டியர் வித்யா,
உங்களோட நெடுங்கதைகளில் நான் படிக்கும் முதல் கதை இது. குறுங்கதைகள் படிச்சு இருக்கேன்.
அழுத்தமான கதைக் களம். அதை ரொம்ப அழகாக் கையாண்டு இருக்கீங்க. கதைப் பாத்திரங்கள் அனைவரும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள். நம்மளைச் சுற்றி பாசிட்டிவ் வைப்ஸ் இருந்தால் நாமளும் அதே எண்ணங்களில்...
ஷ்ரவன் உணர்வுகள் அந்த ஆதரவில்லா குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் எல்லாம் ஒருவகையில் சரிதான். ஆனால் நடைமுறைச் சிக்கல்களும் அதில் நிறைய உண்டு. ஆனால் இப்படி மாற்றி யோசிக்கவும் செய்யலாம் காட்டினதுக்கு வாழ்த்துகள்.
மர வீடு, ஹேமக் தொட்டில், குழந்தையில் மழலை எல்லாமே சூப்பர்.
ஸ்கூல் பேரு நல்லா இருக்கு...
நான் தான் சாரும்மாவை முதலிலே கொண்டு வாங்க னு சொன்னேனே. உத்ரா, சுபாஷினி ஆசையை ரம்யா மூலம் நிறைவேத்தியது நல்லா இருக்கு. புரிதல் என்பது இதுதான்.
ஷ்ரவன் உருவ மாற்றம் புரிஞ்சிக்க முடியுது. அந்த ட்ரீட்மெண்ட் அப்படித் தானே இருக்கும்.
ரம்யா விரதம் நாலு வாரம் தானே முடிஞ்சு இருக்கு. ஒன்பது வாரம்...
என்னது இன்னும் 100 நாளா? பிக் பாஸ் பார்க்கிற பழக்கம் வேண்டாம்னு சொன்னா கேட்டாதானே?
தீபாவளி கலாட்டாக்கள் அருமை. அதிலும் 70'ஸ் கிட்ஸ், 80'ஸ் கிட்ஸ்னு சொல்லிட்டு இருக்கீங்க. இந்த 2k கிட்ஸ் எல்லாம் என்ன செய்வாங்கனு யோசிக்கறேன் .
ஷ்ரவன் முடிவு சரிதான். இருந்தாலும் ரம்யாவையும் கூட்டிட்டுப்...
கற்பனைக்கரசி .. நல்லா தான் இருக்கு. சரியானப் பொருத்தமும் கூட.
திலகா தாமோதரனுக்குப் பதில், அங்கே சாருலதா இருந்தாங்கனா இவ்ளோ அட்வைஸ் கேட்க வேண்டிய அவசியமே இருந்து இருக்காது.
பார்ப்போம்
நட்புடன்
தேவி
என்ன ஆச்சு ரம்யாவிற்கு? இவ்ளோ டிப்ரெஷன்லே இருக்கா? அவளை ட்ரீட்மெண்ட் கூட்டிட்டுப் போக வேண்டியது தான்.
பாட்டுக்கள் சூப்பர்.
ஷ்ரவன் என்ன செய்யப் போறான்?
நட்புடன்
தேவி
ஃபைவ் ஸ்டார், பால் பாயாசம் பின்னாடி இருக்கும் விஷயங்கள் ரம்யாவின் அன்பை உணர்த்துகிறது. ஷ்ரவன் மேலும் தவறில்லை. ஒரு வழியா சண்டே சந்திக்க மேடம் சம்மதம் சொல்லிட்டாங்க. இதில் ஏதும் முன்னேற்றம் இருக்கான்னு பார்போம்
நட்புடன்
தேவி
ரம்யா மேடம். முன்னப் போனா முட்டு. பின்னே போனா உதைனு இருந்தா ஷ்ரவன் என்ன பண்ணுவான் பாவம். அடுத்த நாள் அப்படி என்ன முக்கியமான வேலையாம்?
எனக்குத் தெரிஞ்சு சாரும்மா வந்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினா ரம்யா சரியாகிடுவானு தோணுது.
பார்ப்போம் அடுத்து என்ன னு
நட்புடன்
தேவி
என்ன ஒரு ஐடியா உத்ராவிற்கு ? ஆனால் வேஸ்ட் தான். ரெண்டும் சண்டை தான்.
ரம்யா உணர்வுகள் ரொம்பவே பாவம் தான். ஆனால் ஷ்ரவனின் எண்ணங்களும் அவளுக்குச் சற்றும் குறைவு இல்லை.
ஷ்ரவன் எப்போ சரியாகப் போறான்னு வெயிட்டிங்.
நட்புடன்
தேவி
திலகாமா நல்லா ஸ்கோர் பண்ணறாங்க. பிள்ளையைக் குட்டவும் தவறவில்லை. அவனுக்கு சப்போர்ட்டும் பண்ணறாங்க. ரம்யா, ஷ்ரவன் சீக்கிரம் சரியாகனும் .
நான் அந்த காசேதான் கடவுளடா படத்தில் தான் ஏதும் க்ளூ இருக்கும்னு நினைச்சேன். ஒண்ணுமில்லை போலிருக்கே
அருமையான எபிசோட்.
நட்புடன்
தேவி
இந்த எபிசோட் ஷ்ரவன் ஸ்கோர் பண்ணிட்டான். மாமியாரை கலாய்ச்சது, மனைவியின் உடல், உணர்வு இரண்டையும் புரிஞ்சு, யாரும் சந்தேகப்படாத அளவு பேசி கரெக்ட் பண்ணிட்டான். இந்த மூளையே அவனின் நினைவுகளையும் சீக்கிரம் மீட்டும்னு நம்புவோம்.
நட்புடன்
தேவி
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.