சிதறாத முத்தங்கள் - 15

Advertisement

Sastika

Active member
Member
eiH036397777.jpg

‘தான் விரும்புவதை மறைத்து செயல்படுதல்’

நகுநயம் மறைத்தல்-15

அகிலனோடு பேசிக் கொண்டே பார்ட்டி ஹாலை விட்டு வந்தாள் ஸ்ரேயா. வீடியோ காலை ஆன் செய்து அகிலனோடு பேசியவளின் பக்கவாட்டு வனப்பு அமரை சிதறச் செய்திருந்தது. இருபது அடி தூரத்தில் சுவாரசியமாக பேசுபவளின் ஒலி அமர் செவியை எட்டவில்லை. ஆனால் அவளின் கொஞ்சல் செய்கையும், கண் சிமிட்டலான அளவலும் சிறு பொறாமையாக நெஞ்சில் ஏறியது.

விரைந்து அவளின் பின்பக்கமாக வந்து திரையைப் பார்த்தவனின் விழிகள் விரிந்து அதிர்வைக் காட்டியது. அத்தனை கம்பீரமாக, சிரிக்கும் அகிலனின் முக கவர்ச்சியில் இவன் வயிறு லேசாக காந்தியது. ‘ஆம்பள பசங்க எதுக்குடா இவ்வளவு அழகா இருக்கீங்க.. எனக்குனே வருவீங்களா..!’ இதுவரை அமர்நாத் காணாத பதட்டத்தை உணர்ந்தான்.

ஸ்ரேயா பின்னந்தலை அருகில் தெளிவில்லாத முகம் தெரிய, ஏர் பட்ஸில் அவளிடம் சுட்டி காட்டவும் திரும்பி பார்த்தவள், அமரை பார்த்தவாரே “மாமா.. நாங்க தங்கி இருக்க ஹோட்டலோட மேனேஜர்.

"அவள் அறிமுகப் படலம் நடத்தாமல், ஏனோவென்று சுட்டிக் காட்டவும், அவள் காதிலிருந்த ஓர் பக்க கருவியை கழற்றி, “ஹைய் புரோ..” என திரையில் முகம் பதிய பேசினான்.

அமரின் செய்கையை முறைத்துக் கொண்டே, “இவன் பேர் அமர்நாத் மாமா..” மற்றொரு ஏர் பட்ஸ் மூலம் சொன்னாள்.

“பாருடா.. என்னோட நேம் எல்லாம் உனக்கு தெரியுமா? பர்ஸ்ட் டைம் என் பேர் சொல்லி கேக்குறேன்..” அவளிடம் குறும்பாக கேட்க, அகிலனின் ஆராய்ச்சி பார்வையில்,

“ஆமா புரோ.. டேய் இங்க வா, டேய் அங்க போ..! இப்படிதான் இவ என்னைய பேசுற ஸ்டைலே இருக்கும்..”

“யாரு.. ஸ்ரேயாவா..! யாரையும் அப்படியெல்லாம் பேச மாட்டாளே..!” அகிலன் அதிசயத்து சொல்ல,

“ம்..ம்.. அப்படிதான் கேள்விப்பட்டேன், ஆனா மேடம் என்னை உரிமையில கூப்பிடுறாங்க போல..!” திரை மறைத்து ஒற்றை கண் சிமிட்டலை தந்தான்.

“அதலாம் ஒண்ணும் இல்ல மாமா..” என்றவள் அமரிடம் இருந்த ஏர் பட்சை பறித்துவிட்டு, அவனை முறைத்தே அப்புறப்படுத்தினாள்.

அவளின் மாமா என்ற விழிப்பு அமருக்கு கசந்தாலும், அவளின் வதனத்தில் தெரிந்த வெட்கம் ஏனோ ரசிப்பை மட்டுமே தந்தது.

பின்மாலை பொழுது அமர்நாத் அலுவலக வேலையில் மும்மரமாக இருந்தான்.

“இன்னேரம் உன் ஆளோட ஃபிஸ்ஸிங் போயிருப்பேன்னு நினைச்சா, நீ என்னடா இங்க இருக்க?” என ராகுல் வினா எழுப்ப,

“காரணமா தான்..!” ஓர் மார்க்கமாக சொன்னவன், நிதர்சனத்தையும் எடுத்துக் கூறினான். “அதோட நிறைய வேலை தலைக்கு மேலயிருக்கு, தீபக் பார்க்க வேண்டியது ஒருபக்கம் பென்டிங்ல இருக்கு, அப்புறம் ரஞ்சி அவளோட ஒர்க்கையும் சேர்த்து நானே பார்க்கிற மாதிரி இருக்கு..”

“ரிசார்ட் ஒனர் நீயா இல்ல ரஞ்சியானு டவுட்டா இருக்கு, அவள எதுக்கு போக விட்ட..” ராகுல் சிறு ஆதங்கமாக கேட்க,

“எப்பவும் அவ ஒர்க்ல கேர் லெஸா இருக்கமாட்டா, ஏதோ அவளுக்கு தோதா ப்ரெண்ட்ஸ் கிடைக்கவும் ஆசையா அவங்களோட சுத்திக்கிட்டு இருக்கா, அதுவும் நல்லதுதான்.. எப்படியும் அந்த கேங்க் நம்ம கூடதான செட்டில் ஆகனும்.. அதுக்கு இப்பவே பழகி வச்சுகிறது நல்லதுதானே..” எதிர்காலத்தை மனதில் கணக்கிட்டு அமர் சொன்னான்.

“அதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் குடுக்காட்டி பரவாயில்ல டா.. இவ கெடுத்து விட்டுருவா போல..”

“ஹா.. ஹா.. அப்படி என்ன நடந்துச்சு.?” தோழியின் குறும்பை எண்ணி சிரித்தான்.

“இந்த ரஞ்சி குரங்கு ஹரிதாகிட்ட போய் என்னை ப்ளே பாய் மாதிரி சொல்லி வச்சுருக்காடா..”

“அதுக்கு அங்க இருந்து செம்ம ரெஸ்பான்ஸ் போல..” இதழ் கரையோரமாக புன்னகை எட்டி பார்த்தது.

“ஓர் மாதிரி முறைச்சுகிட்டு இருக்கா டா.. நீ தான் எனக்கு பேவரா போய் அவகிட்ட பேசணும்..” ஆதரவுக்கு நண்பனை துணைக்கு அழைத்தான்.

“சொல்லிட்டா போச்சு.. இங்க பாரு துவாரபாலகி.. சீ..சி.. ஹரிதா.. இப்படி ஓர் எலிஜிபுல் ப்ளே பாய் உனக்கு பாய் ப்ரெண்ட்டா கிடைக்க நீ கொடுத்து வைக்கணும்னு கண்டிப்பா சொல்லிடறேன்..”

“டேய்.. துரோகி, என்னை சுத்தி முழுசாவே சதி கூட்டமால இருக்கு..” என அமர் கழுத்தை நெரிக்கப் போனான்.

படபடவென அங்கே ஓடி வந்த ரஞ்சனி, “அம்..மர்.. அம்..ர்..” மூச்சு வாங்கி பேச இயலாமல் தடுமாறினாள்.

“இதோ வந்துட்டால்ல.. ஃபீமேல் சகுனி, அடுத்து யார போட்டு கொடுக்கலாம்னு இருக்க..” என ராகுல் முறைப்புடன் கேட்க,

“நாங்க ஃபிஸ்ஸிங் போனம்ல, அங்க..” அவள் எதை சொல்வது என திணற,

“அங்க என்ன..! கடல் தண்ணி உப்பா இருந்துச்சா?” ராகுல் கேலி செய்ய, அவனை முறைத்தவள், அவள் பேசு முன், “ஒஹோ.. கடல்ல குட்டி குட்டியா பிஸ் இருந்துச்சா..!!”

“ஐயோ.. ராகுல் பேசாம இரு.. ஸ்ரேயா.. லவ்..” என ராகுலை அதட்டிவிட்டு அமரிடம் சொல்ல வர,

அவளை கிரகித்தவனாக, “பயர் ஃப்ளைகிட்ட அந்த பிரசன்னா புரபோஸ் பண்ணானா..?” அதிராமல் கேட்டான். ஆனால் ராகுல் அதிர்ந்து, “அந்த ஸ்ரேயா பொண்ணு ஒகே சொல்லிட்டாளா.. அதான் இப்படி பதட்டத்தோடு ஓடி வந்தியா?”

ரஞ்சனி மறுக்கும் முன், “அதுக்கு வாய்ப்புல்ல.. அவ கண்டிப்பா ரிஜெக்ட் பண்ணிருப்பா.. அந்த பிரசன்னா புரபோசல ரிஜெக்ட் ஆனத சொல்றதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப் போடுறா..!” அமர் வதனம் மென்னகை தாங்கிருக்க,

“அது எப்படி இங்க இருக்க உனக்கு தெரியும்?” ராகுல் சந்தேகம் எழுப்பினான்.

“எம் சைட்டை பற்றி யாம் அறியோம்..! அவ கண்ணுல நேத்து கூட சொட்டும் காதலை பார்த்தேனே. அதோட அவ மேல யாரோட பார்வை எப்படி படுதுனு கூடவா தெரியாம இருக்கும். சில்லி கைஸ்..!” தன்னவள் பற்றிய பேச்சு எழுந்தாலே மனம் அவளுடன் சிக்கிக் கொள்கிறது.

தயங்கிய ரஞ்சினி பின், மறுப்பாக தலையசைத்து, “ஆமா பிரசன்னா லவ்வ ரிஜக்ட் பண்ணிட்டா, ஆனா அதுக்குக் காரணம் அமரோ அவனோட லவ்வோ இல்ல..” என்றவள் நிறுத்தி அமர் முகத்தை கரிசனமாகப் பார்த்து,

“அவளுக்கு ஆல்ரெடி கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்காம்..” இதை சொல்லும் போது நண்பனின் ஏமாற்றத்தை காண இயலாமல் கீழே குனிந்து கொண்டாள்.

“ம்.. அப்புறம்.. ரீல் முடிஞ்சுச்சா..” கிளம்பு காத்து வரட்டும் என்கிற மாடுலேஷன் அவனிடம்.

“அமர்..” என்றவளின் அகத்தில் வேதனை சுமந்திருக்க, மனதிகைப்பு அமருக்கு.

சட்டென இருக்கையை உதறி எழுந்தவன், “அதுக்கு வாய்ப்பு இல்ல.. அது எப்படி..! ஒருவேளை பிரசன்னாவ டைவர்ட் பண்ண அப்படி பொய் சொல்லிருப்பா..”

மறுத்து தலையை அசைத்தவள், “அவளோட கல்யாண போட்டோஸ், அப்புறம் ஸ்ரேயா, ஹஸ்பன்ட், பையனோட சேர்ந்து இருந்த பேமிலி போட்டோஸூம் பார்த்தேன்.. இத பார்த்துட்டு தான் கன்பார்ம் பண்ணேன்..” தோழியின் விளக்கத்தை கேட்டவனுக்கு பெருந்திகைப்பு.

“ரஞ்சி விளையாடத, உடம்பு எனக்கு சிவர் ஆகுது பாரு, ஹார்ட் வேற வேகமா துடிக்குது..” அவள் கையைப் பிடித்து உண்மையை சொல்லு என கெஞ்சினான்.

அமர்நாத் கண்களை நேருக்கு நேராக பார்த்து, “அங்க நடந்தத சொன்னேன் டா.. நீதான் ரே கிட்ட விசாரிக்கணும்..”

ஸ்ரேயாவைக் காண ஓட எண்ணிய கால்களை யாரோ பூமிக்குள் இழுப்பது போல் இருக்க, ஓட இயலாமல், வேகநடையிட்டு அவளை நோக்கி நடந்தான்.

அமரிடம் தனது வேதனையைக் கடத்தவோ, பழைய நிகழ்வுகளை தூசி தட்டவோ விரும்பவில்லை அவள்...! அவனின் காதலை தூர நிறுத்த வேண்டும் அவ்வளவே..! அவன் நேசத்தை ஏற்கும் நிலையில் தான் இல்லை என்பதை கூறவே எண்ணிருந்தாள். குறைந்த பட்சம் அவன் அருகாமையை தவிர்த்து விட கருதினாள். அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டது அவனின் பிரதிபலன் காணாத தூய உள்ளம்.

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஃபிஸ்ஸிங் போட்டில் வைத்து அனைவரின் முன்னும் பிரசன்னா தன் காதலை வெளிப்படுத்தினான். சில மணி துளிகள் சிந்தித்தவள் அவனை மறுக்க வேண்டும், அதே சமயம் அவளின் மெய் கலந்த கபட வார்த்தை ரஞ்சனி மூலமாக அமரை நிச்சயம் சென்று அடைய வேண்டும் என்றே அகிலன், சாஸ்ருதி திருமண புகைப்படத்தைக் காட்டி தான் திருமணம் ஆனவள் என்று நம்பவைத்தாள்.

அகிலன் தோள் மீது சிரித்த முகமாக கண்ணா அமர்ந்திருக்க, அருகிலே அகிலனோடு ஒட்டிக் கொண்டு நின்றிருந்த சாஸ்ருதி பிம்பத்தையும் காட்டி பிரசன்னாவின் ஈர்ப்பை தூர விரட்டினாள். அப்போதே ரஞ்சனியும் ஸ்ரேயா காட்டிய நிழற்படத்தைக் கண்டு வெளிறிய முகமனையுடன் நகன்று இருந்தாள்.

படகில் அனைவரும் மீன் பிடிப்பதிலும், சமைப்பதிலும் ஆர்வமாக இருந்தனர். தனக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்ற தகவல் அமரை சென்று அடையும், அவனை எப்படி எதிர் கொள்வது என்கிற சிந்தனையில் இருந்தாள் ஸ்ரேயா.

என்ன உரைப்பான், ‘சாரி.. உன்ன பத்தி தெரியாம ஃபிளர்ட் பண்ணிட்டேன்..’ என்று தன்மையாக பேசி விலகிப் போவானோ..! இந்த புரிதலில் அவன் விலகலை எப்படி தாங்குவேன்..!

அப்படி தன்மையாக பேசாமல் “கல்யாணம் ஆனவ எதுக்குடி என்னோட கொஞ்சி கொலவிகிட்டு இருந்த.. அப்ப நான் கொடுத்த முத்தம் இனிச்சுச்சோ..” இப்படி வக்கிரமாக பேசி வெறுப்பைக் கொட்டிட்டா, அவன்கிட்ட தாவுர மனச சுலபமா விலகிற முடியும் என்கிற திட்டமிடலில் உழன்றாள்.
எதுக்கு அவனை விலக வேண்டும் என்று முழக்கமிடும் மனதை பாதாள அறையில் வைத்து பூட்டவே முயற்சித்தாள். எத்தனை முறை சொல்வது அதனிடமும்.. தன் மேல் உயிரையே வைத்திருக்கும் இருமலர்களிடமும் சொல்லாத கடந்த காலத்தை எதற்காக சில நாட்கள் ஏற்பட்ட பழக்கத்திற்காக அவனிடம் சொல்ல வேண்டும், தேவையில்லை.. அவனும் தேவையில்லை..! அவனின் உயர்ந்த காதலும் தேவையில்லை..! என பிரகடனம் எடுத்து ஆழ் மனதிற்குள் அனுப்பினாள்.


டின்னர் ஹாலில் புறமுதுகுக் காட்டி அமர்ந்திருந்தவளின் முழங்கையை பிடித்து தன்னை நோக்கி தூக்கி நிறுத்தினான் அமர்நாத். ஸ்ரேயா எதிர் பார்த்த வார்த்தைகள் வர இருக்கிறது என உள்ளுக்குள் சங்கடப்பட்டாலும் வெளியே திடமாகவே நின்றாள்.

அவனது கலங்கிய விழியை கண்டவள், “என்ன பிரச்சனை இப்ப உனக்கு?”

“பிரச்சனையா? ஏன் கேக்க மாட்ட..? ஒருத்தன் லவ்வ சொன்னா முடியும்னு சொல்லு, இல்லையா முடியாதுனு சொல்லு.. எதுக்குடி ரூமர்ஸ கிளப்பிவிடுற..” ஸ்ரேயா எண்ணத்திற்கு முரணாக வந்து நின்றவனை உடைந்து போய் பார்த்தாள்.

ஸ்ரேயாவிற்கு ஆதரவாக அருகில் செல்ல ஹரிதா நினைக்க, மாதவன் கண் அசைவில் நிறுத்தி இருந்தான். மாளவிகாவை தடுப்பதற்கே கடினமாக இருந்தது அவனுக்கு.

“ஐயோ மாதவன், அவன் ரொம்ப ரூடா பிகேவ் பண்ணிற போறான்.. அவளுக்கு சப்போர்ட்டா நம்ம போய் நிப்போம் வாங்க..” என துள்ளியவளை, ஹரிதா உதவிடன் அவ்விடத்திலிருந்து அகற்றி இருந்தனர்.

“ஒகே.. லீவ் இட், நான் அங்க போகல..” தன்னை இருபக்கமும் பிடித்துக் கொண்டிருந்த ஹரிதா, மாதவனிடம் கத்தினாள்.

அவர்கள் இருவரும் ஆசுவாசம் அடைவதற்குள், “மேடி.. நீங்க ரேவ கல்யாணம் பண்ணிக்கனும்..” என்றாள் மாளவிகா.

“வாட்..” என அதிர்ந்தான் மாதவன்.

“மேடி.. உங்கள பத்தி நல்லா தெரியும், அவ டிவோர்சினு காரணம் சொல்ல மாட்டிங்கல்ல.. அவ ரொம்ப நல்ல பொண்ணு, அவளுக்கு நல்லா துணையாவும், கண்ணாக்கு ஓர் நல்ல ஃபேமிலியும் கண்டிப்பா உங்களால கொடுக்க முடியும்.. ப்ளிஸ்..” கெஞ்சி மன்றாடுபவளை மதிக்காமல்,

“நீ அரை லூசுனு..அமர் சொன்னது சரியா போச்சு..”

“அவன் கிடக்குறான்.. மக்கு மாயாண்டி..” அமர் மீது இருந்த ஆதங்கத்தைக் கொட்டினாள்.

“யார்.. அவனா..!” ஆமா என்பதாக தலையசைத்தவளை இன்னுமே பிடித்துப் போனது.

“ரே டிவோர்சி அப்படினு நான் மறுக்கல, என்னைக்கு உன்ன மால்ல பார்த்தேனோ அப்பவே ஐ பெல்ட் இன் லவ் வித் யூ..” தன் மனதை பகிர்ந்தான்.

“மேடி.. பீ சீரியஸ்.. ரேக்கு நீங்கதான் மேட்ச்சா இருப்பீங்க..” கிளிபிள்ளையாக சொன்னாள்.

“நான் ஒண்ணும் பொம்ம கிடையாது.. இஷ்டத்துக்கு யாருகிட்ட வேணாலும் என்ன தூக்கி கொடுக்க.. ஐயம் யுவர்ஸ் ஒன்லி.. அண்ட் ஹரிதா சொன்னதாலதான் ஸ்ரேயா டிவோர்சினு நான் அமர்கிட்ட ஷேர் பண்ணாம இருக்கேன்..”

“அவன்கிட்ட ஏன் ஷேர் பண்ணனும்..?”

“ஹீ லவ் ஸ்ரேயா..” மாதவன் காதலை சொல்லவும் அவள் சிந்தனை எங்க.. எங்க சுற்ற தொடங்கிருந்தது.

“சோ..”

“தே போத் ஆர் இன் டீப் லவ்..” ஏதோ சிந்தனையில் இருந்தவளுக்கு அவன் சொன்னது மூளையை அடையவில்லை.

“அவன் லவ் பண்ணா போதுமா..?” பட்டும் படாமல் பேசினாள்.

“ஹேய்.. மக்கு, ஸ்ரேயாவும் அமர லவ் பண்றா..” மாளவிகா தலையில் தட்டி நிகழ்வுக்கு கொண்டு வந்தாள் ஹரிதா.

“இல்ல.. அது எப்படி.? நம்ம ரேக்கு மேட்சா மேடிய செலக்ட் பண்ணோமே..” அப்பாவியாகக் கேட்டாள்.

“ஆமாடா.. நாம ஒண்ணு நினைச்சா கடவுள் வேற ஒரு முடிவுதான் பண்றாரு..” ஹரிதா எடுத்துரைக்க,

“இந்த லூசுக்கு சொல்லி புரிய வை ஹரி..” என நகன்றவனை,

“சாரி..” என்ற ஒற்றை சொல்லில் நிறுத்தினாள்.

“கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என்றவனை, விழி உருட்டி பார்த்தவள், “ம்..” சம்மதமாக தலையை ஆட்டினாள்.

“அப்ப ஹக் பண்ணு..” என கையை விரித்தவனிடம் தஞ்சம் புகுந்திருந்தாள் மாளவிகா.

துளிர்த்த காதலை உள்ளத்திலே வைத்து அடைகாத்திருக்கிறாள். ஸ்ரேயாவுக்காக விட்டுக் கொடுத்தவளை அன்பொழுக பார்த்துவிட்டு, “கங்கிராட்ஸ் மாளு..” என்று ஹரிதா அகன்று இருந்தாள்.

“ஆனா ரே லைப் செட்டில் ஆனதுக்கு பிறகு நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம்..” மாதவனின் பிடித்த கையை விடாமல் சொன்னாள்.

“பண்ணிக்கலாம்... பண்ணிக்கலாம்.. ஆனா உனக்காகவோ இல்ல எனக்காகவோ அவ கல்யாணம் பண்ணக் கூடாது.. அவள் காதல் வேணும்னா நெக்ஸ்ட் ஸ்டெப் ரே எடுத்து வைக்கணும். டோன்ட் போர்ஸ் ஹெர்..”

“வெய்ட் பண்ண முடியுமா..?” கேட்டாள்.

“கொஞ்சம் கஷ்டம்தான்.. காலம் பதில் சொல்லும்..” என்றவன் திருப்தியாக கடல் அலையை காதலியுடன் சேர்ந்து ரசித்தான்.

இங்கோ...
“பிரச்சனையா? ஏன் கேக்க மாட்ட..? ஒருத்தன் லவ்வ சொன்னா முடியும்னு சொல்லு, இல்லையா முடியாதுனு சொல்லு.. எதுக்குடி ரூமர்ஸ கிளப்பிவிடுற..” ஸ்ரேயா எண்ணத்திற்கு முரணாக வந்து நின்றவனை உடைந்து போய் பார்த்தாள்.


“எது ரூமர்..?” நிமிர்ந்து நின்றாள் ஸ்ரேயா.

“கல்யாணம் ஆயிருச்சு, குழந்தை இருக்குனு நீ சொன்னது..” கண்டனத்தைக் காட்டினான். ஏனோ ஸ்ரேயா பொய் சொல்லியே இருப்பாள் என கணக்கிட்டு இருந்தான்.

“ஏன் எனக்கு கல்யாணம் ஆயிருக்க கூடாதா?” அவன் வாய் மொழியாக எதையோ எதிர் பார்கிறாள்.

“ஸ்ரேயா.. உனக்கு வயசு என்ன? ஓர் இருபத்தி ஐஞ்சு இல்லனா இருபத்தி ஆறு இருக்குமா.. அதுவும் நீயே குழந்தை மாதிரி இருக்க, இதுல உனக்கு குழந்தை..! சுத்த ஹம்பக்..”

“வாவ்.. என்னோட பேர் தெரியுமா..?” நேற்றைய அமர் சொல்லை திரும்ப தந்தாள். ஏனோ அவனோட பேச சொல்லி மனம் உந்தியது. அவள் பேச்சின் சாரம்சம் புரிந்தவன் குறுநகை தந்தான். அவளின் இலகுவான பேச்சில் நிம்மதி முட்ட நெஞ்சில் உள்ளங்கையால் அழுந்த நீவினான்.

அவனது செய்கையை விழி விரித்துக் கண்டவள், அந்த நெஞ்சில் அப்படியே தஞ்சம் அடைந்து விட வேண்டும் என கனநொடி தடுமாறினாள். இதை இன்னும் நீடித்து நெருக்கடியை ஏற்படுத்தக் கூடாது என்று சொல்லியே விட்டாள்.

“அப்புறம் என்னோட வயசு மோர் ஓவர் கரெக்ட் இருபத்தி ஆறு, பட் எனக்கு இருபத்தியோரு வயசுலேயே கல்யாணம் ஆயிருச்சு..” பிரசன்னாவிடம் காண்பித்த படத்தை மொபைல் கேலரியில் இருந்து எடுத்து அமரிடம் காண்பித்தாள்.
அதைப் பார்த்தவனின் கண்கள் மங்கலாக ஆரம்பித்தது. காதல் குறும்பை காட்டியவனின் விழிகள் நீரில் தத்தளித்து. மறுப்பாக தலை அசைத்தான் இது அவளாக இருக்காது என்று! கண்டு கொண்டவனிடம், நான் சொல்வது நிதர்சனம் என்பதாக தனது தேகத்தை திடமாகக் காட்டினாள்.


ஸ்ரேயாவை நிமிர்ந்தும் பார்க்காமல் திரும்பியவனின் கண்ணீர் கன்னத்தை தொட புறங்கையால் துடைத்து விட்டுக் கொண்டான். அமரைப் பார்த்துக் கொண்டு இருந்தவளின் இதயம் பலமாக அடி வாங்கியது.

அவனை நினைக்கும் தருணம், இதயம் மேகமென உயர்ந்து மிதந்து நிற்கிறது. அத்துடன், அவன் குரல் ஒரு மாயம் போல, சுயம் மறைந்து அவனே நினைவாக நிற்கிறான்.

பலமுறை தோன்றிய ஆதங்கம் இன்றும் அவளுக்கு உதித்தது, ‘அப்படி என்ன அவசரம்னு அந்த வயசுல கல்யாணம் பண்ண.. காத்திருந்து இருக்கலாம்..! இவனுக்காக..!!’
 

Attachments

  • eiH036397777.jpg
    eiH036397777.jpg
    471.7 KB · Views: 1
Last edited:

Advertisement

Advertisement

Back
Top