Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-5

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -5

" என்னங்க உங்களுக்கு இதே வேலையா..?" என்றவாறு தன்னுடைய காரை நோக்கி நடந்துகொண்டு இருந்த நவிலன் ஓடிவந்து கேள்வி கேட்டான்.

" நல்லா கேளுங்க... இவளுக்கு இதே வேலையா போச்சு.." என்று வருணும் திட்ட ஆரம்பித்தான்.

ரிவர்ஸ் எடுக்கிறேன் என்று பின்னால் இருந்த அந்த மைதானத்தை கட்டிக்கொடுத்த நல்லுள்ளம் ஒருவருக்கு பெருந்தன்மையாக அமைத்து வைத்திருந்த சிலையில் மோதிவிட்டாள். நல்லவேளையாக அதிகம் அடியில்லை. சிலைக்கு.

" நான் கீழ விழுந்திருக்கேன். என்னைய தூக்கிவிட்டுட்டு திட்டலாம்.." என்று பரிதாபமாக சொன்ன மித்ராவைப் பார்க்கையில் உண்மைக்கும் பாவமாகத்தான் இருந்தது.

நவிலன் சிரிப்பதா வருத்தப்படுவதா என்று தெரியாமல் ஸ்கூட்டியோடு விழுந்துகிடந்த அவளை தூக்கிவிட்டான்.

" ஏதாவது அடி பட்டிருக்கா..?"

" அதெல்லாம்...ஒன்றும் இல்ல..." அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே செக்யூரிட்டி ஓடிவந்துவிட நவிலன் அவரை சமாளித்தான்.

" என்னடா சிரிப்பு உனக்கு..?" தன்னைப் பார்த்து சிரித்த தம்பியை எரித்துவிடுவது போல பார்த்துவிட்டு சொன்னாள்.

" இல்ல.. உண்மைக்கும் உனக்கு எவன் லைசென்ஸ் கொடுத்தான். உண்மையை சொல்லுக்கா.. காசு கொடுத்து தானே லைசென்ஸ் வாங்கின..? "

" சும்மா இருடா.. ஸ்கூட்டி என்னாச்சோ.. ஒரு கை புடிடா.." என்று சொன்னாள்.

ஸ்கூட்டி பாவம். இந்த முறையும் சேதாரம் தான். அதற்குள் செக்யூரிட்டியை சமாளித்த நவிலன் திரும்பியிருந்தான்.

" என்னங்க.. அடி பட்டிருக்கா..?" அக்கறையோடு விசாரித்தான்.

" ஸ்கூட்டிக்கு தான் அடி. " என்று வருணிடம் இருந்து நமட்டு சிரிப்பு வந்தது. அவனை கோபப்பார்வை பார்த்தாள் மித்ரா.

" ஒன்னுமில்ல நவிலன். ஐ ஆம் ஓக்கே.. "

" என்ன ஓக்கே. அங்க பாருங்க முழங்கைல அடி பட்டு ரத்தம் வருது.."

" அது பெருசா எதுவும் இல்லை.."

" ஆமா.. அது ஒன்னும் இல்ல.. நல்லவங்க ரத்தம் தான் கீழ சிந்த கூடாது. உன் ரத்தம் சிந்தலாம் அக்கா.." என்று நேரகாலம் பார்க்காமல் ஜோக் அடிப்பதாக நினைத்து ஏதோ பேசினான் வருண்.

" வருண்.." என்று லேசாய் நவிலன் அதட்ட அவன் அமைதியானான்.

" முதல்ல வாங்க மருந்து போடுவோம்.." என்று அவனுடைய காரில் இருந்து பஸ்ட் எய்ட் கிட் எடுத்து அவளை அங்கேயே அந்த சிலைக்கு அடியிலேயே உட்கார வைத்து மருந்து போட்டான். அவள் மறுப்பே சொல்லவில்லை. அவளது நெற்றியில் லேசான ஒரு சிராய்ப்பு. தன்னுடைய விரல்களே அவள் மீது படாமல் பிளாஸ்டர் ஒட்டினான்.

" நான் ஒன்று கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டிங்களே.." என்றான்.

" தெரியும் நீங்க என்ன கேட்க போறிங்கனு.. எனக்கு லைசென்ஸ் கொடுத்தது யாருனு தானே.." என்றாள் சங்கமித்ரா.

" ஐயையோ.. அது இல்ல.. உங்க வீட்ல ரெண்டு பேரையும் ட்ராப் பண்ணட்டுமானு கேட்க வந்தேன்.. இந்த ஸ்கூட்டி ஓடும்னு நான் நினைக்கல.." என்றான்.

" நானும் நினைக்கல.." வருண் பின்னால் இருந்து குரல் கொடுத்தான்.

மித்ராவுக்கு சிரிப்பு வந்தது. அவனும் அவளை கிண்டல் தான் செய்யப்போகிறானோ என நினைத்து அவளாக வாயைக் கொடுத்து மூக்கை உடைத்துக் கொண்டாள்.

ஸ்கூட்டியைப் பார்த்தாள். செல்போனை எடுத்தாள்.

" ஹலோ மணி.."

அந்தப்பக்கம் அவன் தன்னுடைய வழக்கமான வாடிக்கையாளரையும் அவளது சாகசங்களையும் ஊகித்திருக்க வேண்டும்.

" என்ன பதினேழாவதா..?" என்றான் சிரிப்பு கலந்து. இந்தப்பக்கம் இவள் நவிலனையும் வருணையும் அசடு வழிய பார்த்துக்கொண்டே " ம்.." மட்டும் சொன்னாள்.

" க்கா.. எங்க இருக்கிங்க..?" அவனுக்கு அன்று வேலை கொடுத்த கறுப்பு பைக்கிற்கு ஆயில் ஊற்றிக் கொண்டே பேசினான்.

" ஆர். ஜீ கிரவுண்ட். ஏன்டா..?"

" ஆ.. அங்க இருந்து வெளிய வந்து லெஃப்ட் சைட்ல திரும்பி ஒரு நூறு மீட்டர் வந்தா ஒரு ரோடு போகும். அந்த ரோட்ல நேரா போங்க. அப்பிடியே போகைல ஒரு ஆலமரத்தோட ஒரு புள்ளையார் இருப்பாரு.. அதோட ஒரு குட்டி ரோடு போகும்.. அப்படியே போனா.. ஒரு ஐம்பது மீட்டர்ல.."

" மெக்கானிக் ஷாப் இருக்கா..?" அவனை முடிக்கவிடாமல் கேட்டாள்.

" இல்ல.. பழைய இரும்பை வெலைக்கு வாங்குற ரத்ணபாண்டி அண்ணே கடை இருக்கு. அங்க போய் உங்க வண்டியை விட்டுட்டு அவரு காசா எதாவது தந்தா வாங்கி அதுல நல்லதா நாலு ஆரஞ்சு வாங்கி சாப்பிட்டுகிட்டே வீட்டுக்கு போங்க.." என்று சொல்லி காலை வாரினான்.

"டேய்.. ரொம்ப ஓவரா பேசுற மணி.."

" போனை வைக்கா.. ஞாயித்து கெழமை கூட வீட்ல இருக்காம எங்கயாவது போய் முட்டிக்கிட்டு போன் பண்றது.."

" தம்பி .. ப்ளீஸ்.. வாயேன்.."

அவன் யோசித்தான்.

" எக்ஸ்ட்ரா காசு தருவியா..?"

" தாரேன் மணி சார்.." அவன் ஒத்துக்கொண்டதும் வருணோடு நவிலனின் காரில் கிளம்பினாள்.

வருண் முன்னே அமர்ந்துகொள்ள சங்கமித்ரா பின்னே அமைதியாய் அமர்ந்து கொண்டாள். முகத்தை சோகமாக வைத்துக்கொண்டாள். வருணும் நவிலனும் சுவாரஸ்யமாக கிரிக்கெட் பற்றி பேசிக்கொண்டு வரவே அங்கு சங்கமித்ராவுக்கு பேச எதுவும் இருக்கவில்லை. கடைசியில் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அதை பிறகு சொல்கிறேன்.

அக்காவும் தம்பியும் ஃப்ளாட்டின் முன் இறங்கிக்கொண்ட போது ஐராவதம் சன் டிவியில் என்பத்தேழாவது தடவையாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்த 'சிங்கம்' திரைப்படத்தை ஏதோ முதல் முறையாக பார்ப்பது போல ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். நவிலனுக்கு நன்றியை உதிர்த்த சகோதர முத்துக்கள் விடைபெற்றுக்கொள்ள அவன் காரை கிளப்பிக்கொண்டு போனான். அவனுடைய கார் புள்ளியாகி மறைவதையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு திரும்பிய மித்ராவைப் பார்த்து " க்கா.. உன் கைல எப்படி அடிபட்டிச்சுனு கேட்டா என்ன சொல்றது..?" என்று புத்திசாலித்தனமான கேள்வியோன்றை கேட்டான் வருண்.

" ம். லைப்ரரி வாசல்ல விழுந்துட்டேனு சொல்லுவோம்.." என்று இருவரும் ஒரு கதையை தயார் செய்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

" இனிமே உன் கூட வரக்கூடாதுடா சாமி.. உயிருக்கு உத்தரவாதம் இல்லை.." என்றான் தம்பி.

" ஏண்டா சொல்ல மாட்ட.. உன்னை ரகசியமா கூட்டிகிட்டு போய் கிரிக்கெட் விளையாட விட்டேன் பாரு.. என்னை சொல்லனும்.." என்று கோபப்பட்டாள்.

" ஐயோ.. என் செல்ல அக்கா தானே.. சும்மா சொன்னேன். நீ என் தங்கம்.. வைரம்.. வைடூரியம்.. "

" போதும். உருட்டினது.. வந்தாச்சு.." என்று காலிங் பெல்லை அழுத்தினாள்.

" என்னடீ.. இவ்வளவு லேட்டு.. இதென்ன காயம்..? என்னாச்சு மித்ரா..?" என்று கதவு திறந்த பதறினார் பாமா. இருவரும் சேர்ந்து உருவாக்கிய கதையை அவிழ்த்துவிட்ட போதும் ஐராவதம் பதில் பேசவில்லை. ஆனால் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.

கார் ஓட்டிக்கொண்டு சென்ற நவிலனுக்கு சங்கமித்ரா ரிவியூவ் மிரரில் கற்பனையில் தெரிந்தாள். வரும்போதே அவள் பார்க்காத பொழுதுகளில் அவளை ரசித்துக்கொண்டு தான் வந்தான். அவள் நெற்றியில் ஒட்டப்பட்ட ஃளாஸ்டரின் மீது வந்து மோதிய அவளது முன்கற்றை முடிகள் காற்றுக்கு அசைந்தாடின. அவற்றை அவள் ஒதுக்கிவிடும் போது ஒரு அழகு வந்து போனது அவளிடத்தில். ஏனோ அவனுக்கு அவளது அதிகம் பேசாத, அதே சமயம் கொஞ்சம் குறும்பும் நிறைந்த குணம் வெகுவாக பிடித்திருந்தது. சுகமாகவே வீட்டிற்குச் சென்றான் அவன்.

இரவு படுக்கையில் விழுந்த சங்கமித்ராவுக்கு தன்னை நினைத்தே லேசாய் சிரிப்பு வந்தது. காலையிலேயே அவளது உள்மனது ஏதோ சொன்னது. ' இன்னைக்கு ஏதோ நடக்கப் போகுது..' என்று. அப்போது தெரிந்திருக்கவில்லை. ஸ்கூட்டியும் அடியும் படும் என்று. அதை நினைத்தே சிரித்துக் கொண்டாள். நவிலன் நினைவுக்கு வந்தான்.

' இவரை ஏன் அடிக்கடி சந்திக்கும்படி ஆகுது..?' என்று யோசித்தாள். விடை தெரியாமல் தூங்கியும் போனாள். அடுத்தடுத்த நாட்களில் அதற்கு விடை கிடைக்கும் என்று தெரியாமல்.

அடுத்தநாள் காலை பதினோரு மணி.

அலுவலக நேரத்தில் சங்கமித்ராவின் முகம் சீரயஸாகத்தான் இருக்கும். அப்படி பேய் போலத்தான் வேலை செய்வாள்.

"மித்ரா! டீம் ஹெட் உன்னை கூப்பிடுறார்." போகிறவாக்கில் சொல்லிவிட்டுப் போனாள் லோ ஹிப் சாரி அணிந்த வெலண்டினா.

அறைக்கதவை தட்டிவிட்டு சம்மதமாய் பதில் கிடைத்ததும் உள்ளே நுழைந்த சங்கமித்ரா அன்று கறுப்பு நிற சுடிதாரில் இருந்தாள். காதுகளில் பெரிய ஜிமிக்கி அசைந்தாடி தன் கடமையை தவறாமல் செய்தது.

"ஹாய் ப்ளாக் டெவில்... " என்று அவளை வேடிக்கையாய் அழைத்த தீபக் மெஹராவிற்கு வயது நாற்பத்தொன்பது தான் இருக்கும் . கொஞ்சம் ஜாலி டைப். அது அவர் அவளை அழைத்த விதத்திலேயே தெரிந்திருக்கும்.

" சிட் டவுண் க்ர்ள் .." சங்கமித்ரா அவர் எதிரே அமர்ந்தாள்.

"ஒரு புது ப்ராஜெக்ட். அது சம்பந்தமா பேசத்தான் உன்னை கூப்பிட்டேன். 'வாசன் குரூப் ஒப் கம்பனி' பற்றி கேள்வி பட்டிருக்கியா..?"

"ஆமா சார். பெரிய அளவில பிசினஸ் செய்றவங்க.. அவங்க கம்பனியோட கிளைகள் எல்லா ஊர்லயும் மாசத்துக்கு ஒரு தடவை ஆரம்பிச்சுகிட்டு இருக்காங்க. அந்த பேச்சுதான் எல்லா இடமும்.."

"ஆமா. அவங்க ஒரு விளம்பரம் பண்ணித்தர சொல்லி நம்மளை கேட்டிருக்காங்க. இட்ஸ் எ பிக் ஆப்பச்சுனிட்டி.. இந்த அட்ரஸ்ல போய் பாரு.. மார்னிங் டென்க்கு... கம்பனி கார்லயே போயிடு... சக்சஸா முடிச்சிட்டு வா.."

அவர் தந்த கார்டை பார்த்ததும் மித்ராவின் மூளைக்குள் பொறி தட்டியது.

' இது நவிலன் தந்த கார்ட் மாதிரி... இருக்கே..'

ஆம். அதுவேத்தான்.

அதில் நவிலனின் பெயர் அவளைப் பார்த்து சிரித்தது. அப்போதுதான் அவளது களிமண் மூளைக்குள் பெல் அடித்தது.

' அடேங்கப்பா.. இவ்வளவு பெரிய பிசினஸ் மேக்ணட்டா நவிலன்..?'

' ஹேய் க்ர்ள்.. என்ன யோசனை?' தீபக் மெஹரா சொடக்கு போட்டார்.

"சார்.. என்னை விட எவ்வளவோ தகுதியான சீனியர்ஸ் இருக்காங்க. ஆனா என்னை எதுக்கு அனுப்புறிங்க.." என்று தன் சந்தேகத்தை கேட்டாள்.

"புரியுது. நீ வளர்ந்து வார இளம் தலைமுறை. இது உன் காரியரை வளர்த்துக்க நல்ல சான்ஸ். சோ யூஸ் இட்... உனக்கு வோணாம்னா சொல்லு.. அந்த சோம்பேறி மதனுக்கு கொடுக்கிறேன்.."

" இல்ல இல்ல நானே பண்றேன்.." பாய்ந்து பதில் சொன்னாள்.

" தட்ஸ் குட்.. இந்த ப்ராஜெக்ட் நமக்குத்தான் கிடைக்கனும். ஆல் த பெஸ்ட்..."

"தேங்க் யூ சார்." என்று விடைபெற்று தன் கேபினுக்கு வந்தாள்.

'நவிலனின் கம்பனிக்கா போகப்போகிறோம். நவிலனை பார்க்க முடியும்.? ஒரு விளம்பரத்துக்காக எம்டியேவா வந்து பேசுவார். வேற யாராச்சும் தான் கான்டாக்ட் பண்ணுவாங்க.' அவளை அறியாமலே நவிலனைப் பற்றி நினைக்கத்தொடங்கியிருந்தாள்.

ஆண்களுடன் நெருங்கிப்பழகத் தயங்கும் சங்கமித்ரா, நவிலனைப் பற்றி தான் நினைக்கத்தொடங்கியதை நினைத்து அதிர்ந்து போனாள்.

'நோ! நான் எதுக்கு நவிலனைப் பற்றி நினைக்கிறேன்.. இது நல்லதிற்கு இல்ல... திஸ் இஸ் நாட் மீ..' என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.

அடுத்தநாள் காலை சூரியன் மலர்ந்ததும் சங்கமித்ரா அவளையறியாமலே உற்சாகமாக கிளம்பினாள். இளம் நீலநிற காட்டன் சேலையை அணிந்துக்கொண்டு பலதடவை தன்னை கண்ணாடியில் பார்த்து பார்த்து தயாரானாள். வெகு சிரமப்பட்டு கண்ணுக்கு மையிட்டாள். சேலையில் தான் பெண்கள் எப்போதும் கம்பீரம் என்பது அவள் உணர்ந்த உண்மை. ஆதலால் முக்கியமானவர்களை சந்திக்கச் செல்கையில் சேலை தான் அவளது முதல் சாய்ஸ். கம்பனி காருக்காக காத்திருந்த பத்து நிமிடத்தில் பதிமூன்று தடவை செல்போனில் தன்னை பார்த்துக்கொண்டாள். தன்னை அறியாமலே அவள் இதெல்லாம் செய்துகொண்டு இருந்தாள். கார் வந்ததும் பதட்டத்தோடு கிளம்பினாள்.

' வாசன் க்ரூப் ஒப் கம்பனி' பணத்தை வாரி இழைத்து கட்டியதன் விளைவாக இருபத்து மூன்று மாடிகளாக உயர்ந்து ஓங்கி நின்றது. அன்னார்ந்து பார்த்தவாறே இறங்கியவள் சேலையை சரி செய்துகொண்டே நடந்தாள். கால்தடம் பட்டதும் திறந்து கொண்ட தானியங்கி கதவுகளை கடந்து உள்ளே நுழைந்தாள்.

கடுஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக் பூசி தன் பற்களை காட்டி விசாரித்த ரிசப்ஷனிஸ்டிடம் வந்த தகவலை சொன்னதும், ஒரு தொலைபேசி அழைப்பில் பேசிவிட்டு நிமிர்ந்த அந்தப்பெண் அவளை கான்பரன்ஸ் ஹாலில் காத்திருக்கச்சொல்லி வழி காட்டினாள்.

அவள் சொன்ன வழியில் சென்ற சங்கமித்ரா தனது ரிஸ்ட்வாட்சை ஒருதரம் பார்த்தாள். அது அவளது செண்டிமெண்ட் வாட்ச். மதுபாலாவினுடையது. அவளைப் பற்றிய ஞாபகம் திடுமென வர பதட்டமானாள். ஹேண்ட் பாக்கை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தொண்டையை நனைத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு திரும்பினாள். மணி பத்தாக இன்னும் ஒரிரு நிமிடங்களே இருந்தன.

உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் சங்கமித்ரா திகைத்து எழுந்தே விட்டாள்.

"அட மித்ரா! நீங்க எங்க இங்க....?" அவன் குரலை கேட்டதும் எச்சில் விழுங்கினாள்.

"நான் 'விக்டரி ஆட் ஏனென்சி'யில இருந்து வாரேன்." தெம்பாகவே பதில் சொன்னாள்.

"அட.. நீங்க அங்க அங்கதான் வர்க் பண்றிங்களா...? உங்களை நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆக்சுவலா நீங்க என்ன வேலை செய்றிங்கனு நான் கேட்டுக்ககூட இல்ல.. ஐ ஆம் ஸாரி.. எனிவே.. வெல்கம் டூ மை ஆபிஸ்." புன்னகையை தாராளமாக வீசினான்.

அவள் புன்னகையொன்றை புன்னகைத்தாள். அந்த நேரம் அவளது கன்னங்களில் சிவப்பு நிறம் கூடியது.

"உட்காருங்க.. காபி?" என்றவாறு இருக்கையை காட்டினான்.

"இல்ல வேண்டாம் சார்." மறுத்தாள்.

"போச்சுடா.. மறுபடியும் சாரா...?" சாதாரணமாக பேசினான்.

"இப்ப நான் வேலையில இருக்கேன் சார்..." என்று சிரித்தாள். அந்த சிரிப்பில் அவன் மனம் குளிர்ந்தது.

"ம்..கடமை கண்ணியம்.. கட்டுப்பாடு.. குட் பாலிசி..."

அவள் திகைத்தாள். அவளை ஆபிஸில் சக பணியாளர்கள் அப்படித்தான் அழைப்பார்கள். இவனும் அதையே சொல்கிறான் என்று நினைத்து மௌனமாய் சிரித்தாள்.

"சரி மித்ரா. எனக்கு இப்ப காபி குடிச்சே ஆகனும். சோ உங்களுக்கும் சேர்த்து சொல்றேன்.."என அவள் பதிலுக்கு காத்திராமல் ஆர்டர் செய்தான். அவளால் மறுக்க முடியாமல் போனது.

அதன் பிறகு அவர்கள் வேலையைப் பற்றி மட்டுமே பேசினார்கள். அவன் புதிதாக திறக்கவிருக்கும் பர்னிச்சர் ஷோ ரூம்க்காக ஒரு விளம்பரம் செய்து தரச்சொல்லி கேட்டான்.

அவள் எல்லா விபரங்களையும் கேட்டு குறித்துக்கொண்டாள். அவன் எதிர்பார்ப்பது என்னவென தெளிவுபடுத்திக்கொண்டு அடுத்த நாள் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அவளை அவன் வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்ததை அவனுடைய ஒட்டுமொத்த ஆபிஸூம் பார்த்து தங்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொண்டது.

அவள் கிளம்பிச் சென்றதும் அவனுக்கு இறக்கை கட்டி பறப்பது போல இருந்தது. தன்னுடைய சுழல் நாற்காலியில் அமர்ந்தவன் ஒரு சுற்று சுற்றினான். சந்தோஷத்தில் மிதந்தான். கடவுளாக அவளை தன்னிடத்தில் அனுப்புவதாக உணர்ந்தான்.

அவள் வரப்போகும் அடுத்த நாளுக்காக காத்திருந்தான்.

ஆட்டம் தொடரும் ❤?
 
Last edited:
Nice epi dear.
Yedi,silai kooda aana irrunthal adichu thookurathu thana??nalla policy.
Yedo Varunu, unn two wheeler driver ippadi irrunthal uyir ku guaranty illapa.
Dai Mani paya ,aval scooty ah pazhya irrumbuku kadayilla potta nee enthu seyum?? unn valuable customer ah appadi sollatha. Avale unnaku soru podum theyvam da monnae.
Deepak sir, unga ooril devil colour colour ah thiriyuthu pola???
Sangi ad company la vela parkurathu Navi ku theriyathu.... naan nambitan, ningalu ellavarum nambanum seriya.( nambala?? Kanavula pei varum. olunga nambidungo.)ok thambi, ellavarukum ok than.
Yedi Sangi, unn make up vera katha solluthey?? Entha kaariyam??
 
நெஜமா ஹீரோக்கு தெரியாதாம். அவன் தான் நல்லவனாச்சே. ? நம்புங்க.
Thank you for your lovely review Leenu❤️
 
ஆட்டம் தொடரும் ❤️?
Nirmala vandhachu ???
 
Top