மதியம் இரண்டு மணி. சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த முத்துவேலின் அந்தச் சிறிய ஓட்டு வீடு, வெயிலின் தகிப்பிலும் ஒருவித
அமைதியைச் சுமந்து நின்றது. வீட்டு வராண்டாவில் இருந்த பழைய மர நாற்காலியில் அமர்ந்து முத்துவேல் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்த அமைதி வெகுநேரம் நீடிக்கவில்லை. இரண்டு வெள்ளை நிற விலையுயர்ந்த கார்களின் டயர்கள் மணலில் உரசி நின்ற சத்தம், அந்தச் சந்தின் நிசப்தத்தைக் குலைத்தது.
இளமாறனின் கட்டுரை வெளியாகி, தமிழகம் முழுவதும் இணையதளங்களில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருந்த அதே வேளையில், விக்ரமின் அதிகாரக் கரங்கள் பழிவாங்கும் நோக்குடன் இளமாறனின் வீட்டை நோக்கி நீண்டன.
கார்களில் இருந்து இறங்கிய அந்த ஆறு அதிகாரிகள், எவ்வித முன்னறிவிப்புமின்றி, ஒரு போர்க்களத்திற்குள் நுழைவதைப் போல முத்துவேலின் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் தங்களை ‘வருமான வரித்துறை’ மற்றும் ‘சிறப்புப் புலனாய்வுப் பிரிவு’ (SIT) என்று அடையாளப்படுத்திக் கொண்ட போதிலும், அவர்களின் உடல்மொழியில் ஒருவிதமான அரசியல் ஏவல் இருந்தது. முப்பது வருடங்கள் இதே அரசாங்கத்தின் வருவாய்த் துறையில் நேர்மையின் அடையாளமாகப் பணியாற்றி, ஒரு சிறு துரும்பும் தன் மீது படியாத கறையற்ற பெயருடன் ஓய்வு பெற்ற முத்துவேலுக்கு, இந்தத் திடீர் வருகையின் நோக்கம் புரியாதது அல்ல.
தலைமை அதிகாரி முத்துவேலின் முன்னால் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். அவரது கண்கள் அதிகாரத் திமிரில் சிவந்திருந்தன. “முத்துவேல் சார், முப்பது வருஷம் இதே டிபார்ட்மென்ட்ல இருந்ததுனால நாங்க எப்படி வேலை செய்வோம்னு உங்களுக்குத் தெரியும். அதனால, மரியாதையா உண்மையை ஒத்துக்கறது உங்களுக்கு நல்லது,” என்று மிரட்டல் தொனியில் பேசத் தொடங்கினார்.
“உங்க மேல பழைய நில மோசடி வழக்கு ஒன்றில் நேரடித் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைச்சிருக்கு,” என்று அந்த அதிகாரி ஒரு தடிமனான கோப்பினை மேசையின் மீது ஆவேசமாக வீசினார். “ஓய்வுபெற்ற ஒரு அதிகாரியோட சொத்து விவரங்கள் அரசாங்கக் கணக்கோட முரண்பாடா இருக்கு. இவ்வளவு பெரிய வீடு, உங்க பையனோட வெளிநாட்டுப் பயணம்... இதெல்லாம் எந்தப் பணத்துல வந்தது? விக்ரம் மாதிரியான பெரிய ஆட்களைப் பகைச்சுக்கிட்டு உங்களால நிம்மதியா வாழ முடியும்னு நினைச்சீங்களா? மேலிடத்து உத்தரவுப்படி உங்களை இப்போதே கைது செய்கிறோம்,” என்று அவர் கத்தினான்.
“இன்னும் என்னென்ன பினாமி சொத்துக்களை உங்க பையன் பேர்ல ஒளிச்சு வச்சிருக்கீங்கன்னு மரியாதையா சொல்லிடுங்க. இல்லையென்றால், சிறைவாசம் உங்களுக்கு ரொம்பக் கொடுமையானதா இருக்கும்,” என்று அந்த அதிகாரி மேசையை ஓங்கித் தட்டி மிரட்டினார்.
அவர்கள் வீட்டைச் சோதனையிடத் தொடங்கினர். அது சோதனை அல்ல, ஒரு திட்டமிடப்பட்ட சூறையாடல். முத்துவேல் தனது வாழ்நாள் முழுதும் உயிராகக் கருதிச் சேகரித்து வைத்திருந்த பழைய கவிதைப் புத்தகங்கள் அலமாரியில் இருந்து ஈவுஇரக்கமின்றித் தூக்கி எறியப்பட்டன. இளமாறனின் கல்லூரிச் சான்றிதழ்கள், அவன் வாங்கிய பதக்கங்கள் அனைத்தும் தரையில் சிதறிக் கிடந்தன. சமையலறையில் இருந்த அரிசி மூட்டையைக் கூட ஏதோ கடத்தல் பொருள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதைப் போலக் கிழித்துப் பார்த்தனர். அந்தச் சிறிய வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் பல ஆண்டுகாலமாகச் சேர்த்து வைத்திருந்த நற்பெயரும் கௌரவமும் நொடிக்கு நொடி சிதைக்கப்பட்டன.
இந்தச் சலசலப்பு கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கே திரண்டனர். ஒரு காலத்தில் ‘உத்தமமான அதிகாரி’ என்று முத்துவேலைப் போற்றிய அதே கண்கள், இன்று அவரை ஒரு குற்றவாளியைப் போலச் சந்தேக வளையத்திற்குள் வைத்துப் பார்த்தன. கூட்டத்தில் இருந்த சிலர், “பார்த்தியா... வெளிய ரொம்ப யோக்கியன் மாதிரி நடிச்சாரு, இப்போ போலீஸ் வந்து அள்ளிட்டுப் போகுது. இவ்வளவு வருஷம் சேர்த்தது எல்லாம் ஊழல் பணம் போல,” என்று முத்துவேலின் காதுபடவே பேசினர். அந்தச் சொற்கள் இரும்புத் தடியை விட முத்துவேலை அதிகம் காயப்படுத்தின.
முத்துவேல் கலங்கவில்லை. அடித்தளத்தில் அசைக்க முடியாத பெருங்கடலைப் போல தனது நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தார். இன்ஸ்பெக்டர் அவரது கைகளை முன்னால் நீட்டச் சொல்லி, துருப்பிடித்த இரும்பு விலங்கைப் பூட்டியபோது ஏற்பட்ட அந்த ‘க்ளிக்’ சத்தம், முத்துவேலின் இதயத்தை விட, வழியில் வந்த இளமாறனின் ஆன்மாவைத் தான் ரணப்படுத்தியது.
முத்துவேல் நிதானமாகவும் தீர்க்கமாகவும் பேசினார். “தம்பி, நான் முப்பது வருஷம் இதே சிஸ்டத்துல இருந்தவன் தான். ஒரு ரூபாய் கூடத் தப்பா சம்பாதிச்சு என் மகனுக்கு நான் ஒரு வேளைச் சோறு கூடப் போட்டது இல்லை. என் மகனோட எழுத்து உங்களை இவ்வளவு பயமுறுத்தும்னு நான் நினைக்கல. அவனோட பேனாவைப் பறிக்கத் துணிவில்லாதவங்க, ஒரு வயசான தகப்பனை விலங்கு மாட்டி இழுத்துட்டுப் போறீங்களா? தாராளமா கூட்டிட்டுப் போங்க... அங்க சிறையிலயும் நேர்மையைத் தவிர வேற எதுவும் உங்களுக்குக் கிடைக்காது,” என்றார் கம்பீரமாக.
அவரது வார்த்தைகளில் இருந்த அந்த உண்மையும் உறுதியும், அவரை மிரட்ட வந்த அதிகாரிகளின் கண்களை ஒரு கணம் தாழ வைத்தது.
அலுவலகத்திலிருந்து அவசரமாகப் புல்லட்டில் திரும்பிய இளமாறன், தன் வீட்டின் முன்னால் குழுமியிருந்த கூட்டத்தையும், வாசலில் நின்ற காவல் வாகனத்தையும் கண்டு திகைத்து நின்றான். அவன் உள்ளே நுழைய முயன்றபோது, ஒரு காவலர் அவனது நெஞ்சில் கை வைத்துத் தடுத்தார். தன் தந்தை கைகளில் விலங்குடன், இரண்டு காவலர்கள் அவரைப் பிடித்து இழுத்து வருவதைப் பார்த்த இளமாறனின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தியது.
“அப்பா!” என்று அவன் கதறினான். அவனது குரலில் வேதனையும் குற்றவுணர்ச்சியும் கலந்திருந்தது. “என்ன பண்றீங்க? எங்க அப்பாவை எதுக்காகக் கூட்டிட்டுப் போறீங்க? அவர் என்ன தப்பு செஞ்சாரு?” என்று இளமாறன் அதிகாரிகளின் சட்டையைப் பிடித்துக் குமுறினான்.
“சட்டம் தன் கடமையைச் செய்யுது தம்பி. மாரியாதி கொடுத்து வழி விடுங்க,” என்று இளமாறனைத் தள்ளிவிட்டு முத்துவேலை சிறை வாகனத்தில் ஏற்றினர்.
அன்று மாலையே முத்துவேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விக்ரமின் அதிகார பலத்தினால், அரசுத் தரப்பு வழக்கறிஞர் முத்துவேலுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட அடுக்கடுக்கான போலி ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். “அரசு அதிகாரியாக இருந்தபோது இவர் செல்வாக்கைப் பயன்படுத்திப் பல கோடி ரூபாய் நில மோசடி செய்துள்ளார், இவரை வெளியே விட்டால் ஆதாரங்களைச் சிதைத்துவிடுவார்,” என்ற வஞ்சக வாதத்தை முன்வைத்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முத்துவேலுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து மீண்டும் சிறை வாகனத்திற்கு முத்துவேல் அழைத்துச் செல்லப்பட்டபோது, இளமாறன் கட்டுப்பாட்டை இழந்து ஓடிச் சென்று வாகனத்தின் இரும்புக் கம்பிகளைப் பற்றிக்கொண்டான்.
“அப்பா... என்ன மன்னிச்சுடுங்கப்பா. என்னால தான் உங்களுக்கு இந்த அசிங்கம். நான் அந்த உண்மையை எழுதாமலேயே இருந்திருக்கலாம். என் பிடிவாதத்துக்காக உங்களை நான் அந்த விக்ரம் முன்னாடி பலிகடா ஆக்கிட்டேன்,” என்று இளமாறன் கண்ணீர் மல்கக் கதறினான்.
முத்துவேல் சிறை வாகனத்தின் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து மெல்ல இளமாறனின் கைகளைப் பற்றினார். அவரது முகத்தில் வருத்தம் இல்லை, ஒருவிதத் தெளிவு இருந்தது. “மாறா, கலங்காதேடா. சத்தியத்தைச் சுமக்கிறவனுக்குச் சிறைச்சாலை ஒரு தவம் மாதிரி. அவங்க என் உடம்பைத் தான் அடைச்சு வைக்க முடியும், என் நேர்மையைத் திருட முடியாது. நீ பயப்படாதடா... ஒரு போர் நடக்கும்போது சில பழைய பிம்பங்கள் உடையத்தான் செய்யும். ஆனா அந்த உடைசல்ல இருந்து தான் புதிய வரலாறு பிறக்கும். எழுதின பேனாவை மட்டும் விட்டிடாதே. இப்போ நீ பின்வாங்கினா விக்ரம் ஜெயிச்சுடுவான். உன்னோட அடுத்த கட்டுரை இந்தச் சிறைக் கதவுகளைத் திறக்கணும்,” என்றார் தீர்க்கமாக.
வாகனம் நகரத் தொடங்கியது. தனது தந்தை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் மௌனமாக மறைவதைப் பார்த்த இளமாறனுக்குள் இருந்த அந்த மென்மையான கவிஞன் அந்த நிமிடமே இறந்து போனான். அவனது கண்கள் ரத்தச் சிவப்பாக மாறின. விக்ரம் தனது தந்தையின் கௌரவத்தைச் சிறைக் கம்பிகளுக்குள் அடக்கிவிட்டான் என்பதை அவனால் ஒருபோதும் ஜீரணிக்க முடியவில்லை.
“இந்த ஒவ்வொரு நொடிக்கும் விக்ரம் பதில் சொல்லியே ஆகணும்,” என்று அவன் மனதுக்குள் உறுதி பூண்டான். அநீதிக்கு எதிரான அவனது பேனா இப்போது ஒரு கவிதையாக இல்லை, விக்ரமின் அதிகாரக் கோட்டையைத் தகர்க்கும் ஈட்டியாக மாறத் தொடங்கியது
முப்பது ஆண்டு காலத் தவம் – அது
முப்பதே நிமிடத்தில் கறைபட்டதோ?
துரும்புப் படாத தூயப் பெயர் – இன்று
துருப்பிடித்த விலங்கில் சிக்கியதோ!
பேனா முனையின் சீற்றம் கண்டு – ஒரு
பிள்ளையின் எழுத்துக்கு அஞ்சி இன்று,
தகப்பனின் தோள்களைத் தொடுகிறதோ – இந்த
தர்மம் மறந்த அதிகாரச் சதி!
வீசப்பட்ட கோப்புகளில் வீரம் இல்லை – சிதறிய
புத்தகக் குவியலில் நீதி இல்லை!
அரிசி மூட்டையும் அலசப்பட்டதே – ஒரு
அயோக்கியன் இட்ட கட்டளையாலே!
ஆழக் கிணற்றின் அமைதி போல – அவர்
அசைக்க முடியா மலையாய் நின்றார்!
சிறைக் கம்பிகள் அவரைச் சிறை செய்யலாம் – அவர்
சிந்தையில் பூத்த நேர்மையை என்ன செய்யும்?
விலங்கு பூட்டிய அந்த ‘க்ளிக்’ சத்தம் – அது
விடியப்போகும் புரட்சியின் முதல் சத்தம்!
நேர்மை தோற்பது போலத் தெரியலாம் – ஆனால்
நிச்சயம் அது ஒருநாள் விஸ்வரூபம் எடுக்கும்.