சூரியன் உதயமாகுவதற்கு முன்னால் கட்டிலுக்கடியில் கசங்கிய நிலையில் சுருண்டுக்கிடந்த உடுப்பை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கதவை அடைத்தாள் ராகவி..
அவளின் அசைவை உணர்ந்து கூட செழியன் அசையவில்லை!.. அசைவற்று படுத்திருந்தவனின் உள்ளம் ஆசைகளை முற்றிலும் துறந்து துன்பத்தில் தான் தத்தளித்தது..
கண்ணிலிருந்து கண்ணீர் மட்டுமே வரவில்லை!.. உள்ளுக்குள் இதயம் துன்பத்தில் துழாவி துடிப்பை அதிகரிக்க, மனமோ மொத்தத்தையும் வெறுத்து ஒதுக்கித்தள்ளியது..
'நீ அவளை விட்டு விலகியிருந்திருக்கலாம் செழியா!.. பொண்டாட்டியாகிட்டா? எல்லாம் சரியாப்போயிடும்னு நினைச்சியா?.. அவ எதையும் மறந்திருக்க மாட்டா!.. என்ன காரணத்துக்காக நீ அவளை நெருங்கினன்னு கூட யோசிக்காம? ராவுக்கு மட்டுமே தன்னை உபயோகப்படுத்திக்கிரான்னு உன்மேல கெட்ட எண்ணத்தைதான் வளர்த்துப்பா!' என மனம் கூப்பாடுப்போட்டு கத்தியதில் அவளை திருமணத்திற்கு முன்னால் தனியாக அழைத்து பேசியது அனிச்சையாக நினைவு வந்தது..
அது ஒரு விசாலமான பார்க்.. ஜலகண்டாபுரம் டூ இளம்பிள்ளை போகும் வழியில் இளைப்பாற அரசால் அமைக்கப்பட்டிருந்தது..
கல்மேஜையில் அமர்ந்திருந்த செழியனுக்கு திருமணத்தை நிறுத்திவிடலாமா? என்றெண்ணம் வந்து தாக்க, இளைப்பாற வந்த இடமே இதயத்தை கணக்க வைத்தது...
"அவ எனக்கில்லையா?" என தனக்குள் கேட்டுக்கொண்டவனுக்கு சட்டென ஏன் அவளிடம் நேரடியாகவே கேட்டுவிடக்கூடாதென்ற எண்ணம் உதிக்க, யோசிக்கவில்லை செழியன் பட்டென ராகவிக்கு அழைத்துவிட்டான்..
செழியன் மாமா என ஃபோனின் திரையில் தெரிந்த பெயரைக்கண்டு தையல்மிஷினை இசைத்துக்கொண்டிருந்த கால்கள் இயக்கத்தை நிறுத்திவிட்டு கை தானாக ஃபோனை எடுத்து அதை உயிர்பித்து காதுக்கு கொடுத்தது..
"நா அம்மா பார்க்- ல காத்திருக்கேன் சீக்கிரம் வா" என்றுவிட்டு ஃபோனை வைத்தான் செழியன்..
'எதுக்கு வரச்சொல்லுறாங்க, என்னவா இருக்கும்' என நினைத்த ராகவி தந்தைக்கு அழைத்தாள்..
"என்ன ராகா!"..
"அப்பா, மாமா என்னை பாக்கனும்னு சொல்லுறாங்க!.. போயி என்னன்னு பாத்துட்டு வரவா?" என்று ராகவி கேட்க..
"போயிட்டு வா ராசாத்தி!.. கட்டிக்க போறவன் தானே, இனி அவன் தான் உனக்கு எல்லாம்.. என்கிட்ட ஒவ்வொன்னுக்கும் இனி கேட்கணும்னு அவசியம் இல்லை ஆத்தா" என்றார் ராகவியின் தந்தையான மாயவேல்..
"சரிப்பா! நா நைட்டு வரத்துக்கு நேரமெடுக்கும், கல்யாண ஜாக்கெட் ரெண்டு வந்துருக்குது அவசரம்னு சொல்லுறாங்க தச்சிக்கொடுத்துட்டு தான் வருவேன்.. எனக்காக காத்திருக்காம படுத்து தூங்குங்க" என்றுவிட்டு ஃபோனை வைத்த ராகவி கழுத்திலிருந்த அளவு டேப்பை எடுத்து சுத்தி ஓரமாக வைத்தவள் கடையின் சட்டரை சாத்தி பூட்டிவிட்டு செருப்பை மாட்டிக்கொண்டு பார்க்கை நோக்கி நடந்தாள்..
யோசனையெல்லாம் செழியன் எதற்காக அழைத்திருக்கிறான் என்பதை சுற்றியே வர, ஏன்? எதற்கு என்பது மட்டும் புலப்படவில்லை..
இரண்டு நிமிட நடைப்பயணத்திற்கு பின் பார்க்கை அடைந்த ராகவி செழியனுக்கு அழைத்து வந்துவிட்டதாக கூற, "நா உள்ள முன்னாடியே தான் உக்காந்திருக்கேன் வா" என்றான் செழியன்..
அவனைத்தேடி வந்து நின்றாள் ராகவி..
அவளை மேலிருந்து கீழ் வரை ஸ்கேன் கண்ணால் அளவெடுத்தான் செழியன்..
சிறுவயதிலிருந்தே பரிச்சியமானவள் தான் ராகவி.. சின்னப்பொண்ணுவியின் மச்சான்டரானா, மகாதேவனின் மனைவி ஜகதாவின் அண்ணன் மகள் தான் ராகவி.. ஒருவகையில் செழியனுக்கு மாமன் மகள்..
பெரியதாக பேச்சில்லையென்றாலும் பல இடத்தில் அவளை பார்த்திருக்கிறான்... அவனைவிட ஐந்து வயது சிறியவள்.. ஒவ்வொரு வருடமும் திருவிழாவின் போது எப்படியாவது அவன் கண்ணில் விழுந்துவிடுவாள் ராகவி.. பன்னிரண்டாவது படிக்கும் வரை ஒழுங்காகத்தான் சென்றது!.. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ராகவி கல்லூரி வெளியூரில் தங்கிப்படித்தாள்.. கவர்மென்ட் கல்லூரி கோயம்புத்தூரில் அவளுக்கு சீட் கிடைத்ததால் பணப்பற்றாக்குறையின் காரணமாக பீஎஸ்சி கணிதம் தேர்வு செய்தால் விருப்பமேயில்லாமல்..
கல்லூரி சேர்ந்து பின் படித்து முடித்த மூன்று வருடமும் அவள் திருவிழாவிற்கு வரவில்லை.. ஏனோ ராகவியை பார்க்காமல் அந்த திருவிழாவே பிடிக்கவில்லை செழியனுக்கு!.. முதல் வருடம் அவள் ஏன் வரவில்லை என்றகேள்வி மனதை குடைய, யாரிடம் கேட்க என்றுத்தெரியாமல் திணறினான்..
குடும்பத்தாரிடம் அவ்வளவு அன்னோன்யமும் கிடையாதென்பதால் ராகவியை பற்றிய பேச்சி வார்த்தை அவன் காதை எட்டாமல் போனது..
அந்த ஒருவருடமும் அவள் ஏன் வரவில்லை என்றே பலமுறை யோசித்து யோசித்து இறுதியில் ஒன்றும் புலப்படாமல் அமைதியைத்தான் கடைப்பிடித்தான்..
இரண்டாவது முறை அவளை எதிர்பார்த்து ஏமாந்தவனுக்கு இதயத்தில் சுள்ளென்ற வலி உருவாகி, மனம் முழுவதும் அவளையே கேட்க அதன்பின்பே அவள் மீதிருப்பது காதலென்பதை உணர்ந்தான் செழியன்..
அவன் உணர்ந்த நொடி நேராக மகாதேவனின் மனைவி ஜகதாவிடம் சென்று பெண் கேட்டுவிட்டான்..
அவனை ஆச்சர்ய விழியுடன் நோக்கினார் ஜகதா..
"பெரியம்மா, இப்படி பாத்தா என்ன அர்த்தம் அவ எனக்குத்தான்னு சத்தியம் பண்ணுங்க" என்று கையை நீட்டினான் செழியன்..
"உன் ஆத்தாக்காரிக்கு விசியம் தெரியுமா செழியா" என்று ஜகதா கேட்க..
"அம்மாவா கட்டிக்கப்போவுது!.. நான்தானே கட்டிக்கப்போறேன்.. உன் அண்ணன் மவளை பாக்காம மனசு பிசையிற மாறியே இருக்கு பெரியம்மா, அவளுக்கு ஆத்தா கிடையாது!.. பட்டுனு கண்ணாலத்தை முடிச்சிடுவாங்களோன்னு மனசு அடிச்சிக்கிது.. நா வேற இன்னும் நிலையா நிக்கல ஒரு ரெண்டு வருசம் கால அவகாசம் கொடுத்தன்னா? ஏதோ ஒருவேலையில போயி உக்காந்து வூட்டைக்கட்டிப்பிடுவேன்"..
"நா இன்னும் அவளை உனக்கு கட்டிக்கொடுக்குறன்னு சொல்லவே இல்லை ராசா"
"அந்த வூட்டுல உன் ராஜ்ஜியம் தானே பெரியம்மா"..
"என் ராஜ்ஜியம் தான்!.. அதுக்குன்னு நீ வந்து கேட்டதும் இந்தாடான்னு தூக்கிக்கொடுத்துடுவாங்களா?.. ராகவி அறிவுல்ல புள்ளை!.. அதுக்கு ஏதோ பேசன் இசைனின் படிப்பு படிக்கணும்னு ஆசை, அவங்கப்பங்கிட்ட பணமில்லாததால புள்ளைய நல்ல இடத்தில சேர்க்க நாளு காசில்லாமல் எடுத்த மார்க்குக்கு கிடைச்ச படிப்பை படிச்சிட்டு கடக்கா, வந்துப்போவக்கூட பணமில்லாததால புள்ளை வூட்டை எட்டிப்பாக்காம அங்கயே கதியா கடக்குது.. அவங்கப்பங்காரன் தரியை ஓட்டுரன்னு ரெண்டு நாளைக்கு வேலைக்கு போறான், மூணாவது நாள் அங்க முடியலை இங்க முடியலன்னு சாக்கு சொல்லி படுத்துக்குறான் சோம்பேறி!.. அவனுக்கு தலைச்சனா பொறந்த ஒன்னு இருக்கு பாரு அது அதுக்கு மேல ஊதாரியா சுத்துது!.. கை நிறைய சம்பாதிக்கிற பையனுக்குத்தான் என் அண்ணன் பிள்ளைய கொடுக்கணும்னு இப்பவே நா மாப்பிள்ளை பாத்துட்டு தான் கடக்கேன்.. எவனும் சிக்கல!.. நீயா வந்து வாயை விட்டுருக்க, கேட்டுக்கோ அப்பு!.. கால் காசாயிருந்தாலும் கவர்மென்ட் காசா இருக்கணும்.. அப்படியாப்பட்டவனுக்குத்தான் ராகவியை கொடுப்பேன்" என்றார் ஜகதா..
"இப்போ என்ன பெரியம்மா சொல்ல வர" என்று செழியன் கேட்க..
"கவர்மென்ட் உத்தியோகம் வாங்கிட்டு வா ராகவியை உனக்கு கட்டுவைக்கிரேன்.. அதும் ரெண்டு வருஷத்துக்குள்ள வந்தினாத்தான் உண்டு" என்றார் ஜகதா..
"ஏன் தனியார் உத்தியோகம் பாக்குறவனை உன் பேத்தி கண்ணாலம் கட்டிக்க மாட்டாளா?.. கட்டிக்கொடுத்தா? உங்க கவுரவம் தான் குறைஞ்சிப்போயிடுமா?" என்று கடுப்புடன் கேட்டான் செழியன்..
"நாளைபின்ன என்ன நடக்கும்னு தெரியாது அப்பு!.. நீயோ நானோ உன் உசுருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா?"
"நீ ரொம்ப பேசுற பெரியம்மா, என் அம்மா அவளை விட அழகியை எனக்கு கட்டிவைக்கும்.. நா உன் அண்ணன் பிள்ளை வேணும்னு வந்து நின்னன்னு தானே நீட்டி முழுங்குற?.. அந்த கட்டச்சி எனக்கு வேண்டாம் நீ வெத்தலையை இடிச்சி வாய்க்குள்ள அமுக்குற வேலையை பாரு" என்று சலிப்புடன் முனகிவிட்டு செழியன் சென்றாலும் அவளுக்காக ஆசிரியர் நுழைவுத்தேர்விற்கு படித்து பின் எக்ஸாம் எழுதி கவர்மென்ட் உத்தியோகத்தை வாங்கினான்..
அவன் தைரியமாக வந்து கேட்கும் போதே ஜகதா அவனுக்கு கொடுக்களாமென்று முடிவு செய்து வைத்திருந்தார்!.. இப்போது அவன் கவர்மென்ட் உத்தியோகம் வாங்கியதும் முடிவே செய்து கணவனின் காதில் மட்டும் விசியத்தை போட்டு வைத்தார்..
செழியன் வேலையில் சேர்ந்து இரண்டு வருடம் கடந்து தான் வீட்டைக்கட்டி முடித்தான்.. அதன் வரையில் அவன் ராகவியை பார்க்கவில்லை..
படிப்பை முடித்துவிட்டு வந்த ராகவி அவ்வூரிலே ஒருக்கடையை வாடகைக்கு எடுத்து துணி தைத்துக்கொடுத்து சம்பாரிக்க ஆரம்பித்தாள்..
இதற்கிடையில் செழியனின் அண்ணன் திருமணம் நடைபெற, அப்போதே செழியன் பேசியதை கொழுந்தனிடம் ஒப்பித்து ரகசியமாக சம்மந்தம் பேசிவிட்டார் ஜகதா..
செழியனின் அப்பாவான வெங்கடாஜலமும் பெரியதாக மறுப்பேதும் கூறவில்லை!.. செழியனின் உயர்வை உணர்ந்தாலும் அவனின் மனதிற்கு பிடித்தவள் என முழுமனதுடன் சம்மதத்தை கூறியவர் மறந்தும் மனைவியிடம் இதைப்பற்றி வாயைவிடவில்லை..
சின்னப்பொண்ணுவிற்கு தான் அண்ணன் மகளை கட்டும் எண்ணம் இருந்தது.. நடக்கும்போது செழியனை இடையில் இழுத்து பேசிக்கொள்ளலாம் என அப்போதைக்கு அப்பேச்சை மனதுக்குள் மட்டுமே அழுத்திக்கொண்டார்..
சின்னப்பொண்ணு திருமண பேச்சை எடுக்கும் நாளும் வந்தது..
செழியனின் முப்பதாவது வயதில் தான் திருமணப்பேச்சே எடுக்கப்பட்டது.. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை சின்னப்பொண்ணு, மகனின் மனைவி இவள் தான் என முடிவு செய்திருந்ததால் அண்ணன் மகளின் டாக்டர் படிப்பு முடியும் வரை அமைதிக்காத்தார்..
"செழியனுக்கு என் அண்ணன் பொண்ணு, இளவரசியை நாளைக்கு பொண்ணுக்கேட்க போறோம்.. காலையிலங்காட்டியும் அந்த விநாயகர் கோயில் திண்ணையில உக்காந்து ஊர் கதை பேச போயிடாதீரு" என்றார் சின்னப்பொண்ணு கணவனிடம்..
"இளவரசியை யா?"
"அவளைத்தான்!.. என் அண்ணனுக்கு அவ மட்டும் தானே பொண்ணு என்ன இளவரசியான்னு இழுக்குரீரு" என்று சின்னப்பொண்ணு கேட்க..
"நீ செழியன்- கிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கோ சின்னா" என்றதோடு முடித்துக்கொண்டார் வெங்கடாஜலம்..
"நீரூ பதில் சொல்லுறதைக்கண்டா நா எடுத்த முடிவில விருப்பமில்ல போல தெரியுதே?" என்று யோசனையுடன் கணவனை பார்த்துக்கேட்டார் சின்னப்பொண்ணு..
"நா ஒருப்பொண்ணை பாத்து வச்சிருந்தேன்.. நீ உன் அண்ணன் பொண்ணை கேட்குரன்னு சொல்லவும் என்ன சொல்லுறதுன்னு தெரியல.. முடிவை செழியனுட்ட ஒப்படைக்கலாம்.. இதுக்கு மேல இதைப்பத்தி பேசவேண்டாம் அவன் வந்துடட்டும்" என்றார் வெங்கடாஜலம்..
"ஓ!.. பொண்ணு பாக்குற அளவுக்கு நீரூ வந்துட்டீரோ?.. எவ அவ?.. எம்மகனுக்கு இளவரசியைத்தவிர்த்து இந்த ஜில்லாவுல வேற எவளாவது ஒத்து வருவாளா?" என்று குதிக்க ஆரம்பித்தார் சின்னப்பொண்ணு..
செழியன் பள்ளி முடித்து வரும்வரையில் அவரின் வாய் ஓயவில்லை..
"என்னண்ணா அம்மா கத்திட்டுருக்கு" என அண்ணனான பிரகாசத்திடம் கேட்டான் செழியன்..
"என்னன்னு எனக்கும் தெரியல செழியா!.. நானும் மல்லியும் அவங்கம்மா வீட்டுலருந்து வந்தே அஞ்சு நிமிஷந்தான் ஆவுது.. அம்மா பேச, அப்பா அமைதியா உக்காந்திருந்தாரு.. மல்லியை டீ போட சொல்லிட்டு அம்மா உள்ளப்போயும் முனகிக்கிட்டே இருக்கு.. மாமா வீட்டுல எதோ பிரச்சனையா இருக்குமா? அண்ணன் அண்ணன்னு சொல்லுறது மட்டுந்தான் காதுல விழுவுது" என்றான் பிரகாசம்..
அறையிலிருந்து வெளியே வந்த வெங்கடாஜலம் சின்னவனைக்கண்டதும் "சின்னா, உன் மவன் வந்துட்டான்!.. வந்து கேட்க வேண்டியதை கேளு அவன் முடிவை பொறுத்து அடுத்து என்னவோ அதை பேசிக்கலாம்" என்றார் மனைவியிடம்..
"வந்துட்டானா" எனக்கேட்டவாரே வேக்கு வேக்கென வெளியில் வந்தார் சின்னப்பொண்ணு..
"என்னம்மா? அப்பா என்னத்தை கேட்க சொல்லுறாரு" என்று செழியன் கேட்க..
"அந்தப்பையை கொடுடா!.. எம்புட்டு நேரம் தோளுலையே சுமப்ப" எனக்கேட்டவாரே பையை வாங்கிக்கொண்ட சின்னப்பொண்ணு "இங்க வந்து உக்காரு" என்று இருக்கையை இழுத்து போட்டுவிட்டு பையை வைக்க திரும்பினார்..
"என்னடா சொந்த வீட்டுல என்னைக்கும் இல்லாத திருநாளா அதும் அம்மாக்கிட்ட இம்புட்டு மரியாதை கிடைக்குது" என்று பிரகாசம் சன்னமான குரலில் தமையனிடம் கேட்க..
"ஆபத்து பக்கத்துல வரப்போவுதுன்னு அர்த்தம்னு நினைக்கிறேன்!.. என்னை வச்சி இவங்க ரெண்டு பேரும் சடைச்சிக்காம இருந்தா சரித்தான்.. அண்ணிக்கிட்ட ஒரு காஃபி மட்டும் போட சொல்லுண்ணா" எனக்கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தான் செழியன்..
"செழியா நம்ம இளவரசி இருக்காள்ள?" என்று சின்னப்பொண்ணு கொக்கிப்போடவும் விசியம் ஓரளவுக்கு புரிந்தது செழியனுக்கு..
வெங்கடாஜலம், பிரகாசம் இருவரும் சின்னப்பொண்ணுவினருகில் அமர, தந்தையைக்கண்டுவிட்டு தாயை ஏறிட்டவன்.. "சொல்லும்மா? இளவரசிக்கென்ன?" என்று கேட்க..
"இளவரசிக்கு ஒன்னுமில்ல!.. உனக்குத்தான் அவளை பேசலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.. சொந்தத்துக்குள்ளையே முடிச்சிக்கலாம்னு எண்ணமிருக்கு.. இளவரசி படிப்பு முடியட்டும்னு தான் அண்ணனும் நானும் காத்துக்கடந்தோம்.. அதான் உனக்கு வயசாவுறதையும் கணக்கெடுத்துக்கல, நம்ம புள்ளை இளவரசி, சொன்னதுக்கெல்லாம் சரின்னு மண்டைய ஆட்டிட்டு உள்ளுக்குழுந்து போவா!.. நாளைக்கு பொண்ணு பாக்க வரேன்னு அண்ணன் கிட்ட வேற வாக்குக்கொடுத்துட்டேன் செழியா!.. உன் அப்பாக்கிட்ட விசியத்தை சொன்னா அவரென்னவோ நா ஒருத்தியை பாத்து வச்சிருக்கேன்னு வந்து நிக்காரு.. என் ராசா நா சொன்னதைதானே நீயி கேட்ப? உன் அப்பனுட்ட ஆமான்னு சொல்லிட்டு வா அப்பு" என்றார் சின்னப்பொண்ணு படபடவென..
"நீயே ஆமான்னு சொல்லசொல்லி வர்புறுத்தக்கூடாது சின்னா!.. அவனுக்கு புடிச்சிருந்தா? நம்ம சந்தோஷமா அடுத்து என்னவோ அதைப்பாக்கலாம்.. உன் அண்ணன் பொண்ணை வேண்டாம்னு நா சொல்லலையே" என்றார் வெங்கடாஜலம்..
"அப்படியா?.. அப்ப எதுக்கு நா ஒருத்தியை பாத்து வச்சிருக்கன்னு பறந்தடிச்சிட்டு வந்து விழுவுரீரு" என்று நொடித்தவாரு கேட்டார் சின்னப்பொண்ணு..
"சின்னா, உன் அண்ணன் பொண்ணுன்னு நீ எப்படி இளவரசி செழியனுக்கு இணக்கமா இருப்பான்னு நினைச்சியோ? அப்படித்தான் நானும் என் அண்ணன், மனைவியோட அண்ணன் பொண்ணு ராகவி செழியனுக்கு பொருத்தமா இருப்பான்னு நினைச்சேன்"..
"எது அந்த தையக்காரியா? அவளுக்கு என் மவன் கேட்குதா? நீயி என்னய்யா மனுஷன்!.. கவர்மென்ட் உத்தியோகம் பாக்குறவனுக்கு அஞ்சுக்கும் பத்துக்கும் துணியை ஒட்டிக்கொடுக்குறவளை இணைச்சி வச்சி இனிமையான ஜோடின்னு ஜோசியம் பேசுற" என்று சிடுசிடுப்புடன் கேட்டார்..
"செழியனுக்கு நீ அம்மான்னா நா அப்பா சின்னா!.. சம்பந்தப்பட்டவன்- கிட்ட இதுதான் விசியம் இவதான் பொண்ணுன்னு சொல்லியாச்சி? அந்தத்தையக்காரியை உன் பையன் பிடிக்கலன்னு சொல்லிட்டா இளவரசியை பேசி முடிச்சிடலாம்" என்றார் வெங்கடாஜலம்..
நெற்றியை சுருக்கி தந்தையை கண்டான் செழியன்..
"அவன் அவத்தான் வேணும்னு அடம்பிடிச்சி சாதிக்கவா போறான்.. ஒன்னுமில்லாதவளை கட்டிட்டு வந்தா? கவுரவக்குறைச்சலா இருக்காதுன்னு என்மவனுக்கு தெரியும்" என்ற சின்னப்பொண்ணு மகனிடம் "என்ன செழியா அமைதியா இருக்க?.. நா இளவரசியை கட்டிக்கிறன்னு உன் அப்பா காதுல சங்கை ஊது" என்றார்..
"அம்மா, நா இளவரசியை என் இணையா நினைச்சதில்ல!.. அண்ணியாத்தான் பாத்தேன்.. அதைத்தான்டி என்னால யோசிக்க முடியல" என்றான் செழியன்..
சின்னப்பொண்ணுவின் முகம் சிறுத்துப்போனது..
"என்னை விட சின்னவளா இருந்தாலும் அண்ணன் மனைவியா பாத்தவளை எப்படி கட்டிக்க தோணும்.. அண்ணனுக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு எனக்கு தரன்னு சொன்னாங்கன்னா காரணம் என்ன? அவ டாக்டர் படிச்சிருக்கா, அவ தகுதிக்கு ஏத்தாப்புல டாக்டர் மாப்பிள்ளையா பாத்து மாமாவை கட்டிவைக்க சொல்லுங்க" என்ற செழியன் தந்தையிடம் "எனக்கு ராகவியை கட்டிக்க விருப்பம்- ப்பா" என வாய்வார்த்தையாக கூறிவிட்டு அகன்றான்..