Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 28

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻







அத்தியாயம் 28

சுஜாதா புல்வெளியில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தபடியே தோட்டக்காரர் தோட்டத்து செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். பசிய இலைகளும் பூக்களும் தண்ணீரில் நனைந்து மேலும் அழகாய் காட்சியளித்தன.



சுரேஷ் கையில் கிரிக்கெட் மட்டையுடன் வெளியே வந்தவன் ,

"அக்கா நான் கிரிக்கெட் கிரவுண்ட் போறேன்.அப்பா வந்தா இன்பார்ம் பண்ணிடு…"என்றான்.



"ஏய் ! நில்லுடா டாக்டர் உன்னை ரெஸ்ட் எடுக்கச சொன்னது மறந்து போச்சா என்ன?"



"நான் ஹாஸ்பிட்டல்லருந்து வந்து மாசக்கணக்காச்சுன்றது உனக்கு மறந்து போச்சா? போன முறை செக்கப் போனப்போ நான் இனிமேல் விளையாடலாம்னு டாக்டரே அனுமதி குடுத்துட்டார்.அப்புறம் என்ன?"



"டாக்டரே சொல்லிட்டார்னா சரிதான்.ஆனால் இப்போ சைக்கிள் டெஸ்ட் நடக்கறதா சொன்னியே. அதுக்கு பொறுப்பா உட்கார்ந்து படிக்காமல் விளையாட கிளம்பிட்டே."



"அக்கா! ஒரு நல்ல மாணவனுக்கு அழகே படிக்காமல் பாஸ் பண்றது தான்.அன்னன்னிக்கு பாடத்தை அன்னன்னிக்கே படிச்சுட்டால் பரீட்சை சமயத்தில் மாங்கு மாங்குனு படிக்க வேணாம். லைட்டா ரெப்ஃரெஸ் பண்ணிக்கிட்டாலே போதும்."



"அப்படியா ? நீ சொல்லி நான் கேட்க வேண்டியிருக்கு.எல்லாம் நேரம்டா.."



சுஜாதா அலுத்துக் கொண்டிருக்கும்பொழுது அவளுடைய கைபேசி ஒலியெழுப்பவும், தம்பியை சைகையிலேயே அனுப்பிவிட்டு திரையை பார்க்க அதில் நந்தகுமாரின் பெயர் ஒளிர்ந்தது.



நேரில் பார்க்கையில் கூட ஒரு வார்த்தை பேச ஓராயிரம் முறை யோசிப்பவன் இன்று என்றுமில்லாத திருநாளாய்அவனே செல்லில் அழைத்து பேசுகிறானென்றால் சுஜாதாவின் சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்?



"ஹலோ ! நான் நந்தகுமார் பேசறேன்…"

மறுமுனையில் ஒலித்த அவனின் கம்பீரக் குரலில் சுஜா மதிமயங்கி நிற்க அவன் மீண்டும் ஹலோ என்றபின் தான் சுஜா சுயநினைவிற்கே வந்தாள்.



"ம்..சொல்லுங்க டாக்டர் சார் .என்ன விஷயம்? அதிசயமா போனெல்லாம் பண்ணியிருக்கிங்க."



மறுமுனையில் சிறிது நேர மௌனத்திற்கு பின் அவனே பேசினான்.



"உங்க கிட்ட ஒரு விஷயம் பேசனும் சுஜா.ஹைலி பர்சனல். ப்ஃரியா இருக்கிங்களா? நான் இப்போ உங்களை சந்திக்க வரலாமா?"



"ஓ எஸ் வரலாமே.யூ ஆர் மோஸ்ட் வெல்கம்"



நன்றி சொல்லி அவன் கைபேசி அழைப்பை துண்டித்து விட்டான்.சுஜாவின் மனமோ அவன் என்ன பேசப்போகிறான் என்ற கற்பனையில் மிதந்தது.



ஐ லவ் யூ சுஜா என்பானோ?

உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.உன் சம்மதம் அறியத் தான் வந்தேன் என்பானோ?

என்ன சொல்லப் போகிறான் நந்து?

நந்தகுமார் வரத் தாமதமான அந்த கால்மணி நேரத்தில் சுஜாதா காதலாய் கசிந்துருகினாள் .தென்றலாய் தவழ்ந்தாள்.அருவியாய் ஆர்ப்பரித்தாள்.வானவில்லாய் ஜொலித்தாள்.கற்பனையிலேயே கல்யாணம் நடந்து முதலிரவு முடிந்து குழந்தை கூட பிறந்து விட்டது.



"ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ…"



நந்தகுமாரின் குரல் கேட்டு தான் சுஜாதா

சுயநினைவிற்கு வந்தாள்.

எதிரே நந்தகுமார் நின்றிருந்தான்.

ஆறடி உயரத்தில் பார்மல் பேண்ட ஷர்டில்

கையில் மடித்து போட்டிருந்த வெள்ளை கோட்டுடன் நின்றிருந்தவன்,

"நான் உங்களை டிஸ்டர்ப் செய்து விட்டேனா ? "

என்று புன்னகையுடன் கேட்க, சுஜாதா இல்லையென்ற பாவனையில் தலையசைத்தாள்.



சில நிமிட மௌனத்திற்கு பின் அவனே பேச தொடங்கினான்.



"அம்மாவுக்கு உங்க மேல இருக்கற ப்ரியம் எனக்குத் தெரியும்.அம்மாவிடம் காரியமாகனும்னா உங்களை அணுகினால் தான் நடக்கும்ன்ற அளவுக்கு நீங்களும் அம்மாவும் நெருக்கமாயிட்டிங்க."



"ஒரு நிமிஷம்…"

என்று குறுக்கிட்டாள் சுஜாதா.



"நீங்க இன்னும் என்னை மரியாதைபன்மையில் தான் கூப்பிட்டு பேசனுமா? நானும் அம்மாவும் நெருக்கமாயிட்டதென்னவோ வாஸ்தவம் தான்.ஆனால் உண்மையில் நெருங்கி வர வேண்டியவர் இன்னும்

என்னை அந்நியமாவே நெனச்சா எப்படி?"



வெட்கத்துடன் தலைகுனிந்தபடி சொன்னவளைப் பார்த்து அதிர்ந்தான் நந்தகுமார்.



அவன் எதிர்பார்த்தது தான் என்றாலும் இப்படி மனசு நிறைய அவன்மீது காதலுடன் இருப்பவளிடம் ராதாவின் மீதிருக்கும் தன் காதலைச் சொல்லி உதவி கேட்பது நிச்சயம் முட்டாள்தனம் என்று தோன்றியது.ஆனால் இனியும் தாமதித்தால் விஷயம் கைமீறிப் போய்விடும்.அதனால் சுதாரித்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.



"அந்த உரிமையை எடுத்துக்க நான் விரும்பல."



சுஜாதா அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்

அவள் பார்வையை சந்திக்கும் துணிவில்லாமல் தலை குனிந்தவன் மெல்லிய குரலில் தன் காதலைப் பற்றி சொல்ல, அவன் என்னவோ இயல்பாய் தணிந்த குரலில் தான் பேசினான்.ஆனால் சுஜாதா தலையில் இடியே விழுந்தது போல் பதறிப் போனாள்.விழிகளில் கண்ணீர் குளம் போல் தேங்கியது.



அவள் காதல் அவ்வளவு தானா?



இந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் அவளால் தாங்க முடியவில்லை.நெஞ்சின் ஆழத்திலிருந்து பீறிட்ட உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது சுலபமில்லையே. முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டபொழுது அவளையறியாமலேயே

ஒரு சின்ன விம்மலில் முதுகு குலுங்கியது

.

'இதை சொல்லத்தான் இங்கே வந்திங்களா நந்து? என்மனசுபூரா நீங்க தான் இருக்கிங்கனு தெரிஞ்சும் இப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்தது? என் காதலை சிதைத்த உங்க காதலை பற்றி அம்மாவிடம் நானேசொல்லி அதை நிறைவேற்ற வேண்டுமா? ஹௌவ் க்ரூயல் ஆஃப் யூ? '



மனகுமுறலை அடக்கும் வழி தெரியாமல் அழுகையில் கரைந்தாள் சுஜாதா.பின் படிப்படியாக அழுகை குறைந்து உணர்ச்சிகள் சமணப்பட்டபின், முகத்தை நிமிர்த்தி எதிரே பார்வையால் துழாவியபொழுது அங்கே நந்தகுமார் இல்லை.கைபேசியில் மெசேஜ் வந்ததன் அறிகுறியாக சத்தம் கேட்க எடுத்து இன்பாக்ஸை திறந்தாள்.



"நானோ என் பேச்சோ உங்களை எந்த விதத்திலாவது பாதித்திருந்தால் என்னை மன்னித்து மறந்து விடுங்கள்."



அழகான ஆங்கிலத்தில் இருந்த அந்த தகவல் சுஜாதாவை நெகிழ வைத்தது.



'மறப்பதா? அதுவும் உங்களையா? என்னால் முடிகிற காரியமாக தெரியலையே… '

சுஜாதாவிற்கு மனசு ஆற மறுத்தது.
 
Top