Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-19

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம்-19

"ஹாய்.. "என்று விழித்தான் அவன். கையில் மஞ்சப்பை மை இல்லாதது தான் குறை.

சமையலறையில் இருந்து வெளியே வந்து, "வாங்க மாப்பிள்ளை..." என்று மாமியாரும் நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தார்.

"என்னங்க இந்தப்பக்கம்?" என்று மனைவி கேட்டதும் இன்னும் விழித்தான்.

"நளனுக்கு அங்க தனியா இருக்க பயமா இருக்கும். அதான் வந்தாச்சுப் போல......" என்று மாமியார் காலை வாரிவிட அவனோ அசடு வழிந்தான்.

"சரி.. ப்ரெஷ் ஆகிட்டு வாங்க. நான் டின்னர் ரெடி பண்ணி வைக்கிறேன்.... நளனுக்கு கப்போர்ட்டில் இருந்து டவல் எடுத்துக்கொடும்மா..." என்று மகளுக்கு கட்டளையிட்டுவிட்டு ரோகிணி கிச்சனுக்குள் நுழைந்தார். நளனை நினைத்த போது அவருக்கு சிரிப்பு வந்தது.

ஸ்வப்னாவின் பின்னாலேயே வால் பிடித்துக்கொண்டுச் சென்று அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் நளன்.

"அப்பவே என்கூட வந்து இருக்கலாம் தானே.. இப்படி அசடு வழிய நிற்க வேண்டி இருந்திருக்காது இல்ல...." என்று அவன் மார்பில் குத்தினாள் ஸ்வப்னா.

"அது.. வந்து... நீ இல்லாம அந்த வீட்ல இருக்க முடியலடா... அதனால..." உண்மையை உடனே ஒத்துக்கொண்டான் நளன்.

" உடனே..ஐயா வால் பிடிச்சுக்கிட்டு வந்துட்டிங்களாக்கும்..."

அவன் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினான்.

"கள்ளன். சரி.. குளிச்சிட்டு வாங்க." என்று டவலை எடுத்து வீசிவிட்டு நகர்ந்தாள்.

நளன் குளித்துவிட்டு வந்த போது இரவு உணவு தயார் ஆகி இருந்தது. மூவரும் பொதுவாக பேசிக்கொண்டே உணவருந்த ஆரம்பித்தார்கள்.

"அம்மா.. சாப்பாடு சூப்பர்..." என்று ருசித்தாள் ஸ்வப்னா.

"வீட்ல இவ சமைக்கிறாளா? இல்லனா நளனோட நளபாகமா?" என்றார் ரோகிணி.

"நான் தான் அம்மா... என்னை அவ்வளவு மோசமா நினைக்காதிங்க. சூப்பரா இல்லனாலும் சுமாரா சமைப்பேன்." என்றாள் மகள்.

"ஆனா அதை சாப்பிடத்தான் கஷ்டம் அத்தை..." என்று அவன் காலை வார, அவள் ஏகத்துக்கும் முறைக்க, சற்றும் யோசிக்காமல் அவன் சரண்டர் ஆக, அந்த இடமே கலகலப்பாகியது.

"ஏம்ப்பா நளன், நீங்க ரெண்டு பேரும் ஏன் அண்ணனோடயும், அண்ணியோடயும் சேர்ந்தே இருக்க கூடாது. உன் நினைவால தான் அவங்க உடைஞ்சு போயிட்டாங்க..."என்று மகேஸ்வரியின் மனம் அறிந்து புரிந்து பேசினார் ரோகிணி.

அவன் யோசித்தான்.

"அம்மா ஸ்வப்னாவையும் ஏத்துக்கிட்டா எனக்கும் சம்மதம் தான் அத்தை..." என்றான்.

அவன் மனைவியோ ஆச்சர்யத்தில் அவனைப் பார்த்தாள்.

ரோகிணியும் அதிசயத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

இரவு தூங்கச்செல்கையில் அவனை ஸ்வப்னா கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்னடி.. அப்படிப் பார்க்குற...?"

"இல்ல.. அத்தை ஓகே சொல்லிட்டா நாம அங்க போயிடலாமா..?"

"முதல்ல சொல்லட்டும்.. அப்புறம் பார்க்கலாம்." என்று சாதாரணமாக சொன்னான்.

'சொல்ல வைத்துக் காட்டுகிறேன் கண்ணா..' என்று உள்ளுக்குள் சபதம் எடுத்துக்கொண்டாள்.

இரவு உணவின் பின் மூவரும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச்சென்றனர்.

ஸ்வப்னாவின் அறையில், அவள் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான்.

"என்ன பண்ற நளா...?"

"இல்ல... இந்த கட்டிலில் தானே நீ தூங்கியிருப்ப..... அதான் ஒரு....சின்ன சந்தோஷம்.. அது உனக்குப் புரியாதுடி...." என்றான். அவள் இதழில் சிரிப்பு வந்தது.

"சரி.. கொஞ்சம் பக்கத்துல வா...."என்றான்.

"எதுக்கு..? " என்றாள்.

"எதுக்கா.. இது என்ன கேள்வி..."

" ஹூம்.. இப்ப கேட்க வேண்டிய கேள்வித் தான்..." ஸ்வப்னா.

"நிஜமா உன்னை எதுக்கு கூப்பிடுறேனு உனக்குத் தெரியாதா...?" என்றான் காதலுடன்.

அவள் அவனை பார்த்து இடம் வலமாக தலையசைத்தாள்.

அவன் எட்டி அவளை பிடித்துக்கொண்டான்.

"தெரியாட்டி ஓகே.. வா நான் சொல்லித்தாரேன்....."

அவள் கத்தமுன் வாயை தன் முத்தத்தால் அடைத்தான்.

"ஸ்வப்னா.. உன்னை விட்டுட்டு இருக்க முடியலடி... எப்படா வீட்டுக்கு வருவோம், உன்னைப் பார்ப்போம்னு இருக்கும் தெரியுமா.. உன்னை எந்த அளவுக்கு லவ் பண்றேனு எனக்கே தெரியல. என்னை விட்டுட்டு எங்கயும் போகாதடி...."

"நான் எங்க போகப் போறேன்.. எப்பவும் உன்கூடத் தானே இருக்கப் போறேன் கண்ணா..."

"எங்கயும் போகாத.. அவ்வளவுத் தான்..."

"சரி.. நீயா விரட்டினாலும் நான் போக மாட்டேன். இது சத்தியம். போதுமா...?" என்றாள்.

அவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். இந்த தடவை அவள் அவனை இம்சை செய்தாள்.

அடுத்த நாள் ஸ்வப்னா சஞ்சனாவின் உதவியோடு திட்டம் தீட்ட ஆரம்பித்தாள்..
 
Nirmala vandhachu ???
 
Top