Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே! -2-

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -2

முகிலன் அம்மாவின் மடியில் படுத்திருந்தான். பாரிஜாதம் அவனோடு பழங்கதைகளைப் பேசிக்கொண்டிருந்தார்.

"அம்மா! நீங்களும் அப்பாவும் எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க..?"

அவன் கேள்வியில் மகனை ஆச்சர்யமாய்ப் பார்த்தார் பாரிஜாதம்.

"என்னம்மா.. அப்படி பார்க்கிறிங்க..?"

"என்னப்பா திடீர்னு..?"

"இல்ல.. திடீர்னு கேட்கனும்னு தோனுச்சி. அதான்.."

"அது ஒரு பெரிய கதைடா.. ஆனா வழக்கமான கதைதான்...."

"அந்த கதையை எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க.."

மகனைப் பார்த்துவிட்டு முப்பது வருடங்களுக்கு முந்திய கதையை பேசத்துவங்கினார் பாரிஜாதம்.

"அப்பலாம் எங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் பார்த்துக்க விட்டாங்க. வீட்ல பெரியவங்க பார்த்து சொல்வாங்க. நாங்க மறுப்பேதும் சொல்லாம தலையாட்டனும். நான் மட்டும் அதுக்கு விதி விலக்கா என்ன.. உங்க அப்பாவை நான் பார்த்ததே மணமேடையில் தான்ப்பா.. அப்பவும் நிமிர்ந்து பார்க்கல.. அவரை நிமிர்ந்து பார்க்கவே எனக்கு பல நாளாச்சு.." என சொல்லி சிரித்தார் பாரிஜாதம்.

அம்மாவின் வேடிக்கை பேச்சில் அவனும் கலந்து கொண்டான்.

அவர் சொல்வதில் தவறேதும் இருக்கவில்லை. பூமிநாதன் பார்க்க மட்டுமல்ல பேசவும் சிடுமூஞ்சி தான். அவரைக் கண்டால் எல்லோரும் நடுங்குவது சகஜமான ஒன்றே. சிறுவயதில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். நேர்மையானவர். ஆனால் கண்டிப்பில் பயங்கரவாதி. வீட்டில் எல்லோரும் அவர்க்கு பயம். முகிலன் கூட அவரிடம் அளந்தே பேசுவான். உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் அதை வெளிக்காட்டத் தெரியாத அப்பா பூமிநாதன்.

அவன் யோசனையிலிருந்தான்.

"அப்போ.. உங்க மேரேஜ், அரேன்ஞ் மேரேஜ் தான் இல்ல.."?

"ஆமாப்பா.. அது இருக்கட்டும். இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்...? எண்ணாடா பொண்ணு கிண்ணு பார்த்து ரெடியா வைச்சிருகியாடா..?" என்று கேட்டார் பாரிஜாதம். அவர் குரலில் இருந்தது பதட்டமா? ஆர்வமா? எதுவென்று முகிலனுக்கு தெரியவில்லை.

" அதெல்லாம் ஒன்னுமில்லை அம்மா..." என்று அவன் அவரை பொய்யாய் முறைத்தான்.

" இல்ல முகில்! உனக்கும் வயசு இருபத்தேழாக போகுது இல்ல... இப்ப பார்க்க தொடங்கினாத் தான் அடுத்த வருஷமாச்சும் முடிக்கலாம். நீ யாரையாசும் லவ் பண்றியா என்ன..?" என்றார் அவன் தாய்.

"ம்மா.. அப்படில்லாம் ஒன்னும் இல்ல..." என்று இடைவெளிவிட்டவன். " ஒருவேளை நான் யாரையாச்சும் லவ் பண்றேனு சொல்லிக்கிட்டு வந்தா ஒத்துக்குவிங்களா?"

எதிர்காலத்தில் அதுதான் நடக்கும் என அவன் தலையில் எழுதியிருப்பது தெரியாமலேயே அந்தக்கேள்வியை கேட்டான் மைந்தன்.

மகனை கூர்ந்து பார்த்தார் பாரிஜாதம்.

"நீ எப்பவும் தப்பான முடிவு எடுக்கமாட்டனு தெரியும். அதுனால நீ எது செஞ்சாலும் எனக்கு சம்மதம் தான். ஆனா உங்க அப்பா..." என்று முடிக்காமலேயே நிறுத்தினார் தாயார். அது அம்மா பிரியப்பட்டு சொன்ன வார்த்தைகள் தானா என்று அவனுக்குள் சிறு சந்தேகம் எட்டிப்பார்த்தாலும் அதை தூர போட்டுவிட்டு எழுந்தான்.

"ஹூம்... சரிம்மா எனக்கு தூக்கம் வருது. நான் ரூமுக்கு போறேன்..." என்று அவருடனான பேச்சை கத்தரித்துவிட்டு சென்றான். அவன் போனதும் பாரிஜாதத்திற்கு கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.

'என்னாச்சு இவனுக்கு? என்னைக்கும் இல்லாம இப்படியெல்லாம் பேசுறான்.. ஈஸ்வரா! நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கனும்..." என்று அவரும் உறங்குவதற்காக தன் அறைக்கு சென்றார்.

முகிலன். எப்போதும் அவன் முகத்தில் ஒரு ஜொலிப்பு இருக்கும். படித்துமுடித்த கையோடு தன் தந்தையின் ஆடை ஏற்றுமதி தொழிலில் இணைந்துக்கொண்டான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவனுடத்தே ஒர் சலனத்தை உண்டுபண்ணியவள் அவள் தான். அது நடந்து ஐந்தாறு மாதங்கள் இருக்கும்.

அன்று அவன் தன் அலுவலகம் சென்றுக்கொண்டிருக்கும் போது என்றுமில்லதவாறு அவனது கார் மக்கர் செய்து நடுவழியிலேயே நின்று போனது. அவனும் என்ன என்னவோ செய்து எதுவும் செய்யமுடியாமல் போகவே காரை அப்படியே ஓரம்கட்டிவிட்டு, டாக்ஸி ஒன்றை வரவழைக்க தன் செல்போன் ஆப்பை குடைந்தான். அந்த நேரம் பார்த்து எந்த டாக்ஸியும் அவைலபலாக இருக்கவில்லை. அவன் கைநீட்டிய எல்லா ஆட்டோக்களும் 'நிறுத்தமமாட்டேன் போ' என சொல்ல, எதுவுமே கிடைக்காமலிருக்கவே, நேரத்தை வீணாக்க விரும்பாமல் அவன் அந்த ரூட்டில் செல்லும் பஸ்ஸில் ஏறினான். அப்போதுதான் கவனித்தான் அவளை.

அந்த பஸ்ஸில் ஒரு ஜன்னலோர இருக்கையில் அவள் அமர்ந்திருந்தாள். பக்கவாட்டில் தெரிந்த அவள் வதனம், 'என் முகத்தை முழுவதுமாய் பார்த்துவிடேன்' என்று கெஞ்சுவது போல் தோன்றியது. அவள் அணிந்திருந்த சந்தனநிற சேலை அவள் அழகை மேலும் எடுப்பாய் காட்டியது. அவள் காதில் தொங்கிய சின்னஞ்சிறு ஜிமிக்கிகள் தாளலயத்தோடு நடனமாடிக்கொண்டிருந்தன. அவள் நீண்ட பின்னல் முன்புறமாய் கிடந்ததில் அவள் வெண்கழுத்தின் அழகு சுண்டியிழுத்தது. ஏனோ தெரியவில்லை முகிலனின் கண்கள் அவள் கண்களை ஒருதரமேனும் சந்தித்துவிட வேண்டும் என்று ஆவல் கொண்டது. அப்போதுதான் அது நிகழ்ந்தது. அவளுக்கு பின்னால் இருந்த ஒரு காமுகன் இருக்கையின் பிடியை பிடிப்பது போல அவள் முதுகுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான். அவள் முடிந்த மட்டும் முன்னோக்கி நகர்ந்து அமர்ந்தாள். இதையெல்லாம் முகிலன் கவனித்துக்கொண்டே இருந்தான். ஒருகணம் தட்டிக்கேட்போமா என்ற எண்ணம் அவனுள் உதித்தது. அவன் தட்டிக்கேட்கப் போய், அந்தப்பெண் கூட்டத்திற்கு பயந்து பின் வாங்கினால் அசிங்கமாக போய்விடுமே என யோசித்துக்கொண்டிருக்கையிலேயே, அடுத்துவந்த ஒரு நிறுத்தத்தில் பஸ் நிறுத்தப்படவே அவள் எழும்பினாள். ஆனால் அவள் இறங்கவில்லை. எழும்பி தனக்கு பின்னால் அமர்ந்து சில்மிஷம் செய்துகொண்டு வந்த இளைஞன் கன்னத்தில் தன் ஐந்துவிரல்களையும் பதித்தாள். அதில் அவன் கலங்கியிருக்க வேண்டும். பஸ்ஸிலுள்ள கூட்டம் வேடிக்கை பார்ப்பதை சிறிதும் கண்டுகொள்ளாத அவள் அவனை கோபாவேசத்தோடு முறைத்தாள். அந்த பார்வை ஒன்றே அவனுக்கு போதுமானதாய் இருந்திருக்கும். அத்தனை கடுமை இருந்தது அந்த பார்வையில். அவனோ தன் கன்னத்தை பிடித்துக்கொண்டு விழித்தான்.

"என்னாச்சும்மா.. என்ன பிரச்சனை.." என ஆளாளுக்கு கேட்கத்தொடங்கினார்கள். அவள் பேசத்தொடங்கினாள்.

"உன் அக்கா தங்கைச்சிக்கிட்ட இப்படித்தான் அசிங்கமா நடந்துக்குவியா? வெட்கமா இல்ல உனக்கு..? நாங்க பொண்ணுங்கதான்.. அதுக்காக எல்லா நேரத்துலயும் பயந்துக்கிட்டு வாயை மூடிக்கிட்டு போவோம்னு நினைக்காத. நாங்க வாயை திறந்தா நீங்கல்லாம் வாயை மூட வேண்டி இருக்கும்.. இடியட்..." என்று சொல்லிவிட்டு, பஸ் கிளம்பிவிடவே கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவள் அடுத்த தரிப்பிடத்தில் இறங்க முன்னே சென்றாள்.

வழக்கம் போல பெண்களை சீண்டும் காமுகன்களை அடிக்கத்துவங்கும் 'பப்ளிக்' அன்று அடிக்கவில்லை. அவள் பேசியது தமிழ்தான் என்றாலும் சகோதரமொழியினரும் அவள் என்ன பேசியிருக்கக்கூடும் என ஊகித்திருந்தார்கள். அவனை அவர்கள் பார்த்த கேவலமான பார்வையில் அவன் கூனிக்குறுகி ஓடும் பஸ்ஸிலிருந்தே இறங்கிவிட்டான்.

முகிலன் இறங்க வேண்டிய தரிப்பிடத்தில் தான் அவள் இறங்கினாள். தன்னுடைய ஸ்டாப்பில் இறங்கத் தவறியதால் என்ன செய்வதென்று யோசித்து ஒரு ஆட்டோவை பிடிக்க கைகாட்டினாள். என்ன தைரியம் வந்ததோ தெரியவில்லை. நேரே அவளிடம் சென்று " எக்ஸ்கியூஸ்மீ.. ஒன்னு சொல்லனும்.. சொல்றேன் பட் என்னையும் அடிச்சிடாதிங்க... உங்க தைரியம் பிடிச்சிருக்கு. எல்லா பொண்ணுங்களும் இப்படி தட்டிக்கேட்க ஆரம்பிச்சா இந்தமாதிரி விஷயங்கள் நடக்காது. ஜான்சிராணி தான் நீங்க..கீப் இட் அப்..." என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டான்.

அதன்பின் அடிக்கடி அவள் கண்கள் அவன் கண் முன்னே வந்து சித்ரவதை செய்யும். அவளை எங்காவது மறுபடியும் பார்ப்போமா என்று ஏங்கி அதே பஸ்ஸில் இரண்டொருதரம் பயணம் செய்தும் பார்த்தான். ஆனால் அந்த தேவதை சிக்கவேயில்லை. இத்தனை மாதங்களின் பின் அவளை ஷாப்பிங் மாலில் கண்டது அவனுக்கு உடம்பெங்கும் மின்சாரம் ஏற்றியது போல இருந்தது.

அதே நேரம் மெல்லினியின் கனவுகளுக்குள்ளோ அவன் புகுந்து நெடுநேரமாய் ஆகியிருந்தது.
 
Attachments

  • 395119c72b5ef0fd743a7e15d32dc50f.jpg
    395119c72b5ef0fd743a7e15d32dc50f.jpg
    53.6 KB · Views: 3
Last edited:

Nirmala vandhachu ???
 
Top