அத்தியாயம் 01

Advertisement

swarangal

New member
Member
நடுங்கிய விரலை நகத்தை வைத்து அழுத்திக்கொண்டாள் ராகவி!.. உள்ளங்கை வேர்வையில் விருவிருக்க, இதயம் படபடவென துடிப்பை அதிகரிக்க, ஆழ்மனதுக்குள் நடக்கும் ஆர்ப்பாட்டத்தை அடக்கினாள்..

டிக் டிக்கென்ற கடிகாரச்சத்தம் அவளின் காதில் விழுந்ததில் விருட்டென நிமிர்ந்து சுவற்றை பார்த்தாள்..

எட்டு என்று கடிகாரம் கச்சிதமாக கண்ணைப்பறிக்க, அவளின் இதயம் எம்பிக்குதித்தது..

மாநிற மேனியாலின் வட்டமான முகத்தில் தவிப்பு தாரைவார்க்க, அடர் ஊதா நிற உடை அவளின் மேனியை இன்னும் மெருகேற்றி தவிப்பான முகபாவனையை தவிர்த்தது..

கைகளை பிசைந்தவாரு அமர்ந்திருந்தவளின் அஞ்சனம் தீட்டிய விழிகள் கதவு புறம் நிலைக்க, கதவினடியில் தெரிந்த சிறிய துவாரத்தில் ஆள் நிற்பதும் போவதுமான நிலையை உணர்த்த, ராகவி மனதை மாற்றிக்கொள்ளும் வார்த்தைகளை இதயத்திற்கு தூதனுப்பினாள்..

கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தாள் மல்லிகா..

ராகவி தன்னால் எழுந்து நின்றாள்.. அவளுக்குள் அதீதளவு படப்படப்பு..

“ம்.. பரவாயில்லையே நீயே ரெடியாகிட்ட, அழகா இருக்க ராகவி.. வெளிய ஆளுங்கல்லாம் போயிட்டாங்க.. இப்போதான் மாமியாரு உள்ள வந்தாங்க!.. வந்ததும் இன்னும் நீ வரலையான்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க வா போலாம்” என்றாள் மல்லிகா..

ராகவி திகைத்து தின்னமாய் நிற்க, “ஸ்” என முனகி நெற்றியில் அடித்துக்கொண்ட மல்லிகா.. “நா ஒரு கேனச்சி!.. பால் சொம்பை எடுத்துட்டு வர மறந்துட்டேன் பாரு.. சரி வா வெளியே போனதும் எடுத்துக்கலாம்” என்றாள் அவசரப்படுத்தியவாரு..

மனமெனும் சாத்தானின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல் மல்லிகாவுடன் அறையை விட்டு வெளியே வந்தாள் ராகவி..

மல்லிகா கிச்சனை நோக்கி நடந்தாள்..

மூன்றடுக்கு மாடி வீடு!.. நடுத்தர வர்க்கத்தையும் தாண்டிய பாவனையில் சற்று மெருகேறி அட்டகாசமான அழகில் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக இருந்தது..

“இவ்வளவு நேரமா என்ன பண்ணிட்டு இருந்த? ஏண்டியம்மா இந்தா உடுப்பை உடுத்துரதுக்கு இம்புட்டு நேரமா?.. எம்மவன் உள்ளப்போயி எம்புட்டு நேரமாவுது நீ சாவகாசமா வர?” என்று ராகவியிடம் நொடித்துக்கொண்டார் சின்னப்பொண்ணு..

பால் சொம்பை எடுத்துக்கொண்டு வந்த மல்லிகா “அத்தை!.. நல்ல நேரத்துக்கு தானே கூட்டியார முடியும், ஜோசியர் எட்டரைக்கு தானே நேரம் குறிச்சி கொடுத்தாக!.. அதான் இப்போ அழைச்சிட்டு வரன்.. முதராத்திரி அறைக்குள்ள போறவள ஏன் வையிறிங்க” எனக்கேட்டாள்..

“இந்தாடி பெரியவன் பொண்டாட்டி என்ன குரலு உசருது!.. என் குரலுக்கு கொக்கி போட்டு அமைதியா கடந்தவ கூட்டுக்கு ஆள் வந்ததும் கூவுறியா?” என்று புடவை முந்தானையை இடுப்பில் சொருகியவாரே கேட்டார் சின்னப்பொண்ணு..

“இவங்களுக்கு வேற வேலையே இல்லை!.. எதிர்த்து ஒருவார்த்தை நியாயமா பேசிடக்கூடாது” என்று மெதுவாக முனகிக்கொண்டாள் மல்லிகா.. ராகவி இவ்வுலகிலே இல்லை.. மனதுக்கும் மூளைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் போக்கிடமில்லாமல் வெறித்தவாரு நின்றிருந்தாள்..

“அடியே கேனச்சிறுக்கி எந்தலோகாத்துல இருக்க?.. நா கத்துறது உன் காதுல விழுவுதா இல்லையா?” என்று சிடுசிடுப்பாக கேட்டார் சின்னப்பொண்ணு..

ராகவி பாவனையை சற்றும் மாற்றாமல் மரமாய் நின்றிருக்க, “இவளுக்கு என்ன பேயி புடிச்சிக்கிச்சாடி! இல்ல வேணும்னு பண்ணுதாலோ? அடியே மல்லிகா அவளை உசுப்பு” என்று அழுப்புடன் கூறினார் சின்னப்பொண்ணு..

“பதட்டத்துல இருக்காப்போல அத்தை” என்ற மல்லிகா ராகவியின் தோளில் கையை வைத்தாள்..

“என்னடி பதட்டம் முதராத்திரிய மனசுல வச்சி பதட்டப்படறாளோ?.. பாப்பாவையா கல்யாணம் கட்டிக்கூட்டிட்டு வந்துருக்கான் எம்மவன் மிரண்டு பயப்பட” என்று மேவாயை ஆட்டியவாரு கேட்டார் சின்னப்பொண்ணு..

மல்லிகாவை பார்த்துவிட்டு சின்னப்பொண்ணை பார்த்தாள் ராகவி..

“கனவுலகத்துலருந்து குதிச்சு வந்துட்டியா? அப்படியென்ன டி இந்நேரத்துல யோசன” என்று அரட்டலுடன் கேட்டார் சின்னப்பொண்ணு..

“நா எதும் யோசிக்கல அத்தை!”

“ஓ அப்ப வேனும்னுக்கே நா பேசுறதை கேட்டும் கேட்காம இருந்தியா? என்ன தின்னக்கம், அடியே மல்லிகா பாரு டி எம்புட்டு திமிருண்ணு” என்று பெரிய மருமகளிடம் சாடினார் சின்னப்பொண்ணு..

“அத்தை அவ ஏதோ யோசனயில இருந்துட்டா விடுங்க, நேரம் போயிட்டு கடக்குது”..

“நா மருமகளை பாத்து கூட்டியாந்திருக்கணும்.. எல்லாம் அந்த மனுஷனை சொல்லணும்!.. வூட்டு பெரியவங்க பேச்சை கேட்கனும்னு சொல்லி என் வாயை அடைச்சி இந்த அடச்சியை என்மவன் தலையில கட்டிட்டாங்க” என்று குமைந்தார் சின்னப்பொண்ணு..

“அய்யோ பாவம்” என்று ராகவியை மல்லிகா பார்க்க, அவளுக்கோ சின்னப்பொண்ணுவின் பேச்சி காதில் விழுந்தாலும் கவனத்தை முழுமையாக செலுத்த முடியாத மனநிலை..

“அசையாம நிக்கிறதை பாரு டி” என்று பல்லைக்கடித்தார் சின்னப்பொண்ணு..

“நேரமாச்சு அத்தை” என்று சங்கடமாக கூறினாள் மல்லிகா..

“நானா தடுத்து நிக்க வைக்கிறேன்.. நா பேசுறப்பேச்சி அவ காதுல விழுவுதா பாரு.. புது உலகத்துல தனியா விட்டுட்டு வந்தக்கணக்கா அவபாட்டுக்கு நிக்கிறா!.. நா கத்துறதுக்கூட காதுல விழுவல டி” என்று அழுப்பாய் கூறியவருக்கு அவளின் அசையாத வதனம் அழுத்தத்தை கொடுத்தது..

“ராகவி” என்று அவளின் தோளை இடித்தாள் மல்லிகா..

“ஹாங் சாரி சாரிக்கா” என்று விழித்தவாரு ராகவி தடுமாற, அவள் கையில் பால் சொம்பை நீட்டினாள் மல்லிகா..

வாங்கிக்கொண்டாள் ராகவி..

“க்கூம்.. இதையாவது வாங்கினியே? அடியே கேனச்சிறுக்கி நீயாவது பத்து மாசத்துல பேரனை பெத்துக்கொடு டி” என்று ராகவியிடம் குமைந்துவிட்டு முந்தானையை உதறியவாரு அறையை நோக்கி நடந்தார் சின்னப்பொண்ணு..

மல்லிகா- வுக்கு சட்டென கண்ணில் நீர்க்கோர்த்து விட்டது.. திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, இரண்டாவது மாதத்திலிருந்து ‘நல்லா செய்தி இல்லையா? எதும் விசேசம் இல்லையா?’ என்ற பல அர்த்தமான வார்த்தைகளை கேட்டு அழுத்தத்தில் தன்னை புதைத்துக்கொண்டு வெளியே வெகுளியாக பேசிக்கொண்டிருக்கிறாள்..

“ஏன் அழுவுறிங்க? அழுதா மட்டும் குழந்தை வந்துடுமா!.. கடவுளுக்கு தெரியும் எப்ப என்னக்கொடுக்கணும்னு, கண்டதையும் நினைக்காம இருங்க முக்கியமா இப்படி அவங்க எதாவது சொன்னதும் கண்ணை கசக்காதிங்க” என்றாள் ராகவி..

“இவ்வளவு நேரம் அமைதியா இருந்தப்புள்ளையா நீ” என்று அழுகையை நிறுத்தி விட்டு ஆச்சர்யமாக கேட்டாள் மல்லிகா..

“ஏன் வாயில்லா பூச்சின்னு நினைச்சிகளா?”

“நிசமா அப்படித்தான் புள்ள நினைச்சுப்புட்டேன்!.. அடியாத்தி அப்ப மாமியார் பேசினதையெல்லாம் கேட்டு அமுக்கச்சியா இருந்தியா?” என்று வாயை பிளந்தவாரு கேட்டாள் மல்லிகா..

“எதோ யோசனையில இருந்தேன் அவங்க பேசினது சரியா கேட்கல” என்றாள் ராகவி..

“இங்கன தானே இருக்கப்போறவ, இனி நிதமும் மாமியார் அர்ச்சனையில தான் விடியலே?.. சரிவா புள்ள நேரமாச்சு செழியன் காத்துக்கிட்டு கடப்பான்” என்றவாறே முன்னால் நடந்தாள் மல்லிகா..

உதட்டை கடித்து அழுகையை அடக்கிய ராகவி அவளை பின் தொடர்ந்து வர, இரண்டாம் மாடிக்கு அழைத்து வந்து செழியன் அறையின் முன்பு விட்டுச்சென்றாள் மல்லிகா..

‘இன்னைக்கு என்னவேனும்னாலும் நடக்கும் ராகா.. இதுதான் உன் தலையெழுத்து, மனசுல இருக்கிறதை இங்கையே கொட்டிட்டு உள்ளப்போ!.. பழைய கசட சுமந்துக்கிட்டு இருந்தா புதுசா ஆரம்பிக்கிற வாழ்க்கை சூனியமாகிடும்!.. செழியன் மாமா தான் உன் புருஷன், அதை எந்தக்கொம்பனாலும் மாத்த முடியாது.. மல்லிகா அக்காவுக்கு ஈசியா ஆறுதல் சொல்லிட்டு நீ இயந்திரத்தனமா இருக்காத’ என்று தனக்குத்தானே அறிவுரைக்கூறியவள் அழுத்தத்திற்கு ஆழான மனதை அடக்கிக்கொண்டு கதவை தள்ளி உள்ளே வந்தாள்..

கட்டிலில் படுத்திருந்த செழியன் நெற்றியில் கையை வைத்திருந்தான்.. கதவு திறக்கும் சத்தம் கேட்டும் அவன் எழவில்லை!..

ராகவி கதவை தாளிட்டு அவனருகில் வந்து நிற்க, அப்போதுக்கூட அவன் அசையவில்லை..

“மாமா” என்று ராகவி அழைக்கவும், கேட்டவனின் காது எரிந்தது..

“மாமா நீங்க தூங்கலன்னு தெரியும்” என்று ராகவி சொன்னதும், கையை விலக்கிவிட்டு அவளை அழுத்தமாக பார்த்தான் செழியன்..

“பால் எடுத்துட்டு வந்திருக்கேன்” என்றாள் ராகவி..

“ப்ச்” என்று முனகிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான் செழியன்..

அவனின் செய்கையை ஆச்சர்யமாக கண்டாள் ராகவி..

‘என்னத்தான் கட்டாயப்படுத்தி இந்த பந்தத்துல இணைச்சிட்டாங்க, நானும் மறுக்க காரணம் இல்லாம கட்டிக்கிட்டேன்!.. இவருக்கு என்னாச்சி?.. இவருக்கும் விருப்பம் இல்லையோ, ச்செ ஏதோ நினப்புல தாலிக்கட்டுறப்பக்கூட இவரை பாக்களையே?.. கடைசியா எப்ப இவரை பாத்தேன்’ என்று யோசித்தவளுக்கு மண்டபத்தில் சாப்பிடும் போது பார்த்தது நினைவு வந்தது..

‘அப்பக்கூட நார்மலா தானே இருந்தாங்க?’ என்று யோசித்தவளின் மனம் நக்கலாக சிரித்து.. ‘நீயும் நார்மலாத்தானே இருந்த?’ என்று எல்லி நகையாடியது..

‘அப்ப இவங்களுக்கு என்ன பிடிக்கலையா?’ என்று யோசித்தவளுக்கு மனம் பாரமானது..

‘என்னைய யாருக்குமே பிடிக்கல, பிடிக்கவும் பிடிக்காது போல’ என்றெண்ணியவள் விரக்தி புன்னகை சிந்தி பால் சொம்பை வைத்துவிட்டு இரவு நேர விளக்கை ஒளிரவிட்டு அறையை இருட்டாக்கிய பின் அந்தப்பக்கம் வந்து படுத்துக்கொண்டாள்..

மனம் கொஞ்சமும் குறையாத குழப்பத்தை கொடுத்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்க, அவள் இடையில் கைக்கொடுத்து இழுத்தான் செழியன்..

அவன் மார்பில் மோதியவள் அதிர்ச்சியுடன் அன்னாந்து அவனைக்காண, அதிரடியாக அவளை அவனின் ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தான் செழியன்..

மேலும் அதிர்ந்து விழித்தாள் ராகவி..

அவன் கண்ணைத்தவிர இருட்டண்டிய அறையில் எதுவும் தெரியவில்லை..

அவள் மேல் மெதுவாக படர்ந்த செழியன் மிருதுவாய் அவள் ஆடைகளை அகற்ற, இதயம் படப்படவென துடித்தது ராகவிக்கு..

அவன் முன்னேற, அவள் தடுக்க, அவன் அணைக்க, அவள் விலக்க, அவன் இதழை தழுவ அவள் நழுவ, அவளின் அத்தனை எதிர்ப்பையும் எதார்த்தமாக தகர்த்தவன் அவனின் செயலில் தீவிரம் காட்ட, ராகவியின் கண்கள் அவனைத்தான் அளக்க முயற்ச்சி செய்து தோற்றது..

இவற்றையெல்லாம் அவள் எதிர்பார்த்து தயாராகத்தான் வந்தாள்!.. சட்டென ஏற்றுக்கொள்ள சிரமப்பட்டாலும் அவன் மென்மையாக நாடுவது பிடித்தே இருந்தது.. அதுவும் தொட்டுத்தாலிக்கட்டிய கணவன் என்ற எண்ணமே அவனை விலக்கி வைக்க தோன்றவில்லை..

அவளுக்கு இருந்த குழப்பமே ஒருவார்த்தைக்கூட பேசாமல் செயலால் மட்டுமே அதிரடியாக முன்னேறும் செழியனின் நோக்கம் தான் என்னவோ என யோசிக்க வைத்தது.

அவள் கையைப்பற்றிய செழியன் அவளோடு இணைய, அவனின் நடுக்கத்தை உணர்ந்த ராகவி வலியில் அவனோடு ஒன்ற, இருமனம் இணையாமல் திருமணம் முடிந்து, தாம்பத்தியமும் சிறு சஞ்சலத்துடன் முடிந்தது..

அவளை விட்டு விலகி படுத்த செழியன் கண்ணை மூடி நெற்றியில் கையை வைத்துக்கொண்டான்..

சிறு வெளிச்சத்தில் கூட அவனை சரியாக காண முடியாமல் தவித்த ராகவி தன் பெண்மையை மென்மையாக பறித்தவனின் ஒற்றை நெற்றி முத்தத்தை எதிர்பார்த்து தன்னையே திட்டிக்கொண்டவள் ஏமாற்றத்துடன் திரும்பிப்படுத்துக்கொண்டாள்..

அதன்பின்பு செழியனும் அவளின் புறம் திரும்பவில்லை..

ராகவிக்கு பேச நிறைய வார்த்தைகள் இருந்தது.. ஆனால் அவன் செய்கை ஒருவித தடுப்பு சுவரை வைப்பது போன்ற நிலையை உணர்த்த, அதைத்தாண்ட முடியாமல்
தவிப்புடன் திணறியவள் அவன் வேறு உலகிற்கு அழைத்து சென்றதில் உண்டான அயற்ச்சியோடு அவளையும் மீறி கண்ணை மூடி தூக்கத்தை தழுவியிருந்தாள்..
 
Nice start. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா.
 

Advertisement

Advertisement

Back
Top