Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli Episode 26 Part 1

Advertisement

AshrafHameedaT

Administrator
அத்தியாயம் இருபத்தி ஆறு :

எல்லோரும் பேசிக் கொண்டிருக்க அங்கை வெளியில் வந்த பாடாய் காணோம்.

ராஜன் விகாஸிடம் “அத்தையை கூட்டிட்டு வா” என்று சொல்லிக் கூட முடிக்கவில்லை, மனோவிடம் இருந்த ஸ்ருஷ்டி வேகமாய் இறங்கி ஓடினாள் அத்தையை கூப்பிட,

அங்கை இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. ஸ்ருஷ்டி ஓடி அத்தையின் கையை பிடித்து இழுத்து “வா” என்றாள்.

“நான் வரலை பேபி, நீ போ” என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பினாள்.

“மாமா, அத்தை வரலை” என்று ராஜனிடம் ஸ்ருஷ்டி ஒலிபரப்ப,
“என்ன பண்றாங்க” என்றான்.

“உட்கார்ந்து இருக்காங்க” என்று சொல்ல,

“நான் போறேன்” என்று விகாஸ் எழ,

அவசரமாய் எழுந்த ராஜன் “நான் போறேன்” என்றான். பின்னே உடையை மாற்ற சொல்லி ஆரம்பித்து வைத்து வந்தான். ஒரு வேளை மாற்றாமல் இருந்தால். அவன் பயந்தது போல மாற்றவேயிலை.

“அங்கை” என்று அவளின் முன் நின்றான் இந்த முறை கவனமாய் கதவை தாளிட்ட படி, அவள் அப்படியே அமர்ந்திருக்க,

“எல்லோரும் வெளில இருக்காங்க, உன்னை பார்க்க தான் வந்திருக்காங்க, நீ உள்ள உட்கார்ந்து இருந்தா நல்லா இல்லை”

“கழட்டி விட்டுட்டு வா வான்னா எப்படி வருவேன், எனக்கு இதை கட்ட முடியாது, அம்மா தான் கட்டி விட்டாங்க , இங்க வேற ட்ரெஸ் கிடையாது”

“எப்படி எங்கம்மாவை கூப்பிட்டு என் வீட்டுக்காரர் கழட்டி விட்டுட்டு போயிட்டார், நீ கட்டி விடு சொல்வேனா? இல்லை வேற ட்ரெஸ் குடுன்னு சொல்வேனா?”

“எல்லாம் உங்களுக்கு தான் தெரிஞ்ச மாதிரி பண்ணக் கூடாது" பொறிய

“இப்போதைக்கு கட்டி விடறேன், அப்புறம் வேற ரூம் போய் மாத்திக்கோ” என்று அருகே வர,

“என்னை தொட்ட பிச்சிடுவேன் போடா நீ”

அவள் பேசப் பேச கண்டுகொள்ளாமல் அருகில் வந்தவன், அவளுக்கு பின் புறம் சென்று அந்த கயிற்றை எடுத்து கட்டிக் கொண்டே, “எப்போடி வாங்கின இதெல்லாம், இனிமே நீ தனியா ட்ரெஸ் எடுக்க போ” என்று மிரட்டலாய் பேசி கட்ட,

“ஓவரா பேசின வெஸ்டர்ன் அவுட் ஃபிட்க்கு மாறிடுவேன்”

அதற்கு பதில் பேசாமல் முடிசுச்களை போடா, அதற்குள் அவளின் வெண்மையான முதுகு அவனுக்கு அழைப்பு விடுத்தது.
என்ன முயன்றும் முடியாமல் அதில் இதழ்களை பதித்தான்.

எதிர்பார்க்காதவள் விலக நினைக்க, அசையக் கூட முடியவில்லை.

“விடு என்னை பேச வைக்காதே” என்று அவள் பேசிய விதத்திலேயே உணர்வுகள் குறைய,

“என்ன நான் இப்படி ஆகணும்னு தானே இதை போட்ட, இப்போ கூடாதுன்னா எப்படி?”

“இந்த ட்ரெஸ் போட்டா தான் இப்படியாவியா இல்லை ஆக மாட்டியா, பேசாம போயிடு. சும்மா கிஸ் பண்ணிட்டு விட்டுட்டு போயிடுவ. இப்போ வீடு பூரா ஆளுங்க இருக்காங்க” என்று கடினமான குரலில் பேச,

“எதுக்கு இவ்வளவு கோபம்” என்று தன்மையாய் சொன்னவன், “இனிமே இப்படி போடக் கூடாது” என்றான் அப்போதும் காரியத்தில் கண்ணாய்,

“அப்படி தான் போடுவேன், போ, உன்னால முடிஞ்சதை பண்ணிக்கோ” என்று வெளியில் போகப் போக,

“இருடி இன்னும் ஒன்னு கட்டவேயில்லை” என்று கட்டி விட்டு முந்தானையை எடுத்து அவனே சொருகி விட்டு, அவளை சுற்றி வந்து “ஒன்னும் தெரியலை போ” என்று சொன்னான்.

அவனை முறைத்து வெளியே போகப் போக,

“என்னவோ என்னை பார்த்தவுடனே பேசற என் உதடை கடிக்க போறேன்னு சொன்ன” என்று முன்னே சென்று நிற்க,

“கடிக்க மாட்டேன்னு நினைக்காதே, ஆனா இப்போ முடியாது” என்று சொல்லிச் செல்ல,

“ம்ம்ம், தெளிவா இருக்கா” என்று நொந்தபடி அவன் வெளியில் செல்ல,
அதற்குள் வேறொரு அறைக்குள் புகுந்து வேறு ஒரு சுரிதாருக்கு மாறி வந்திருந்தாள்.

இதுதான் அங்கை! என்ன தான் வாயடித்தாலும் உடை விஷயத்தில் ராஜராஜனை திருமணம் செய்த பிறகு அவனுக்கு தக்கபடி மாறிக் கொண்டாள்.

ராஜலக்ஷ்மி அவளின் உடை மாற்றத்தை பார்த்ததும் சிரிக்க, “இப்போ எதுக்கு சிரிக்கறீங்க?” என்று அவரிடம் கத்த,
எல்லோரும் என்னவோ என்று திரும்ப பார்த்தனர்.

பின்னே போடும் முன்னமே சொன்னார் “ராஜன் பார்த்தா திட்டுவான், போடாதே” என்று. வேண்டுமென்றே போட, இப்போது மாற்ற, அதில் அம்மா சிரித்ததும் கத்தி விட்டாள்.

உடனே எல்லோரும் வந்து பார்க்க, மனோ வந்து “என்ன அம்மு?” என்றே கேட்க, அவளுக்கு பயம் வந்து விட்டது “எங்கே அம்மா மனோவிடம் சொல்லி விடுவாரோ” என்று.

அது அவர்களின் வீட்டில் ஒரு சாதாரண விஷயம். ஆனால் ராஜனின் வீட்டில் அப்படி அல்லவே, அதையும் விட ராஜராஜன் அவ்வளவு எளிதாய் எடுத்துக் கொள்ள மாட்டான்.
அதுவே அவளிற்கு ஒரு பதட்டத்தை கொடுத்தது.

“நான் சும்மா பேசினா கூட எல்லோரும் என்னவோன்னு பார்க்கறீங்க” என்ற குரலில் அவ்வளவு சோர்வு.

“ஒன்னுமில்லை மனோ, எனக்கும் அவளுக்கு ஒரு சின்ன விளையாட்டு” என்று ராஜலக்ஷ்மி சொல்ல,

“என்ன விளையாட்டு? அவக்கிட்ட விட்டுக் குடுக்க மாட்டீங்களா? ஏன் அம்மா அவளை டென்ஷன் பண்றீங்க?” என்று மனோ கடிய,
“ஒன்னுமில்லை விடுடா” என்று அவர் அவளை ஆதூரமாய் பிடித்துக் கொண்டார்.

“நீ போ” என்று அம்மாவிடம் செல்லம் கொஞ்சி வெளியில் வந்து அமர்ந்து கொள்ள,

நாச்சி அவளின் அருகில் வந்து அமர்ந்தவர், அவளிடம் வேறு பேச்சு கொடுக்க, சிறிது மாறினாள்.

என்னவோ அவளின் இலகுவான மனநிலை மாறி விட்டது என்று ராஜனுக்கு புரிய, எல்லோர் முன்னும் பக்கத்தில் வந்து அமர முடியாதவனாக அவளை பார்ப்பதும் வேறு பார்ப்பதுமாய் நேரத்தை கடத்தினான்.

அதற்குள் உணவு தயாராகி விட்டது, பாதி வீட்டில் பாதி வெளியில் வாங்கினர்.
பின்பு விருந்து அமர்களப்பட, எல்லோரும் உண்டு முடிக்க, நேரம் பத்து மணியை கடந்திருந்தது.
எல்லோரும் கிளம்பினர்.

கிளம்பி நின்றவர்கள் அத்தனை பேரும் ராஜனின் முகத்தை பார்த்தனர். அவன் அங்கையற்கண்ணியையும் ரதியையும் அழைத்துக் கொண்டு கிளம்புகிறானா என்று.

அவன் அங்கையை பார்க்க அவள் அவனை பார்க்கக் கூட இல்லை. முகத்தில் போனால் போய்க்கொள் எனக்கொன்றுமில்லை என்ற இறுக்கம்.

ரதியோ பாதி உறங்கியும் உறங்காத நிலையில் ராஜனின் கைகளில் தான் இருந்தாள் இன்னம்.
“பெரியப்பா நான் இருந்துட்டு நாளைக்கு வர்றேன்” என்றுவிட்டான்.

“ஷப்பாடா” என்று எதோ ஒரு ஆசுவாசம் அனைவருக்கும்.

“நாளைக்கு இவங்களை கூட்டிட்டு வர்றியா?” என்று சுவாமிநாதன் கேட்க,

ராஜராஜன் பதில் சொல்லும்முன்னே “நான் வேணும்னா இவன் கூட இருந்து நாளைக்கு இவங்களை கூட்டிட்டு வரட்டுமா?” என்றார் தில்லை.

“அதான் அண்ணன் பேசிட்டு இருக்கார் தானே. உனக்கென்ன நடுவுல பேச்சு” என்று தில்லையிடம் தமிழ்செல்வன் வள்ளென்று விழ,
“இவர் அடங்கவே மாட்டாரா?” என்று ராஜராஜன் நொந்து போனான். எல்லோர் முன்னும் அப்பாவை கடிய முடியவில்லை.

அவன் சுவாமினாதனை பார்த்தான், அதுவே சொன்னது இவரை பேச விடாதீங்க என்று.
ஆனால் அங்கைக்கு அப்படி எதுவும் கிடையாதே!

“பெரிய மாமாவை மறுத்து ஒன்னும் அத்தை பேசலை மாமா, பெரிய மாமா கிட்ட தான் பேசினாங்க. என்ன நடுவுல பேசினாங்க?” என்று விட,

“அங்கை” என்றான் ராஜராஜன் அவளை பார்த்தபடி, அங்கை முகத்தை தூக்கி அமைதியாக,

சுவாமிநாதன் “இருந்துட்டு வாம்மா” என்று தில்லையை பார்த்து சொன்னவர், “நாமா கிளம்பலாமா?” என்று பொதுவாய் கேட்க,
“எல்லோரும் இன்னைக்கு இங்கயே இருங்களேன் மாமா” என்றான் மனோ.

“இல்லை மனோ, வயல்ல வேலை இருக்கு”

“சரி சின்ன மாமாவாவது இருக்கட்டும், அத்தை இருக்காங்கள்ள” என்றான்.

அவர் தமிழ் செல்வனை பார்க்க, மனோவிடம் “அண்ணன் ஒத்தையா செய்ய கஷ்டப் படுவார்” என்று சொல்ல,
இப்படியாக தில்லை ராஜராஜனை தவிர எல்லோரும் கிளம்பினர்.

தமிழ்செல்வனிற்கு தில்லையை விட்டுச் செல்ல மனமே இல்லை, கோபம் கூட. ஆனால் அண்ணனின் கண் பார்வையில் வேறு எதுவும் பேசவில்லை. சண்டை சச்சரவு அடி தடி எது நடந்தாலும், பேசினாலும் பேசாவிட்டாலும், உறங்குவதும் மனைவியின் முகத்தை பார்த்து, விழிப்பதும் அவரின் முகத்தில் தானே. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார். தில்லைக்கு அது புரிந்தாலும் அவர் அசையவில்லை.
மனோ அவனின் டிரைவரை அனுப்பி விட கிளம்பினர்.

காரில் ஏறி சிறிது தூரம் வந்ததுமே, வாசுகி பேசினார். “எதுக்கு தம்பி தில்லையை பேசிக்ட்டே இருக்கீங்க. அடுத்தவங்க முன்ன நல்லாவா இருக்கு. அவ என்னைக்கும் இவரை எதிர்த்து பேச மாட்டா? நாமலே சும்மா சும்மா இதை கேட்க கூடாது. என்ன ஆச்சு உங்களுக்கு? அன்னைக்கு எல்லோர் முன்னமும் கை நீட்டுறீங்க, இன்னைக்கு பேசறீங்க. சின்னா வயசா அவளுக்கு, இப்படி பண்ணினா மருமக எல்லாம் அவளை எப்படி மதிப்பாங்க?” என்று குறை பட்டார்.

சுவாமிநாதனும் பேசினார் “டேய், எல்லா புள்ளைங்களுக்கும் கல்யாணம் ஆகிடிச்சு. அவங்களுக்கு அவங்க பெண்டாட்டி புள்ளைங்க தான் முன்ன. நாம எல்லாம் அடுத்தது தான், இனி கடைசி காலத்துல புருஷன் பொஞ்சாதி தானே ஒருத்தருக்கு ஒருத்தர் துணை. எதுக்கு அவளை பேசிட்டே இருக்க, இத்தனை வயசுக்கு அப்புறம் எங்க அப்பா அம்மா இருந்தா அடிப்பீங்களான்னு கேட்கறா? அப்போ நம்மல்லாம் யாருடா தில்லைக்கு?” என்றார்.

இதுவரை எதுவும் பேசாமல் இருந்த நாச்சி,
“எத்தனை புள்ளைங்க இருந்தாலும் காலத்துக்கும் உங்களை பார்த்துக்க போறது ராஜராஜன் தான். நீங்க எப்படி நடந்துக்கிட்டாலும் உங்களை பார்க்கறதுல குறை வைக்க மாட்டான். ஆனா அங்கைக்கிட்ட நல்லா நடந்துகிட்டா சந்தோஷமா பார்த்துக்குவான்”

“மத்த பசங்க பார்த்துக்குவாங்க. ஆனா கூட வெச்சிக்க மாட்டாங்க. கூட இருக்க மாட்டாங்க, ராஜனும் அங்கையும் தான் இருப்பாங்க. அவங்களை விட்டா நீங்க தனியா தான் இருக்கணும்”

“இதுல நீங்க சரியா நடந்துக்கலை, ராஜன் மட்டும் தான் இருப்பான். அங்கை அவனோட இருக்க மாட்டா. சும்மா சண்டையும் சமாதானமுமா இருப்பாங்க”

“சொல்லப் போனா மத்த மருமகள்களை விட அவ நல்லா நடந்துக்கறா, நல்லா பார்த்துக்கறா. நீங்க அவளை மருமகளா மட்டும் பார்க்கலாம். ஆனா அவ அப்படி மட்டும் பார்க்கலை சொந்தமா தான் பார்க்கறா, அவ வந்ததுக்கு அப்புறம் தான் நம்ம வீடு செல்வாக்கா இருக்கு”

“சொல்ல தான் முடியும், பார்த்து இருந்துக்கங்க. அந்த புள்ளைங்களை நிம்மதியா விடுங்க” என்று நாச்சி பேசும் போதே அழுது விட்டார்.

“மா, என்னமா நீ?” என்று சுவாமிநாதன் சமாதனம் செய்ய,

“டேய், என்ன இருந்தாலும் என் பேத்திடா அவ, கொஞ்சமும் நினைக்க மாட்டேங்கறீங்க. அவங்க கிட்ட பணம் காசு இல்லையா என்ன? அத்தனை பேருக்கும் புது துணி எடுத்து இருக்கீங்க. ஆனா என் பொன்னுக்கும் எடுக்கலை, பொண்ணு வீட்டுக்கும் எடுக்கலை”

“என் வீட்டுக்காரர் இருந்தா இப்படி நடந்திருக்குமா?”

“மா, அது ஒரு சம்மந்திக்கு மட்டும் எடுத்து குடுக்க முடியாது. மத்த பசங்க கேட்க மாட்டாங்களா?”

“பார்த்தியா இன்னும் அவங்க உனக்கு சம்மந்தின்னு பேசற. உனக்கு மட்டுமில்லை மத்த பசங்களுக்கும் அவ சொந்தம் தாண்டா. நான் அவ என் பொண்ணுன்னு சொல்றேன், நீ எடுத்து குடுத்தாலும் குடுக்கலைன்னாலும் அவ நல்லா இருப்பா. ஆனா நாம தான் ஒரு துணி கூட எடுத்துக் குடுக்க வக்கில்லாம போயிட்டோம். நீ எடுத்திருக்கவே வேண்டாம். ராஜா கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அவன் செஞ்சிருப்பானே”

“எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. இனி நான் உங்ககிட்ட இது பத்தி பேச மாட்டேன். என்னவோ பண்ணுங்க?” என்று முடித்து விட்டார்.

 
hi mallieeeee
:cool::cool:

ஸ்ருஷ்டி பேசியாச்சு.....
வாசுகி கூட பேசிட்டாங்க...
பட்டுக் குட்டி எப்ப பேசப்போறா....மல்லி...:giggle:
 
Last edited:
???

இங்கே stay போட்டாச்சா???
அப்போ next part கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளாகண்டபடி கட்டிபுடிடா தானோ???

ராஜலட்சுமி கூட பொண்ணை சீண்டி பார்க்கிறாங்களே.....
நாச்சி பாட்டி நச்சுன்னு 4 கொட்டு பசங்களுக்கு.....
பசங்க எவ்ளோ தான் நல்லா இருந்தாலும் பெரியவர்களை கூட வச்சு பார்த்துக்க எல்லா பசங்களும் ஒத்துக்கொள்வதில்லை.....
வீட்டோடு இருக்கும் பையனுக்கு தான் அந்த கடமைன்னு ஒதுங்கிடுவாங்க......

தில்லை தான் பாவம்......
வீட்டுக்காரர் பொண்டாட்டி கண் பார்த்து தூங்கி எழுவாராம்.....
பையன் இவங்களுக்கு சம்பாதிக்கணும் பொண்டாட்டியை விட்டுட்டு.....
கூட்டிட்டு அவன் வீட்டுக்கு வருவானா???
இல்லை இன்னும் காத்திருக்கசொல்வானா???
 
Last edited:
Top