Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-30

Advertisement

பா.ரியா

New member
Member
அத்தியாயம் -30

" என்னம்மா .. மாப்பிள்ளைகிட்ட பேசிட்டியா?? " நவிலனை ஒரே வாரத்தில் மாப்பிள்ளையாக கொண்டாட ஆரம்பித்து விட்டார் பாமா.

" பேசியாச்சும்மா.. வீட்ல பேசிட்டு சொல்றேனு சொன்னார்.." நெயில் பாலீஷ் பூசிக்கொண்டே பதில் சொன்னாள் மித்ரா.

" நீ அவங்கம்மா நம்பரை தாயேன். நானே பேசிக்கிறேன். நடுவுல உங்களை வச்சி பேசுனா ஏதாவது ஏடாகூடமா தான் நடக்கும்." உண்மை நிலையை சொல்லி சம்பந்தியம்மாளின் நம்பரை வாங்கினார் பாமா.

" ம்.. இப்ப ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னாகிடுவிங்களே.."

" சும்மா இருடி.. முகூர்த்த புடவை எடுக்குறதுனா சும்மாவா.. நல்லநாள் பார்த்து.. நேரம் பார்த்து.. எத்தனை வேலை இருக்கு.. முதல்ல நீயொரு லிஸ்ட்டு போடு.. என்னென்ன வேலைகள் இருக்குனு எழுத ஆரம்பி.. அப்பதான் ஈசியா இருக்கும். யாரை அழைக்கனும்,எத்தனை பத்திரிகை அடிக்கனும், என்னென்ன ஃபங்ஷன் வைக்கனும் அதுக்கு தனி லிஸ்ட், ஐயர், சமையற்காரர்..."

" மேக்அப்.. அக்காவுக்கு அது முக்கியம்மா.. இல்லனா பார்க்க சகிக்க மாட்டா..." என்று வருண் வம்பிழுக்க அருகில் இருந்த தலையணையை தூக்கி அவன் மீது வீசினாள் மித்ரா.

" ம்மா . இவ்வளோ டென்ஷன் ஆக வேணாம். நானும் நவிலனும் உட்கார்ந்து பேசி யார் யார் எதை செய்யனும்னு பிரிச்சி தான் வேலை செய்ய போறோம். கல்யாண செலவை கூட பாதியாய் பிரிச்சிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு.."

" நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சிகோங்க.. நம்ம செய்றதுல எந்த குறையும் இருந்துட கூடாது. " வழக்கம் போல பாமா தாயாக கவலை பட்டார்.

" ரொம்ப டென்ஷன் ஆக வேணாம் பாமா... எல்லாத்தையும் மேல இருக்கவன் பார்த்துக்குவான்.." அப்பா சொல்வது போல வருண் சொல்லிக்காட்ட அங்கு சிரிப்பலை பரவியது.

இப்படியாய் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமான ஏற்பாடுகளுடன் கழிந்தன. அங்கு வீட்டில் திருமண வீட்டிற்கான களை வந்து விட்டிருந்தது.



மித்ரா கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை பார்த்துக்கொண்டும் கடிகாரத்தை பார்த்துக்கொண்டும் உட்கார்ந்து இருந்தாள். கடலலைகளைப் பார்ப்பது மனதுக்கு ஒரு வித இன்பமாகத்தான் இருந்தது.

" ஹாய் மித்துகுட்டி.." வந்து அமர்ந்தான் நவிலன். அவனை தன்னுடைய கைப்பையால் அடித்தாள் மித்ரா.

" எத்தனை மணிக்கு வாரேனு சொல்லிட்டு எத்தனை மணிக்கு வந்திருக்கிங்க.. பொதுவா பசங்கதான் பொண்ணுங்களுக்காக காத்திருப்பாங்க. இங்க எல்லாம் தலைகீழ்.."

" மன்னிக்க வேண்டும் மகாராணி. பயங்கர ட்ராஃபிக். அதான் லேட் ஆகிடுச்சு. " கரம் கூப்பி மன்னிப்பு வேண்டினான்.

அவள் அமைதியாக இருந்தாள்.

" என்ன மித்து..இதுக்கே மன்னிக்க யோசிக்கிற.. கல்யாணத்துக்கு அப்புறம் அவ்ளோதானா...பாவம் நானு.." என்று கெஞ்சினான்.

" என்ன செய்ய.. எனக்கும் உங்களை விட்டா வேற யாரும் இல்ல.. அதுனால மன்னிக்கிறேன்..." என்று விளையாட்டாய் சொன்ன அவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவன் அருகாமை அவளுக்கு அவ்வளவு தேவையாக இருந்தது.

" நம்ம லவ்வர்ஸ்ஸா சந்திக்கிற கடைசி சந்திப்பு இதுதான் இல்ல.." அவன் சொல்ல " அப்போ.. கல்யாணத்துக்கு பிறகு நம்ம லவ்வர்ஸ் இல்லையா..?" அவள் குறைப்பட்டாள்.

" ஏய் லூசு. கல்யாணத்துக்கு பிறகும் உன்னை காதலிப்பேன். ஆனா உன் புருஷனா... சரி காதலனாகவும் இருப்பேன்.. போதுமா.."

" நவி.. இந்த அன்பு எப்பவும் தொடரும் தானே.. எப்பவும் என் கூடவே இருப்பிங்க தானே.."

" இதென்ன சந்தேகம் உனக்கு இப்ப..?"

" அதில்ல.. அதிக சந்தோஷம் வரும் போது உள்ளுக்குள்ள ஒருவித பதட்டமும் பயமும் வரும்ல.. அப்படியொரு பயம். "

" இதப்பாரு மித்ரா. திரும்ப திரும்ப சொல்ல மாட்டேன். நீ எனக்கு ரொம்பவும் முக்கியம். என்னோட வாழ்க்கை உன்னோடதானு முடிவு செய்த பிறகு நான் எல்லாத்துக்கும் தயாராதான் இருக்கேன். உனக்கு எப்பவும் ஒரு நல்ல தோழனா நல்ல கணவனா இருப்பேன். எப்பவும் எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன். உன்னை விட்டுட்டும் போக மாட்டேன். அப்படி ஒரு சூழ்நிலை வந்தா அது என்னோட கடைசி நாளா தான்.." அவனை முடிக்க விடாமல் வாய் பொத்தினாள் மித்ரா.

" என்ன நவி.. இப்படிலாம் பேசிக்கிட்டு..."

" அப்போ இனிமேல் இந்த மாதிரி எப்பவும் கூட இருப்பியானு கேட்காத.. நான் உன் அடிமையாக ஆகிட்டேன் எப்போவோ.."

அவள் சிரித்துக்கொண்டே அவன் தோளில் செல்லமாய் ஒரு குத்து விட்டாள்.

" சரி.. கிளம்பலாமா..? மிஸஸ் ஐராவதம் கையில அகப்பையோடு வாசற்படியிலேயே நிற்பாங்க. இன்னைக்கு தான் வெளிய வாறது கடைசியாம். இனிமே ஒருவாரம் கல்யாண பொண்ணு மாதிரி அடக்க ஒழுக்கமா இருக்கனுமாம்..." அவளை முடிக்க விடாமல் அவன் கேட்டான்.

" நீ கடைசியா சொன்னது மட்டும் நடக்க சாத்தியம் இல்லை கண்ணே..!"

" எது..?" அவள் சீரியஸாக கேட்டாள்.

" அடக்க ஒழுக்கமா இருக்கனும் என்று சொன்னது.."

" ஏன் .. நான் அடாவடி பொண்ணா..?"

" இல்லையா பின்ன.. உன் அடியை தான் பார்த்திருக்கேனே.. " பழைய சம்பவம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. சந்தியா - மதிவாணன் தந்த பாச்சுலர் பார்ட்டியில் மித்ராவை நெருங்கியவனை அடித்தாளே ஒரு அடி.

" அதுவா.. அவனையெல்லாம்... " அந்த நினைவுகளில் கோபமானாள் மித்ரா.

" கல்யாணத்துக்கு பிறகு என் மேல எதுவும் கை வைக்காத தாயே.."

" அப்போ.. நான் கை வைக்கவே கூடாதா..?"

" ஆமா.. கூடாது.." யோசிக்காமல் சொன்னான்.

" அப்பசரி.. நான் கை வைக்கவே மாட்டேன்ப்பா.." அவள் வேறு அர்த்தத்தில் சொல்ல, " ஏய்.. ஏய்.. அந்த டிபார்ட்மெண்ட்ல ஏன் தடை போடுற.. அதெல்லாம் முடியாது... நீ கை வைக்கலாம் கண்ணே.. "

" நீங்க தானே கை வைக்க கூடாதுனு சொன்னிங்க.."

" நீ கை வை.. காலை வை.. எது வேணும்னாலும் செய்துக்கொள் கண்மணியே.." என்று அவள் முகவாய் கட்டையை பிடித்து கொஞ்சினான் நவிலன்.

" போதும்.. வீட்டுக்கு போகலாம். " அவள் சிவந்த கன்னங்கள் அந்த நேரத்தில் வானில் மறைந்த சூரியனுக்கு போட்டியாய் வந்து நின்றன. அதை ரசித்து மனதுக்குள் படம் பிடித்துக் கொண்டான் அவளது அவன்.

அவர்கள் அங்கிருந்து விடைப்பெற்றார்கள். அடுத்து வந்த நாட்கள் மிகவும் இனிமையான நாட்கள்.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கீர்த்திவாசனது சொந்த ஊருக்கு திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளுடனும் பயணப்பட்டார்கள். அங்கு மித்ரா குடும்பத்துக்கு தனி வீடொன்றை ஏற்பாடு செய்து இருந்தார் கீர்த்திவாசன். அது வீடல்ல.. பங்களா என்று தான் சொல்ல வேண்டும். அது கீர்த்திவாசனது தாத்தாவுக்கு உரித்துடைய பாரம்பரிய வீடாம். அதனை தற்போதைய நிலைக்கு ஏற்ப புதுப்பித்து சகல வசதிகளையும் செய்து வைத்திருந்தார் வாசன். வாசன் குடும்பம் தங்குவதற்கு அவரது தந்தையின் வீடு தயாராக இருந்தது.

திருமணம் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களுடன் இடம் பெற வேண்டும் என்று ரோகிணி விரும்பியதால் தற்போதைய கலாசாரப்படி மணப்பெண்கள் கொண்டாடும் ' சங்கீத் ஃபங்ஷன் ' , ' மெஹந்தி ஃபங்ஷன் ' முதலியவற்றை தவிர்த்தாள் மித்ரா. அது பற்றி நவிலன் கேட்ட போது பின்வருமாறு பதிலளித்தாள்.

" இந்த ஃபங்ஷன் எல்லாம் வடநாட்டவர்களைப் பார்த்து நம்ம கலாசாரத்துக்குள்ள புகுத்திக்கிட்டது தானே நவி. ஒரு பத்து பதினைந்து வருஷத்துக்கு முதல் இந்த மாதிரி கொண்டாட்டங்கள் ஏதாவது நம்ம வீட்டு கல்யாணங்கள்ல இருந்திச்சா சொல்லுங்க. நம்ம வீட்டு கல்யாணங்கள் எப்படி இருக்கும்? ஒரு வாரத்துக்கு முதலே சொந்தகாரவங்க எல்லாம் வந்து குவிஞ்சிடுவாங்க. அத்தை, மாமா, சித்தி , சித்தப்பா, மச்சான், மச்சாள், பாட்டி, பூட்டி, பேரக்குழந்தைகள், ஆடு ,மாடுனு எல்லாரும் வீட்ல இருக்கதே மனசுக்கு நிறைவா இருக்கும். பேச்சும் கேலியுமா கலகலப்பா இருக்கும் அந்த ஒரு வாரமும். நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு வேலை செய்வாங்க எல்லாரும். அந்த ஒரு இனிமையான சூழ்நிலை இப்ப சிட்டில நடக்கிற கல்யாணத்துல மிஸ்ஸிங். அதெல்லாம் இப்ப எனக்கு இங்க கிடைச்சிருக்கு நவி. இங்க இருக்க ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு திரும்ப கிடைக்காத பொக்கிஷம். அதை அனுபவிக்கிறேன் நவி. "

அவளை ஆச்சர்யமாக பார்த்துவிட்டு கேட்டான் அவன்.

" நிஜமா நீ சந்தோஷமா இருக்கியா மித்ரா..? இந்த கல்யாண ஏற்பாடுகள் உனக்கு பிடிச்சிருக்கு தானே.."

" சந்தேகம்னா என் கண்களைப் பாருங்க. அது உண்மை சொல்லும்.."

" அது உண்மை சொல்லுதானு கண்டுபிடிக்க கஷ்டம்.."

" ஏன் நவி.."

" எனக்கு உன் கண்ணைப் பார்த்தா வேற ஏதேதோ தோணுது கண்ணே.." அவளை காதலோடு பார்த்தான். அவளுக்கு கன்னங்கள் பூத்தன.

" அட.. மாப்புள்ள.. பொண்ணை தனியா கூட்டிகிட்டு வந்து என்ன பேசுறிங்கனு நாங்களும் தெரிஞ்சிக்கலாமா..?" மாட்டுக்கொட்டைக்கு சாணம் அள்ள வந்த வேலையாள் வேம்பு ஐயா கலாய்த்தார்.

" அது.. வந்து .. மாடு பார்க்கனும்னு சொன்னா.. அதான் கூட்டிகிட்டு வந்தேன்.." அவன் வாயில் வந்ததை உளறினான்.

" ஏம்மா.. டவுனுல மாடா இல்ல.. ?" அவர் சந்தேகமாய் கேட்க, " அதெல்லாம் இருக்கு ஐயா.. ஆனா இந்த மாதிரி க்யூட்டான அழகான அறிவான மாடு இல்லையே.." என்று அவனை கண்களால் பார்த்து கொண்டே சொன்னாள். அவன் லேசாய் முறைத்தான்.

" அப்படி சொல்லும்மா.. இந்த மாடெல்லாம்.." அவர் மாடு ஹிஸ்ட்ரி சொல்ல ஆரம்பித்தார்.

" ம்ஹும்.. இந்த டிஸ்ட்டபன்ஸ் எல்லாம் வேணும்னு தானே ஆசைப்பட்ட.. நீயே மாடு கதை கேளு. என்னை விடு.." அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக புலம்பிவிட்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

அவள் வாய்க்குள்ளேயே சிரித்தாள்.

' ச்சே.. ஒரு ஐந்து நிமிடம் தனியா பேச விடுறாங்களா.. ஆச்சி கூப்பிடுது.. பூச்சி கூப்பிடுதுனு யாராவது வந்து இழுத்துட்டு போயிடுறாங்க.. இல்ல யாராவது பார்த்துடுவாங்க நவினு இவ ஓடிடுறா.. இருடீ.. அங்க போனதும் இருக்கு உனக்கு..' புலம்பிக் கொண்டே நகர்ந்தான் நவிலன்.


அன்று நலுங்கு வைக்கும் தினம்.

அவர்கள் வீட்டு முன்பே பந்தல் போட்டு அமர்க்களமான அலங்காரங்களோடு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. சீர் கொண்டு வருபவர்களை எல்லாம் பார்க்கையில் திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் போல இருந்தது. ஒவ்வொரு நிமிடங்களையும் மித்ரா சந்தோஷமாக அனுபவித்தாள்.

" இந்தா மாப்பிள்ளை.. நலுங்கு முடிச்சிட்டா பொண்ணை பார்க்க கூடாது.. பொண்ணு இருக்க பக்கமே எட்டிப் பார்க்க கூடாது. சரியா.." அவனது ஒன்று விட்ட அத்தை உத்தரவு பிறப்பித்தாள்.

" இது வேறயா.." வாய்க்குள் முணுமுணுத்தான் நவிலன். அவன் கடுப்பு அவனுக்கு.

' நான் வீடியோ கால்ல பார்த்துக்குவேன் அத்தை...' என்று சொல்லிக் கொண்டான்.

அடுத்த நாளே திருமணம்.

அவளை பார்க்காமல் இருக்க முடியாத நவிலன் ராத்திரியில் அவள் தங்கியிருந்த அறையின் பால்கனிக்கு தாவினான். மெதுவாக மூடியிருந்த ஜன்னலுக்கு ஒரு 'டொக் டொக் ' ஐ கொடுத்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சங்கமித்ராவுக்கு அந்த சத்தம் கேட்டு விழிப்பு தட்டியது. லேசாக திரும்பி பார்த்தாள். ஜன்னல் ஓரமாக ஒரு உருவம் நிற்பதைக் கண்டதும் அவளுக்கு வெட வெடத்தது. கத்தி ஊரை கூட்டலாமா என்று ஒரு கணம் எண்ணி அந்த எண்ணத்தை கைவிட்டாள். மறுபடியும் ஜான்சி ராணியாக அவதாரம் எடுக்க முடிவு செய்தாள்.

' மித்து! திருட வந்தவன் கதவை தட்டி மாட்டான்..' என்ற உள்ளுணர்வு தோன்றினாலும் கையில் அடிக்க எடுத்த குடையை கீழே வைக்காமல், வெகு ஜாக்கிரதையாக ஜன்னல் கொக்கியை கீழே இறக்கினாள். அங்கே..


ஆட்டம் தொடரும் ❤️?
 
Top