வணக்கம் நட்பூக்களே,
மெளனமாய் ஒரு மோகனம், இப்போது மெளனத்தை விடுத்து பேச ஆரம்பிக்கலாமா?
தாமதத்திற்கு மன்னிக்கவும், தினந்தோறும் அத்தியாயம் பதிவிட முயற்சிக்கிறேன், கமெண்ட் லைக் கொடுத்து உங்களின் ஆதரவை தெரிவியுங்கள், மிக்க நன்றி
மெளனம் 1
https://tamilnovelwriters.com/?p=116837
கதைக்கான சின்ன அறிமுகம் இதோசின்ன பொண்ணு”
சமையலறைக்கு சென்று கொண்டிருந்தவள் வசீகரனின் ஆளுமையான அழைப்பில் திரும்பாமல் தயங்கி நின்றாள்.
“உன் பேரே சின்ன பொண்ணா?”
தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள்
“இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்திருக்க? பேரு மட்டும் சின்ன பொண்ணா? ஸ்கூல்ல கூட இந்த பேர் தானா?”
இல்லை என்று தலை இடவலமாக அசைந்தது
“அப்போ உன் பேரு என்ன?”
“வேண்டாம்”
“நான் உனக்கு எதுவும் தரலம்மா, எதுக்கு வேண்டாம்னு சொல்றே, பேரை சொல்லு”
“என் பேரு வேண்டாம் பொண்ணு”
“இப்படி ஒரு பேரா?” அவன் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் தொண்டைக்குழியில் ஏதோ சிக்கி கொள்ள ஆமாம் என்று தலையை மேலும் கீழும் அசைத்துவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் உள்ளே சென்று விட்டாள்.
கதையை பற்றி முழுதாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும், நன்றி