Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி! -4

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -4

ஸ்வப்னா ஒரு தனியார் பள்ளியில் பகுதி நேரமாய் ப்ரைமரி செக்ஷனில் வேலை செய்கிறாள். வாரத்தின் ஐந்து நாட்களும் மதிய நேரம் வரை அவளுக்கு வேலை நேரம். பிறகு தனக்காக வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குச் செல்வாள். அன்று பள்ளியிலிருந்து வெளியே வந்ததும் பைக்கில் ஒய்யாரமாய் அமர்ந்து செல்போனை நோண்டிக்கொண்டிருந்த நளனைக் கண்டும் காணாதது போல் நடையைக் கட்டினாள்.

'வா ராஜா வா! இன்னைக்கு இருக்கு உனக்கு...' என்று நினைத்துக்கொண்டு நடந்தாள்.

அவன் பைக்கில் ஸ்லோ மோஷனில் பின்னாலேயே வந்தான்.

"ஹலோ.. ஃபாலோ பண்ற வேலையெல்லாம் வேண்டாம். பப்ளிக்ட பிடிச்சு கொடுத்துருவேன்..." என்றாள். அவனை திரும்பிப் பார்க்காமலே.

"ஸ்வப்பு.. ஸாரிடா.. நீ என்னாச்சுனு கேளேன்... உனக்காக நான் இப்படி எத்தனை தடவை வெய்ட் பண்ணியிருப்பேன்..."

நின்று விருட்டென திரும்பினாள். அதில் ஏகப்பட்ட கோபம் கொட்டிக்கிடந்தது.

"ஏய்.. ரோட்ல நீ நிற்கிறதுக்கும், ஒரு பொண்ணு.. நான் நிற்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குடா.. ஒவ்வொருத்தனும் என்னை எப்படி பார்த்தான் தெரியுமா?" அவள் நீண்டதொரு அழுகைக்கு தயாரானாள்.

"சரி.. சரி.. நீ முதல்ல பைக்ல ஏறு... என் செல்லம் இல்ல...." என்று அவளை சமாதானம் செய்து, ஏற்றிக்கொண்டு பறந்தான். பைக்கின் வேகத்தில் அவன் தோள்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் ஸ்வப்னா. அதை அவன் ரசித்தான்.

நல்லதோர் மதிய உணவிற்குப் பின் இரண்டு கப் ஐஸ்கிறீமை உள்ளே தள்ளிவிட்டு, அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐஸ்கிறீமை லபக்கென பிடுங்கி மூன்றாவது ஐஸ்கிறீமாக உள்ளேத் தள்ளினாள். அதைப் பார்த்து அவன் இதழ்களில் குறுநகையொன்று இழையோடியது.

' என்ன பார்க்கிற..?' என்று சைகையாலேயேக் கேட்டாள். அப்போது அவளது ஜிமிக்கிகளும் பேசின.

" உன்னால மட்டும் எப்படி இப்படில்லாம் இருக்க முடியுது. நீ டீச்சரம்மா தானே.. ஆனா குட்டி பசங்க கூடவே இருந்து நீயும் குட்டி பொண்ணாத் தான் எனக்கு தெரியுற.. எப்படி இத்தனை ஐஸ்கிறீமை உள்ள தள்ளுற...? கோல்ட் வரப் போகுதுடி.. போதும்.. அதை இப்படி கொடு... என்றான்.

"சரி இந்தா வச்சிக்க..." என்று அவள் தள்ளிய கப் சுத்தமாய் காலியாகியிருந்தது.

அவன் பொய்யாய் முறைத்தான்.

" சரி.. இப்ப சொல்லுடா.. ஏன் நேற்று நீ வரல..? என்னைக்கும் இல்லாமல் நேற்று நீ சொன்ன டைம்க்கு வந்தேன் தெரியுமா..? அதுவும் நீ லாஸ்ட்டா வாங்கித் தந்த பிங்க் டாப்ல..." மீண்டும் குரல் உடைந்தாள்.

எட்டி அவள் கையைப் பிடித்தான். அதில் அழுத்தம் கொடுத்தான்.

"ஸாரி குட்டிம்மா.. நேற்று எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்துப் போச்சு.. " என்று நடந்ததை முழுவதுமாக ஒப்புவித்தான்.

கன்னத்துக்கு கை கொடுத்து அனைத்தையும் கேட்டவள் யோசனையில் ஆழ்ந்தாள்.

"என்னடி யோசிக்கிற..?"

"டேய்.. உங்க அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னை அம்போனு விட்டுட மாட்டியே... நான் தாங்க மாட்டேன்டா.. செத்துடுவேன். நீயில்லாத லைப்பை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது...."

"ஹேய்.. லூசு மாதிரி பேசாத.. உன்னைத் தவிர என் லைப்ல யாருக்கும் இடம் இல்ல.. இந்த உலகமே எதிர்த்தாலும் நீ தான் என் பொண்டாட்டி..."

"இது.. இந்த வார்த்தை போதும்டா....." அவளது கண்கள் துளிர்த்தன.

"ஸ்வ்ப்பு.. சஞ்சுவோட ஸ்டடிஸ் இன்னும் டூ மன்த்ஸ்ல முடியுது. அவளுக்கு ஒரு நல்ல இடம் பார்த்து வைச்சிருக்கேன். அது பற்றி அப்பாக்கிட்டயும் பேசினேன். கூடிய சீக்கிரம் அவ கல்யாணத்தை முடிச்சிடுவேன். இதைப் பற்றி அவகிட்டயும் பேசிட்டேன். அப்புறம் அதுக்கு அப்புறம் நம்ம மேர்ட்டரை ஒபன் பண்ணலாம்னு இருக்கேன். அது வரை தாங்குமானு தெரியல..... இப்பவே அப்பாக்கு டவுட். 'யாரையாவது லவ் பண்றனானு' கேட்டார் தெரியுமா..?" என்றான்.

"உன்கிட்டயுமா....?" அதிர்ச்சியாய் கேட்டான்.

"என்கிட்டயுமானா...? உன்கிட்ட ஏதும் கேட்டாரா...?"

"ஆமாப்பா... நேற்று மார்னிங் உங்க வீட்டுக்கு வாரப்ப வழியில அவரைக் கண்டேன். நலமெல்லாம் விசாரிச்சட்டு ' என்னம்மா முகத்துல ஒரு தேஜஸ் தெரியுது? யாருக்காவது மனசை கொடுத்திருக்கியானு' கேட்டாரு பாரு..... நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்."

"நீ என்ன சொன்ன....? " என்று பதட்டமாய் கேட்டான்.

"ஒன்னும் சொல்லல.. ஒருமாதிரி சமாளிச்சிட்டு வந்துட்டேன்.."

"அப்ப அவருக்கு ஏதோ தெரிஞ்சிருக்குடி...."

"ஐ திங்க் சோ....." என்றாள் சர்வசாதாரணமாக.

"நம்ம கவனமா இருக்கனும்டி.. இப்படி அடிக்கடி மீட் பண்ணக் கூடாது. நம்ம ரூல்ஸ் எல்லாம் ரெண்டு மூனு நாளா ப்ரேக் பண்றோம். இனி வழக்கமான நம்ம ரூல்ஸ் படி சண்டே மட்டும் தான் நம்ம மீட் பண்ணனும். நோ போன் கால்ஸ். நோ மெசேஞ்...."

"டேய் ஒரு மெசேஞ் மட்டும் அனுப்புடா.. இல்லாட்டி எனக்கு தூக்கமே வராது..." என்று கெஞ்சினாள்.

"சரி.. கண்ணீர் வடிக்காத.. மெசேஜ் பண்ணு. ஆனா அப்ப அப்ப டிலீட் பண்ணிடனும். ஓகே..... ஸ்வப்னா! நீ எனக்காக வெய்ட் பண்ணுவியாடி??" என்று அவள் பதிலில் தன் காதலைத் தேடினான்.

"ஹேய்.. உனக்காக எத்தனை வருஷம்னாலும் வெய்ட் பண்ணுவேன்டா... இப்படியெல்லாம் சொல்லுவேனு எதிர்பார்க்காத.... ஒரு வருஷம் தான்டா.. அதுக்கு பிறகு உன்னை தூக்கிட்டுப் போய் பலவந்தக் கல்யாணம் தான்...." என்று எச்சரித்தாள்.

அவனுக்கு சிரிப்புத் தான் வந்தது. சிரித்தான்.

"எனக்கும் கஷ்டம் தான்.. ஆனா வேற வழி இல்ல குட்டிம்மா.... சரி நீ கிளம்பு. நான் அப்படியே கம்பனிக்குப் போறேன். ஹாப் டே லீவ்ல வந்திருக்கேன்.. " என்று கிளம்பினான்.

அவன் போகும் போது அவனை ஒருவித ஏக்கத்துடன் பார்த்துவிட்டுச் சென்றாள். அந்த பார்வை அவனை ஏதோ செய்தது.

வீட்டிற்குள் நுழைந்த அவளை ரோகிணி விநோதமாய்ப் பார்த்தார்.

"என்னம்மா...?"

"எங்க போயிட்டு வார....?"

"நளன் கூட லன்ச்சுக்கு...."

"நளனோடயா.. என்ன திடீர்னு....? "

"அது ஒரு பெரிய ஸ்டோரிம்மா.... " என்று அதை ஒப்புவித்தாள்.

"அதை ஏன்டி லீவ் போட்டுட்டு உன்கிட்ட வந்து சொல்றான்.. "

"ம்மா.. ஹீ இஸ் மை பெஸ்ட் ப்ரென்ட். என்கிட்ட சொல்லாம யார்க்கிட்ட சொல்லுவார்..?" இந்த இடத்தில் மரியாதை சேர்ந்துக் கொண்டது.

"அது சரி.. எத்தனை நாளைக்கு பெஸ்ட் ப்ரென்டா இருப்பிங்க.. நாளைக்கு கல்யாணம் ஆச்சுனா.. இதெல்லாம் சரிப்பட்டு வருமா....? "

" நளன் கூடத் தானே நான் எப்பவும் வெளிய போவேன். அப்போல்லாம் ஒன்னும் சொல்லாம இது என்ன புதுசா...? நளன் எப்பவும் எனக்கு பெஸ்ட் ப்ரென்ட் தான். கடைசி வரைக்கும் யாருக்காவும் அதை மாற்றிக்க மாட்டேன். ஒரு ஆணும் பொண்ணும் பழகுனா ஏன் அது யாருக்கும் பொறுக்க மாட்டிக்குதோ தெரியல.... சும்மா ஏதாச்சும் கேள்வி கேட்டு என்னை கடுப்பாக்காதிங்க.." என்று சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அம்மாவிடம் கொஞ்சம் கறாராய் நடந்துக்கொண்டாள்.

'அம்மாக்கு டவுட் வந்திடுச்சோ... ஓவரா பேசிட்டமோ....' என்று தூங்கும் போது நினைத்துப் பார்த்தாள்.

Nirmala vandhachu ???
 
Top