Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 12

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
நல்ல உறக்கத்தில் இருந்தவளுக்கு யாரோ தன்னைஅழைப்பதை போல் இருக்க ..முந்தைய தினம் உறங்காதது கண்களை திறக்கவே முடியவில்லை ..ஆனாலும் யாரோ அழைக்கும் ஒலி அவள் ஆழ் மனதைத் தீண்டியது. இதுவரை அவள் கேட்டிராத குரல் ..ஆனால் அவளே அடைக்கலம் போல் .. கண்மணி என்றழைக்கும் அவலக் குரல் ! அதுவும் ஆண் குரல் !சற்றே திரும்பி சன்னலைப் பார்க்க.. ஒரு ஆணின் பிம்பம் முகம் முழுக்க ரத்தம் வழிய நின்றிருந்தது.

பார்த்துக் கொண்டிருந்த கண்மணிக்கு இதயம் எம்பி குதிப்பது போல் இருக்க..உற்று நோக்கும்போது தான் தெரிந்தது..அது முன்தினம் தோப்பில் பார்த்த அதே ஆடவன் தான்.

கண்களில் கண்ணீர் வழிய... நெற்றியிலும் கன்னத்திலும் அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருக்க .. "என்ன மறந்துட்டியே கண்மணி " எனவும் தூக்கி வாரி போட எழுந்து அமர்ந்தாள் கண்மணி .

சன்னலில் பார்த்தால் நன்றாக அடைத்து அறைக்குள் ஏசி போட்டிருந்தது. யாரும் இல்லை..
கனவு தான் போல என்று ஆசுவாசப் பட்டுக்கொண்டாள்.

நேற்று கதிரைப் பார்த்ததில் இருந்து அந்த அடிபட்டவனை மறந்திருந்தாள். இப்போது ஆழ் மனதில் இருந்து அவன் நினைவு தன்னிச்சையாய் மேலெழ ..அவனுக்கு என்ன ஆனது என்று தெரிந்தே ஆக வேண்டும் போல் இருந்தது கண்மணிக்கு.
மொபைலை எடுத்து மணி பார்க்க ஐந்து என்றது.
கட்டிலை விட்டு இறங்கியவள் திரைசீலையை விலக்கிப் பார்க்க லேசாக கிழக்கு வெளுக்க தொடங்கியிருந்தது.

இவளது இருபுறமும் தன்யஸ்ரீயும் சோபிதாவும் அசந்து தூங்கி கொண்டிருக்க .. இன்னும் சற்று நேரத்தில் வீடே விழித்துவிடும் என்று உணர்ந்தவளாய் ..வேகமாக கீழே இறங்கி வந்து செருப்பை மாட்டிக் கொண்டு பின் வாசல் வழியாக தோப்பை நோக்கி நடந்தாள்.

வேகமாக நடந்தவளுக்கு தோப்பின் அருகே வந்ததும் சற்று தயக்கமாக இருந்தது.

இருட்டாகவும் இருக்க மொபைலின் லைட்டை ஆன் செய்து வேக வேகமாக நடந்தாள்.
அந்நேரம் தோப்பிற்கு தண்ணீர் பாய்ச்சும் முத்துவும் வந்திருக்கவில்லை .
மோட்டார் அரைப்பக்கம் சென்றவள் முன்தினம் தான் அவனை கண்ட இடத்திற்கு சென்று பார்க்க அவன் அங்கே இல்லை.

ஒரு வேளை தான் கண்டது பிரமையோ என்று தோன்ற இல்லை என்பது போல் தரையில் சிந்தி இருந்த குருதி அப்படியே இருக்க ..அவனை எங்கே தேடுவது?

முதலில் தான் இப்படி வந்தது சரியா ..அவன் தவறானவனாக இருந்தால் ? அவனிடம் தான் மாட்டிக் கொண்டால் ? என்று எண்ணற்ற கேள்விகள் மனதில்.

உள்ளுக்குள் ஏதோ ஒன்று அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல தன உள்ளுணர்வை நம்பியவளாய் அவனை தேட வெகு லேசாக முனகல் சத்தம் கேட்பது போல் இருக்க அந்த திசை நோக்கி நடந்தவள்...மோட்டார் அறையின் உள்ளிருந்து தான் சத்தம் வருகிறது என்று அறிந்து கொண்டாள். கதவோ வெளிப்புறமாக சாற்றி பூட்டு போடப்பட்டிருந்தது.

ஒரே ஒரு சிறு சன்னல் இருக்க அதன் கதவை திறந்தவளுக்கு வெறும் இருள் மட்டுமே இருக்க மொபைல் வெளிச்சத்தை உள்ளே பாய்ச்சினாள் .

உள்ளே ஒரு ஓரமாக கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் குற்றுயிரும் குலையுயிருமாக அந்த பையன் கிடப்பது தெரிய ..இவளுக்கு திக்கென்றது.

வெளியிலிருந்து ஏதோ ஒரு ஒளி உள்ளே விழுவதை பார்த்த அவன் "காப்பாத்துங்க ..ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க " என்று தீனமான குரலில் அழைக்க ..

இதற்குள் தோப்பின் முன்புறமுள்ள இரும்பு கேட்டை திறக்கும் 'க்ரீச்' ஒலி கேட்க முத்து வந்துவிட்டான் என்பது புரியவும் இதற்கு மேல் தான் இங்கே நிற்க முடியாது என்று அறிந்தவளாய்..வேகமாக தான் வந்த பின்புற வழியாக வீட்டிற்கு திரும்பினாள்.

வீட்டிற்கு வந்தவள் வேலைக்காரி வாசல் பெருக்கி தெளித்து கொண்டிருக்க பின் வாசல் வழியாக மெல்ல உள்ளே நுழைந்தாள்.
யாரும் இன்னும் விழித்திருக்கவில்லை .
வடிவின் அறையில் மட்டும் சத்தம் கேட்க ..பூனை பாதம் வைத்து மாடியேறியவள் மயக்கம் வரும் போல் இருக்க தன் படுக்கையில் சென்று அமைதியாக படுத்துக்கொண்டாள்.
 
அப்போ அந்த பையனை அடித்து போட்டு அடைத்து தான் வைத்து இருக்காரா இவள் அப்பா ...
எப்படி காப்பாற்ற போகிறாள்..?
சூப்பர் 😀
 
Top