Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -27

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -27

கார் ஜெய்சிம்மனின் பேக்டரிக்குள் நுழைந்தது... அவள் மனமோ படபடக்க, ஜீஜே என்னை ஏமாற்றாதே... நீ இங்க என்ன செய்யற மனத்திற்குள் மழுகினாள் மென்மலர்...

பேக்ட்ரியின் அடுத்தபக்கம் வண்டியை நிறுத்தினான், டிரைவர்... இங்க பர்மிஷன் வாங்கிட்டுதான் கெஸ்ட் ஹவுஸூக்கு கார் போகும்... அங்க செக்யூரிட்டி இருப்பார் நான் போய் பார்க்கிறேன் அவர் கதவை திறக்க..

வேண்டாம் அண்ணா.. நானே போய் கேட்டுக்கிறேன்.. நீங்க இங்கவே இருங்க என்று சொல்லிவிட்டு காரை விட்டு கீழே இறங்கினாள்...

பேக்டரியின் முடிவு என்பதால் அங்கே ஒரு சிலர் கேன்டின் பக்கம் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.. அதில் ஒருவன்.. மச்சான் நம்ம ஓனர் கார் இரண்டுநாட்களா இங்கவே இருக்கு..

மற்றொருவன் அது தெரியாதா, இந்த கேட்டை தாண்டிதான் கெஸ்ட் ஹவுஸ் இருக்குடா.. நம்ம ஐயாவுக்கு மச்சம் அதிகமுடா... பயங்கற கசமுசா எல்லாம் அங்கதான் நடக்குமாம்..

கொடுத்துவச்ச மகராசன்தான்...

பின்ன பணம் எவ்வளவு புரளுது இன்னொருவன் சிக்ரேட்டை பிடித்து இழுத்தபடி சொன்னான்.. இவை அனைத்தும் கேட்டுக்கொண்டே நடந்தாள் மென்மலர்...

கேட்டின் வாசலில் செக்யூரிட்டி இல்லை.. எங்க ஆளையே காணோம் என்று தேடினாள்.. தாத்தாவுக்கு போன் போட்டு கேட்போமா. அப்ப நான் இங்க வந்தது தெரிந்துவிடும்.. தனக்குள் யோசித்தாள்..

கதவை திறந்து உள்ளே சென்றாள்.. அந்த கெஸ்ட் ஹவுஸே அழகாக இருந்தது.. நீச்சல் குளம், செயற்கை நீரூற்று, க்ரேடோன்ஸ் செடிகள்... சுத்தமாக வைத்திருந்தனர்..

நடைப்பாதையில் சிறிது தூரம் நடந்து சென்றால்தான் வீட்டின் வாசல் வரும்... வாசலை தாண்டி அந்த வராண்டாவில் நடந்து சென்றாள் மாது...

அப்போது அறையின் கதவு திறக்கும் சத்தம், அதைக்கேட்டு அப்படியே நின்றாள்... நவீன ஆடையில் ஒரு இளம்பெண் வந்தாள்... யாரு நீங்க..

அவளை மேலிருந்து கீழாக பார்த்தாள் மென்மலர்... நேர்த்தியான உடை, முகம்பூச்சு இல்லாத முகம்.. கூர்மையான கண்கள்..

என்ன வேணும் மேடம்..

நான்.. நான் மிஸ்ஸஸ் ஜெய்சிம்மன்...

குட்மார்னீங்.. வாங்க மேடம் என்று வெளியே வருமாறு அழைத்தாள் சரண்யா..

நான் ஜீஜேவை பார்க்கனும்..

தடுமாற்றமே இல்லாமல் பதில் தந்தாள், அவர் இங்கேயில்லையே, மலேசியா போயிருக்காரு மேடம்..

நான் அவரை பார்க்கனும், வழிய விடு..

மேடம் அவரில்ல, போன்போட்டு அவர்கிட்ட கேளுங்க...

அப்படியே நின்றாள் மலர்..

நான் வெளிகதவை பூட்டிட்டு ஆபிஸூக்கு போகனும் என்றாள் சரண்யா.. நீ கிளம்பு என்பதற்கு.. மலரை துரத்துவதிலே குறியாக நின்றாள்.. அப்போ ஜீஜே இங்கதான் இருக்கான்.. மலர் இதைவிட அசிங்கம் உனக்கு தேவையா, தாத்தாவுக்கு தெரியாம வந்திருக்க, அவளின் மூளை அறிவுறுத்த.. கண்களை மூடி திறந்தாள்...

கலங்கிய கண்களோடு அங்கிருந்து நடந்தாள், கேட்டை திறக்க கை வைக்கும்போது பின்னாடியிருந்து செக்யூரிட்டி முனியனின் குரல்...

சின்னம்மா எப்போ வந்தீங்க..

குரலை கேட்டு திரும்பினாள்... என்னம்மா கிளம்பிட்டீங்களா, தலைகவிழ்ந்து ம்ம்.. என்றாள்..

ஐயாவை இந்த நிலைமையில விட்டு எப்படி போறீங்க... அவர் சொன்னவுடன்... என்னாச்சு என்று அதிர்ந்து கேட்டாள்...

அவர் சொன்ன ஒரு வார்த்தை மட்டுமே காதில் வாங்கினாள்... ஜீஜேஜேஜே.... கண்கள் கலங்கின.. வீட்டை நோக்கி ஓடினாள் மென்மலர்..

“வா வா என் அன்பே…
என் வாழ்வின் பேரன்பே…
வந்தாய் கண் முன்பே…
இது நிஜமா சொல் அன்பே…

உன் கண்களும் காதல் பேசும்…
என் தருணம் மலரும் வாசம்…
உன் தோள்களில் சாயும் நேரம்…
உயிர் துளிரும் பேரழகா…”

ரூமின் கதவை திறந்து சரண்யா உள்ளே வந்தாள்.. பெட்டின் விளிம்பில் ஒரு பக்கமாக முதுகை காட்டி படுத்திருந்தான் ஜீஜே.

மேடம் போய்டாங்களா சரண்யா..

ம்ம்.. அண்ணா மேடம் அழுதுட்டே போனாங்க.. நானும் கடினமா பேச வேண்டியதாச்சு ,ஏன் இப்படி அடம்பிடிக்கிறீங்க..

அவளால தாங்கமுடியாது சரண்யா.. என்னை இப்படிபார்த்தா துடிச்சிடுவா... எனக்கு அப்பவே டவுட் வந்திடுச்சு ராக்கிக்கு போன்போட்டா பாரு..

உனக்கு ஒண்ணு தெரியுமா... நான் சாப்பிட்டாதான் அவ சாப்பிடுவா, கல்யாணத்திற்கு முன்னாடியிலிருந்து அப்படிதான் இருக்கிறா... எனக்கு அப்ப தெரியல...தாத்தா சொல்லிதான் தெரியும்.. அவ என்னை ரொம்ப லவ் பண்ணுறா... சின்னதா அடிப்பட்டாவே துடிச்சிடுவா, அவ கண்ணுல அவ்வளவு காதல், அன்பு தெரியும்... ரொம்ப அழுதாளா..

ம்ம்..

நெக்ஸ்ட் வீக் போய் நான் சமாதானம் படுத்திடுவேன், நீ எனக்கு ஒரு உதவி செய்வீயா.. சொல்லுங்கண்ணா...

எனக்கு நாக்குல டேஸ்டே தெரியல, அவ மிளகு ரசம் வச்சிருப்பா, யாருக்கும் தெரியாம குக்கிட்டயிருந்து வாங்கிட்டு வறீயா..

சரண்யா பதில் எதுவும் சொல்லாமல் இருக்க.. விசும்பல் சத்தம் கேட்டது...

படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்தான்.. சரண்யா என்று அழைக்க பதில் இல்லை..

எழுந்து தனது முதுகை காட்டி நின்றான்.. திரும்பி பார்க்காமலே

மலர்ர்ர்.... என்றான்..

ஜீஜேஜே... ஓடி வந்து அவன் முதுகை கட்டிக்கொண்டாள் மென்மலர்...

அவள் கண்ணீர் முதுகை நனைத்தது... இருகையும் அவன் வயிற்றை இறுக்கி அனைத்தது..

ஏய்..

ம்ம்...

அழறதை நிறுத்து மலர்.. நிமிர்ந்து எதிரே இருந்த கண்ணாடியை பார்த்தாள்.. முகம் சோர்ந்து, களைப்பாக இருந்தான், முகத்தில் அங்காங்கே முத்துக்களாக அம்மை போட்டிருந்தது..

அவன் முகத்தை அவளிடம் காட்ட விரும்பவில்லை.. நீ வீட்டுக்கு போ மலர்...

அவன் முன்னாடி வந்தாள்... எக்கி அவன் முகம் முழுக்க முத்தமிட்டாள்..

அவளை பிரித்து நிறுத்தினான்... அவளை பார்க்காமல் பெட்டில் உட்கார்ந்தான்..

லூஸாடி நீ.. இப்பவந்து தர, கேட்கும்போது தரல... இது டிஸிஸஸ் புரியுதா.. தொற்றும் கூட.. இன்னும் ஐந்து நாள்ல வீட்டுக்கு வந்துடுவேன் போ மலர்..

அவன் உட்கார்ந்த பெட்டை ஏதாச்சையாக பார்த்தாள், அவளுடைய ஸாரியை விரித்து அதில் படுத்திருந்தான்..

அவள் பார்ப்பதை தெரிந்துக்கொண்ட ஜீஜே, உன் ஞாபகமா இருக்கட்டும் எடுத்து வந்தேன்.. நைட்டு உன் புடவை இல்ல உன் கையை பிடிச்சுதான் தூங்குவேன்..

அவனருகில் முட்டி போட்டு உட்கார்ந்தாள்... அவள் கண்களில் கண்ணீர் வந்துக்கொண்டிருந்தது.. அவன் கை கழுத்து நிரபாதமாக இருந்தது.. கால் வரைக்கும் பேண்டை தூக்கி பார்த்தாள்...

என்னடா இப்படியிருக்கு, இன்னும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்..

அவள் கண்ணை துடைத்துவிட்டு, நான் இங்கேயிருக்கேன் எப்படி தெரியும்.. நீ எதுக்கு வந்த என்றான்..

சொல்ல முடியாமல் அவனையே பார்த்தாள்..

என்னை நம்பலையா என்று உதட்டை கடித்துக்கொண்டு சிரித்தான்... யார்கூடவோ இருப்பேன் நினைச்சு வந்தீயா..

தலையை மேலும் கீழும் ஆட்டினாள்... உன் புருஷனை நம்புடி ப்ளவர்.. அவளை எழுப்பினான்..

ஜீஜே வீட்டுக்கு வா போகலாம், முதல்ல இந்த மாதிரி டி-ஷர்ட் போடாதே, காட்டன் ஷர்ட் தான் போடனும்.. எப்படி இது.

நான் வீடியோ கால் பேசினபோது, மலர் உன்கிட்ட ஒண்ணு காட்டனும் சொன்னேன்.. நீ கேட்காம போனை கட் பண்ணிட்டே..

அன்னைக்கு இரண்டு மூனு இடத்தில இந்த மாதிரி பபூள்ஸ் இருந்தது. அப்பறம் சென்னைக்கு போனவுடனே பயங்கற பீவர் வந்துடுச்சு.. டாக்டர் செக் பண்ணிட்டு சொன்னாரு சிக்கன் பாக்ஸ். நம்ம ஆபிஸ்ல மனேஜருக்கு இருந்துடி அதான் எனக்கும் வந்திருக்கும்...

ஸாரி ஜீஜே.. என்மேல தான் தப்பு, உன்னை சரியா கவனிக்காம விட்டுட்டேன்..சரி வீட்டுக்கு வாங்க போலாம்

நான் அங்க வரலடி.. உனக்கும் வந்திடும் கண்ணம்மா, அப்பறம் உன்னால இந்த வலி தாங்கமுடியாதுடா..

அவன் சொல்லுவதை எதுவும் காதில் வாங்கவில்லை மலர்..

போனை போட்டு டிரைவரை உள்ளே கார் எடுத்துவரச் சொன்னாள்.. நரசிம்மனுக்கும் போன் போட்டு விஷியத்தை சொன்னாள்..

கதவை தட்டிவிட்டு சரண்யா நிற்க... வாம்மா என்றான் ஜீஜே..

மலர் நம்ம முனியன் அங்கிளோட பொண்ணு, எனக்கு தங்கச்சி போல, சரண்யா..

அவளை பார்த்து மலர் புன்னகைக்க... ஸாரி மேடம், அண்ணாதான் உங்களை வராம பார்த்துக்க சொன்னார்... சரண்யாவிடம் பேசிக்கொண்டே ஜீஜேவின் லேப்டாப், அவனுடைய பேக், செல், வாலட் என்று அனைத்து பொருட்களும் எடுத்துக்கொண்டு ஜீஜேவுடன் வெளியே வந்தாள்

கார் வந்து நின்றவுடன், இருவரும் ஏறினார்கள்.. ஊட்டியின் பங்களாகுள் கார் நின்றது... வெளியேவே நின்றிருந்தார் நரசிம்மன்..

ஜீஜேவை நெருங்கி வந்தார்.. தாத்தா கிட்டவராதே அங்கவே நில்லுங்க...

ஜெய் என்றார்..

தாத்தா நான் சொன்னதையெல்லாம் செஞ்சிங்களா மலர் கேட்க..

ம்ம்.. உங்க ரூமை துடைச்சிட்டாங்க, அங்கவே பால்கனி பக்கத்தில சின்னதா கிச்சன் ரெடி செஞ்சிருக்கேன் மலர்..

தேங்க்ஸ் தாத்தா.. இவரை ரூமில் விட்டு வரேன் தாத்தா.. சொல்லி சென்றாள்.. நல்லவேளையாக மாயா, நர்மதா யாரும் வீட்டில் இல்லை..

மயக்கம் தருவான்...
 
Nirmala vandhachu 😍😍😍
 
Top