Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 11

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 11

அனைவரும் வேன் உள்லே அமர்கையில் இன்ஸ்பெக்டர் நவீன் இறுதியாக வேன் உள்லே ஏறினார் வேன் ஜெனெல்லாம் அடைக்க பட்டு இரு புறமும் கம்ப்யூட்டர் மானிட்டராக இருந்தது, பத்து நபர்கள் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கும் அளவுக்கு பெரிய வேன், நவீன் கேட்டபடி மினி பாரென்சிக் லேபும் மினி கம்ப்யூட்டர் ட்ரெஸிங் லேபும் இருந்தது, அனைவரையும் பார்த்த வாறு நவீன் பேச தொடங்கினார்…



“டியர் டீம் நான் நவீன், உங்களோட இன்றோடக்சன் தேவையில்லை ஐ க்நொவ் வெள் அபௌட் யு ஆல் சோ டைரக்டா கேஸ்க்குள்ள போகலாம், நாம தேடிக்கிட்டு இருக்குறது ஒரு சைக்கோ சீரியல் கில்லர் அவன் இது வரிக்கும் ஒரு ஃபேமிலிய அதாவது அப்பா அம்மா குழந்த மூணு பேரையும் கொன்னுட்டு அந்த குழந்தையுடைய தலைய வெட்டி எடுத்துகிட்டு போய்ட்டான் நமக்கு கிடைத்த ஒரு கிளு இந்த கல்ட் பைபிள், கொலை செய்யப்பட்ட அலெக்ஸ் வீட்டிலிருந்து கிடைத்தது, இதுல போட்டு இருக்க மாதிரிதான் அவன் கொலை செஞ்சி தலைய மட்டும் எடுத்து கிட்டு போறான், சோ என்னோட கெஸ் படி அவனுக்கு மொத்தம் 18 தல தேவைப்படுது, இது வரைக்கும் எத்தன கொல பண்ணி இருக்கான் இதுக்கப்புறம் எத்தன கொல பண்ண போறான் எதுவுமே தெரியாது. கில்லரோட போட்டோவோ பிங்கர் பிரிண்ட்டோ அவன் எப்படி இருப்பானு கூட தெரியாது. இந்த கேசை ஃபாலோ பண்ணிகிட்டு இருக்கும் போதே அடுத்த ஃபேமிலி மிஸ்ஸிங் அவர் நேம் ஆண்டனி அப்புறம் அவர் மனைவி மேரி அவருடைய குழந்தை கேபிரில்லா, காணாம போன தேதி நவம்பர் 4 அவர் வீட்டுலையும் இதே மாதரி சேம் பைபிள் கிடைச்சுது. கடைசியா சர்ச்க்கு போறதாக சொல்லி போனதாக மேரியோட அப்பா சொல்றாரு, நமக்கு காம்பிளைன்ட் வந்தது நவம்பர் 6, ஆண்டனியும் அவரோட ஃபேமிலியும் உயிரோட இருக்காங்களா இல்லையானு எந்த இன்பர்மேஷனும் இல்ல இப்போ அவுங்கள பைண்ட் பன்னுறதுக்கு நம்மகிட்ட இருக்க ஒரே விழி சர்வேலேயிலன்ஸ் கேமரா மூளையும் ட்ரெஸ் பண்ண போறோம். கில்லரா புடிக்குற வரைக்கும் நமக்கு தூக்கமும் இல்ல ஓய்வும் இல்ல. ஸஹ்ல் வி ஸ்டார்ட் டீம்?…”


“எஸ் சார்…” அனைவரும் ஒற்றுமையாக


“மொதெல்ல ஆதித்யா நீங்க அன்டனியோட சிம்ம ட்ரெஸ் பண்ணுங்க சிம் நம்பர் 9843827205…”


“ரெண்டாவது காவ்யா நீங்க கேமரா மூளையுமா செக் பண்ணுங்க….

அவுங்க வீட்டுல இருந்தே ஸ்டார்ட் பண்ணுவோம், அவுங்க வீடு இருக்குற ஏரியா ராஜாஜி நகர் 3வது கிராஸ், வீட்டுல இருந்து கிளம்புனது 4.30 ஈவெனிங், கார் நம்பர் T N 31 C N 3526 ரெட் கலர் சுசிகி ஸ்விப்ட், ராஜிவ் நகர்ல இருந்து வெளிய வரணும்னா ரென்டெ வழி தான் ஒன்னு டீ.டீ.சி சிக்னல் இன்னொன்னு பெரியார் மார்க்கெட், ரெண்டு கேமெராவையும் செக் பண்ணுங்க….”


இத்தனிடயில் கேஸ் டீடெயில்ஸ் அடங்கிய பைலுடன் வந்தார் சத்தியா.


“சார் கேஸ் பைல்…” இன்ஸ்பெக்டர் நவீனிடம் நீட்டினார், நவீன் கூடிஇருந்த அனைவர்க்கும் இதுவரை நடந்தவை அனைத்தையும் மிக துல்லியமாக விளக்கினார்…


“சார்… அன்டனி நம்பர் ஸ்விச்சிடு ஆப்… ஸ்விச்சிடு ஆப் ஆன இடம் NH39 சோழவரம் பக்கத்துல, தேதி ஏப்ரல் 6 டைம் 5.43 ஈவினிங்…”


காவ்யா தொடர்ந்தார்…. “சார்…. கார் பெரியார் மார்க்கெட்ட தாண்டி சிக்னல்ல ரைட் எடுத்து NH39 ஹைவேல என்டெரான வீடியோ…” தன் முன்னாள் இருந்த திரையில் கேமராவில் பதிவான கட்சியை காட்டினார்


“அப்புடியே பாலோவ் பண்ணுங்க காவ்யா…”


இன்ஸ்பெக்டர் நவீன் காவ்யா பின்னால் நின்று கொண்டு கேமெராவில் பதிவான கட்சியை பார்த்துகொண்டு நின்றுந்தார்…


காவ்யா மீண்டும் தொடர்ந்தார் “சார்.. கார் 5.50 க்கு சோழவரம் சிக்னல் தாண்டிடுச்சு… NH39ல இருக்க இண்டஸ்ட்ரியல் ஏரியாவ 7.00 மணிக்கு தாண்டி, 11 மணிக்கு ஈரோடு அவுட்டர், 4 மணிக்கு ஈரோடு-சேலம் ஹைவே, சேலம் சிட்டி குள்ள மோர்னிங் 10 மணிக்கு என்டர் ஆய் இருக்கு 11.45க்கு லாஷ்டா கரடி பக்கம் டோல் தண்டி இருக்கு, ஆனா அடுத்த 10 கீமீ ல இருக்க அடுத்த டோல தாண்டலா…



“வேற எதாவது வழில தாண்டி இருக்கலாம்ல?...”

.

“நோ சார்... மேப் செக் பண்ணிட்டேன் நோ ஷார்ட் ரூட்… சோ கார் அங்க தான் இருக்கணும்…”

“அப்போ அன்டனி ஃபேமிலி அங்க தான் இருக்கணும் இல்லயா… சத்தியா உடனே கரடிபாகம் போலீஸ் ஸ்டேஷன்க்கு போன் பண்ணி காரோட டீடெயில்ஸ் குடுத்து இம்மீடியட்டா செக் பண்ண சொல்லு கார்ல யார் இருந்தாலும் இம்மீடியட்டா அர்ரெஸ்ட் பண்ண சொல்லு…”



“எஸ் சார்…”


“சார்…” காவ்யா குறுக்கிட்டார் “ஈரோடு அவுட்டர்ல இருந்து ஈரோடு-சேலம் ஹைவே ரீச் பண்ண 30மினிட்ஸ் தான் ஆகும் ஆனா இவுங்க எடுத்துக்கிட்டது 5 ஹௌர்ஸ்…”


நவீனுக்கு சந்தேகம் வலுக்க… “அந்த ரெண்டு வீடியோவையும் பிலே பண்ணுங்க…”


ஒரு திரையில் ஈரோடு அவுட்டரில் பதிவான காட்சியும் மற்றொரு திரையில் ஈரோடு-சேலம் ஹைவேயில் பதிவான காட்சியும் திரையிடப்பட்டது. ஈரோடு அவுட்டரில் பதிவான காட்சியில் கார் கேமராவின் நேர் எதிரில் இருந்து கடந்து சென்றது


“காவ்யா அந்த வீடியோவை கொஞ்சம் ரீவைண்ட் பண்ணுங்க…”


வீடியோ மீண்டும் ரீவைண்ட் செய்யப்பட்டு ஓடியது, கேமராவின் அருகில் கார் வரும் நேரத்தில் “பிரீஸ் பண்ணுங்க” என்றார் நவீன்.


காரின் உல் அமர்ந்திருப்பவர்களை கவனித்தார் சற்று கலங்களாகத்தான் தெரிந்தது இருந்தாலும் காரில் இருபவர்களை ஓரளவு அடையாளம் காண முடிந்தது, காரின் முன் இருக்கையில் ஒரு ஆன் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார் ஒரு பெண் அவர் அருகில் அமர்ந்திருந்தார்.


“இந்த வீடியோ அப்புடியே இருக்கட்டும் அதை பிலே பண்ணுங்க…”


ஈரோடு-சேலம் ஹைவேயில் பதிவான காட்சியை திரையிட சொன்னார் நவீன், கார் கேமெராவுக்கு அருகில் கார் வரும் நேரத்தில் “பிரீஸ் பண்ணுங்க” என்றார் நவீன். காரின் உல் அமர்ந்திருப்பவர்களை கவனித்தார் காரின் முன் இருக்கையில் ஒரு ஆன் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார் பக்கத்தில் யாரும் இல்லை. சந்தேகம் வலுத்தது.


“இரண்டு வீடியோவையும் கொஞ்சம் ஜூம் பண்ணுங்க…”



மீண்டும் உற்று கவனித்தார் நவீன், இரண்டு வீடியோவிலும் கார் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தது வெவ்வேறு ஆட்கள்.

இரண்டாவது வீடியோவை சுட்டிக்காட்டி “இந்த வீடியோ மட்டும் இன்னும் கொஞ்சம் ஜூம் பண்ணுங்க…”


அதிர்ச்சி!!!… இரண்டாவது வீடியோவில் இருந்த ஆல் தன் முகத்தில் வெள்ளை நிற மாஸ்க் அணிந்து இருந்தார்.



“மை காட்…. இந்த ரெண்டு கேமராவுக்கும் இடைப்பட்ட இடத்துல தான் அன்டனி ஃபேமிலி இருக்கனும்… இந்த ஏரியாவோட மேப் காட்டுங்க…”


காவியா தனக்கு முன்னாலிருந்த திரையில் மேப்பை காட்டினார், “சார் இது ஒரு பாரஸ்ட் ஏரியா…”


“அங்க பக்கத்துல இருக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனடியாக இன்போர்ம் பண்ணி அந்த ஏரியாவுல செக் பண்ண சொல்லுங்க…” என்றார் நவீன்.


“எஸ் சார்…”


பின்னால் திரும்பி “டிரைவரை உடனடியா வண்டிய இந்த இடத்துக்கு ஓட்டிட்டு போக சொல்லு…” வேன் புழுதி பறக்க கிளம்பியது. அவர்களுக்கிடையே பரபரப்பு அதிகமானது.


நவம்பர் 8 நேரம் அதிகாலை 3.00

வேன் சம்பவம் நடந்த இடத்தை அடைந்தது, சம்பவம் நடந்த இடம் ஈரோடுக்கும் சேலத்துக்கு இடையே உள்ள பரசூர் ரிசெர்வ் பாரஸ்ட். இன்ஸ்பெக்டர் நவீன் வேனை விட்டு இறங்கியதும் வரவேற்றார் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன்.


“மார்னிங் சார் உங்க கிட்ட போன்ல பேசியிருந்தனே எஸ்.ஐ கண்ணன்…”


“என்னாச்சி கண்ணன் எதாவது சந்தேக படுரமாரி கிடைச்சிதா?…”


“நைட்டு 9 மணில இருந்து தேடிகிட்டு தான் சார் இருக்குறோம், நைட்டு டைம் ட்ரொன் காமெராவும் யூஸ் பண்ண முடியாது, அதுனால பாரஸ்ட். ரிசெர்வ் போலீஸ் 20 பேரை உள்ள அனுப்பி தேடிட்டு இருக்கோம் சார், இது வரைக்கும் எந்த இன்ஃபர்மேஷனும் இல்ல சார்….”



பேசிக்கொண்டிருக்கையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வந்திருந்த ஜீப்பில் இருந்த வயர்லெஸ்ல் ஒலித்தது.


“மைக் 19 கல்லின் மைக் 1 ஓவர்…”

ரிஸிவேரை கண்ணன் அழுத்தி “சொல்லுங்க எதாவது சந்தேக படுரமாரி கிடைச்சிதா ஓவர்…”

“சார் காட்டோட நார்த்-ஈஸ்டர்ன் சைடு தரையில ஏதோ மஞ்சள்ல கொடு போட மாரி இருக்கு சார்… மனுஷங்க வந்து போன மாதரி இருக்கு சார்…”


“லொகேஷன் சொல்லுங்க…”



“11°28'04.8"N 76°59'04.3"E… ஐ ரிபிட் 11°28'04.8"N 76°59'04.3"E…”




இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
சூர்யா ஆண்டனி பேமிலியா கொன்னுட்டான்.
அடுத்த பேமிலிய தேடி போய் இருக்கான். யாரு சிக்க போறாங்களோ!o_O
:confused:
 
Top