சிதறாத முத்தங்கள் - 18

Advertisement

Sastika

Active member
Member
eiH036397777.jpg

‘அவன்(ள்) பற்றி மனதின் தாபத்தால் பிறரிடம் புகழ்ந்த வண்ணம் இருத்தல்’

பாராட்டு எடுத்தல் -18

ஜன நெருக்கடியும், சலசலப்பும் இயல்பைவிட இன்று அதிகமே இருந்தது, அக்கூட்டத்தின் நடுவிலிருந்து ஓடி வந்த மாளவிகா, “அங்க அமர் சாகசம் செய்றேன்னு சொல்லி சேஃப் ஜாக்கெட் இல்லாம, ஏதேதோ செய்றான்.. சீக்கிரம் வா ரே..” சிறுமியாக புகார் செய்தாள்.

ஸ்ரேயாவுடன், ஹரிதாவும் சென்று பார்க்க ஜெட் பேக் பிளையிங் வாட்டர் போர்ட்டில் எந்த பிடிமானமுமின்றி மேல் சட்டை இல்லாமல், ஸ்பிரிங் பொம்மையை போன்று கடல் நீரில் அங்கும், இங்கும் வித்தை கட்டினான் அமர்நாத்.

அருகில் அதேபோல் வேறு ஒருவன் புரொபஷனலாக பாதுகாப்பு உபகரணங்களுடன் சுற்றுலா வந்த பெண்ணை தூக்கிக் கொண்டு சுற்றினான். அந்நிய ஆடவனுடன் எப்படி சகஜமாக ஒட்டிக் கொண்டு சாகசம் செய்ய முடிகிறது என்று பேசுபவருக்கு தெரியாது, நடு ஆகாயத்தில் கடல் நீருக்கு மத்தியில் இப்படிபட்ட திரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ்காகவே ஏராளமான சுற்றுலா விரும்பிகள் மோகம் கொண்டு மாலத்தீவு வருகிறார்கள் என்று.

‘சேஃப் ஜாக்கெட் இல்லாம பண்றதே தப்பு இதுல ஷர்ட் போடாம, ஷோ காட்டிக்கிட்டு இருக்கான்.. இடியட்..’ வாயில் அமரை கரைத்துக் கொட்டினாள் ஸ்ரேயா.

அமருடன் சாகசம் செய்ய, புரொபஷனலை தவிர்த்த பெண்கள் குழுமம் போட்டி போட்டு நின்றது.

“இப்படி பொண்ணுங்கள தூக்கி சுத்துறதுக்கே இத கத்து வச்சுக்கணும் போல..” அருகில் நின்ற மாதவன் சொல்ல,
அவனை தீயாக ஸ்ரேயா முறைத்தாள் என்றால் மாளவிகவோ, “ஒ.. இப்படியெல்லாம் மனசு அலைபாயுதா..” அவளுடன் சேர்ந்து ஹரிதாவும் கடலுக்குள் அவனை தள்ளி விட்டனர்.

அதுவரை சிரித்தபடி நின்றவள், அருகில் நின்ற பெண், “அந்த ஷர்ட் லஸ் பாயோடு ஓர் ரவுண்ட் போயிட்டு வந்துட்டா, என் லைஃப் மோட்சம் அடஞ்சிடும்..” அவன் ஆண்மையில் பித்தாக பேசினாள்.

அவனின் துறுதுறுப்பும், குறும்பும் தனக்கே உரிமையென எண்ணியவள், அவனை முறைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகல எண்ணினாள், அதைக் கண்காணித்தபடியே இருந்தவன், பின்பக்கமாக ஆக்டோபஸ் போன்று கட்டி தூக்கிச் சென்றான்.

எதிர்பார்க்கா வண்ணம் திடுதிடுப்பென அந்தரத்தில் பறக்கவும் அஞ்சி பயத்தில் அலறத் தொடங்கினாள். கீழே இருந்தவர்களின் நக்கல் சிரிப்பும், அமருடன் செல்ல இயலாத பொறாமையும் அவ்விடத்தில் படர, அது எதுவும் நீரில் வித்தை காட்டுபவனுக்கு பொருட்டாக தோன்றவில்லை. ஸ்ரேயாவின் கத்தலில் மென்னகை தாங்கி கேட்டான்.

“பயர் ஃப்ளை..! எதுக்குடி இப்படி கத்துற.?”

“பயமா இருக்குடா.. எதுக்குடா இப்படி பண்ற, கீழ இறக்கி விடேன்.. ப்ளீஸ்..”

“ம்ஹூம்..” என்றவன் அவளை தன்னை நோக்கி திருப்பி நிறுத்த, அவன் உடலோடு ஒட்டாமல் விலகியே நின்றாள்.

“பிடிச்சுக்கோ.. வேகமா போக போறோம்..”

“வேணா..” என அவள் முடிப்பதற்கு முன், ராட்டினமாக சுற்றத் தொடங்கி விட்டான். பயத்தில் அவன் தோள்களை இறுக கட்டிக் கொண்டாள்.

“நிஜமா இப்பதான் பறக்குற மாதிரி இருக்கு.. வாவ்..” என்றவன் கைகளை விரித்து மகிழ்ச்சியை அனுபவித்தான்.

“டேய்.. எரும.. என்ன பிடிச்சுக்கோ டா.. பயமா இருக்கு. சேஃப் ஜாக்கெட்டும் போடாம உயிர வாங்குற.. என் பையனுக்காகவாச்சும் நான் உயிரோட இருக்கனும்..” அச்சத்தில் சொன்னாள்.

“என் கண்ணாக்கு நானும்தான் தேவை, ஆனா உனக்குதான் நான் வேணாமில்ல..” அவனின் உரிமைக் குரலில் எதைக் கண்டாளோ பிரவாகமாக மேலெழுந்த காதலில் வெற்று மார்பில் முகம் பதித்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அதில் கொண்டாட்டம் அடைந்தவன் அவளை பொம்மையாக இருகைகளாலும் தூக்கி சுற்றினான்.

கீழே நின்ற சுற்றுலா பயணிகள், “க்யூட் பேர், லவ்வபுல் கபுல், தே ஆர் லவ் பேர்ட்ஸ், தே டென்ட் டூ ப்ளை மோர்..” ஆள் ஆளுக்கு தோன்றியதை முணுமுணுக்க, இருமலர்களின் செவிகளை நிறைத்தது.

பல சுற்று சுற்றிவிட்டு அவன் கால்கள் மேல் நிற்க வைக்க, மூச்சு வாங்கி அமர் நெஞ்சில் முட்டி நின்றாள்.

உணர்வுகளின் வீரியத்தில் கட்டுண்டு நின்றவன், “என் சக்கரக்கட்டி..!” அவளின் உச்சந்தலையைப் பிடித்து தன்னை பார்க்க செய்தான்.

அவனின் புது அழைப்பில் கண்கள் மின்ன நிற்க, “இப்படி பார்த்தே ஆள காலி பண்ணிட்ட..” வஞ்சப்புகழ்ச்சி செய்தான்.

“யார்..? நான்..”

“ஐ லவ் யூ சக்கரக்கட்டி..” என்றவனை நேர்கொண்டு சந்திக்க இயலாமல் கண் இமைகளை தாழ்த்தினாள்.

தனிந்த விழிகளை பொறுக்காமல், “என்ன பாரு..” நாடி உயர்த்தி பார்க்க வைத்தவன், “பாத்தாச்சு.. இறக்கி விடு போதும்..”

“நீ லவ் சொல்லு பயர் ஃப்ளை..”

“முடியாது..!”

“ஏது முடியாதா..!!”

“நீ சொன்னா நானும் சொல்லனுமா என்ன?” காதலில் விதண்டாவாதம் செய்தாள்.

“பின்ன இல்லையா..!?’

“என்ன கொண்டு போய் விடுடா.. இப்படி இருந்தா இடுப்பு கழண்டு விழுந்துரும் போல..” பிடிமானம் இன்றி நின்று இருந்ததில் வலித்த இடையை சுட்டிக் காட்டினாள்.

“நீ முதல்ல லவ்வ சொல்லு..”

“என்னடா மிரட்டுற.. முடிஞ்சா இம்ப்ரஸ் செஞ்சு புரபோஸ் பண்ண வை..”

“இதவிடவா..!”

“இது இம்ப்ரஸ் பண்றதா..!! ஷர்ட் இல்லாம புரபோஸ் பண்ணிட்டா, அப்படியே இவர பார்த்து மயங்கி லவ் சொல்லிருவோமா? அப்படி எப்படி டா தப்பு கணக்கு போட்ட..” ஸ்ரேயாவின் மறுப்பில் இன்னும் அவளின் பித்தனாக மாறினான்.

“ஒகே.. இப்ப ஓர் கிஸ் ஆச்சும் கொடு மா..!” என கெஞ்சினான்.
இவனை முத்தமிட்டால் அதை ஊர்வலமாய் அழைத்துச் செல்வானே...! அதுவும் இத்தனை பேர் மத்தியில்.. என யோசித்தவளின் முகம் செம்பருத்தி இதழாக சிவந்து போனது.

அதைக் கண்டு ரசித்தவன், “ஏய்.. நீ வெட்கப்படுறதப் பார்த்தா, ஏதோ எக்கு தப்பா யோசிக்கிற போல.. டூ பேட்..” என சீண்டினான்.
ஸ்ரேயா மறுக்கும் முன், “ஜஸ்ட் லவ் கிஸ்..” என்றவன், அவள் நாடி பிடித்து நெற்றி வகிட்டில் முத்தம் வைக்க, அந்த இதம் அவளது தேகத்தில் ஆதி தொடங்கி முடி வரை தேகத்தில் பாய திக்குமுக்காடிப் போனாள்.

அறையின் பால்கனியில் அமர்ந்து இருமலர்களும் அமரின் காதல் வெளிப்பாட்டைக் கண்டு சிலாகித்துப் பேசினார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த காதல் ஸ்ரேயாவை அடைந்துவிட்டது, நபரில் மாற்றம் நிகழ்ந்தாலும் ஸ்ரேயாவுக்கு அமைய இருக்கிற நல்ல குடும்பமும், நல்விதமாக அமைந்த காதலிலும் அகமகிழ்ந்து போனார்கள்.

இருமலர்களின் காதல் வர்ணனைகளும், பயணிகளின் மெச்சுதல் வார்த்தைகளும் யோகா செய்பவளின் செவிப்பறையை கேட்காமலேயே நிறைத்தது, ஆனால் மனதில் பதியவில்லை. அவன் இட்ட முத்தத்தில் உள்ளம் நிறைந்து, காதல் உணர்வுகளைத் தீண்டி, அவனை நாடியே செல்ல தோன்றியது. ஆயிரம் முறை அபி சொல்லியிருப்பாள், ‘நீ இன்னும் காதலை ஆழ்ந்து உணரவில்லை என்று..!’ இப்போது புரிகிறது அவளின் காதல் சொல்லாடல், இந்நொடி நரம்புகள் வழியாக குருதியின் வழித்தடம் அனைத்தும் அவனின் ஸ்பரிசம் கேட்கிறதே...! என்ன செய்து தடை செய்வாள், இத்தனை ஆண்டுகள் செய்த தியானம்கூட கை கொடுக்கவில்லையா..!

தோழியின் காதலில் இருமலர்களும் துள்ளி எழுந்து இருக்க, “நம்ம லவ் சக்சஸ் ஆனமாதிரி நீயும், நானும் குதிச்சுக்கிட்டு இருக்கோம், இவள பாரு.. யாருக்கு வந்த விருந்தோனு அலட்டிக்காம இருக்கா..” மாளவிகா சொல்ல,

“எப்பவும் காலையிலதான யோகா பண்ணுவா, புதுசா எதுக்கு நைட் பண்ணிக்கிட்டு இருக்கா..?” தோழியின் மனம் அறியாமல் பேசிக்கொண்டனர்.

“இப்போதைக்கு இவ வர்ற மாதிரி தெரியல, வா.. நாம உள்ள போவோம்..” என அமரின் பதுவாரிகள் அறைக்குள் செல்லவும், பால்கனி தடுப்பில் இருந்து தாவிக் குதித்து வந்தான் அமர்நாத்.

திடீர் வருகையின் சத்தம் தந்த அச்சத்தில் கண்கள் விரித்து எழுந்து நின்றவளின் அருகே வந்தான், “இன்னைக்கு தூங்க முடியுமானு தெரியலடி.. உன்ன ரொம்ப தேடுது..” அவளின் தவிப்பை அவன் மூலமாக கேட்க இன்னும் அவனின்பால் மொத்தமாக தஞ்சமடைந்தாள்.

நயனங்களோடு சேர்த்து அவள் முகமும் அழகாய் விகசிக்க, அவ்வனப்பில் சொக்கியவன், குனிந்து அவள் இதழ்களை தனது இதழ்களால் லேசாகத்தொட்டு மீண்டான்.

மீச்சிறு தீண்டலில் மிரண்டு பார்த்தவளை, “சாரிமா.. ஐ கான்ட் கண்ட்ரோல்..” மன்னிப்பை யாசித்துவிட்டு, ஸ்பரிசத்த இதழ்களை விரல் உயர்த்தி துடைத்தான். அவன் இட்ட முத்தத்தை துடைத்து விடுகிறானாம்..! அவளுக்கோ அம்முத்தமே தேவலாம் என்றே தோன்றியது அவனின் செயலில்..!


‘அவன் கொஞ்சும் நேரம்
நானும் கொஞ்சம் தொலைந்து
போகிறேன்..’

****

அந்தகாரம் சூழ்ந்த வனாந்திரத்தில் அவனின் தோள் அணைப்பில் காய்ந்த இலையின் சலசலப்பில் மெல்ல நடையிட்டாள். அமர் மாட்டியிருந்த ஹெட் லைட்டின் ஒளியைக் கூட்டவும், குறைக்கவுமாக இருந்தான். அவன் தேடியும்.. நாடியும்.. செல்லும் இடம் வரும் முன் எங்கு செல்கிறார்கள், எதற்காக இந்த காரிருளில் நுழைந்தார்கள் என்பதை பார்த்துவிட்டு வரவும்.

இரவு பால்கனியில் முத்தமிட்டு கிறங்க செய்தவன், அடுத்த நாள் டேட்டிங் செல்வதற்கு அழைத்தான். விடியும் முன்னே ஸ்பீட் போட்டில் ஸ்ரேயாவை அழைத்துக் கொண்டு தனித்தீவு சென்றான். கடலுக்கு மத்தியில் அமைந்த தீவில் இறங்கியவன், கடல் அதிசயங்களைக் காட்டுவான் என எதிர் பார்க்க, அந்த விலகாத இரவுப் பொழுதில் காட்டிற்குள் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

அதற்கு முன் ஏற்பாடாக அவள் கைகளில் சில கனிமங்களும், ஸ்ப்ரேயும் பூசியவன், “ஆக்சுவலி இந்த டைம் காட்டுக்குள்ள போறது சேஃபில்ல, அதான் இந்த பிரிக்காசன்..”

“ஏன்.. இந்த டைம் என்ன? மழை காலம் மாதிரி தெரியலயே..”

“அதுகூட பரவாயில்ல.. இது இலையுதிர் காலம், காய்ந்த இலைகளுக்கு அடியில் இருக்க பூச்சியும் தெரியாது, பாம்பும் தெரியாது..” காட்டின் நிலவரத்தை எச்சரித்தான்.

“அடப்பாவி அப்புறம் எதுக்குடா உள்ள போறோம்.. வா..” என்று அவனை வம்படியாக மறுத்து இழுக்க முயற்சி செய்தாள்.

“அதலாம் பயப்படாம வா.. நான் பாத்துக்குறேன்..” அவளைக் கையணைப்பில் வைத்துக் கொண்டவனிடம் இருந்து விலக முயற்சிக்காமல் பாந்தமாக ஒட்டிக் கொண்டாள்.

அவன் நெருக்கத்தில் இதமாக உணர்ந்திருந்தவளின் வதனம் கனிவாக இருந்தது. அக்கனிவும் தன் மேல் கொண்ட நம்பிக்கையால் தோன்றியது என உணர்ந்தவனின், விழிகள் இன்னும் விழிப்புடன் நடைபாதையில் சிரத்தை எடுத்தது.

அவன் தலையில் பொருத்தியிருந்த ஹெட்லைட் ஒளி குறைக்க முழுவதும் இருள் சூழ்ந்தது. சில அடிதூரத்தில் விண்மீன்கள் இறங்கி பூமியில் மின்னும் ஒளியாக பிரகாசிக்க, அதைக் கண்டவள், “இங்க எதுக்குடா எல்.இ.டி மாட்டி வச்சுருக்க.. இங்க சோலார்லாம் இருக்கா? எப்படி எரியுது..?” வியப்பின் விளிம்பில் இருப்பாள் என எதிர்பார்த்தவனை ஒற்றை கேள்வியில் மொக்கை வாங்கினாள்.

“உனக்கெல்லாம் சர்ப்ரைஸ் தரலாம்னு நினைச்சேன் பாரு..! அது மின்மினிப்பூச்சி.. இந்த பயர் ப்ளைக்காக..” உருகிய குரலில் சொல்ல,
அவனுக்கு மறுமொழி சொல்ல மறந்து அந்த மின்மினி கூட்டத்துடன் ஐக்கியமனாள்.

அவர்களை சுற்றி மின்மினி மொய்த்துக் கொள்ள, அவன் எதிர்பார்த்த ஆரவாரம் இல்லை அவளிடம், மிக நிதானமாக அச்சூழலை பிரமித்து ரசித்து உள்வாங்கி ஆழ்மனதிற்குள் படமாக பதிவு செய்தாள்.


ஸ்ரேயா சூழலில் லயித்து இருக்க, அவனோ அவளின் சிந்தனைகளை விளக்கிக் கொள்ள முயன்றான். சுற்றிக் கொண்டிருந்த மின்மினிகளில் ஒன்று அவள் வெற்றுக் கழுத்தில் அலங்காரமாக வீற்றிருக்க, அதை கண்டவனின் பார்வை தாபம் அறுந்த சிறகாக துடித்தது.


‘அவளின் கழுத்தில் மின்மினிப்பூச்சி
தங்கிய தருணம்
அவன் பார்வையோ சிறகற்றவனாக
அவளிடம் தேட துவங்கி தேக தவிப்பை
மெருயேற்றியது
அது மின்மினியின் ஒளியல்ல
மனதை மூட்டும் மின்னல்..!’



இன்று முழுவதும் ஸ்ரேயா வியந்து கொண்டே இருக்க வேண்டும் என கருதியவன் போல், அடுத்து அமர் அழைத்து வந்தது, ஹாப்பிடன் ஹவுஸ்..! அரை தேங்காயை தலைகீழாக கவிழ்த்து வைத்தது போல் இருக்க அதில் மேல்கூரை கண்ணாடி பதித்து வீட்டின் உள்ளே ஒளியை வாரி இறைத்தது மற்ற தேவைக்கும் சோலார் மூலமாக இயங்கும்படியே இருந்தது.

ஸ்ரேயா மனதில் பல சிந்தனைகள் ஓடினாலும், அதையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு அமர் காட்டிய உணர்வுகளில் தத்தளித்தாள்.

“பாத் டப்புல வெதுவெதுப்பான சுடுதண்ணி நிரப்பி வச்சுட்டேன், முதல்ல போய் நல்லா ரிலாக்சா குளிச்சிட்டு வா..” என்றான்,

“இப்ப எதுக்கு? அப்புறமா..” என தயங்கி வந்தது குரல்,

“ம்ஹும்.. இன்செட்க் ரிப்பெலேன்ட் யூஸ் பண்ணிருக்க சம்டைம்ஸ் அதனால அலர்ஜி வரதுக்கு வாய்ப்பு இருக்கு.. முதல்ல போய் குளி..” அதட்டவே செய்தான்.

“டேய்.. குளி குளின்னு சொன்னா, எப்படி? குளிச்சுட்டு போடுறதுக்கு டிரஸ் இருக்கா என்ன? என்ன உன்னோட பெரிய சைஸ் டீசர்ட் போட்டு ஓர் ரொமான்ஸ் சீன் கிரியேட் பண்ணலாம்னு நினைச்சியா..?” அதட்ட தொடங்கியவள், உதிர்த்த வாக்கியங்களை நினைத்துப் பார்க்க கூச்சம் கொண்டு இதழ்களை சுருட்டி வைத்தாள்.

“வாட்ட ஐடியா பயர் ப்ளை..! எனக்கு தோணாமா போச்சு பாரு, மிஸ் பண்ணிட்டேனே..!” என பெரியதாக அங்கலாய்த்தான்.

அவனது செய்கையில் ஸ்ரேயா முறைத்து பார்க்க, “இந்த.. புடி.. இந்த மூளை ஓவரா யோசிக்குது..” என அவள் நெற்றியில் தன் இருவிரல்களை துப்பாக்கி போல் காட்டி சீண்டினான். விழிகள் முறைத்துக் கொண்டு இருந்தாலும் அகம் மகிழ்ந்து இருந்தது அமரின் சக்கரகட்டிக்கு..!

குளித்து வந்தவள் அமர் பரிசு அளித்த உடையில் கச்சிதமாக பொருந்தி இருந்தாள். ப்ளாசோ பேன்ட்டும், சிலீவ்லஸ் ப்ரின்ஸ்கட் ப்ளவுசும், நீளமான ஜாக்கெட்டும் அணிந்தவளுக்கு உறுத்தியது, இந்தியாவின் தலைசிறந்த டிசைனர் வடிவமைத்தது என்பதை துணியின் குறியீட்டில் கண்டவளுக்கு, இத்தனை விலை உயர்ந்த ஆடையை எப்படி ரெசார்ட் மேனேஜரால் வாங்கியிருக்க முடியும் என்பதை கணிக்க முடியாத சூழலில் அவளை பிரமிப்பின் விளிம்பிலே வைத்திருந்தான்.

துரித உணவுடன் மீனை ஸ்டீம் செய்து அதில் உப்பும் சில மசாலாக்களையும் தூவி ருசி சேர்த்து, தாகம் தணிக்க இளநீரை கண்ணாடி டம்ளரில் நிரப்பி குவளையில் சுற்றி மெல்லிய தேங்காய் பருப்பை வைத்து அலங்கரித்து, அதனுடன் தென்னகுருத்தில் செய்த ஸ்வீட் ஒன்றையும் வைத்து இருந்தான்.

சிறு மரப்பலகையில் நேர்த்தியாக உணவுகளை வரிசைப்படுத்தி இருந்தான். அமர் பரிசளித்த உடையில் தயாராகி வந்தவளை, “வாவ்.. கார்ஜியஸ் பயர் ப்ளை.. அன்பிலிவபுள், ஏஞ்சல் மாதிரி இருக்க..” என்றவன், தொடர்ந்தான்,

“லவ் பண்ற பொண்ண டேட்டிங் கூப்பிட்டு வந்தா, ஏதோ சம்பிரதாயம்னு சொல்லி இப்படி வாய் கூசாம புகழ சொன்னாங்க, நானும் சொல்லிட்டேன்..” அமரின் சீண்டலை துளியும் அலட்டிக் கொள்ளாமல், உதடுகளை சுளித்துவிட்டு எவ்வித பேச்சும் இன்றி சிறு ஸ்டூலில் போய் அமர்ந்தாள்.

அவன் பேச்சிலும் செய்கையிலும் சொக்கிப் போகிறாள். ஆனால் அதை வெளிப்படுத்தும் அறிகுறி மட்டும் இல்லை அவளிடம். ஸ்ரேயாவின் அகமகிழ்ச்சியை ஆராய்ந்து கண்டு கொண்டான். அவனுக்கு அதுவே போதுமாக இருந்தது.

எந்தவித சலசலப்பும் பேச்சும் இன்றி சாப்பிடுபவளிடம் அவன் தயாரித்த தென்னங்குறுத்து ஸ்வீட்டை எடுத்து அவளின்வாய் அருகே கொண்டு சென்றான். சிறு புன்னகையில், “டேட்டிங் கூப்பிட்டு வந்தா இந்த மாதிரி ஊட்டிவிடனும்னு சொன்னாங்களா..?” என்றாள்,

“செம்ம கிளவர் போ.. எப்படி கரெக்டா சொன்ன..” என்றான்.

“போடா.. லூசு..”

“யாரு.. நானா..!”

“நீ இல்லனா..! நான்னு சொல்றியா..?”

“எப்படிமா, பட்டுனு உண்மைய சொல்றது எனக்கு அதெல்லாம் வராதுப்பா..”

“யூ...” என்றவள், எழுந்து வெளியேறவும், அவள் பின்னே வந்து ஸ்வீட்டை ஊட்டிவிட்டே ஓய்ந்தான்.

 

Advertisement

Advertisement

Back
Top