Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Break up & Reunion story - Love

Advertisement

Ambiga

Active member
Member
ஒவ்வொரு விடியலும் உன்னோடு நான், வாழ்வின் தரமான பொழுதுகளை நிறைவாக்கி தந்தது நீ.

நினைவு தெரிந்து ஒரு 5 வயதில் கை கோர்த்த ஞாபகம்.பிரிவு என்று எண்ணாத முப்பது ஆண்டு பந்தம்.கண் விழிக்கும் நேரம் உன்னை தேடும் மனம்.நாளும் உன்னை நேசித்து உணர்ந்து கொண்டேன் நீ இன்றி இயங்காது என் நாட்கள்.ரசித்து, ருசித்து உன் வாசம் நுரையீரல் தீண்டிடும் இன்பம் எல்லையற்றது.

வாழ்வின் எல்லா இன்பங்களுக்கும் ஒரு தடை உண்டு.சில சமயம் முடிவும் உண்டு.உன்னை விட்டு விலக நினைத்து உறவை குறைக்க முயன்றேன்.வெறுக்கவில்லை.

ஒரு காலை விடிந்தது நீ இல்லாமல். மறுப்பின் கோரம் விளங்கியது. மனம் ஏற்கவில்லை.உனக்கான என் தேடலில் உட்சபட்ச கோபம், அழுகை, ஆத்திரம்.நீ இல்லாத விடியல் ஏற்புடையதாயில்லை. தலை பாரம் கூடியது. மனம் கசங்கி நெஞ்சம் அழுத்த, தாளாமல் துடித்து எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் "என் வாழ்வில் நீ இல்லை. உன்னை மறப்பேன் என்று".

வாழ்வின் வெறுமை போக்க உனக்கான மாற்று பற்றி சிந்தித்தேன். மாதங்கள் இரண்டு கடந்த நிலையில் என் தந்தை கண்டுகொண்டார் மாற்றத்தை. மீண்டும் என் வாழ்வில் நீ வருவது சரி என்றார். நான் மறுத்துவிட்டேன்.

ஒரு வாரம் சென்ற நிலையில் மீண்டும் என் விடியலில் நீ. கணவர் உன்னை என்னிடம் சேர்த்தார். நன்றியோடு அவரை நோக்கினேன்.உன் வாசம் சுவாசம் நிறைத்து, இதழில் தொடங்கி, நாவில் ஊறி, தொண்டைக்குழி தாண்டி என் நெஞ்சில் நிறைந்த
என் காதல் - Coffee.

மீண்டும் இணைந்தோம். இம்முறை உயிர் உள்ள வரை.

Pl excuse if it hurts somebody. My intention is just to share how I felt without coffee. I realised coffee my love for coffee.
This was my personal experience thought of sharing it here. One morning when coffee was not there I decided to quit, later I faced difficulties. My dad adviced to continue as it was a long time practice. My husband insisted I take coffee again. Thats my break up n reunion with coffee.
 
Top