உனது காதலில் விழுந்தேன் – 5 “நீயா என் பொண்டாட்டி” என்று அதிர்ந்த பிரபு, சட்டென்று ஏதோ நினைத்தவனாய் தனது பெற்றோரின் முகத்தைப் பார்த்தான். அவர்களின் முகத்தில் எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லை. அவர்கள் அவனின் முகத்தை சற்று இறைஞ்சுதலாக பார்த்தபடி நின்றிருந்தனர். அடுத்ததாக, அவனின் பார்வை யாழினியின் பெற்றோரின் முகத்தின் மீது விழுந்தன. அவர்கள் இருவரின் முகத்திலும் சற்று பதற்றம் தென்பட்டது. இப்போது, அவனின் பார்வை கடைசியாக யாழினியின் முகத்தில் வந்து மீண்டும் நிலைத்தது. அவளின் முகம் […]
உனது காதலில் விழுந்தேன் – 4 பிரபுவை சென்று அழைத்து வரலாம் என்று நினைத்து திரும்பிய தேவி, பிரபுவே அவர்களை நோக்கி வரவும் அப்படியே நின்றுவிட்டார் . மகனை பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் கண்ட தேவிக்கு கண்களில் கண்ணீர் வந்தது. அண்ணாமலையும் நடந்துவரும் மகனை பார்த்தது பார்த்தபடியே நின்று விட்டார். தனது பெற்றோரை பார்த்தபடியே வந்த பிரபுவிற்கு அவர்களது நிலை புரிந்தது. எனினும் அதனை மாற்றும் பொருட்டு, ‘’மா நீ கண்ணுல தண்ணி விட்டு […]
உனது காதலில் விழுந்தேன் அத்தியாயம் 3: தேவி குளித்துவிட்டு சமையலறை வரும்போது அடுப்பில் ஒரு பக்கம் இட்லி ஊற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சாம்பார் கொதித்துக் கொண்டு இருந்தது. அடுப்படியில் ஒரு ஓரத்தில் வடைக்கு உளுந்து ஊற வைக்கப்பட்டு இருந்தது., இவற்றைப் பார்த்த தேவி, தனது கணவனை பார்த்து ஏங்க எப்படி இவ்வளவு சீக்கிரம் எல்லாம் செஞ்சீங்க? என்று கேட்டார். பதிலுக்கு அவரை முறைத்துப் பார்த்த கணவரோ, ஏய் மணிய கொஞ்சம் பாருடி. நீ குளிக்க போய் […]
உனது காதலில் விழுந்தேன் அத்தியாயம் 2: ஏய் எழுந்திரிடி, கல்யாணத்துக்கு நேரம் ஆகுது, சீக்கிரம் கிளம்பற வழிய பாரு என்றார் அண்ணாமலை. ஏங்க, மணிய பாருங்க 4 தாங்க ஆகுது. இவ்ளோ சீக்கிரம் எழுந்து என்னங்க பண்றது. நான் கிளம்ப எனக்கு அரை மணி நேரம் போதுங்க. நான் என்ன பட்டு புடவையா கட்ட போறன், இல்ல நீங்க வாங்கி கொடுத்து வச்சிருக்க நகையை தான் போட போறனா, எதும் இல்ல சும்மா குளிச்சி கிளம்ப […]
உனது காதலில் விழுந்தேன் அத்தியாயம் 1: ‘’டேய் மச்சி, இன்று எனக்கு கல்யாணம் டா மறந்துட்டியா?’’ என தனது உயிர் தோழனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் பிரபு. ஆமா, அப்படியே மறந்துட்டாலும், அதான் கல்யாணம் பேசுன நாளா இத பத்தி மட்டும் தான பேசுது இந்த பக்கி என்று நினைத்து கொண்டது வேறு யாரும் இல்லை பிரபுவின் உயிர்த்தோழன் வெங்கட் தான். (உயிர்த்தோழன் என்றதும் இருவரும் தளபதி பட சூர்யா தேவா அளவிற்கு என்று நீங்கள் நினைத்தால் […]