எப்போதாவது இது போல் அழைப்பது தான், கமலிற்கு சற்று பயம், ஆனால், சர்வேஷ் செய்யாதே என்றால் செய்வான். துர்கா சிரித்தவாறே அவனை தூக்க ‘கதை கதையாக சொன்னான், வினோ மாமா வந்தாங்க, கடைக்கு போய்” என அவனின் கதையை ரசித்தவாறே உணவை முடித்து வந்தாள்.

துர்கா அவனுடன் பேசியபடியே ஹாலில் வந்து “தூங்கனும் சர்வா” என்க, ஓடியே விட்டான் அவன், தன் அடிமை பெரியம்மாவை தேடி.

வைதேகி தான், துர்காவை பார்த்து “போம்மா, முதலில் உம் புருஷன  தூங்க சொல்லு, கேட்டகவே மாட்டேன்கிறான்.” என சலித்தபடியே சொல்லி தன் அறை நோக்கி சென்றார்.

மகியை பார்த்து “வாங்க பாவா” என அறையினுள் கூட்டி சென்றாள் துர்கா.

மகியும் அவள் அருகில் வந்தததும், தன் மகன் பேலவே கதை படித்தான் கொஞ்சம் கர்வத்தில் அவன் முகம் மின்னியதோ, துர்கா அதை பாராமல் பார்த்தாள் “மெயில் வந்தது பார்த்தேன், புக்கிங் எடுத்துட்ட, நான் எதிர்பார்க்கல” என்றவன் தனது மேனேஜர் சொன்னதை சொல்லிக் கொண்டிருந்தான்.

“ம்….. சூப்பரா பொறுமையா பேசினியாம், மேனஜேர் எல்லாம் ஒரே புகழாரம் தான் போ” என கூறிக் கொண்டே அமர்ந்தான். துர்கா முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

‘யார், என்ன சொன்னால் என்ன, என் கணவனாக நீ என்ன சொல்ல போகிறாய்’ என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் எனவே, இயல்பாய் இருந்தாள் அவள்.

ஆனால், மகியினுள் அவனால் உணர முடியாத ஒரு மாற்றம், தன்னவள்! என்ற பெருமிதம் வந்திருந்தது. அவளின் ஒவ்வரு முகமாக அருகிலிருந்து காண்கிறான். கொஞ்சம் பிரமித்துதான் போகிறான். எனக்கு நிகரானவள் என்ற ஒரு ஈர்ப்பு வந்து அவனிடம்.

ஆனால், அதை தனது கண் வழியே கூட காட்டவில்லை அவன். தான் சொல்லியதற்கு துர்காவிடமும் எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை படுத்துவிட்டான். காலையிலிருந்து அமர்ந்தே இருந்தவனின் முகம் சற்று களைத்து தான் இருந்தது.

சற்று நேரம் அமர்ந்து போன் பார்த்தாள், கண்கள் சொருகவும் சாய்ந்த வாக்கிலேயே உறங்கினாள். மகிக்கு நல்ல உறக்கம். கமல் வந்த பிறகே எழுந்தாள். இப்படியே நேரம் சென்றது.

முழு ஆண்டு தேர்வுகள் இருப்பதால், வகுப்புகளுக்கு கூட்டி செல்லவில்லை கமலை, நிறைய விடுமுறை வேறு எடுத்துவிட்டதால், படிப்பில் கவனம் செலுத்த வைத்தாள்.

கமலை கவனித்து முடித்து “என்ன டிபன் வேலாத்தால்” என்றாள் துர்கா. “சப்பாத்திம்மா” என்றாள் வேலாத்தா.

மகிக்கு சாப்பிட சிரமமாக இருக்கும் என நினைத்தவள் அவனிற்கு மட்டும் தோசை உற்றினால். பெரியவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு, கமலுக்கும் உணவு கொடுத்துவிட்டு ‘அப்பாடா’ என அமரும் சமயம் வினோ வந்தான்.

அவனை பார்த்து துர்காவிற்கு ‘அய்யோ என்ன வேலையோ’ என்று தான் தோன்றியது. தன் பார்வை தன்னை கேட்காமல் தன் கணவனிடம் கெஞ்சியது. ‘அப்புறம் பேசலாமே’ என

இவள், இப்படி பம்பரமாக சுழல்வதை இப்போதெல்லாம் அருகிலிருந்து பார்ப்பதால் அவனிற்கே சற்று சங்கடமாக தான் இருந்தது. ‘இப்போதே, இவ்வளவு டயடாக இருக்காளே’ என தான் தோன்றியது.

ஆனாலும், வேறு வழி இருக்கவில்லையே. அதனால் “வா வினோ “ என அழைத்தவன். “ராஜேஷ் ரூம்ல தான் இருக்கான், இன்னிக்கு அங்க ஓபன் டாக் தான் போனான், கலேக்ஷன் என்னான்னு கேளு” என வினோவை பார்த்து பரபரப்பாக சொல்லவும்.

வினோவிற்கு, என்னோமோ என தோன்ற “சரி டா” என உள்ளே சென்றுவிட்டான். மகி, இப்போது, என்றும் இல்லாத வண்ணம் தனது பார்வையை எல்லா புறமும் சூழல விட்டான், கிட்சென்னில் இருந்தவளை “ஸ்ரீ இங்க வா” என அழைத்தான்.

அமைதியாக தான் வந்தாள், காலையில் கட்டிய அதே, மாந்துளிர் நிற சில்க் காட்டன் புடவை, இவளை போலவே அதுவும் அழகாக சற்று நலுங்கி இருந்தது.

இரண்டு குழந்தைகளின் தாய் என, அவளே சொன்னால் அன்றி நம்ப முடியாத தோற்றம், நெற்றி வகிட்டில் எந்த திருத்தமும் செய்யாத குங்குமம் படர்ந்து இருந்தது.

கழுத்தில் வைர முகப்பு வைத்த தாலி செயின், கழுத்தை ஒட்டியது போல், சின்ன லக்ஷ்மி டாலர் கொண்ட செய்யின், கையில் காப்பு போல் முகப்பு வைத்த வளையல் என கொஞ்சமும் அவளின் நிலை குறையாமல் வந்தாள்.

அப்படியே அவளையே பார்த்திருந்தான் மகி. ஏதும் சொல்லவில்லை. கொஞ்சமாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

மகி என்ற ‘வில்’ இப்போது தான் வளைய தொடங்குகிறது தன் மனையாளிடம். இப்போது அருகில் வந்தவளிடம்  சன்ன குரலில் “என்ன டி, டயடா தெரியற, நாளைக்கு வர சொல்லவா வினோவ” என்றான்.

அவளை பேசவே விடாது “நீ போய் படு, நான் பார்த்துக்கிறேன்” என்றான். அந்த குரலில் வெறும் அக்கறை, கணிவு மட்டுமே இருந்தது.

துர்கா பதறியே போனாள் “அய்யோ, இல்ல பாவா, அப்படியில்ல, சும்மா தான், என்ன விஷயம் பாவா” என்றாள் தனது சோர்வு மறந்து.

மகிக்கு மனது கேட்கவில்லை “இல்ல டி, உன்ன ரொம்ப கஷ்ட்ட படுத்தறேன்” என்றான் ஆற்றாமையாய்.

அவன் அருகில் நின்றிருந்தவள், வாஞ்சையாய் அவன் தலை கோதினாள், ஒன்றும் சொல்லவில்லை அவள், ‘இப்படி இறங்குபவன் இல்லை அவன்’ என்ற எண்ணம் தான் வந்தது.

மகி அவளின் முகத்தையே பார்த்திருந்தான். அவனிற்கு, அவளின் வார்த்தைகள் தேவையாக இருந்தது போலும், மென்ன்மையாய் வருடும் அவள் விரலின் இனிமையில் இவனின் கண்கள் மூடியது.

துர்கா இப்போது சொன்னாள் “பாவா, நான் பார்த்துகிறேன் நீங்க சொல்லுங்க” என்றாள்.

‘நீங்க சொல்லுங்க’ என்ற அந்த வார்த்தை அவனிற்கு அவ்வளவு தெம்பை தந்தது ‘சொல்ல முடியாத ஒரு நிம்மதி தொண்டை வழியே அவனின் இதயத்தில் இறங்கி, மூளையில் பயணிக்கிறது’. அந்த இனிமையை கண்மூடி அனுபவித்தான்.

தன் தலை கோதிய, கையை எடுத்து முத்தமிட்டவன் கண்ணில் பழைய தெம்பு வந்திருந்தது. “ம்…..” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்து.

துர்கா, அவனிடம் குழையவில்லை, தாங்குகிறேன் என்ற மேல்பூச்சு இல்லை, இத்தனை வருட வாழ்க்கையில் உன்னை எனக்கு புரியும் என்ற அடிப்படை கோடு மட்டுமே கொண்டு துர்கா அவனை விழிக்க வைத்திருந்தாள்.

மகிக்கு காலையில் தான் சொல்லிய வார்த்தை நினைவு வந்தது. ‘இல்லை, நான் எந்த நம்பிக்கையையும் இவளிற்கு கொடுக்கவில்லை, இவள் தான் எனக்கு எல்லா நம்பிக்கையையும் கொடுக்கிறாள்’ என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் ராஜேஷின் அறையிலிருந்து ஒரு பாட்டு சத்தம் கேட்டது “உன்னோடு வாழ்வது ஆனந்தமே…

ஓவ்வரு நொடியிலும் பேரின்பமே…” என்ற கேட்கவும், துர்கா கொஞ்சம் கண்ணில் மையலுடன் தன் கணவனை பார்த்தாள். அவனிற்கு இந்த பாட்டெல்லாம் மனதில் நிற்கவில்லை. துர்கா மட்டுமே நின்றாள்.

துர்கா “சாப்பிட்டு பேசலாம் பாவா” என்றாள், கண்ணில் சிரிப்புடன். அவனை விட்டு தள்ளி சென்றவளை பார்த்துக் கொண்டே இரண்டு நிமிடம் அமர்ந்திருந்தான் மகி.

பின் “வினோ “ என கரகரத்த குரலில் அழைத்தான். வினோ வரவும் “சாப்பிடலாம் டா” என்றான். மகியின் பார்வை துர்காவை சுற்றியே இருந்தது. அகிலின் போன் தான் மகியை களைத்தது.

நாளை சங்க கூட்டம் என்ற நிலையில், அகில், மகியிடம் விவரம் கேட்டுக் கொண்டிருந்தான். ராஜேஷையும் அழைத்து வந்திருந்தாள் துர்கா உணவு உண்ண,. நால்வரும் உண்டனர்.

எல்லாம் எடுத்து வைத்து, தொடங்குவதற்கே மணி 10. ராஜேஷையும் அருகில் வைத்துக் கொண்டே பேசினர். விவேகனின் தலைவர் பதவியை இழக்க வைப்பதற்கான புகார் அது. மற்ற உறுப்பினர்களிடமும் கையெழுத்து பெறப்பட்டு விட்டது.

எனவே, நாமினி என்ற முறையில் துர்கா தான் இதை சங்கத்திடம் கொடுத்து, மற்ற அனைவரிடமும் ஒப்புதல் பெற வேண்டும். சாமி அதற்குண்டான எல்லா விவரங்களையும் இணைத்து விட்டார்.

யாருக்கு இதில் சந்தோஷமோ இல்லையோ வினோவிற்கு தான் மகிழ்ச்சி, அவன் தான் “துர்கா, இதை இழுக்க விடாத, நாளைக்கே முடிச்சிடு” என்றான்.

‘என்ன, என்ன வழிகளில் அவளை திசை திருப்புவார்கள், எப்படி இதனை விவேகனின் ஆதரவாளர்கள் எதிர்ப்பார்கள்’ என்று அத்தனையும் வினோ தான் சொல்லிக் கொடுத்தான்.

‘அதனை எப்படி சமாளிக்க வேண்டும்’ என்பதை மகி சொல்லி தந்தான். ராஜேஷ் மட்டும் உடன் சென்றால் போதும் என கூறினார்.

மகி சொன்னான் “இங்க பார் துர்கா, இன்னிக்கே எல்லோருக்கும் தெரிந்திருக்கும், இப்படி ஒரு புகார் வருதுன்னு, பாதி பேர் கிட்ட நான் பேசிட்டேன், நீ பயப்படாத,

என்னோட எண்ணம் சரியா இருந்தா, கண்டிப்பா விவேகனின் அப்பா வருவார், உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் அடுத்த தலைவர் யாருன்னு, நீங்க சொல்ல வரீங்கன்னு கேட்பாங்க” என்று மகி நிறுத்த, வினோவும் ராஜேஷும் “மகேஷ்வரன் தான்” என்றனர்.

துர்கா வாயே திறக்கவில்லை, மகியும் அவளையே பார்க்க அமைதியாக இருந்தனர் இருவரும். வினோ “டேய்”  என மகியின் தோளை தொட, “ம்… “ என்றவன்.

“செயலாளர் யாருன்னு பாரு துர்கா” என்றான். அவள் பார்த்துவிட்டு “நாமக்கல் செந்தில்வேலு” என்றாள்.

“அவர தான் நீ சொல்லணும், அது தான் சரியும் கூட” என்றான். ராஜேஷும், வினோவும் ஒருவரை ஒருவர் கண்ணால் பார்த்து ஏதோ பேசிக் கொண்டனர். இதையெல்லாம் மகி கண்டு கொள்ளவில்லை.

இப்படியாக எல்லாம் பேசி முடித்து, வினோவை வழியனுப்பி வைத்து படுக்க மணி 12.

$$$$$$$$$$$                       $$$$$$$$$$               $$$$$$$$$$

கதிர் இன்று அலுவலகம் வரவில்லை. ‘ஏதோ நடந்து விட்டது அதனால் என் மேல் கை வைக்கலாமா’ என்ற எண்ணம் கதிருக்கு. விவேகனும் இன்று எந்த வேலையும் ஓடாமல் வீட்டிலிருந்தான்.

தோற்றே பழகியிராதனின் நிலையில், என்ன செய்கிறோம் என தெரியாமலே கதிரையும் இழந்துக் கொண்டிருக்கிறான். ஆனால் தன்னிலை இறங்கியதிலிருந்து, அவனிற்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என யோசிக்க தவறினான்.

‘மகியை அவ்வளவு எளிதாக நினைத்து விட்டானோ’, இல்லை ‘மகியை தான் படுக்க வைத்துவிட்டோமே’ என இயல்பாக இருந்தானோ. எதுவோ ஒன்று தன்னிலை இழந்திருந்தான்.

பின்பு, தன் தந்தையிடம் “அப்பா நான் கொஞ்சம் வெளியே செல்கிறேன், நீங்க அலுவலகம் செல்லுங்கள் “ என சொல்லி சென்றுவிட்டான்.

அவர்க்கு இதெல்லாம் தெரியாது. ஏதோ அவனின் உடல் சரியில்லை போல என நினைத்து சென்றார். அன்று கதிரும் இல்லை. அதுவே அவற்கு உறுத்தல் தான்.

கொஞ்ச நேரம் சென்று போன் வேறு வந்தது, சங்க அலுவலர்களிடமிருந்து. மகியின் ஏற்பாடுகள் குறித்து. உடனே அவர் விவேகனுக்கு போன் செய்ய “சுவிட்ச்ஆப்” என வந்தது.

கதிருக்கு அழைக்க அதுவும் அதே பதிலை சொன்னது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தனது அட்வகேட் அழைத்து விவரம் சொன்னார். மாலையில் வீடு வருமாறு பணித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!