Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கெளதம் பேகனின் "தீரா ஊடல்"

Advertisement

Gowtham began

Member
Member
ராஜூமுருகனுக்கு ஆத்திரம் பொத்திக்கொண்டு வந்தது. என்றைக்கும் இல்லாத அளவு இன்று தன் மனைவி ஷீலாவை நினைத்து கோபம் தலைக்கேறியது.

என்ன ஜென்மம் இவ!!! இந்த இன்னும் எவ்வளவு தான் பொறுத்து பொறுத்து போகிறது!! கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கா இவளுக்கு ??

எவ்ளோ தடவ சொன்னாலும் திரும்ப திரும்ப அதையே பண்றது, அது என்ன புருஷன் சொல்றதை கேக்க கூடாதுங்கிற எண்ணம்!! பொறுப்புங்கிறது ஒரு துளி இருக்கிறது இல்ல!!

நான் மட்டும் இதே நேரம் இப்படி பண்ணிருந்தா என்ன எல்லாம் பேசிருப்பா !! எல்லாமே நாம தான்… அவங்களுக்கு என்ன நடந்தாலும் அதுக்கு நாம தான் காரணம்…
ஆனா நம்ம சொல்றத காது குடுத்து கேக்க கூட யோக்கியதை இல்ல !!

என்னடா ஒரு மனுஷன் கூட இருந்து சொல்றானே,.. அவனை கொஞ்சமாச்சும் மதிப்போம்.. எதுவும் கெடயாது.. இவன் சரியான லூசு தானே எதாவது ஒளறிட்டு இருப்பான், தான் மட்டும் தான் உசத்தி.. மத்த எல்லாரும் கிறுக்கனுங்க பாரு.. நல்லா வந்துர போகுது வாயில !!

அவ குடும்பத்துல மட்டும் அவங்க சொந்தகாரங்க எல்லாம் வானத்துல இருந்து குதிச்சு வந்தவங்க.. நாங்க ல ஏதோ பெத்து விட்டவங்க பாரு… இவளோட அண்ணணை அன்னைக்கு நான் போய் சரியா கவனிக்கலயாம்.. ஏன் எங்க வீட்டுக்காரங்கல நீ என்ன தலைல தூக்கி வெச்சிட்டு ஆடுன ..அவங்க வீட்ல இருந்த அப்போ ல சதா சர்வமும் மூஞ்சிய உர்ர்ன்னு தானே வெச்சிட்டு இருப்ப…
நானும் அதே மாதிரி இருக்கட்டுமா?? உடனே நான் தப்பு அதுவே அவ பண்ணா அது உத்தமம்!!!



பசங்க முன்னாடி நானும் சண்டை போட கூடாது னு பொறுத்து பொறுத்து போனா கூட விட்டது இல்ல.. வேலை ல முடிச்சுட்டு ஒருத்தன் வாரான் அவனை கொஞ்சம் நிம்மதியா விடுவோம்,
எதுவும் நெனைக்கிறது கிடையாது… சந்தோஷமா வெச்சிக்க வேணாம், கொஞ்சம் அமைதியாவது வெச்சுக்கலாம் ல வந்த உடனே உங்க வீட்ல இத சொன்னாங்க அத சொன்னாங்க என்ன ல பண்ணிருக்கீங்க னு போன ஜென்மத்து கதை ல ஆரம்பிச்சு அடுத்த ஜென்மம் வரைக்கும் பேசி பேசி வம்பு இழுக்கிறது .. அவ குடும்பத்துக்கே நல்ல எண்ணம் இருக்குறது இல்ல போல… போதும் டா சாமி!!

இவ பேச்சை மட்டும் கேட்காம இருந்தா இன்னும் நல்லாவே முன்னேறிருப்பேன் வாழ்க்கையில… வீடு கட்டுற போதும் ஒரு நொட்டை சொல்றது, FD ல பணத்தை கட்டும் போதும் ஒரு நொட்டை சொல்றது… நொட்டை சொல்றதுக்கு மட்டும் வந்துருது,, சரி அப்போ நீ எதையாவது ஒழுங்கா பண்ண வேண்டியது தானே அதுக்கு துப்பு கெடயாது!! எதை எடுத்தாலும் குத்தம்.. எதை செஞ்சாலும் குத்தம்… குத்தம் குத்தம் னு குத்தி குத்தி என் நிம்மதியே கெடுத்துட்டா..

ஏன் டா இந்த கல்யாணத்தை பண்ணி தொலைச்சோம் னு தோணும் எப்போவுமே…ச்சை… வரேன் இன்னைக்கு அவளா நானா னு ஒன்னு பாத்துடறேன்!!

என்றபடி ராஜூமுருகனின் ஆன்மா பரபரத்து கொண்டு இருந்த போதே அவரின் உடலை வீட்டின் மூலையில் தெற்கு பக்கம் பார்க்கும் படி கிடத்தி இருந்தனர். பக்கத்தில் அவரின் Frame போட்ட புகைப்படத்திற்கு பொட்டு வைத்து, பூ மாலை அணிவித்து விளக்கு ஏற்றி இருந்தார்கள். பின்னால் இருந்த சுவற்றில் மனைவி ஷீலாவின் பெரிய சைஸ் புகைப்படத்திற்கும் அதே போல் பொட்டும், மாலையும்…

அம்மா போன ஒரே மாசத்துல அப்பாவும் இப்போ போய்ட்டாரு ரெண்டு பெரும் சண்டை போட்டுக்காத நாளே இல்ல… பேசமுடியாத நிலமைல கூட ரெண்டு பேருக்கும் மூஞ்சி உம்ம்ன்னு தான் இருக்கும்.. அதனாலேயோ என்னவோ சண்டை போட ஆள் இல்லாம அப்பா இந்த ஒரு மாசம் மூலைலேயே முடங்கி கிடந்தாரு.. பாக்கவே கஷ்டமா இருந்துச்சு.. இனிமேலாச்சும் சண்டை போடாம ரெண்டு பேரோட ஆன்மா நிம்மதியா இருக்கட்டும்!!!


நீ உண்மையிலேயே அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டு கஷ்டப்பட்டு வாழ்ந்துட்டு இருந்தாங்க னு நினைச்சியா?? அவங்களோட இவ்வளவு வருஷ லவ் eh இந்த சண்டைல தான்டா இருக்கு.. இப்போ கூட அவரு அம்மா கிட்ட ஏன் என்னக்கு முன்னாடியே நீ போய்ட்டனு ஒரு Belongingness ல தான் சண்டை போட போயிருப்பாரு…


என்று மூத்த மகன் கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே ராஜூமுருகனின் உடலில் இருந்து சட்டென்று கண்ணுக்கு தெரியாத புகை ஊடுருவி வெளியே சென்று விட்டிருந்தது……..
 
Top