
‘காதலை மட்டும் மனதில் நிறுத்தி தங்கள் தகுதிகளையும், கடமைகளையும் மறந்து, தன் விருப்பமென அவன்(ள்) நினைவோட்டமாக இருத்தல்.
மறத்தல்-10
“ஹாய் பாஸ்… நீங்க கொச்சினா?” தன் மனம் கவர்ந்தவளின் பெயரை எப்படி அறிந்து கொள்வது என்கிற சிந்தனையில் இருந்தவனை, மாதவனின் குரல் களைத்தது.
“ம்… ஆமா…” பதிலை உரைத்துவிட்டு சிந்தித்தான். பின், “ஏன் நேற்றைய இரவை டிரான்சிட் ஹோட்டலில் தங்கினேன் என்று கேட்பானோ?” என பதட்டம் ஒட்டிக் கொண்டது.
“மாதவன்…” நட்பின் அடையாளமாய் கையை நீட்டினான்.
புன்னகைக்காத இதழ்களை இழுத்து வைத்து, முகத்தில் ஒரு முறுக்கு புன்னகையை விரித்து, “அமர்நாத்…” என அவன் கை கொடுத்து அறிமுகத்தை முடித்தான்.
“கிரேட்… அதான் லோக்கல் அனிமல் அட்டாக்ஸ் தெரிஞ்சு வைத்திருக்கீங்க… எனிவே, எங்க ஃப்ரெண்ட்டை காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ் பாஸ்…”
‘என்னோட ஆளைக் காப்பாத்தினதுக்கு நீ ஏன்டா ஓவரா நெஞ்ச நக்குற…’ மைன்ட் வாய்ஸ் எக்குத்தப்பாக குமுறியது அமருக்கு.
“நீங்க எல்லாம் சென்னையா?” அவளைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டான்.
“யெஸ்… வீ ஆர் வொர்க்கிங் இன் ஐ.டி… செம்ம ஸ்ட்ரெஸ் பாஸ், அதான் ஹாலிடே ட்ரிப்புக்கு மாலத்தீவுக்கு கிளம்பிட்டோம்.”
“அப்ப சென்னையில இருந்தே போயிருக்கலாமே..?”
நீ ஏண்டா இங்க வந்த..? என்கிற மனதின் முணுமுனுப்பு அவனுக்கு. ஸ்ரேயாவின் தோழிகள் அவளுடன் இவனை இணைத்துப் பேசி, மாதவனைக் கண்டாலே அமருக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“இங்க ஓரு பெரிய ப்ராஜக்ட் பாஸ், அதுக்கு வந்தோம். அப்படியே அதையும் முடிச்சுட்டு மத்த ப்ரெண்ட்ஸ்சையும் இங்கே வர சொல்லிட்டோம். பட் எங்க லக் ப்ளைட் டிலேவாகி எங்க ப்ளான சொதப்பும்னு நினைக்கல..” மனதில் எதுவும் ஒளிவு மறைவு இன்றி எதார்த்தமாகவே பேசினான் மாதவன்.
அவனின் இந்த சுபாவம் பிடித்தும், அவனிடம் வெளிப்படையாக பேச வேண்டும் என்று தோன்றவில்லை அமர்நாத்துக்கு.
“ஒ.. எனக்கு ஒரு முக்கியமான கால் பேச வேண்டி இருக்கு.. வீ வில் டாக் லேட்டர்..” என கைபேசியை கையில் எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
‘என்னடா டிரஸ் இது? உவாக். அந்த மேன் எப்படி டிப்-டாப்பா டிரஸ் பண்ணுறான்.. மாத்தி தொல முதல்ல.’ என தன் எதிரே பாதி உருவத்தை பிரதிபலிக்கும் பெல்ஜியம் கண்ணாடியை பார்த்து புலம்பினான். அமரின் புலம்பல் நேசத்திற்குரிய அன்னைக்கு புலப்பட்டதோ என்னவோ, இதோ அழைத்துவிட்டார்.
“ஏன்.. மோனே, பொண்ணு.. கிண்ணுனு பின்னாடி சுத்தாம இருக்கப்பவே இந்த அம்மாவ மறந்துட்டல்ல. ரீச் ஆகிட்டேனா ஒரு கால் பண்ணி சொல்ல மாட்டியா. நீயா பேசுவ.. கால் பண்ணுவேன்னு வெயிட் பண்ணி பாத்துட்டு கூப்புடுறேன்.” அவனை பேசவிடாமல் எதிர்பக்கம் கைப்பேசியில் பேசித் தள்ளினார் திரிபுரசுந்தரி.
“அம்மே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. எனக்கு ஒரு கஷ்டம்னு வந்தா எப்படி மா கூப்பிட்டாம முன்னாடி வந்து நிக்குற.” குரலில் துள்ளல் வெளிப்பட்டது.
“என்ன சொல்ற மோனே.. ஏது கஷ்டம் உனக்கு? உடம்பு எதுவும் சுகமில்லையா..?” தனித்து இருக்கும் மகனை எண்ணி வருத்தம் கொண்டார்.
“அய்யோ.. மா, ஐ ஆம் ஆல்ரைட், எனக்கு ஒண்ணும் இல்ல. அதே சமயம் நான் இன்னும் மாலத்தீவு போகல, இங்க கொச்சின் ஏர் போர்ட்லதான் இருக்கேன்” என நேற்று இருந்து நடந்தவற்றை தாயிடம் சொல்லும் போது கூட அத்தனை காதல் குரலில் இசைத்தது.
அமரன் சொல்லி முடிக்க திரிபுரசுந்தரிக்கு எப்படி சாத்தியம்..! நேற்று வரை பெண் என்றால் இரண்டு அடி தள்ளி இருந்தவன், காதல் என்கையில் காத தூரம் விலகி ஓடியவனுக்கா..! இந்த தீடீர் காதல்..!! அவனின் குரலில் தென்பட்ட பரவசம் தாய்க்கு சந்தேகம் வந்து, அவர் அழைத்த எண்ணை சரியா என கைப்பேசி திரையை சோதித்துப் பார்த்தார்.
“ஹ..ஹ..ஹலோ.. மோனே அமர்..” பிசிரு தட்டியது அன்னையின் குரலில்.
தாயின் அதிர்ந்த விளிக்கும் செயலில் சிரித்தவன், “நீ அப்புறமா ஷாக்காகிக்கோமா.. நேத்து எனக்கு டிரஸ் பேக் பண்ணிங்கல்ல.. அத எடுத்து டிரைவர்கிட்ட எனக்கு கொடுத்து விடுங்க மா, ப்ளைட் இன்னும் திரி டூ போர் ஹார்ஸ்ல வந்துடும்.. பாஸ்ட்டா கொடுத்து விடுங்க மா..”
“அதின்னு கழியில்லா..” (அதெல்லாம் முடியாது) அன்னை முறுக்கிக் கொள்ள.
“ஒகே.. நீங்களே எடுத்துட்டு வாங்க.” அன்னையின் ஆர்வம் புரிந்தது.
“பொட்டிக்குல இருக்கேன்.. ஒரு அரை நாழியில வந்துறேன். பின்னே பொண்ணு பேர் என்னடா?”
“அது தெரியிலமா.. சீக்கிரம் வாங்க..” என்றவன் அவனது கடமையாக ஸ்ரேயா பின்னே சென்று அமர்ந்து கொண்டான். அவளின் மனநிலையோ குதூகலமாக இருந்தது, எப்போழுதும் இருக்கும் மன இறுக்கம் எதுவும் இன்றி ஏதோ புது உணர்வு அவள் இதயத்தை ஆட்கொண்டது. அவள் அறியாமலேயே அமரை ஓரப்பார்வை பார்க்கத் துவங்கினாள். தன்னை நோக்கும் அவளை முழுதாய் விழிகளால் விழுங்கிக் கொள்ள துடித்தான்.
‘கண்மூடி திறக்கும் போது கடவுள்
எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே!
குடை இல்லா நேரம் பாத்து
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து
இது தான் காதல் என்றாளே!
உன் பெயரும் தெரியாத
உன் ஊரும் தெரியாத
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா?’
அவளது விழிகள் காட்டிய மாயை அவனை சித்தம் கொள்ள வழக்கம் போல் கண்ணை மையப்படுத்தி பாடத் துவங்கினான். அமரின் பாடல் ஏர்போர்ட் வளாகத்துக்குள் நுழைந்த திரிபுர சுந்தரியின் செவியில் எட்டியது. கேட்கும் போதோ, தோன்றும் போதோ எல்லாம் பாடும் ரகம் அவனில்லை; உணர்ச்சி ததும்பிய அவனின் குரலே அவனது காதலைச் சொல்லிற்று.
அமரின் ஒற்றைப் பாடலை கேட்டதுக்கே இந்த எண்ணம் வர, நேற்றிலிருந்து ஹம்மிங் முறையில் பாடலை இசைக்கவும், காதல் சொட்டும் வரிகளைப் பாடியதையும் கேட்டு இருந்தால், இங்கேயே திருமணத்தை முடித்து வைத்திருப்பார் போல்..!
தாயைக் கண்டவன், முன்னே வீற்றிருந்த பெண்ணவளை கண்களால் ஜாடை காட்டினான். எட்டிப் பெண்ணின் முகத்தைப் பார்த்தவர் அவள் அழகில் திருஷ்டி கழித்தார்.
ஸ்ரேயா அருகில் சென்று அமர்ந்து, அவள் பக்கம் திரும்பிப் பேசினார்.
“தனியா வந்திருக்கியாமா?” அவர் கையில் டிராலி இருப்பதைக் கண்டு, அவரும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என எண்ணிக்கொண்டாள் ஸ்ரேயா.
“ம்..ஹீ..ம்.. ப்ரெண்ட்ஸ் வந்துருக்காங்க ஆன்ட்டி.” சற்று தூரத்தில் அவளின் இருமலர்கள் இருப்பை சுட்டிக் காட்டினாள். அவளை நோக்கி தோழிகள் இருவரும் வரத் தொடங்கி விட்டனர். அவர்களை கண்டதும் மகன் உரைத்த 'துவாரபாலகிகள்' என்ற புனைப்பெயர் ஞாபகத்துக்கு வந்து சிறு முறுவலை தந்தது.
“நீங்க கேரளவா ஆன்ட்டி..?”
“ஆமா டா.. நான் பேசுற தமிழ் கேவலமா இருக்குல்ல, என் மோனே இத சொல்லி காண்பிச்சு கிண்டல் கூட செய்வான்”
“அப்படி இல்ல ஆன்ட்டி.. நல்லா இருக்கு உங்க அசன்ட்.. இல்ல ரே” என ஹரிதா சொல்ல.
சிரித்துக் கொண்டார், “இது என்ன ரோ.. காளம்னு பேர்?”.
அவரின் சொல்லாடலில் புன்னகைத்தவள், “ஆன்ட்டி என் பெயர் ஸ்ரேயா, இவ மாளவிகா பேங்கல ஒர்க் பண்றா, இவ ஹரிதா ஐ.டில இருக்கா, இவ கொலிக்ஸோட தான் ஹாலிடே ட்ரிப் வந்திருக்கோம்..” அவர்கள் சுய விவரம் பகிர்ந்தாள்.
“நீ என்னமா பண்ற...?” ஸ்ரேயா கன்னம் வழித்து கேட்டார்.
“பேஷன் டிசைனர் ஆன்ட்டி..”.
“அய்யோ.. எவ்வளவு நல்லதாய் போய்..”. ஆச்சரியத்தில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டார்.
“நாங்க கூட டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ் வச்சுருக்கோம்.. நீ தப்பா நினைக்கலனா எனக்கு உதவியா வர்றியாமா?” தன்னுடனே இவளை அழைத்துச் சென்று விட வேண்டும் என்கிற உந்துதல்.
“இல்ல ஆன்ட்டி.. அவளே பிஸினஸ் ஸ்டார்ட் பண்ற ப்ளான்ல இருக்கா..” ஹரிதா பரிந்து கொண்டு வந்தாள்.
“ஒ.. இட்ஸ் ஒகே மா..” அவர் முகம் சோர்ந்து போவதைக் கண்ட, ஸ்ரேயா, “ப்ளான் இருக்கு ஆன்ட்டி, பட் பண்ண முடியுமானு தெரியல.. உங்க நம்பர் கொடுக்குங்க, கண்டிப்பா பேசுவோம்..” மொபைல் எண் பரிமாற்றம் முடிய, “ஆன்ட்டி.. இல்ல அம்மா பரையும் மோலே..” என்றவரின் கனிவில் ஸ்ரேயாக்கு கண்கள் நீர் திரையிட்டு வழிந்தது.
“என்னமா.. அழுகுற.. தப்பா எதுவும் பேசிட்டேனா..?” தோள்களை ஆதுரமாக தொட்டார் திரிபுரசுந்தரி.
“இல்ல..” என தலை அசைத்தவள் எதுவும் பேசவில்லை.
“அவ அம்மா லாஸ்ட் இயர் இறந்துட்டாங்க ஆன்ட்டி.. ரே கொஞ்சம் சென்ட்டியான கேரக்டர். அதான் அழுதுட்டா..” என மாளவிகா பேச.
அதுவரை தன்னவள் பெயர் அறிந்து உச்சரித்த உதடுகள் தித்திக்கிறதே..! என நிறுத்தாமல் பெயர் உச்சடம் நடத்தியவன், அவளின் ஓர் துளி விழி ஈரம் அவனை உருக்குலைத்தது.
சட்டென எழுந்தவன் அவர்கள் முன் நின்றான். திடுதிடுவென வந்து நிற்பவனைக் கண்டு எழுந்து நிற்க, “இப்ப எதுக்கு முறையை மாத்த பாக்குறிங்க..? இது சரி வராது. நீங்க கிளம்புங்க..” என தாயைப் பார்த்து முறைத்தபடி சொன்னான்.
“ஹலோ.. அவங்கள எதுக்கு கிளம்ப சொல்றிங்க.. முதல்ல எங்க கான்வர்சேஷன்ல நீ எப்படி மூக்க நுழைக்கலாம்..?” ஹரிதா ஆக்ரோஷமாக வந்தாள்.
“இரும்மா.. நான் பேசிக்கிறேன்” என ஹரிதாவிடம் சொல்லியபடி அமரை நோக்கி, “இப்ப எதுக்கு காண்டமிருகம் மாதிரி கத்துற..” என்றார்.
“யார்.. நான் காண்டமிருகமா..? உங்க புருஷன் ஓர் பெரிய காண்டமிருகம், உங்க சின்ன மகன் குட்டி காண்டமிருகம்.. இதுல என்னை சொல்ல வந்துட்டாங்க..” சொல்லும் போது இதழ்கடையில் புன்னகை வந்தது அவனுக்கு, அவளின் வேதனையை போக்க சின்ன திசை திருப்பலை கையாண்டான்.
“அப்ப என்னோட பெரிய பையன்..?” வரும் புன்னகையை மறைத்த படியே கேட்டார்.
“அவனுக்கு என்ன தங்கத்துக்கு, இப்படி ஓர் பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி குழந்தை குட்டினு சந்தோஷமா இருப்பான்..” என ஸ்ரேயாவை குறிப்பிட்டு சொல்ல,
“உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு.. நீ நினைக்கிறது எந்த ஜென்மத்துலேயும் நடக்காது..” மாளவிகா பாய்ந்து வந்தாள்.
“முதல்ல உனக்கெல்லாம் அடுத்த ஜென்மமே இல்லயே, போய் இந்த பிறவியிலேயே கறை ஏற பாரு.. ஏன்னா உன்ன மாதிரி பைத்தியத்துக்கு மறு ஜென்மமே கிடையாதே..” அவளை கேலி செய்து உதாசீனப்படுத்தினான்.
“ஹலோ.. மிஸ்டர் நீங்க ரே-வ ப்ளர்ட் பண்ண வரைக்கும் ஒகே.. ஆனா ஏதோ ஓர் ஆன்ட்டிகிட்ட எதுக்கு ரூடா பிகேவ் பண்ணுறிங்க..?” அவளைப் பார்த்து பாடிக் கொண்டு இருப்பவனை ரோட் சைட் ரோமியோவாக எளிதாக கணித்து விட்டனர். அவனின் திடீர் கத்தலில், அமர் பேச்சின் சூட்சமம் புரியாமல் நின்றார்கள்.
“ஏதோ ஓர் ஆன்ட்டியா..? இவளோட ஒன் அண்ட் ஒன்லி மாமியார்..” ஸ்ரேயாவைக் காட்டி கள்ளப் புன்னகை உதிர்ந்தது.
அதில் யுவதிகள் அதிர்ந்து நிற்பதை பொருட்படுத்தாமல், சட்டென ஸ்ரேயாவை தன் முன் இழுத்து நிறுத்தியவன், “இங்கே பார்.. உன்னுடைய கண்ணில் எல்லா உணர்வுகளும் பிரதிபலிக்கணும். அதை ஆயுசு முழுக்கப் பாத்து ரசிக்கக் கூடவே நான் இருப்பேன். ஆனா சோகம், கண்ணீர் இதெல்லாம் தெரிஞ்சுச்சு.. அவ்வளவு தான்..” மிரட்டலையும் அன்பில் தோய்த்து தந்தான்.
பின் அவளை ஆழ்ந்து நோக்கி, ‘வேணும்னா.. என் நெஞ்சுல சாஞ்சு அந்த கண்ணீர மறைச்சு வச்சுக்கோ, நான் அத பார்க்க கூடாது.. அவ்வளவுதான்..!’ மனதில் நினைத்து அவளுக்கு கடத்தவும் செய்தான். எவ்வித மாற்றமின்றி அப்பார்வையை அவள் மீது செலுத்தி நகர்ந்து சென்றான்.
அமரைப் பற்றிய அனைத்து விளக்கங்களையும் திரிபுரசுந்தரி அவர்களுக்கு தெளிவுபடுத்தினார். மற்ற இரண்டு பெண்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தனர், ஸ்ரேயாவோ அவன் சென்ற திசையையே வெறித்துப் பார்த்தாள். உள்ளுக்குள் ஏதோ இணையும் உணர்வு.. அவள் கைப்பேசியில் கண்ணனின் அழைப்பு வரும் வரை..!
ஒரு ஆணின் பார்வையை மற்றொரு ஆண் அறிய மாட்டானா, மாதவன் முன்பே இதை கணித்திருந்தான். இப்போது எவ்வளவு அழகாக காதலை வெளிபடுத்தி விட்டான். அதை பெண்கள் தான் உணரவில்லை. ஆனால் அமரின் காதலை உளமாற இவன் நம்பினான்.
ஒரு நாள் பார்த்த பெண்ணிடம் காதல்.. அதை மறுக்காத பெற்றோர்..! இத்தனை அற்புதமான குடும்பம் ஸ்ரேயாவுக்கு அமைந்தால் இவனுக்கும் மகிழ்ச்சியே.
அமரின் காதலை ஹரிதா புரிந்து கொள்ளும் வாய்ப்பு அமையலாம், ஆனால் நிச்சயம் மாளவிகா ஒத்துக்கொள்ள மாட்டாள் என்பது மாதவனின் கணிப்பு. அவன் உத்தேசித்தது மிகச் சரி, ஆனால் உத்தேசித்த விதமே முரணாகப் போய்விட்டது.
Last edited: