Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்(ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 8

Advertisement

கதையை நான் தொடரலாமா?....

  • பிடித்திருக்கிறது தொடரலாம்

    Votes: 0 0.0%
  • பிடிக்கவில்லை தொடரவேண்டாம்

    Votes: 0 0.0%
  • கதை பரவாயில்லை தொடரலாம்

    Votes: 0 0.0%

  • Total voters
    0

naveen prabu

Member
Member
EPISODE - 8/21


“பொதுவா எங்கயாவது பாடி கிடைச்சிச்சின ரென்டெ விசியம் தான் ஒன்னு கொலை இன்னொன்னு தற்கொலை, இது கண்டிப்பா தற்கொலை இல்ல எத வெச்சி சொல்லுரனா”



“பாயிண்ட் 1 எவிடென்ஸ் 1, காட்டுக்குள்ள கிடைச்ச புட்ப்ரிண்ட்ஸ் (footprints) அது மொத்தம் நாலு பேரோட புட்ப்ரிண்ட்ஸ் ஒன்னு அந்த குழந்தையோடது மத்த ரெண்டும் அலெக்ஸ் அப்புறம் அவோரோட மனைவியோடாது.... அப்போ அந்த நாலாவது புட்பிரிண்ட்?.... அது ஜென்ஸ் ஷூ சைஸ் 10, அவன் தான் நாம தேடிகிட்டு இருக்க கில்லர்…”

“பாயிண்ட் 2
நம்மகிட்ட கிடைச்ச 3 பாடில அந்த குழந்தையோட தல மட்டும் இல்ல... ஒரு வேலை சம்பவம் நடந்த இடம் காடு, சோ எதாவது அனிமேல்ஸ் இழுத்துட்டு பொய் இருக்கும்னு காடு முழுக்க 4டீம் இறக்கி சேர்ச் பண்ணோம் கிடைக்கல…”

“பாயிண்ட் 3 மோட்டிவ்
மோட்டிவ் கண்டிப்பா மனி இல்ல, ஏன்னா சம்பவம் நடந்த இடத்துல இருந்தது மெர்சிடிஸ் W 123 சிரிஸ் கார் 20 லேக்ஸ்... அதுவும் இல்லாம கார்குள்ள 50,000 கேஷ் இருந்துச்சி எதையுமே அவன் எடுத்துக்கிட்டு போகல... அப்புரம் அலெக்ஸ் பேங்க் அக்கௌன்ட் புல்லா செக் பணியாச்சி எந்த அபநோர்மல் ட்ரான்ஸாக்ஷனும் கிடையாது... சோ கில்லெரோட மோடிவ் 100% மனி இல்ல... அலெக்ஸ் ஒர்க் பண்ண இடத்துல விசாரிச்சதுல அவருக்கு யாரும் கிளோஸ் பிரண்டும் இல்ல எதிரியும் இல்ல... சோ கில்லெரோட மோடிவ் வெஞ்சேன்ஸ்சா இருக்க வாய்ப்பே இல்லன்னு முடிவு பண்ணன்…”

பாயிண்ட் 4
“காட்டுக்குள்ள வரைஞ்சிருந்த அந்த கோலம் பூனை தலை இதெல்லாம் பாக்கும்போது ஏதோ பலிகொடுக்குற செட்டப் மாரி இருக்கு…”

“யோவ் இதெல்லாம் நம்மள கோழயறதுக்கு கூட இர்ருக்கலாம்ல..”

“நானும் பிரஸ்ட் அப்புடி தான் நினைச்சன், ஆனா இதுல ஸ்டிரேஞ்சி என்னனா பாரெஸ்ட்ல இருந்த அதே செட்டப் அலெக்ஸ் வீட்டுலயும் இருந்துச்சி... “

“பாயிண்ட் 5 இம்பார்ட்டண்ட் கிளு
அலெக்ஸ்சோட மதர் இன் லா வ விசாரிக்கும் போது தான் இம்போர்ட்ன்ட் கிளு கிடைச்சது அலெக்ஸ்கு மொத்தம் ரெண்டு குழந்தை அதுல ஒரு கொழந்த இறந்துபோச்சி அதுனால டோட்டல் பேமிலி அப்செட், சோ அப்போ அவுங்க சர்ச்க்கு போகுறப்போ அலெக்ஸ், அலெக்ஸ் மனைவி ரெண்டு பேருக்கும் யாரோ ஒரு புது நபர்கூட பழக்கம் ஏற்பட்டுஇருக்கு இதுக்கு அப்புறம் தான் அலெக்ஸ்கிட்டையும் அவர் மனைவிகிட்டையும் நிறைய மாற்றம் தெரிஞ்சதாவும் அலெக்ஸோட மதர் இன் லா சொன்னாங்க.... இந்த நபரை தவிர அலெக்ஸ் பாமிலிக்கு ரீசெண்டா நெருக்கமா இருந்தவங்க யாருமே இல்ல… சோ அவன் தான் கில்லர்…”

“பாயிண்ட் 6 புக்
அலெக்ஸ் வீட்டுல கிடைச்ச புக், ஆரம்பத்துல அத பாக்கும் போது அது பைபிள்னு நினைச்சன் பிகாஸ் அது பாக்குறதுக்கு பைபிள் மாரியே இருந்துச்சி ஆனா அது பைபிள் இல்ல… அந்த புக் பார்சிய மொழில எழுதப்பட்டிருந்தது… இந்த புக்ஹா பத்தி ரிசெர்ச் பண்ணி பாத்த அப்போ தான் தெரிஞ்சிது அது ஒரு கல்ட் பைபிள்…”

“ஏது கல்ட் பைபிலா அப்புடினா?…”

“ஆவி, சாத்தான், பில்லி சூனியம், இறந்தவங்க கூட பேசுறது, அப்புறம் இறந்தவங்கள உயிரோட கொண்டு வரது… இத சம்பந்த பட்ட புக் தான் அது...இத ப்ராக்சிட்டிஸ் பண்ணுறவங்களுக்கு பெரு தான் கல்ட், இந்த புக்ஹா டிரான்ஸ்லேட் பண்ணி படிச்சன் இந்த புக்ல போட்டு இருக்க மாறி தான் சர்கில்ஸ் காட்டுலையும் அலெக்ஸ் வீட்டுலயும் போடு இருக்கு… சோ கில்லர் இறந்து போன அலெக்ஸ்ஸோட பையனை திரும்பி கொண்டு வரேன்னு சொல்லி இவுங்க கூட பழகியிருக்கணும்…”

“அடுத்தது அலெக்ஸ் வீட்டுல இருந்த புக் ஒரு எடிட் செய்யப்பட்ட புக், அதாவது சில இடத்துல சில வார்த்தைகளை திருத்தி இருக்கு… உதாரணத்துக்கு பெண்குழந்தை தலைய அந்த சாத்தானுக்கு வெச்சி படைச்சா தான் இறந்தவங்க திரும்பி வருவாங்கனு ஒரிஜினல் புக்ல போட்டிருக்கு ஆனா அலெக்ஸ் கிட்ட இருந்த புக்ல பூனை தலைனு மாற்ற பட்டு இருக்கு… சோ இந்த புக்ஹா வெச்சி அலெக்ஸ் பேமிலியை ஏமாத்தி அவுங்கள கொன்னுட்டு அந்த குழந்தை தலையை எடுத்துட்டு போயிருக்கான் அந்த கில்லர்…”

“சரி நீ சொல்லுறபடி பாத்தா அவனுக்கு அந்த குழந்தை தலை மட்டும் தான தேவை அவன் ஏன் எல்லாரையும் கொல்லனும்?...”

“இப்போ அந்த குழந்தையை மட்டும் அவன் கடத்தியிருந்தானா குழந்தைய காணும்னு அவுங்க பேமிலில யாராச்சும் கம்பளைண்ட் குடுப்பாங்க போலீஸ் தேடும் அவன் மாட்டிப்பான் அதுனால கூட இருக்கலாம்ல…”

“அது சரி.. மூணுபேரையும் ஒரே நேரத்துல கொள்ள முடியாது, ஒருத்தவங்க ஒருத்தவங்களா தான் கொள்ள முடியும் அப்போ ஒருத்தவங்கள கொலைசெய்யப்படுறதை பாத்த இன்னொருத்தவங்க அந்த கில்லர் கிட்ட இருந்து தைப்பபுச்சி இருக்கலாமே !!!...”

“கரெக்டான பாயிண்ட் இதான் என் கிட்ட இருக்க லாஸ்ட் எவிடென்ஸ்... இந்த விடீயோவை பாத்தா உங்களுக்கு எல்லாமே புரியும்… அலெக்ஸ் வீட்டுக்கு எதிர்க்க இருக்க ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டாரோட வாசல்ல இருந்த கேமரா காட்சி…”

நேரம் விடியற்காலை 3.00மணி கொலை நடந்த அன்று நடந்தவை..
வீடியோவில்...
அலெக்ஸ் மற்றும் அவரது மனைவியும் தங்கள் காரில் பொருட்களை அடுக்கியவாரு இருந்தார்கள், அலெக்ஸின் மகள் ரோட்டின் அருகில் நின்றுகொண்டிருக்கிறாள், அவர்கள் வளர்க்கும் நாய் சங்கிலியில் பூட்ட பட்டு சங்கிலி அலெஸ்க்ஸின் மகளின் கைகளிலிருந்து, நாய் அதன் வலதுபக்கம் எதயோ பார்த்து குலைத்தவாறு இருந்தது...

கமீஸ்னர் நவீனிடம் “என்னையா அவுங்க ரெண்டு பெரும் ரோபோ மாறி நடக்குறாங்க?…”

“அமாம் சார் நமக்கு கிடைச்சிருக்க அடுத்த இம்போர்ட்டண்ட் கிளு அவுங்க ரோபோ மாறி நடப்பாங்க அப்போ அப்போ சிலை மாதரி நின்னுடுவாங்க திருப்பி நடப்பாங்க... இதுல ஸ்டேரேஞ்சி என்ன நா அவுங்க ரெண்டு பெரும் கணவன் மனைவியா இருந்தாலும் ஒரு வார்த்தை கூட பேசிக்க மாட்டாங்க... அடுத்தது அந்த பொண்ண பாருங்க இந்த வீடியோ முழுக்க ஒரு சின்ன அசைவுகூட இல்லாம ஒரே இடத்துல நிக்கும், இந்த நிலை பேரு ட்ரான்சிட் ஸ்டேட், அதாவது ஹிப்நாடிசம்ல இருக்க கடைசி ஸ்டேஜ், அதாவது இப்னோடிசம் மூளையும்மா அவுங்க யோசிக்குற திறனை சுத்தமா செயலிழக்க வெச்சிட்டு அவுங்கள முழுசா கண்ட்ரோல் பண்றது... சோ அடுத்த முக்கியமான கிளு கில்லர் இப்னோடிசம்ல ஒரு எஸ்பிர்ட்....”

விடியோவை உற்று பார்த்து கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஒரு காக்கா தள்ளாடி தள்ளாடி பறந்து வந்து கேமரா மீது படாரென மோதியது, மோதிய வேத்தில் கேமரா உடைந்து கீழ விழுந்து செயலிழுக்கிறது…




அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று
முழு நாவலையும் உடனடியாக படிக்க வேண்டுமா இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
 
Last edited:
அருமையாக உள்ளது... இந்த கதையின் அடுத்த பாகம் பதிவீடுவீங்களா.. இல்லை அவ்வளவுதானா...
 
இப்படி இன்டெர்ஸ்ட்யா போய்ட்டு இருக்கும் போது இப்படி சொன்னா எப்படி.....

அமேசான் account இல்லாதவுங்க எப்படி படிக்கிறது......
இப்படி பாதில் நிறுத்தி டென்ஷன் பண்ணுறீங்க..... சரியே இல்ல நவீன்.....
 
சூப்பர்,
அமேசான் அக்கௌன்ட் இல்லைனா எப்படி படிக்கிறது, இதன் தொடர்ச்சி எப்படி படிப்பது
 
அமேசான் அக்கவுண்ட் இல்லையே!
almost நான் சொன்னதெல்லாம் சரியாதான் இருந்தது. கதையை இங்கே பதிவிட்டால் சந்தோசம்.
 
Top