Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-19

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-19

நீங்க இரண்டுபேருமே எனக்கு உறவுதான்... அதனால ஒருத்தரை தாழ்த்தியோ, ஒருத்தரை உயர்த்தியோ பார்க்க மாட்டேன்... நான் ஒரு பிஸினஸ்மேன், அப்ப நான் யோசிக்கிறது திறமையானவன் யார் என்றதுதான்... என் பொண்ணு படிப்பு முடிய ஒரு வருஷமாகும் . அதற்குள் உங்க ரெண்டுபேருல யாரு முன்னுக்கு வறீங்களோ.. அது பிஸினஸ்ஸாவும் இருக்கலாம்.. இல்ல இனியன் சொன்ன மாதிரி கலெக்டராக கூட இருக்கலாம்... அவங்களுக்கு என் பொண்ணை கொடுக்க முழு சம்மதம்... இரண்டு பேரும் உங்க பாதையில போலாம்...

அதில போட்டிதான் இருக்கனும்.. ஒருத்தன் இன்னொருத்தனை அழிக்கிறதா இருக்க கூடாது... இரண்டுபேரும் ஜெயிக்கலைன்னா நான் என் பொண்னுக்கு என் ஸ்டேட்ஸ் தகுந்த மாதிரி மாப்பிள்ளை தேடிப்பேன்... இது என் முடிவு...

ஏய் என்னடி உங்க அப்பா டாஸ்கெல்லாம் கொடுக்கிறாரு... முயல், ஆமை ஒட்டபந்தயம் வைக்கிறாரு...இனியன் தேனுவிடம் கிசுகிசுக்க...

ச்சு சும்மாயிரு மாமா...

சும்மாதான்டி இருக்கேன்... இந்த ஆளுவேற பொண்ணை கேட்டுவந்தா ஒண்ணு தரனும் சொல்லனும் இல்ல தரமாட்டேன் சொல்லனும்.. உலகத்தை சுற்றி வந்தா அவங்களுக்கு இந்த மாங்கனி என்று சிவபெருமான் அவர் பிள்ளைகளுக்கு சொன்னாரே... அதுப்போல தேனு, உன்னை மாங்கனி லவலுக்கு சீப்பாக்கிட்டாரு... ஆமாம் ஒரு டவுட்டு நடுவுல அவருக்கு பேரனோ, பேத்தியோ கொடுத்தா இன்னா பண்ணுவாரு...

இனியனை எரிப்பது போல் பார்த்து... உன் வாயே மூடாதா...

ம்கும்... அந்த வாயை அடைச்சா அதுதானே மூடிக்கும்... உள்ளே செஞ்சோமே அதுப்போல...

குடும்பத்தில் உள்ளவர்கள் பேசிக்கொள்ள... சந்தோஷ் எழுந்து மாமா எனக்கு சம்மதம்... நான் புதுசா டைல்ஸ் பிஸினஸ் ஸ்டார்ட் செய்ய போறேன்...

ராஜ்சேகர் இனியனை பார்க்க, ம்ம் ஆனா யோசிச்சுதான் செய்யனும் மாமா... சொல்லுறேன்.. நான் ஊருக்கு கிளம்புறேன்..

ஹா..ஹா நிர்மலா சிரிக்க ஆரம்பித்தாள்... ஒண்ணுமில்லாத பையன் பிஸினஸ் பண்ண முன்பணம் வேணும்பா... அதுவே புரட்டமுடியில நீ எங்க ஜெயிப்ப...

அவர் சொன்னது பிஸினஸில எவ்வளவு சம்பாரிக்கனும் சொல்லலை... எப்படி வெற்றி பெறுவிங்க தான் போட்டியே... அதுக்கு மூளையிருந்தா போதும் நினைக்கிறேன்.. இனியன் பதிலடி கொடுக்க...

சாப்பிட்டு போடா இனியனை பாரத்து ராஜ்சேகர் சொல்லிவிட்ட அந்த வீட்டின் ஆண்கள் எல்லாம் ஆபிஸ் கிளம்பி சென்றார்கள்... இனியனை சுற்றி அவனின் அத்தைகள் சூழ்ந்து கொண்டனர்..

அம்மா பாரும்மா, இந்த வீட்டில உன் மருமக எல்லோரும் இனியன் பக்கம்தான் எப்படி கவனிக்கிறாளுங்க பாரு... என்னை எதிரியாதான் பார்க்கிறாளுங்க..

நம்ம ரூமுக்கு போகலாம் வா .. எப்படியிருந்தாலும் சந்தோஷூக்குதான் தேனு நிர்மலாவை சமாதானபடுத்தி உள்ளே கூட்டிச்சென்றார் அலமேலு பாட்டி...

ரேனுகா இனியாவை பார்த்து, எனக்கு கொடுத்த சொத்தை விற்றிடு இனியா.. உனக்கு பிஸினஸ் ஆரம்பிக்க உதவும்...எனக்கு எதுக்கு...

அத்தை உங்கிட்ட நிறைய சொத்துருக்கலாம், ஆனா உங்கண்ணா ஆசைப்பட்டு கொடுத்தது. என்றாவது ஒரு நாள் யூஸ் ஆகும்... அதை விற்றுதான் தேனுவை கட்டிக்கனும்னா உன் பொண்ணே வேணா எனக்கு..

டேய் ஏன்டா கோவிச்சிக்கற..

பின்ன நீயும் உன் பொண்ணும் என்னை உயர்வாவே பார்க்க மாட்டிங்களா.. அன்டர்யெஸ்டிமேட் செய்யறது... எப்படி சமாளிக்கனும் எனக்கு தெரியும் அத்தை, சின்ன பையனில்ல புரியுதா டார்லிங்.. ஆனா பிரகாஷ்ராஜிக்கிட்ட சொல்லிவை ரொம்ப செய்யுறாரு.. எங்கப்பா இப்படிதான் டாஸ்க் கொடுத்தாரா... உடனே தங்கச்சிய கட்டிவைச்சாருதானே...

போடா போக்கிரி.. எப்ப பார்த்தாலும் உன் மாமனை திட்டுறதே வேலை...

தம்பி அருகேயிருந்த தேனுவை பார்த்து கிளம்பறேன் என்று தலையை ஆட்டினான் இனியன்...

கிளம்ப போறான் என்றவுடன் முகம் மாறியது தேனுக்கு... இன்னும் ஒரு வாரம் பார்க்க முடியாதே என்ற வருத்தம்... இனியன் கூடவே இருக்கனும் போல் மனம் விரும்பியது... அவன் பேசும் பேச்சை கேட்டுக் கொண்டேயிருக்கனும் இதயம் கேட்க... அப்படியே நின்றாள்...

அவனை வழியனுப்ப வெளியே அவனுடன் வந்தாள்... ம்ம் வரேன்.. இறுக்கமாக கையை பிடித்துக்கொண்டாள்.. ம்ம் சீக்கிரம் கிளம்பி வா... ரொமான்ஸ் மூடே போயிடுச்சி உங்கப்பா போட்ட கன்டிஷன்ல... அந்த அளவுக்கு நீ வொர்த்தா.. என்னவோ மைசூர் மகாராணிய கல்யாணம் செய்ய கேட்டமாதிரி இந்த பிரகாஷ்ராஜ் பில்டப்பு பண்ணுது.

சாரி… மாமா என்னால உனக்கு கஷ்டம்..

லூஸூ நான் நல்ல நிலைமையில வரனும் உங்கப்பவோட ஆசை . அதுக்கு தூண்டுகோளா உன்னை பயன்படுத்துறாரு இது என்னுடைய பார்வை... என் டாலிக்காக உயிரே கொடுப்பேன்... இதுபெரிய விஷியமா...

தேனு கண்கலங்க... நைட் போன் பேசிறேன்..

இரவு 12.00 மணிக்கு.. இனியனிடமிருந்து போன்கால் தேனுக்கு... தூங்காமல் தான் விழித்திருந்தாள்... மாமா.. எப்போ வீட்டுக்கு போனீங்க.. சாப்பிட்டிங்களா..

ம்ம் ஆச்சு.. ஏன் முழுச்சிட்டிருக்க...

அது நீங்க போன் பேசுறேன் சொன்னீங்களா.. அதான் கால் வருமேன்னு..

கொஞ்சம் லேட்டாயிடுச்சி தேனுகுட்டி... ஹாங் தேனு உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்டி.. மாமாக்கு ஏதோ மல்டிபிள் பர்சனலிட்டி நோய் இருக்குடி..

என்னது..

ஆமாடி... முக்கியமா உன்னை பார்த்தாதான் வருது..

உளற ஆரம்பிச்சிட்டியா போமாமா எனக்கு தூக்கமா வருது...

ஏய் உண்மைதான் சொல்லுறேன்... 12.00 மணிக்கு மேல ஆனா உன்னை தப்புதப்பா செய்ய தோனுது தேனு.. நான் கெட்டவனா ஆயிடுறேன்... இங்கபாரு நானே கூப்பிட்டாலும் நீ 12.00 மணிக்குமேல மாமாவ பார்க்க வராதே அப்பறம் சேதாரம் ஆனா கம்பெனி பொறுப்பேற்காது சொல்லிட்டேன்... என்னாலே கன்ட்ரோல் பண்ண முடியில.. இன்னிக்கு ஊருக்கு வந்தது கூட நைட் எடுத்த டெஷிஸன்... நீ உஷாரா இருந்துக்கோமா...

ம்ம் அதெல்லாம் என்னை பார்த்துக்க தெரியும்.. நீ எதுக்கு இப்படி கப்சாவா விடுற..

கப்சாவா இப்ப மணி என்னாச்சு 12.00 தானே.. உடனே எனக்குள்ள தேனு வேணும் வேணும் சொல்லுது.... அதுக்குதான் போனே போட்டேன்...

லூஸா மாமா நீ... உனக்கு அந்த ஃபீலீங்...

எந்த ஃபீலீங் டாலிம்மா.. சொல்லு மாமா தெரிஞ்சிக்கிறேன் என்று ரொமன்ஸாக பேச...

இவன் டாபிக்க வேற இடத்தில கொண்டுபோறானே... மாமா நான் நம்புறேன்...

நம்புறீயா , சரி இன்னும் நான்கு நாள்ல வந்து சேரு..

ம்ம்...

அடுத்த நாள் இனியனும் , அசோக்கும் பாய் வீட்டுக்கு போனார்கள்.. வா இனியா என்ன சொன்னாரு உங்க மாமா..

பாயிடம் நடந்ததை கூறினான்...

நீ என்ன பிஸினஸ் செய்யலாம் யோசிக்கிற இனியா...

எனக்கு இரண்டு வழியிருக்கு பாய்.. கலெக்டரோட மாமனார் இந்த ராஜ்சேகர் சொல்லனும் பாய், ஆனா இதையே நம்ப முடியாது பாஸ் ஆகுனும்.. அது ஒரு முறையில பாஸ் ஆகமுடியாது... இன்னொன்று கார்மட்ஸ் பிஸினஸ் இறங்கலாம் இருக்கேன் பாய்.. பிஸினஸ் பண்ணிட்டே படிக்கனும் ...

நல்ல ஐடியாதான் இனியா.. சமீரா காபி எடுத்துவந்து கொடுத்தாள்...

பணத்துக்கு தான் என்னுடைய சேவிங்க்ஸ் எடுத்துக்கலாம் இருக்கேன்... ஆனா பத்தாது பாய்.. வெளியே எல்லாம் புரட்டியும், இன்னும் ஒரு இருபது லட்சம் தேவைப்படுது.

சரி குருக்கிட்ட கேட்டியா...

அவர்கிட்ட சொல்லிட்டு கொஞ்சம் பணம் வாங்கிட்டேன் பாய்.. இடமும் அவருடையதான்...

பாய் எழுந்து உள்ளே போனார்...திரும்பி கையில் ஐந்து லட்சம் கொண்டு வந்தாரு... இனியன் கையில் வைத்து.. என் மகனுக்காக இந்த அப்பா செய்யறது..

பாய் எனக்கு வேணாம் இது சமீரா கல்யாணத்துக்கு சேர்த்து வச்சது... எனக்கு வெளியே கடன் வாங்கி தாங்க...

உன் தங்கச்சியை பார்த்துக்க மாட்டியா இனியா...

அசோக் நெகிழ்ந்து போனான்.. இனியா கண்கலங்க பாய் என்று கட்டிக் கொண்டான்... இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்க... சமீரா அசோக்கிடம் வந்தாள்.. அண்ணே ஏன் இவ்வளவு கஷ்டப்படுது.. உனக்குதானே கட்டிக்கொடுக்க போது... வரதட்சனை வேற கொடுக்கனும்மா உனக்கு...

இவள் தீடிரென்று சொல்லவும்.. முழித்தான் அசோக்... லூசு உளராத..

பின்ன உன்னை மச்சான் தானே கூப்பிடுது.. அதுக்கு தெரியும் நான் உன்னை காதலிக்கிறேன்னு..

இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம் சமீ... லவ் பண்ணி அவன் படுற அவஸ்தையை நேரில பார்க்கேன்... உன்னை கட்டிக்கிட்டு காதல் செய்யுறேன்.. அதான் எனக்கு பொருந்தும்.. உன் மனசில ஆசையெல்லாம் வைக்காதே..

இதுபோதும் கல்யாணம் செஞ்சிக்கிற சொல்லிட்ட..நான் வையிட் பண்ணுவேன்..என் அண்ணன் எனக்கு நல்லதுதான் செய்யும் நம்பிக்கையிருக்கு.. அப்பாகிட்ட எப்படியின்னா பேசி சம்மதம் வாங்கிடும்... அதுக்குள் லைப்ப செட்டில் செஞ்சிக்கோ அசோக்..

ம்ம்... இனியன் அவர்களிடம் வர... கிளம்பலாம் அசோக்... வண்டியில் போகும்போது மச்சான் எங்கிட்ட ஒரு ஆறு லட்சம் தேறும் போதும்மாடா உனக்கு...

இந்த கம்பெனியை ஆரம்பிக்கிறதே உன்னை நம்பிதான் அசோக்... இப்போ பார்டனரா சேர்க்க முடியாது மாமா தனியாதான் பிஸினஸ் செய்யனும் சொல்லிருக்கு... என்னுடைய லட்சியமே கலெக்டர் ஆகறதுதான்... ஐ.ஏ.எஸ் ஆயிட்டா அப்போ இந்த கம்பெனியை உன்கிட்ட கொடுத்திருவேன் நான் பார்டனர் அவ்வளவுதான்...

டேய் என்னடா சொல்லுற...

ஆமாம்டா மச்சான்.. முதல்ல ரவியண்ணா வீட்டுக்கு வண்டியை விடு...

கையில் சாக்கிலேட், பிஸ்கெட் ,பழங்கள் போன்ற ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டு ரவியின் வீட்டுக் கதவை தட்டினார்கள்... ரவி கதவை திறத்தான்..

வா இனியா, அசோக்...வாங்க என்று ரவியின் மனைவி சுமதி வரவேற்றாள்.. உட்காருடா சோபாவை காட்ட..

ரவியண்ணா உங்ககிட்ட நான் பேசனும்... இனியன் ஆரம்பித்தான்.. ரவிக்கு சுமதியை திருமனம் செய்ய வைச்சதே இனியன் தான்.. ஹய் இனி மாமா அசோக் மாமா வந்திருக்காங்க என்று இனியன் மடியில் உட்கார்ந்து கொண்டான் ரவியின் மூன்று வயது மகன் அபி..

என்ன இனியா.. ஏதாவது பிரச்சனையா..

இல்லண்ணா.. நான் பிஸினஸ் ஆரம்பிக்க போறேன்.. நீங்க எங்க கம்பெனியில தான் வேலை செய்யனும்..நீங்க டிகிரி முடிச்சிருக்கீங்க... குடும்பம் ஆயிடுச்சி.. இந்த அடிதடி வேணாம் ரவியண்ணா...

இனியா குரு ஒத்துக்க மாட்டாரு...

நான் பேசிக்கிறேன் அண்ணா... இன்னும் ஒண் வீக்ல ஸ்டார்ட் செய்யலாம் யோசனை... நீங்க கொஞ்ச நாள் கார்மென்ட்ஸ்ல வேலை பார்த்தீங்க தானே... சோ எனக்கு அதை பற்றி முழுசா தெரிந்த ஆள் வேனும்.. அதுக்குதான் உங்களை பிக்ஸ் செஞ்சேன்...

கிச்சனிலிருந்து சுமதி ஒடி வந்து இனியன் கையை பிடித்துக் கொண்டாள்.. ரொம்ப நன்றிண்ணா.. என்று காலில் விழபோனவளை தடுத்தான் இனியன்... சுமதிம்மா என்னடா இது... சுமதி கண்கலங்கி நின்றாள்.. அன்னைக்கும் உங்ககிட்டதான் உதவி கேட்டேன்.. வேண்டாம் சொன்ன இவர்கிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிங்க... ஒவ்வொரு நாளும் இவர் வெளியே போகும்போது எனக்கு பயமா இருக்குண்ணா... இனிமேல் எந்த பயமும் இருக்காது. ரொம்ப நன்றி அண்ணா என்றாள் சுமதி...

ரவியண்ணா குருவோட ராயல் கோர்ட் பில்டிங், இரண்டாவது தளம் தரேன் சொன்னாரு.. இன்னிக்கு சாயந்திரம் வந்தா எப்படி ஆல்ரேட் செய்யலாம் ஐடியா பண்ணலாம்

வரேண்டா சந்தோஷமா இருக்கு இனியா...

அவர்களிடம் விடைபெற்று இருவரும் வெளியே வர... அசோகுக்கு கால் வந்தது.. அந்த அழைப்பை ஏற்றான்... ம்ம் சொல்லு.. எதுக்கு.. கூட்டிட்டு வரனும். இனியன் அசோக்கை பார்க்க

இனியா , இந்த தீபக்தான் போன்ல உன்கூட பேசனும்மா.. ஏதோ முக்கியமான விஷியமாம்... வடபழினி லாட்ஜ்க்கு வர சொல்லுறான்..

----சிக்க வைக்கிறான்.
 
Nirmala vandhachu ???
 
Top