Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -11

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -11

காரில் இருந்து இறங்கும் போதே தன்னவளை கவனித்துவிட்ட ரஞ்சித்திற்கு கண்கள் அதற்கு பிறகு வேறு புறம் திரும்பவேயில்லை.

அம்ரிதா ஒரு மெஜந்தா நிற பட்டு சல்வாரும் வெண்பட்டு துப்பட்டாவும் அணிந்திருந்தாள். வழக்கத்தைவிட சற்றே அதிகமான ஒப்பனையில் ,தேர்ந்தெடுக்கப்பட்ட நகைகளில்
அவள் தேவதையாய் மிளிர ..சம்யுக்தாவோ பீச் நிறத்தில் ஒரு அனார்கலி உடை அணிந்திருக்க அவளது நிறத்திற்கு அது வெகு பொருத்தமாக இருந்தது.

பெண்களின் சராசரி உயரத்தை விட கூடுதலாயிருந்ததால், அவளது சற்றே பூசிய உடல்வாகு, அதுவும் அந்த அனார்கலி உடையில் எடுப்பாக இருந்தது. அதற்கு தோதாக அவள் அணிந்திருந்த வெள்ளை முத்துக்கள் பதித்த ஜிமிக்கியும், ஆக்சிடைஸ்ட் வெள்ளியில் முத்துக்கள் பதித்த அழகிய வேலைப்பாடோடான கழுத்தணியும் .. எப்போதும் அவளை ஃபார்மல் உடைகளில் பார்த்த ப்ரித்விக்கு ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது.

தமக்கை பளிச்சென இருக்க தங்கை மனதிற்கு இதமாக தோற்றமளித்தாள்.

இருவருமே சிறு வயது முதலாகவே ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்கள். சூட்டிகையும் அதிகம்!

அம்ரிதா ரொம்பவும் பிடிவாதம் போல தென்பட்டாலும் தங்கைக்காக என்று வரும்போது விட்டுக் கொடுத்து விடுவாள். உள்ளுக்குள் தங்கை மீது வெகுவாக பாசம் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டாள்.
சம்யுவோ நேர்மாறு! பாசத்தை வெளிப்படையாக காட்டிவிடுவாள். கோபத்தையும் வெளிப்படையாக காட்டிவிடுவாள். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல் தான் அவள் பேச்சும் செயலும் இருக்கும் .

அம்ரிதா கூட கிண்டல் செய்வாள்.. "நீயெல்லாம் வக்கீலாகி என்ன செய்யப்போற ? இப்படி கட் அண்ட் ரைட்டா பேசிக்கிட்டிருந்தால் ஒரு கிளைண்ட் கூட சிக்க மாட்டான் "

" கரெக்ட் ! அதனால தான் நான் ஜட்ஜாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. நீ கவலையே படாத" என்று ஊதி தள்ளி விடுவாள்.

தன் இரு பெண்களையும் பார்த்த தனுஜாவிற்கு மனம் நிறைவாக இருந்தது.

சம்பிரதாயமான ஒரு உரையாடலுக்கு பின் அனைவரும் கடையின் உள்ளே நுழைந்தனர்.
கடையின் உரிமையாளர் வேகமாக வந்து வரவேற்க ..சத்யபாமா அங்கே ரெகுலராக வருபவர்... தினம் அணியும் உடைகள் பெரும்பாலும் இங்கே தான் எடுப்பர். இப்போது நிச்சய புடவை என்றதும் முதலாளிக்கு ரொம்பவும் சந்தோஷம்!

மிகுந்த விலை உயர்ந்த புடவைகளை எடுத்து காண்பிக்க விலையை லேசாக நோட்டமிட்ட சம்யுவுக்கு தலை சுற்றும் போலிருந்தது. அவளது ஒரு வருடத்திற்கான உடை செலவை ஒரே புடவைக்கு செலவழித்து விடுவார்கள் போலிருக்கே!

அவளுக்கு பெரும்பாலும் உடைகளுக்கு அதிகம் செலவழிக்க பிடிக்காது. உடைகள் பார்க்க நன்றாக இருக்கும் ஆனால் அத்தனை விலைஉயர்ந்ததாக இருக்காது.

அம்ரு தன் மாமியாரோடு சேர்ந்து உற்சாகமாக புடவைகளை பார்த்துக் கொண்டிருக்க, ரஞ்சித்தோ தன்னவளை அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருக்க ..அதுவும் ஒவ்வொரு புடவையையும் அவள் மேல் வைத்து பார்க்க அவன் கண்களில் மின்னல் !

ப்ரித்வி எதிலும் பட்டு கொள்ளாமல் தள்ளி நின்றிருந்தான்.

" இது எப்படி இருக்கு ரஞ்சி ? " என்று ஒரு புடவையை மேலே வைத்து காண்பிக்க ..அந்நேரம் சத்யாவும் ஸ்ரீஜாவும் வேறுபுடவையை ஆராய்ந்து கொண்டிருக்க ...."எல்லா புடவையும் உனக்கு சூப்பராதான் இருக்கு.. புடவையே கட்டலைன்னா இன்னும் சூப்பரா இருப்ப " என்று கூறினான் சரசம் வழியும் குரலில்!

”அப்போ லெஹெங்கா வாங்கிக்கவா " என்று டியூப்லைட்டாய் அம்ரு கேட்க .. "ஷப்பா... என்னா ..ஆ.. திங்கிங் ? உனக்கு ட்ரைனிங் பத்தாது போலவே"

"எதுக்கு ட்ரைனிங்? புடவை கட்டவா? " என்று அப்பாவியாய் கேட்கவும் ..

" இப்போல்லாம் டீனேஜ் பிள்ளைகளுக்கே எல்லாமே தெரியுது. நீ ஒன்னும் தெரியாத பிள்ளையா இருக்கியே ரித்து ? என் மாமியார் தான் சரியில்லை ..பொண்ணை ரொம்ப அப்பாவியா வளத்துருக்காங்க "

"என் மாமியார் தான் சரியாவே வளர்க்கலை " என்றாள் அம்ரு.

"அடிப்பாவி !இதுக்கு மேல எப்படிடி நல்ல பிள்ளையா வளர்க்க முடியும் ? டீசென்ட்டு மா நான்."

"காதலில் டீசென்சி எல்லாம் வேலைக்காகாது கோப்ப்பால்"

"லத்தா.. இப்போ அப்பாவி பிள்ளை போல பேசினதெல்லாம் … நடிப்பா லதா…நடிப்பா?” என்று சிவாஜி மாடுலேஷனில் பேசியவன். “நீயே சொல்லிட்டல்ல ..இனிமே பாரு " என்றவன் யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு சட்டென்று அவளது பின் கழுத்தின் பிறை மச்சத்தில் ஒரு அவசர முத்தம் வைக்க .. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு சிலிர்ப்பு ஓடியது அம்ருவுக்கு.


சம்யுவுக்கு பெரிதாக ஷாப்பிங்கில் விருப்பம் இல்லாததால் அமைதியாக பின்னே நின்றிருந்தாள். தாயின் வற்புறுத்தலுக்காகவே வந்திருந்தாள்.

முந்தைய தினம் இரவு வெகு நேரம் முழித்து வேலை பார்த்ததில் விழிகள் தூக்கத்துக்கு கெஞ்சின .

வெகுநேரம் அந்த புடவைகளை பார்த்து போரடித்துவிட சற்றே நகர்ந்து ரெடி மேட் பகுதிக்குள் நுழைந்தவள் சில சல்வார்களை பார்த்துக் கொண்டிருக்க ..பெரும்பாலும் விழாக்களுக்கு அணிவது போல தான் இருந்தது.

உடைகளை ஆராய்ந்து அலுத்து போனவள் கடையின் உள்ளலங்காரங்களை ரசித்துக் கொண்டிருக்க ..அங்கிருந்த மீன் தொட்டியும் அதில் இருந்த அலங்கார மீன்களும் கண்ணை கவர்ந்தன. அச்சிறு மீன்கள் ஒன்றை ஒன்று துரத்தியபடி விளையாடுவதை காண மனம் மகிழ்ச்சி கொள்ள ..அவளும் அவற்றோடு சேர்ந்து "ஏய் பிடி பிடி..விடாதே " என்றெல்லாம் மெல்லிய குரலில் அவற்றுடன் பேசியபடி இருக்க..

"மீன் பாஷையெல்லாம் தெரியுமா உனக்கு ?
சட்டென்று பின்னிருந்து கேட்ட குரலில் தூக்கி வாரி போட திரும்பினாள் சம்யு… ப்ரித்வி நின்றிருந்தான்.

"என்னாச்சி ? உனக்கும் போரடிச்சிடுச்சா ? மீன் கூடலாம் பேசிக்கிட்டு இருக்கே " என்றான்.

அவனை பார்த்தாலே எப்போதும் வரும் கோபம் இப்போது வரவில்லை. அப்பாடா பேசவாவது ஒருதுணை கிடைத்ததே என்று இருந்தது.

வழக்கமான அலட்சிய பாவனை முகத்தில் தெரிய ...கரங்களை பாண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்தபடி அவன் நின்றிருந்த தோரணை ..வெகு கம்பீரமாய் இருக்க ..கண்கள் அவனை மேய்வதை தடுக்க முடியாமல் ஒரு நிமிடம் அவனை பார்த்திருந்தாள் சம்யு .

அவள் விழிகளில் உற்று பார்த்தவன் "என்னம்மா? அத்தானை கண்ணெடுக்காம பாக்குற ?"

அவனது சீண்டலில் அவளது மனம் உடனே முறுக்கிக் கொள்ள .." ஹலோ ! யாரது அத்தான்? என்னோட அத்தான் அங்க நிக்கிறாரு." என்று தூரத்தில் நின்றிருந்த ரஞ்சித்தை சுட்டிக் காட்ட ...
" சரி ..அப்போ சின்னத்தான்னு கூப்பிடு. "

"நீ ஒன்னும் சின்னதால்லாம் இல்லையே.காட்டெருமை மாதிரி வளந்திருக்க . உன்னை நான் சின்ன அத்தான்னு கூப்புடனுமா ? நெவர் " முகத்தை சுளுக்கிக் கொண்டு அவள் கூற சிறு பிள்ளை ஒன்று கோபித்து முகம் திருப்பும் பாவனை தான் அவனுக்குள் தோன்றியது. வழக்கமான கோபம் வரவில்லை.

"காட்டெருமை சிங்கத்தை கூட சாய்ச்சிடும் தெரியுமா ?" என்றவன் அவசரமாக "அதுக்காக உன்னை சிங்கம்னு சொல்றேன்னு மட்டும் நெனச்சிடாதே.. அது அந்த சிங்கத்துக்கே அசிங்கம் " என்று கவுண்டர் கொடுக்க .. சரியாக அந்நேரம் பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணின் மொபைல்லில் "சிங்க பெண்ணே” பாடல் ரிங்க்டோனாக ஒலிக்க.. இவனோடா பேசி சிரிக்கிறாய் என்று மனம் அதட்ட .. முகத்தை சீரியஸாக வைத்து கொண்டாள்.

சட்டென அவள் அமைதியாகிவிட்டதை பார்த்து .."நீ ஷாப்பிங் பண்ணலையா ?" என்றான்.

"இங்கெல்லாம் ஷாப்பிங் பண்ணா என் பட்ஜெட் தாங்காது. எனக்கு இவ்வளவு விலையுயர்ந்த உடைகளை அணிவதில் விருப்பமில்லை."

தனக்கும் அப்படியே என்பதை மனதிற்குள் நினைத்தபடி.."தினமும் போட இல்லை என்றாலும் நிச்சய விழாவிற்காக வாங்கிக்கலாமே "

"அதுக்கே இதெல்லாம் டூ மச் தான். இவ்வளவு ஆடம்பரமான உடை எடுக்க்கிறாங்களே ..இவங்கல்லாம் இதை வாழ்க்கையில எத்தனை முறை போடுவாங்க ..அன்னிக்கு ஒரு நாள் .மிஞ்சி போனால் நாலஞ்சு தடவை. அதற்குமேல் அதை ரிப்பீட் செய்ய மாட்டாங்க . அதுவே அவங்களுக்கு கௌரவக்குறைச்சல். அதற்காக இவ்வளவு பணம் செலவு செய்வதில் எனக்கு விருப்பமில்லை. மணமக்கள் அன்னிக்கு ரொம்ப தனித்துவமாக தெரியனும்னு நினைக்கிறதில தப்பில்லை. அவங்க தனியா தெரியறதுக்காகவே மத்தவங்க கொஞ்சம் கம்மியா டிரஸ் பண்ணால் நல்லதுதானே. " எனவும், மணப்பெண்ணை விட ஆடம்பரமாய் உடை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீஜா முரண்டு பிடித்தது நினைவு வந்தது.

சம்யுவின் மீது அவனுக்கு ஒரு மரியாதை முதல் முறையாக முளைத்தது.

அவளை முதல் நாள் பார்த்தபோது இருந்த அதே ரோஷமான சிறு பெண்ணாக தான் மனதில் வரித்திருந்தான்.. அவள் பொறுப்பும் பண்பும் நிறைந்த ஆதர்ஷ பெண் என்று அவனுக்குள் இதுவரை உறைக்கவில்லை.
' அவளை நான் இதுவரை புரிந்துகொள்ளவில்லை .. புரிந்து கொள்ள முயலவுமில்லை' மனதோடு நினைத்துக் கொண்டான் ப்ரித்வி.

"அப்போ உனக்கு உடையெதுவும் எடுக்கலையா?" என்றான் தன்மையாய்.

"எப்பவும் வாங்கற கடையிலேயே வாங்கிக்கொள்வதாய் அப்பாவிடம் சொல்லிட்டேன். அந்த பணத்தில் வேற உருப்படியான செலவு பண்ணலாம் " என்றவளை ஆச்சரியமாய் பார்த்தான் ப்ரித்வி.

சற்று முன் உமையிடம் போனில் பேசும்போது ..இதையே தான் சொல்லியிருந்தான் ப்ரித்வி. தங்களது எண்ணங்கள் ஒன்று போல் இருப்பதை ஒத்துக்கொள்ள விருப்பமில்லை என்றாலும் அவனால் ஒத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

அவன் விழிகள் விரிய பார்ப்பது அவளை ஏதோ செய்ய .."ஹலோ இந்த சைட் அடிக்கிற வேலையெல்லாம் இங்க வேணாம் " என்றாள் அவனை சீண்டும் விதமாய்.

"ஓ அப்படி வேற உனக்கு எண்ணம் இருக்கா ? நல்லா பம்பளிமாஸ் மாதிரி இருந்துக்கிட்டு உனக்கு நினைப்புதான் .சரி உன்னை ஏன் வருத்தப்பட வைக்கணும் .நல்லா சைட் அடிச்சுட்டா போச்சி " என்றவன் தலை முதல் கால் வரை அவளை மெல்ல பார்வையால் வருட ..அதிலும் சில இடங்களை நின்று நிதானமாய் நோட்டமிட .. அந்த பார்வையை தாங்கி நிற்க முடியாமல் தள்ளாடினாள் சம்யு. 'என்ன இப்படி பார்க்கிறான்' என்று நினைத்தவளுக்குள் சுர்ரென்று கோபம் பொங்கியது.

என்ன தைரியம் இருந்தால் இப்படி பார்ப்பான்? அனிச்சையாய் அவளது கைகள் துப்பட்டாவை சரி செய்ய ..ஒரு கேலி புன்னகை அவன் இதழ்களில் நெளிந்தது.

"எங்க அத்தானோட தம்பியாச்சேன்னு பாக்கிறேன்..இல்லை .." என்று பல்லை கடிக்க ..

" ஓ.. நீயும் இந்த அத்தானோட தம்பியை தான் பாத்துக்கிட்டு இருக்கியா ? நல்லா பாரு " என்று முன்னும் பின்னும் திரும்பி நின்று காண்பிக்க ..சம்யு பல்லை கடிக்க ..நல்லவேளையாக இவர்களுக்குள் போர் மூளும் நிலையில் தனுஜா வந்து காப்பாற்றினார்..

"சம்யு ..இங்கே என்ன பண்ற ? அங்க எல்லாரும் இருக்கும்போது நீ தனியா வந்து நிற்பது நல்லா இல்லை."

"அம்மா ப்ளீஸ் ..எனக்கு இந்த ஷாபிங்க்லாம் ஆகாதுன்னு உங்களுக்கே தெரியும். நாளைக்கு முக்கியமான கேஸ் இருக்கு. வீட்டில் இருந்திருந்தால் அதுக்கான வேலையாவது பார்த்திருப்பேன் ."

"ஏண்டி ..இவரும் உன் கூட தானே வேலை பாக்கிறார். அண்ணனுக்காக கூட வந்திருக்கார். உன் அக்காவுக்காக நீ டைம் செலவழிக்க மாட்டியா? எப்போ பாரு வேலையை கட்டிக்கிட்டு அழக்கூடாது. குடும்பத்துக்காக நேரம் செலவழிக்கணும். இவரை பாத்து கத்துக்கோ" எனவும் காலரை தூக்கி வீட்டுக் கொண்டான் ப்ரித்வி..

"பாரு என்னை பற்றி எங்க அத்தை எவ்வளவு நல்லா புரிஞ்சி வச்சிருக்காங்க ? ஆனால் நீதான் என்னை காட்டெருமைன்னு சொல்றே " என்று சரியாக போட்டுக் கொடுக்கவும்
கோபமாக பெண்ணை முறைத்தார் தனுஜா.

"சம்யு. இப்படியா மரியாதை இல்லாமல் பேசுவாங்க. சின்னத்தான் கிட்ட மன்னிப்பு கேள் "

" அத்தானாவது பொத்தானாவது ? சும்மா கடுப்பேத்தாதீங்கம்மா " என்று பொரிந்தாள் சம்யு.

"அத்தை உங்க பொண்ணு வயித்தில இருக்கும் போது பாப்கார்ன் நிறைய சாப்பிட்டிருப்பீங்க போல ..ஓவரா பொறியிறா " என்வும் சிரித்தபடி நகர்ந்துவிட்டார் தனுஜா.
 
இந்த சத்யா வீம்புக்கு இவங்களுக்கு செலவை இழுத்து விடுது 🤧🤧🤧🤧🤧🤧

சம்யு அவ சின்ன அத்தான் கூட கொஞ்சமே கொஞ்சம் நல்ல விதமா பேசியிருக்கா 😂😂😂😂😂😂

அம்மா கிட்ட போட்டு கொடுத்துட்டியே 🤓🤓🤓🤓🤓
 
Last edited:
ப்ரித்வி எப்ப சம்யு காலில் விழப்போறானோ🤣🤣
 
Top