Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 14

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 14

“ஏங்க… உங்கள பாக்க யாரோ வந்து இருக்காங்க… போலீஸ்…”



“தம்பி… கொஞ்சம் இருங்கய்யா… அவுங்க இப்போ தான் எழுந்தரிக்குறாங்க…”


“பரவலா மா…”


15 நிமிட காத்திருப்பலுக்கு பிறகு


“தம்பி… அவுங்க கூப்புட்றாங்க…. ரெண்டுபேரும் உள்ள வாங்க…”

“ரூமினுள் இருந்து சத்தம் மட்டும் வந்தது. சத்தம் வந்த ரூமை இருவரும் அடைந்தார்கள்.படுத்த படுக்கையாக இருந்தார் கலைவாணன், எழுந்திரிக்க முயன்றதை நவீன் தடுத்து “நீங்க படுங்க பரவலா…”


கலைவாணன் பார்ப்பதற்கு பல நாளாக உடல் நல குறைபாட்டினால் பலநாள் படுத்தபடியாக இருப்பார் என்பது பார்த்ததுமே தெரிகிறது, பொலிவிழந்த முகம், தாடி. அருகில் இருந்த தன் மனைவியை பார்த்து


“அம்மாடி… காபி போட்டு கொண்டு வாயான்…”


“மறந்தே போய்ட்டேன்… இருங்க காபி போட்டுட்டு வரன்…”


“உங்களுக்கு போன் பண்ண சொன்னது நான் தான்… நியூஸ் பாத்தன்… அப்புறம் உங்களுக்கு ஹெல்ப் தேவ படுதுன்னு எனக்கு தெரிஞ்ச பி.சி மூளையுமா தெரிஞ்சிகிட்டேன்…”


“ஆமா சார்… இப்போ நீங்க குடுக்குற ஒரு சின்ன இன்போர்மஷன் கூட எங்களுக்கு பெரிய உதைவியா இருக்கும்…” என்ற படி சேரை கலைவாணன் அருகில் எழுத்து போட்டு அமர்ந்தார் நவீன்…


“நீங்க தேடுற ஆள நான் பாத்து இருக்கன்…”


இதை கேட்டதுமே நவீனுக்கு உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சி, “அப்புடியா சொல்லுங்க … அவன் எப்புடி இருப்பான்…”


“மிஸ்டர் நவீன் அவனை நான் அரெஸ்ட் பண்ணி விசாரிச்சு இருக்கன் பட் அவனோட முகம் எனக்கு அந்த அளவுக்கு நியாபகம் இல்ல… அவனோட முகம் எனக்கு நியாபகம் இல்லனாலும் இந்த கேஸ் பத்தின சில டீடெயில்ஸ் எனக்கு தெரியும் அத சொல்லுறதுக்காக தான் உங்கள வர சொன்னன்…”


“என்ன காரணத்துக்காக அரேஸ்ட் பண்ணீங்க… எப்புடி… எப்போ… எங்கே…” மிகவும் ஆவலுடன் கண்கள் விரிய கேட்டார் இன்ஸ்பெக்டர் நவீன்


சுமார் ஒரு வருஷம் இருக்கும் தேதி சரியா நியாபகம் இல்ல, அன்னைக்கு சனிக்கிழமைனு நினைக்குறேன்… அமாம்… சனிக்கிழமை தான் எப்புடி சொல்லுறனா என் மனைவி பெருமாள் கோவிலுக்கு போகணும்னு சீக்கிரமா வர சொல்லி இருந்தா, நானும் ஸ்டேஷன்ல இருந்து கிளம்பிட்டேன் அப்போ திடிர்னு ஒரு போன் கால் வந்துச்சி, இங்க பக்கத்துல இருக்க கல்வராயன் மலைல மனிதர்கள் போக தடை செய்யப்பட்ட இடத்துல ஏதோ ஆள் நடமாட்டம் இருப்பதா அந்த காட்டுல வாழுற ஆதிவாசிங்க மூளையுமா தகவல் வந்துச்சி… அந்த ஏரியா என்னோட கண்ட்ரோல் கீழ தான் இருந்தது… அது பாரஸ்டுன்னுறதால பாரஸ்ட் ஆஃபீசருக்கும் தகவல் சொல்லிட்டு நான் அந்த இடத்துக்கு கிளம்பினேன். அந்த இடத்துல ஒருத்தவன் மூணு பேர கொலை செஞ்சி ஒரு சின்ன குழந்தையோட தலையை தனியா வெட்டி வெச்சி இருந்தான்… அவனை நாங்க அரெஸ்ட பண்ணி ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தோம்…


“நவீன் குறுக்கிட்டார், சார் அந்த காட்டுக்குள்ள ஏதாவது வரஞ்சி இருந்துதா…”


“அமாம் தரைல ஏதோ…. பாக்கவே பயங்கரமா இருந்துது… நறிய பூனை தலையெல்லாம் வேற இருந்துது…”


“இந்த போட்டோல இருக்குற மாதரியான்னு பாருங்க…” தன்னுடன் கொண்டுவந்திருந்த கேஸ் டீடெயில்ஸ் அடங்கிய பைலை திறந்து ஒரு போட்டோவை எடுத்து காட்டினார்


கலைவாணன் போட்டோவை உற்று பார்த்து “தம்பி அந்த மூக்கு கண்ணாடியை கொஞ்சம் எடுங்க…”


சத்தியா அருகில் இருந்த மேஜையின் மேல் இருந்த மூக்கு கண்ணாடியை எடுத்து கலைவாணனிடம் குடுத்தார், அதை மாட்டிக்கொண்டு உற்று பார்த்தவாறு “ஆமாம் சார் கிடத்திட்ட இப்புடி தான் இருந்தது…”


நவீன் தான் தேடும் கில்லரை பற்றி தான் கலைவாணனும் கூறுகிறார் என உறுதி படுத்தி கொண்டு, “அப்புறம் என்ன ஆச்சி…”


“அவனை புடித்து வந்து இரவு முழுக்க விசாரித்தோம்…”


“கொஞ்சம் டீடைலா சொல்லுங்க…” தான் கொண்டுவந்திருந்த செல் போனை சத்யவிடம் கொடுத்து வீடியோ எடுக்க சொன்னார் இன்ஸ்பெக்டர் நவீன்.


“அவன் பெரு சூரியா…”


“இந்தாங்க காபி குடிங்க…” குறுக்கிட்டார் கலைவாணனின் மனைவி…

கலைவாணன் “அந்த மேஜைமேல வெச்சிட்டு கொஞ்ச நாழி வெளிய இரு அம்மாடி, கொஞ்சம் முக்கியமாக பேசணும்”-னு தன் மனைவியிடம் கூறினார், அவர்களும் மேஜைமேல் வைத்துவிட்டு கிளம்பினார்...

கலைவாணன் தொடர்ந்தார்,

“இது வரைக்கும் 2 குடும்பங்களை கொலை செஞ்சி இருப்பதாக சொன்னான்… அவன் கொலை செஞ்சதுக்கான நோக்கத்தை விசாரிக்கும்போது நாங்க ஆடி போய்ட்டோம்…”


“என்ன சொன்னான்?...” எண்டறார் நவீன்


“தன் மனைவி குழந்தைகள் இறந்து போய்ட்டதாகவும் அவுங்கள மீண்டும் உயிரோட கொண்டு வருவதற்காக 18 குழந்தைகள் தலை சேகரிப்பதாவதும் சொன்னான்…. நாங்க உறஞ்சி போய்ட்டோம்….

இதுவரைக்கும் 2 தலை எடுத்துட்டதாகவும் இன்னும் 16 தலை தேவ படுறதாகவும் சொன்னான்…”


நவீன் குறுக்கிட்டார், “அவனுக்கு குழந்தைங்க தலைதான தேவை படுது எதுக்காக மொத்த குடும்பத்தையும் கொல்லுறான்…”


“அத பத்தியும் நா அவன்ட கேட்டன்… அதுக்கு அவன் குழந்தையை மட்டும் கொன்னா அந்த குழந்தை பேரெண்ட்ஸ் போலீஸ்க்கு கொம்பிளைன்ட் கொடுத்து தேடுனா அவன் பிடிபட வாய்ப்பு இருக்காம் அதுனால தான் எல்லாரையும் கொன்னனு சொன்னான்… ஏன் அந்த குடும்பத்தை சேர்ந்த வேற யாரவது போலீஸ் கிட்ட போக மடங்களானு கேட்டன், அதுக்கு அவன் வேறு எந்த சொந்தமும் இல்லாத சிங்கள் ஃபேமிலிய மட்டும் தான் கொள்வதாக சொன்னான்…”


“அவன் எப்புடி அந்த ஃபேமிலிய ச்சூஸ் பண்ணுறான்னு எதாவது தெரிஞ்சிதா?...” என்றார் நவீன்


“அதையும் அவனே சொன்னான் , எல்லா ஊரில் இருக்கும் சர்ச்க்கும் போவன் அங்க யாராச்சும் கஷ்டத்துல இருக்காங்களானு பாப்பன் அதுவும் குறிப்பா குடும்பத்துல இருக்க யாரையாவது இழந்து கஷ்ட படுறாங்களானு பாப்பான், கண்டிப்பா அப்புடி நரியா பேர் இருப்பாங்க அவுங்கள்ள எந்த பேமிலி போகிரௌண்டும் இல்லாத, சொந்தமே இல்லாதவங்கள செலக்ட் பண்ணி அவுங்ககிட்ட இறந்தவங்கள மீண்டும் என்னால உயிரோட வரவழைக்க முடியும்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லனா ஒரு பூனையை கொன்னு மீண்டும் அதுக்கு உயிர் கொடுத்து காட்டுவேன்னு சொல்லி பல நாள் அவுங்க கிட்ட பேசி அவுங்கள வழிக்கு கொண்டு வந்து அவுங்க கண்ணு முன்னாடியே ஒரு பூனையை கொன்னு மீண்டும் உயிரோட வரவச்சி காட்டி அவுங்கள நம்ப வேப்பானு சொன்னான்…”


“அது எப்படி ஒரு பூனையை கொன்னு உயிரோட வர வைக்க முடியும்?….” குறுக்கிட்டார் சத்தியா


“அதையும் அவன்கிட்ட கேட்டேன் அதுக்கு அவன் ஆவி சாத்தன்னு என்னென்னமோ சொன்னான் எனக்கு சுத்தமா புரியல…”


“வேற எதாவது சொன்னானா?...” என்றார் நவீன்


“அவன் சாத்தான் இருக்குதுனும் அது நிச்சியமா தன் மனைவியையும் குழந்தையும் உயிரோட தரும்னு ஆணி தனமா நம்புனான்…”


“வேற ஏதும் நியாபகம் இல்ல நவீன்” என்றார் கலைவாணன்.


“அவன் ஏற்கனவே பண்ணா கொலைகள் எந்த இடம்னு எதாவது கேட்பீங்களா?...”


“இல்ல நவீன் நா கேக்கல… நாங்க முழுசா விசாரிக்கறதுக்குள்ள அவன் தப்பிச்சிட்டான்…”


“தப்பிச்சிட்டானா எப்புடி?…”



இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
கலைவாணன் கைல கெடச்சவன விட்டுட்டாரு. போதத்துக்கு முகமும் நியாபகம் இல்லனு சொல்லுறாரு. கொலை பண்ணேன்னு சூர்யாவே சொல்லியும், இன்னும் பதினாறு கொலை பண்ண போறேன்னு சொல்லியும் தப்பிச்சு போனவனை போலீஸ் தனிப்படை அமைச்சு தேடி இருக்கணும்.
 
Top