Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொலுசு சத்தம்

Advertisement

Crazy Queen

Well-known member
Member
"ஏய் சாந்தி! மணி எட்டாச்சு. இன்னும் என்ன சமையல் அறையில் பாத்திரத்தை உருட்டிக் கிட்டு இருக்கிறாய். சீக்கிரம் சாப்பாடு எடுத்து வை. ஆபிசுக்கு நேரமாச்சு" என்று கத்தினான் ரவி.

"இதோ வந்துட்டேங்க. பையன ஸ்கூலுக்கு அனுப்பி வைக்க தேவையான எடுத்து வெச்சிட்டு இருந்தேன்" என்றாள், சாந்தி.

"நானும், பையனும் கிளம்பிப் போனதும் உனக்கு வீட்ல என்ன வேலை இருக்கு. எங்களுக்காக மதிய சாப்பாடு செய்யும் போது உனக்கும் சேர்த்து காலையில சமைச்சிடுறே. மதியம் சமையல் வேலையும் மிச்சம். சாப்பிட்டுட்டு வீட்டில படுத்து தூங்கு தானே போகிறாய். காலையில் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து வேலை செஞ்ச நேரத்துக்கு வேலையை முடித்து இருக்கலாம்லே" என்றான்.

சாந்தி எதுவும் பேசவில்லை. தனது வேலையிலே முழுமூச்சாக இருந்தாள். இது தினம் நடக்கும் அர்ச்சனை தான். ரவிக்கு மட்டும்தான் வெளியே சென்று கஷ்டப்பட்டு உழைக்கிறோம். சாந்தி வீட்டில் நாள் முழுவதும் ஏ.சி.யில் படுத்து தூங்கிறாள் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.

தன்னுடன் ஆபீஸில் வேலைபார்க்கும் பெண்களுடன் மனைவியை ஒப்பிட்டுப் பார்த்து அவர்களைப் போல் இவள் சுறுசுறுப்பாக இல்லையே என்று ஆதங்கப்பட்டான். சாந்தியை தனது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யும்போது கூட, 'இது என் மனைவி. ஹவுஸ் ஒயிப். ஒரு வேலையும் கிடையாது. நிம்மதியா சாப்பிடு தூங்கி எழுவது தான் வேலை. அதிர்ஷ்டக்காரி' என்ற குத்தலாக சொல்வான். சாந்தி அதற்கும் வருத்தப்படமாட்டாள்.

அர்ச்சனை முடித்துக்கொண்டு அவன் வேலைக்கு கிளம்பிக் போனதும் வீடு குப்பை கூளம் போல் காட்சி அளித்தது. படுக்கை அறையில் போர்வை விரிப்புகள் அப்படியே கிடந்தன. அவற்றை ஒழுங்குபடுத்தினாள். மகன் விளையாடிவிட்டு அப்படியே போட்டிருந்த பொருட்களை ஒதுக்கி வைத்தாள். வீட்டை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு காலையில் சமைத்த பாத்திரங்களை கழுவினாள். வீடு முழுவதும் கழுவி சுத்தம் செய்தாள். அதற்குள் மணி ஒன்றைத் தாண்டி இருந்தது சாப்பிட்டு விட்டு துணிகளை துவைக்க சென்றாள்.

மணி மூன்றை நெருங்கியதும் குளித்துவிட்டு மகனே பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வர புறப்பட்டாள். மகனை அழைத்து வரும் வழியில் இரவு உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டாள். வீடு வந்து சேரவும் செல்போன் ஒலித்தது. எதிர்முனையில். " மேடம் சாரோட ஆபீஸில் இருந்து பேசுறேன். சார் ஒரு கெமிக்கல் சோதனை செய்த போது தவறுதலாக அவர் கண்ணில் பட்டுவிட்டது. பயப்பட ஏதுமில்லை ஒரு வாரம் மட்டும் கண்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் ஓய்வில் இருக்க வேண்டும். அதற்குள் மருந்தின் வீரியம் குறைந்து சரியாகிவிடும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் உடனே ஆபீசுக்கு வர முடியுமா?" என்றார்.

சாந்தி பதறியடித்துக் கொண்டு ஓடி. ரவியை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வந்தாள். ரவி சோபாவில் அமர்ந்தபடி பொழுது போக்கினான். அவனை நன்றாக கவனித்துக் கொண்டாள். அத்தோடு வழக்கம்போல் தனது அன்றாட வேலையும் மூழ்கினாள்.

ஐந்து நாட்கள் கடந்த நிலையில் பிரவீன் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. 'சாந்தியம்மா' என்று அன்போடு அழைத்தான். அவளிடம் பேசும்போது பழைய அதிகார தோரணை இல்லை. அந்த மாற்றங்களை சாந்தி கவனித்தாலும் கணவனிடம் எதுவும் கேட்டுக் கொள்ள வில்லை.

ரவி கண்கள் குணமாகி ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தான். அன்று மாலையில் சாந்தி மகனை வீட்டுப்பாடம் எழுத வைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவனை அவளை அழைத்து, "ஏன் சாந்தியம்மா... எனக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு அதற்குப் பிறகு என்னிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பது உனக்குத் தெரியவில்லையா ?" என்று கேட்டான்.

"தெரியுதுங்க."

"பிறகு ஏன் எதுவும் கேட்கவில்லை?"

"நீங்களே சொல்லுவீங்கன்னு காத்திருந்தேன், நானாக ஏதாவது கேட்டா நீங்க கோபப்பட்டால் உங்க உடம்புக்கு ஆகாதே... அதான் கேட்கலை" என்றவளின் கையில் மெல்லை பற்றிய ரவி, "முதல்ல என்னை மன்னித்துவிடு. இவ்வாறு நாளாக நீ இந்த வீட்டு காகவும், எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாய் என்று தெரியாமல் உன்னை திட்டி விட்டேன். உன் விஷயத்தில் என்னை கண் பாதிப்புக்கு பிறகு தான் எனது மனக்கண் விழித்திருக்கிறது. என் கண்களைத் திறந்தது எது தெரியுமா ? உன் கொலுசுகள் தான்" என்றான்.

சாந்தி புரியாமல் விழிக்க, "ஆமா சாந்தி... தினம் காலை முதல் இரவு வரை உன் கொலுசு சத்தம் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி என்றால் ஓய்வு எடுக்க நேரம் கிடைக்காமல் நீ ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டுதான் இருக்கிறாய் என்று தானே அர்த்தம். அப்படி கொலைக்கும் உன்னை வீட்டில் சும்மா இருக்கிறாய் என்று தவறாக நினைத்துவிட்டேன். உண்மை என்னை விட நீதான் அதிகமாய் அழைக்கிறாய். நான் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் கிளம்பும் முன் நீ சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. இனி நீ சாப்பிட்ட பிறகுதான் நான் சாப்பிடுவேன்" என்றான்.

அவள் சிரித்தாள். அதுவும் அவனுக்கு கொலுசு சத்தம் போல் கேட்டது!

❣️ எல்லாம் ஹவுஸ் வைஃப் வைக்கும் இது சமர்ப்பிக்கிறேன் ❣️
 
Top