Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 18

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 18/21

“பிரான்ஸ்ல இருந்து டிசம்பர் 24 2017க்கு கொழும்பு ஏர்போர்ட்கு போயிருக்காங்க… அதுக்கு அப்புறம் பெப்ரவரி 25 2018 கொழும்பு ஏர்போர்ட்ல இருந்து கோயம்பத்தூர் ஏர்போர்ட் வந்து இருக்காங்க…”


“ஓகே தேங்க்ஸ்…”


நவீன் பேசிக்கொண்டிருக்கும் வேலையில் நவீனின் பாஸ்போர்டை கொண்டுவந்திருந்தார் ஏட்டு, புறப்பட தயாரானார் நவீன்… நவீன் பிரான்ஸ்க்கு டிக்கெட் எடுத்தார், சத்தியா நவீனிடம்


“சார் எதுக்காக பிரான்ஸ்க்கு டிக்கெட் எடுத்தீங்க?… கொழும்பு தானே போகணும்…”


“சத்தியா… சூர்யாவோட பாஸ்போர்ட் பிரான்ஸ் நேஷ்னாலிட்டி பாஸ்போர்ட்.. கொழும்பு போன எதுக்கு சூர்யா இந்தியா வந்தான்னு மட்டும் தான் தெரியும் பிரான்ஸ் போனா தான் சூர்யா யாருனு தெரியும், அவனை ஆரம்பத்துல இருந்து பாலோவ் பண்ணா தான் புடிக்க முடியும்… புரியுதா…”


“எஸ் சார்…”


பிரான்ஸ்க்கு புறப்பட தயாரானார் நவீன்…


நேரம் இரவு 11.30 மணி

காலிங் பெல் மணி ஒலித்தது… டேனியல் கதவை திரந்து சூர்யாவை வரவேற்றார், கதவு பூட்ட பட்டது… வரவேற்பறையில் ஷோபாவில் அமர்ந்திருந்த தன் மனைவியின் அருகில் அமர்ந்தார் டேனியல் அவர்களுக்கு நேர் எதிரே உள்ள சோபாவில் சூர்யா அமர்ந்தான்.


“சூர்யா ஆர் யூ ஸூர்?… இது பசிபிளா?…” தயக்கத்துடனும் ஒரு வித பயத்துடனும் கேட்டார் டேனியல்…


“அத நிருமிக்க தானே வந்திருக்கேன்…. நா குடுத்த பைபிளை படிசீங்களா?…”


“ஹ்ம்ம்… படிச்சோம்… ஆனா... அதெல்லாம் நடக்குமான்னு சந்தேகமா இருக்கு…” இழுத்தபடி சொன்னார் டேனியல்


“டேனியல்... நீங்க நம்பனும்… உங்களுக்கு உங்க கொழந்தை மீண்டும் உயிரோட வேணுமா… வேண்டாமா?...”



“வேணும்…”


“அப்போ... நீங்க நம்பனும்… உங்களுக்கு நம்பிக்கை இல்லனாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்… நா நிருமிச்சி காட்டுறேன்…”


“ஹ்ம்ம்…”


“உங்களோட பெட் ரூம்ல உள்ள இருக்க பொருளைலாம் எடுத்துட்டு சுத்தமா வைக்க சொன்னேனே ரெடியா இருக்கா?…”


“ஹ்ம்ம்... இருக்கு…” என்றார் டேனியல்…


“அதுக்கு முன்னாடி நா குளிக்கணும் பாத்ரூம் எங்க இருக்கு?…”


“அதோ அங்க…” எழுந்து குளிக்க செல்வதற்கு முன்… “குழந்தை எங்கே?...” என்றான் சூர்யா


“இன்னொரு ரூம்ல தூங்கிட்டு இருக்கா…”


“ஹ்ம்ம்…”

சிறிது நேரத்தில் சூர்யா குளித்திவிட்டு தான் கொண்டு வந்திருந்த கருப்பு நிற உடையை அணிந்து வந்தான்… “போகலாமா?…”


“ஹ்ம்ம்…”


முதலில் டேனியல் நுழைய அவரை தொடர்ந்து அவர் மனைவி கடைசியாக சூர்யா, ரூம் எந்த பொருளும் இல்லாமல் சுத்தமாக இருந்தது. சூர்யா டானியேலையும் அவர் மனைவியும் தரையில் ஒரு சிறிய வட்டம் இட்டு ரூமின் மூலையில் உட்கார வைத்தான், தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் நிற பொடியைவைத்து தரையில் ஒரு பெரிய வட்டம் அதனுள் இரண்டு முக்கோணம் ஒன்று நேராக மற்றொன்று தலை கீழாக வெள்ளை பொடியை கொண்டு, பெரிய வட்டத்தை சுற்றிலும் 18 சிறிய வட்டம் வட்டத்தினுல் முக்கணம், அரை முழுக்கிலும் மெழுகு வத்தி ஏற்றினான், ரூமின் விலக்கு அணைந்தது. மெழுகின் வெளிச்சம் மட்டுமே …


தன் கொண்டுவந்திருந்த பூனை தைலைகளை 18 முக்கோணத்திலும் வைத்தான், மேலும் ஒரு பூனை உயிருடன் கொண்டு வந்திருந்தான். அணைத்து வட்டத்திலும் மெழுகுவத்தி ரத்தத்தில் நினைக்க பட்டிருந்த பூனை தலையின் அருகில் இருந்தது, நேரம் கடந்தது மணி நள்ளிரவு 12 மணி ஆனது தான் கொண்டுவந்திருந்த உயிருள்ள பூனையை வட்டத்தின் மையத்தில் படுக்கவைத்து கத்தியால் அதன் வேலாவில் குதின்னான்…


பூனை வலியினால் கதறியது… கத்தியை எடுத்து பூனையின் கழுத்தை அறுத்து அதன் தலையை தனியாக அறுத்தான்… தரை எங்கும் ரத்தம் அந்த தலையை அந்த பெரிய வட்டத்தின் மையத்தில் வைத்துவிட்டு உடலை எடுத்து சொட்டிகொண்டிருந்த ரத்தத்தை சிறியவட்டத்தில் இருக்கும் அணைத்து பூனை தலையிலும் தெளித்தான்…


டேனியலின் மனைவி இதை பார்க்க விரும்பாமல் டேனியலின் முதுகின் பின்னல் தன்னை மறைத்து கொண்டால். பூனையின் உடம்பை அதன் தலையின் அருகில் வைத்து விட்டு தனக்கென போட்டிருந்த ஒரு வட்டத்தில் அமர்ந்தான் சூர்யா, தான் வலது கையை வானத்தை நோக்கி உயர்த்தி அந்த பைபிளை வாசிக்க தொடங்கினான்…


சிறிது வினாடிகளில் ரூமினுள் காத்து பலமாக அடிக்க தொடங்கியது, அடிக்கும் காத்தில் அனைவரின் தலை மயிரும் உடையும் பறந்தது, ரூமில் இருந்த சிறிய பொருட்களேல்லாம் விழுந்து உடைய தொடங்கின, ஆனால் மெழுகு வத்தி மட்டும் ஒரு சிறிய சலனம் கூடஇல்லாமல் இருந்தது.

டேனியேலுக்கும் அவரது மனைவிக்கும் பயமாகவும் மெழுகு வத்தி ஆணையததை கண்டு ஆசிரியமாகவும் இருந்தது…

திடீரென காற்று நின்றது… தெருவில் நாய் ஊலையிட தொடங்கியது சூர்யா அவர்களை பார்த்து… “வட்டத்தை விட்டு ஆசையாதீங்க…. என்ன நடந்தாலும்…”

சூர்யாவின் கண்கள் முற்றிலும் கருப்பாக மாறியது… சூர்யாவே பார்பதற்க்கே அரக்கன் போல காட்சியளித்தான், வீட்டின் வெயில் மழை மேகம் சூழுந்து பலமான காற்றடிப்பதும் மின்னல் வெட்டுவது ஜன்னலின் வழியாக தெரிந்தது, பலத்த இடி சத்தம் காதின் அருகில் விழுந்ததை போல இருந்தது, திடிரேன வீடு முழுவதும் ஒரு நிசப்தம் பரவியது, வானிலை சீராகி விட்டதா என டேனியல் ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தார், இல்லை இன்னும் மோசமாக இருந்தது, வீசும் சூறாவளி காற்றின் வேகத்தில் ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கியது ஆனால் ஒரு சிறிய சத்தம் கூட டேனியலின் காதில் விழவில்லை, டேனியல் தனக்கு காது வில்லையென தனது காதை நடுங்கும் விரல்களால் தொட்டு பார்த்து கொண்டிருக்கும் வேலையில் மீண்டும் வீடே இரண்டாக பிளக்கும் அளவிற்கு ஒரு மின்னல் வெட்டு, டேனியல் தன் மனைவியை இருக்க கட்டிக்கொண்டார் பயம் தாங்க முடியாமல், மீண்டும் நிசப்தம்...


வீட்டினுள் குதிரை நடப்பது போல் சத்தம், அதன் அதிர்வை டேனியலினால் உணர முடிந்தது, சத்தம் அவர்கள் இருக்கும் ரூமை நெருங்குவது நன்றாக டேனியேலுக்கு புரிந்தது,கதவின் அருகில் ஒரு நிழல் ரெண்டரே கால், இரண்டும் குதிரையின் கால் போன்று வந்து நின்றது… ரூமினுள் நிழல் மட்டும் நுழைந்தது… நிழல் கருப்பாக… குதிரை கால்களுடன் மனிதனின் உடலுடன் ஆட்டின் தலை கொண்டு ஒரு நிழல் தரையில் வளர்ந்தது…. மிரட்டும் நரகத்தின் சத்தம் சூறாவளி காத்து அலறும் பூனையின் ஓசைகல் ...



ஒரே வினாடி நாய் ஊளையிடுவது நின்றது, மெழுகு வத்தி அணைந்தது… ரூம் முழுக்க இருள் பரவியது… மீண்டும் தானாகவே மெழுகுவத்தியெல்லாம் எரிய தொடங்கியது… பெரிய வட்டத்தில் இருந்த பூனை உயிருடன் இருந்தது வேறு எந்த பூனை தலைகளும் ரூமினுள் இல்லை, தரையில் போட பட்டிருந்த கோலத்தில் குதிரையின் கால் தடம்…

ரூமில் இருந்து உயிர் பூனையை தூக்கியபடி சூர்யா வெளியே வந்தான் அவனை பின் தொடர்ந்து டேனியிலும் அவரது மனைவியும் தங்கள் கண்ணால் கண்டதை நினைத்து உறைந்து பொய் ஷோபாவில் அமர்ந்தார்கள்…



இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
சூர்யா செஞ்சி காட்டி நம்ப வச்சிட்டான். நவீன் பிரான்ஸ் பொய் வரும் போது டேனியல் குடும்பம் உயிரோடு இருக்குமா?
 
கொஞ்சம் எழுத்துப் பிழை இருக்கு
வீட்டின் வெளியே க்கு பதில் வெயில் ன்னு இருக்கு
சூழ்ந்து க்கு பதில் சூழுந்து ன்னு இருக்கு
 
Top