Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 4

Advertisement

naveen prabu

Member
Member
மணி4.00
“சத்தியா, நாளைக்கு காலைல அலெக்ஸ் வீட்டுக்கு போகனும் டூப்ளிகேட் கீ ஏற்பாடு பன்னிட்டு சொல்லு, அப்புறம் பாரென்சிக் டிபார்ட்மென்டை நாளைக்கு காலைல அலெக்ஸ் வீட்டுக்கு வர சொல்லிடு, எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணு…’’ என சொல்லிவிட்டு போன் காளை சுட் செய்தார்.

சிறிது நேரம் போனது

“ஏட்டு நா கிளம்புறேன் ஏதாவதுனா கால் பான்னு…’’ வழக்கமா கிளம்பும்போது சொல்லிட்டு போகும் அதே வார்த்தையை சொல்லிவிட்டு கிளம்பினார்…


நேரம் மாலை 6 மணி சூரியன் மலைகளுக்கு பின்னால் மறைந்த சில நிமிடத்திலேயே பணி தரையைத் தொட்டு தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது சில நிமிடங்களுக்கு முன்னால் பெய்திருந்த மழையினால் நினைக்க பட்டிருந்த ரோடுகள் பார்க்கும் இடத்திலெல்லாம் பச்சைபசேலென செடி கொடி மரங்களினால் செய்யப்பட்ட போர்வையை போத்தியிருந்த ஊட்டியின் அழகை விவரிக்க வார்த்தையே இல்லை… மலைகளின் மேல் ரப்பர் மர காடுகளுக்கு நடுவில் ஒரு வீட்டில், ஒரு சிறிய மஞ்சள் விளக்கு மட்டும் எரிந்துக் கொண்டிருந்தது வீட்டின் வெளிப்புற சுவர் கருங்கற்களால் ஆன பழைய காலத்து சிறிய வீடு, புல்லட் சத்தம்... சூர்யா தன் புல்லடை வீட்டின் வாசல் நிறுத்திவிட்டு அக்கம் பக்கம் சுத்திப் பார்த்தவாரே வீட்டைத் திறந்து உள்ளே சென்றான். தலையில் இருக்கும் ஹெல்மெட்டை கழட்டி கதவருகில் இருந்த ஸ்டாண்டில் வைத்துவிட்டு ஹாலில் இருக்கும் டிவியை ஆண் செய்த படி தன் தோளில் இருக்கும் ஃபேக்கை டிவி மேஜையின் மேலே வைத்துவிட்டு குளிக்கச் சென்றான். டிவியில் இன்ஸ்பெக்டர் நவீன் செய்தியாளர்களுக்கு அளித்த நியூஸ் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது, “குற்றவாளி தேடிகிட்டு இருக்கோம்… கூடிய சீக்கிரம் புடிச்சிருவோம்…’’ மற்றும் பல செய்திகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது, சூர்யா குளித்து முடித்து விட்டு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வந்து டிவி ஆப் செய்துவிட்டு டிவி மேஜையில் வைத்திருந்த ஃபேக்கை எடுத்துக்கொண்டு ஹாலில் இருந்தா கார்பெட்டை நகர்த்தினார் ஒரு சிறிய கதவு போன்ற அமைப்பு தரையில் இருந்தது திறந்து உள்லே இறங்கினான் பேஸ்மென்ட் பார்ப்பதற்கு ஆங்காங்கே காரை பெயர்ந்து விழுந்திருக்கும் பச்சைக்கலர் சுவர்கள், மரத்திலான தரை மஞ்ச கலர் குண்டு பல்ப் ரூமின் மையத்தில் டைனிங் டேபிலுக்கு மேலே உத்திரத்திலே தொங்கிகொண்டிருந்தது, கண்ணாடி பாட்டில்கல் அடுக்கப்பட்ட செல்ப் என திகிலூட்டும் வகையில் அமைந்திருந்தது, சூர்யா ஃபேக்கை டைனிங் டேபிள் காலின் அருகில் வைத்துவிட்டு சுவர் ஓரமாக இருக்கும் டேபிளின் மேலிருந்த கிராமபோனை ஆன் செய்ந்தான் இளையராஜாவின் “கண்னே கலைமானே கன்னி மயிலென கன்டேன் உனைநானே…’’ பாடலை ரசித்தவாறு ஷெல்ஃபில் இருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து எடுத்து டைனிங் டேபிள் மேல் வைத்துவிட்டு கீழ் இருந்த ஃபேக்கை திறந்து ஒரு பெண் குழந்தையின் தலையை மேஜையின் மேல் வைத்திருந்த கண்ணாடி பாட்டிலில் அடைத்து மீண்டும் ஷெல்ஃபில் ஏற்கன்வே வைக்க பட்டிருக்கும் தலையின் அருகில் வைத்தான். பேஸ்மென்ட் மூலையில் இருந்த தொட்டியில் ஐஸ்சினால் மூடப்பட்டிருந்த தன் மனைவி மகள் மகன் மூவரின் சடலத்தை மெல்ல வருடிய வாறு

“இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்புறம் நாம மறுபடியும் சந்தோசமா வாழலாம்…’’

ஐஸின் மேல் கண்களை மூடி முத்தம் வைத்து விட்டு தான் வாங்கி வந்திருந்த உணவு பொட்டலத்தையும் நியூஸ் பேப்பரையும் எடுத்தான்… சாப்பிட்டுக்கொன்டே நியூஸ் பேப்பரை படிக்கத்தொடங்கினான்.


நேரம் இரவு 8.00 மணி வீட்டில் தனுக்கேன ஒரு ரூமை ஒதுக்கி அதையே ஆபீஸ் போல செட்டப் செய்து வைத்திருந்தார் இன்ஸ்பெக்டர் நவீன். டேபிள், ஷேர், பைல் அடுக்க ராக் தன் இருக்கைக்கு பின்னல் பின்னல் போர்டு அதில் நறிய போட்டோஸ் நியூஸ் பேப்பர் என போர்டு நிரம்பிருந்தது. பெரும்பாலும் அந்த ரூமே கதினு இருப்பர். இன்றும் ரூமில் கம்ப்யூட்டரில் ஏதோ நோண்டிக்கொண்டிருந்தார்.

போன் ஒலித்தது… “சொல்லுங்கப்பா... சாப்டீங்களா…”

“அம்மா சாப்டங்களா…”

“நா சாப்பிட்டேன்…”

சிறிது நேரம் மௌனம். “புரிஞ்சிக்கங்க பா போலீஸ் வேலை தான் என் கனவு அதுவும் இல்லாம இந்த ஊரு தான் எனக்கு புடிச்சி இருக்கு எனக்கு இந்த வேலையை விட்டுட்டு அங்க வந்து செட்டில் அகா புடிக்கல என்ன விட்டுடுங்க…”

“சரி பா எனக்கு வேலை இருக்கு நா அப்புறமாக பேசுறேன் அம்மாவையும் அக்காவையும் கேட்டதாக சொல்லுங்க நா வெச்சிடுறான் பா பை…’’ தொலைபேசியில் தன் அப்பா நவீனின் இரண்டாம் திருமணம் பற்றி பேசியதற்கு அவருக்கு கிடைத்த பரிசு அழைப்பை துண்டித்தது

நவீனை அவர் மனைவி ராஜலக்ஷ்மியின் நியாபகங்கள் பாடாய் படுத்த தொடங்கியது எப்போது தூங்கினார் என்பதுகூட தெரியாமல் தன் மேஜை மேலே உறங்கினார்..

நவம்பர் 6

போன் கால் “குட் மார்னிங் சார் சத்தியா பேசுறேன் அலெக்ஸ் வீட்டுக்கு பாரென்சிக் டிபார்ட்மெண்ட் ஆளுங்க வந்துட்டாங்க சார்…”

“சரி நா இப்போ வரன்...’’

மணி காலை 6.00.. எழுந்து பிரெஷ் ஆகி கிளம்பினார் வைட் ஷர்ட் வழக்கமான கக்கி பேண்ட் ஷூ, படி இரங்குவதற்கு முன் கார் ரெடியாக இருந்தது, கிளம்பினார். காலை நேரம் என்பதால் ரோடு காலியாக இருந்தது, சிறிது நேரத்தில் கார் அலெக்ஸ் வீட்டை சென்று அடைந்தது, சத்தியா மாமூல் சலுட்டை அடித்து கார் கதவை திறந்தார்.

“எப்போ வந்தாங்க…”

“உங்களுக்கு கால் பன்னுறதுக்கு 10நிமிஷம் முன்னாடி வந்தாங்க சார்…”

வீட்டினுள் நுழைந்தார் வீடு பார்பதற்க்கே பழைய வீடாக இருந்தது ஒருமாதம் பூட்டி இருந்த தூசியும் சேர்ந்து இன்னும் பாழடைந்ததாக தெரிந்தது, பாரென்சிக் டீப்பார்டுமென்ட் ஆளுங்க தடயங்களை சேகரித்த வாறு இருந்தார்கள், வீட்டினுள் நுழைந்ததுமே ஒரு ஹால் ஹாலின் வலது பக்கத்தில் ரூம் இருந்தது அதனுள் தான் ஆச்சரியமே காத்திருந்தது… ரூமினுள்…



இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று
முழு நாவலையும் உடனடியாக படிக்க வேண்டுமா இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

 
யாரு இந்த சூர்யா அவன் தான் அரக்கனா.... எதுக்காக இப்படி.... பாட்டில்ல எத்தனை தலையை இப்படி போட்டு வச்சி இருக்கான் அலெஸ் பொண்ணோட தலை தான் அதுவா.... ரொம்ப இன்டெரெஸ்ட்டிங் யா இருக்கு ... மீதி ud எப்போ போஸ்ட் பண்ணுவீங்க
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நவீன் பிரபு தம்பி
 
Last edited:
செத்துப்போன தன் குடும்பத்தை உயிரோட கொண்டுவர சூர்யா தான் இந்த கொலைகளை செய்றானா? இல்ல கொலை நடந்த இடத்துல இருந்து தலையை மட்டும் வெட்டி எடுத்துட்டு வந்தானா? :unsure: :oops:
 
Top