Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் பார்வையில் என் கண்களில் காண்பது உன் முகமே

Advertisement

Selvipandiyan

Active member
Member
டெய்ஸி ஜோஸப்ராஜின் என் கண்களில் காண்பது உன் முகமே.
இந்த கதை படிக்கணும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன்.அழகான தமிழில் தேர்ந்த வசனங்களுடன் பழைய பாடல்கள் பொருத்தமான இடங்களில் அங்கு அங்கு வருவதும்,நாயகனின் பார்வையில் கதையை நகர்த்துவது என அழகான கதை!
ரயில் பயணம் யாருக்குத்தான் பிடிக்காது?ரயிலில் பயணிக்கும் கௌதம்,தன் குழந்தையுடன் தன் கடந்த காலத்தை தேடி போகிறான்.ரயில் சினேகிதியாக வரும் தாமரை.அற்புதமான பெண்!இருவருக்குமான உரையாடலிலேயே கதை நகர்கிறது!பவிக்குட்டியின் அப்பா பாசமும் அவன் தலையை தடவி விடுவது மாத்திரைகள் எடுத்து கொடுப்பதும் ஸோ ஸ்வீட்!தாமரையின் ஆறுதலான வார்த்தைகளும் அதில் வரும் ஒரு வார்த்தையான சுமக்க முடியாத சிலுவை என்னும் பதத்தில் அவனுக்கு தன் கடந்த காலம் நினைவு வருவது,அம்மாவின் பாடல் மனதின் அதிர்வலையில் உணர்வது என கதையில் சுமக்க முடியாத அளவுக்கு மன உணர்வுகள்!
ஒரு விபத்தில் நினைவை இழப்பவனிடம் தாரா ஒரு மருத்துவராய் உதவினாலும் தன் மனதையும் இழக்கிறாள்.கடந்த கால வாழ்க்கையின் மிச்சங்கள் என்ன என்று தெரியாத நிலையில் தவிப்பவன் அவகாசம் கேட்கிறான்.சில நினைவுகள் திரும்பிய நிலையில் குழந்தையுடன் கிளம்பிவிடுகிறான்.அவனை தேடிய தாராவும் ,அவனை பிரிந்த அம்மாவும் அவனை சந்தித்தார்களா?அவன் மனைவி என்ன ஆனாள் ?அவன் வாழ்வில் நடந்தது என்ன ?இவை எல்லாம் கதையின் சுவாரயங்கள்!
என்னை கவர்ந்த வசனங்களை குறிப்பிடணும்ன்னா கதை முழுக்க குறிப்பிடணும்!அவ்வளவு அழகான வார்த்தை பிரயோகங்கள்!
வண்ண படங்களை இந்தியாவில் பார்த்த கண்களுக்கு நாகரிகத்தின் பின்னேசென்று கருப்பு வெள்ளை படங்களை பார்ப்பது போலிருந்தது!
இந்த சிந்து நதிக்குள் இருந்து ஒரு கிளை நதி தோன்றியிருக்கு!
கரம் சிரம் புறம் நீட்டாமல் ஆட்டு மந்தை போல் அடைக்கப்பட்ட விமானப்பயணம்!
கல்யாண பந்தத்தில் இறக்கி வைக்க முடியாத சிலுவைகளை சுமக்க தொடங்கினேன்!
போதை பழக்கம் குடிப்பழக்கத்தில் ஆழ்ந்த மனிதர்களை பற்றி நாம் எவ்வளவு பேசினாலும் தீராது.திருந்தியவர்கள் சில பேர்தான்.மீண்டும் அதில் வீழ்ந்தவர்கள் அதிகம்.மருத்துவ மாணவர்களின் போதை பழக்கம் நாம் நிறைய கேள்விப்பட்டுருக்கோம்,இந்த கதையில் அதன் ஆழத்தை பார்க்கலாம்.ஒரு சந்தேகம் எனக்கு ....போதையில் மூழ்கிய ஒருவனுக்கு உடல் பலம் அவ்வளவு இருக்குமா?அத்துடன் அவனால் ஒரு குழந்தைக்கு தந்தை ஆகும் அளவுக்கு ஆரோக்கியம் இருக்குமா?இது எனக்கு கதை படித்தது தோன்றியது.
 
என்ன ஒரு அழகான எழுத்து நடையில், என்ன ஒரு அழகான ஆழமான விமர்சனம்! என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்! மனமார்ந்த நன்றிகளுடன் டெய்சி
 
Top