
‘காதலில் ஏற்பட்ட பிரிவு, ஏக்கம் அல்லது கவலை காரணமாக உள்ளத்தில் இருக்கும் துயரம் வெளியில் புலம்பலாகத் தெரியும் நிலையே’
புலம்பித் தோன்றல்-22
அவனின் பொய்யான சிரிப்பில் அவளின் சோகமோ, பாவமோ மடிந்து போயின.
“என்..னாச்சு டா..?” தன் முழங்கையில் இரு விரல்களால் கொடுயிழுத்து விளையாடுபவனை எரிச்சலுடன் கேட்டாள்.
“நீ ரொம்பதான் என்ன அதிகாரம் பண்ற”
“நான் சொல்றத கேட்க ஆள் இருக்குனு நினைக்கிறப்பவே ஜிவ்னு இருக்குடா..” என புலகாங்கிதம் கொள்ள, அமரோ தலை சாய்த்து நங்கை முகத்தில் தென்பட்ட செல்ல சிரிப்பின் ரேகைகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.
“இப்பயென்ன காபி வேணுமா..?” எத்தனை இடையூறு தருகிறான் என ஆதங்கத்தோடு கேட்டாள்.
“ம்ஹீம்.. நீ..” அமர் முடிக்கும் முன்,
“டேய்.. ஆஸ்பத்திரியில இருக்கோம்னு கொஞ்சமாச்சு நினைப்பு இருக்கா? எப்ப எத கேக்குறதுன்னு விவஸ்தையே இல்ல.!” ஆதங்கமாய் கேட்டு பின் தடம்புரண்டு மென்மையாய், ஏக்கமாய் முடித்தாள்.
“தீஞ்சு போன கதையை சொல்றப்ப உனக்கு எதுக்கு ரொமான்ஸ் கேக்குது” அவளின் அருகாமையில் ஆர்வம் மிளிர, நக்கலாய் கேட்டான்.
“நான் எதுவும் சொல்லல, நீதான்..” வெட்கம் பிடுங்கி எறிய இமை மறைத்து போக்கு காட்டினாள்.
“நான் என்ன சொன்னேன் காபி வேணுமான்னு கேட்ட இல்ல நீ..னு சொன்னேன்ன.. அதுக்குப்போய் நீயா டிசைட் பண்ணி ஏதோ பேசுற.. அவ்வளவு ஆசை மாமா மேல..”
“அதலாம் ஒண்ணும் இல்ல, நீ சொல்ல வந்தத சொல்லு” நாணத்தை விடுத்து சலிப்பாய் கேட்டாள் ஸ்ரேயா.
“அதுவா.. என்ன மாமானு கூப்பிடுறியா?” ஆர்ப்பரிக்கும் உரிமை உள்ளுணர்வு அவனுக்கு.
“அதலாம் முடியாது.. திடீர்னு என்ன?” குரல் அடர்த்தியாக வெளிப்பட்டது.
“தோணுச்சுடி.. வெறும் இரண்டு எழுத்து சொல்ல மாட்டியா? லிப் லாக் கேட்ட மாதிரி முறைக்கிற, இப்படியே மிரட்டிக்கிட்டு இருந்த..”
“மிரட்டிக்கிட்டே இருந்தா..!”
“ம்.. துவாரபாலகிகள் முன்னாடி உன்ன இறுக்கி கட்டிப் பிடிச்சு லிப் கிஸ் கொடுத்துருவேன், பாத்துக்கோ..”
“அடேங்கப்பா, அவங்க முன்னாடி தான் கொடுப்பியா, இப்ப நான் அவைலபிலா தான இருக்கேன்” அவன் தூர்வாரிய உந்துதலில் கேட்டாள்.
“முடியாதுப்பா..! இப்பவெல்லாம் முடியவே முடியாது மூடும் இல்ல..”
“ஒ.. அது எப்படி மூடில்லாம போகும்..” என்றவள் கால் நீட்டி கட்டிலில் அமர்ந்திருந்தவனின் ஒருபக்கமாக மடியிலேறி அமர்ந்து, அமரின் பின்னந்தலை முடியை கோதி தன்னோடு இழுத்து சிதறாமல் முத்தங்களை இதழ் வழியே புகட்டினாள்.
போதை ஏறிய விழிகளால் அவளது சிமிட்டும் இமையைக் கண்டவன், நங்கை இட்ட முத்தத்தைத் தொடர, அவன் பின்னந்தலையை வருடிய கைகளை விலக்கி நிறுத்தி அவன் தொடரவிருந்த சுவை தேனிற்கு தடை போட்டாள்.
ஏக்கமும், ஈர்ப்புமாக தவித்துப் போய் மழலையாக அவளைக் கண்டான். இதழ் மறைத்து விரிந்த புன்னகையை அடக்கி,
“ச்சசு.. மூடு இல்லடா..” என நகன்றவளை, முறுக்கேறிய நரம்புகளைத் தளர்த்தி முறைத்துப் பார்த்தவன்,
“இதலாம் கணக்குல வச்சுக்கோ மொத்தமா சேர்த்து திருப்பிக் கொடுக்கல..” என சூழுரைத்தான்.
“பழியுணர்வு நல்லது இல்லடா..”
“இது பழியுணர்வு இல்ல, காதல் உணர்வு..”
“அடேங்கப்பா..!”
அமரின் மனப்போக்கு எளிதில் இவள் விவாகரத்து பெற்றிருக்க மாட்டாள் என்பதே! இதுவரை நல்லவர்களாக காட்சிப்படுத்திய அவர்களின் முகப் பூச்சை யூகிக்க இயலாமல் துவண்டு இருப்பாளோ!
கடந்த காலமாக இருந்தாலும் அவளது வேதனையைப் போக்க திராணியற்ற தன்னையும், தன்னவளையும் உற்சாகப்படுத்தியபடியே இருந்தான்.
அடுத்து இரண்டு மாசத்துல மறுபடியும் வந்தாங்க, இந்த தடவை நானே நான்-வெஜ் குக் பண்ண கத்துக்கிட்டு அவங்கள கிட்சனுக்குள்ள விடாம சமைச்சுப் போட்டேன்.
அதுவும் மூணு நாள் தான் போச்சு, “ஏன் அம்மு கஷ்டப்படுற, சமைக்க கஷ்டமா இருந்தா ஸ்விக்கில ஆர்டர் பண்ணிக்கலாம், எனக்கு சீஸ் பீஸா சொல்லிரு” என்றவர் டிவியில் ஐக்கியமனார்.
இந்த தடவை அவங்க சமைக்கிறேன்னு சொல்லவும் இல்ல, பாத்திரம் புதுசு மாத்திருக்கிறத பத்தி கேக்கவும் இல்ல. எனக்குதான் சின்னதா நெருடல் இருந்துக்கிட்டே இருந்துச்சு பட் மண்டையில ஏத்திக்கல.
வீடு தேடி வந்த எங்க அம்மாகிட்ட, “இரண்டும் சின்ன சிறுசுக ஆசைப்பட்டாங்கனு செலவே இல்லாம கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க, நானும் மருமக பார்க்க லட்சனமா இருக்கவும் போனா போகுதுனு இவங்க கல்யாணத்த ஏத்துக்கிட்டேன், அதுக்காக வேற எந்த சலுகையும் இந்த வீட்டிலிருந்து எதிர் பார்த்திறாதீங்க, சொல்லிட்டேன்..
உங்க பொண்ணு கஷ்டப்படக்கூடாதுனு அவனே வீட்டுக்கு தேவையானத வாங்கி போட்டு இஎம்ஐயும் கட்டிக்கிட்டு இருக்கான். உங்களுக்கு இப்படி ஓர் இழிச்ச வாய் மருமகன் கிடைச்சதுக்கு நீங்க ஏதோ புண்ணியம் பண்ணிருப்பீங்க போல. பாருங்க உங்க சைடுல இருந்து பொண்ணுக்கு சீருனு ஒண்ணுமே செய்யல, அதுக்கு உங்களுக்கு துப்பு இல்லனு நினைச்சுட்டுப் போறேன். ஆனா இப்படி என் மருமக சம்பளத்தையும் முழுசா நீங்களே வாங்கி அடுக்கி வச்சா எந்த ஊர் நியாயம் இது..? பொண்ணு புகுந்த வீட்டுல ஏதும் விசேஷம்னா சீர் செனத்தியோடு வந்து திண்ணதோட பொண்ண பெத்தவங்க ஒதுங்கிக்கணும். உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். எங்க வீட்டு மருமக நாங்க நல்லா பாத்துப்போம். நீங்க கவலையில்லாம கிளம்புங்க..” என விரட்டாத குறையாக நானூறு கிலோமீட்டர் பயணம் செய்து வந்தவரை சாப்பிடவோ, தங்கவோ சொல்லாமல் திரும்ப அனுப்பி விட்டார்.
‘என்னமோ லவ் பண்ணவும், கல்யாணம் செய்யவும் எங்கம்மா ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மாதிரி பேசுது, பொம்பள பிள்ளய பெத்து, வளர்த்து.. தப்பு அந்த பொண்ணு மேலனாலும், பெத்தவங்களுக்கு தான் பேச்சு.. அவங்கதான் தல குனிச்சு நிக்கிறாங்க..!!’ மனதில் சினம் எழுந்ததே ஒழிய எதிர்க்க தெரியவில்லை.
“எனக்கு ஒண்ணும் இல்லடா, உன்ன நல்லா பாத்துக்கிறாங்க அது போதும், பாத்து பத்திரமா இருந்துக்கோ, உனக்கு எப்ப முடியுதோ அம்மாவ வந்து பாத்துட்டு போ..” என மகளின் தலைக் கோதி விடைபெற்றார்.
அமுதா ஒவ்வொருமுறை வரும்போதும் முரண்பாடு தெரிந்தது.
“ஏன் அம்மு, உங்க அம்மா கல்யாணம் பண்ணி எத்தன நாள் கழிச்சு நீ தங்குன, ஆமா நீங்க இரட்டைபிள்ளைல, ஒரு வருஷம் முடியப்போகுது அப்புறம் நீ மட்டும் ஏன் உண்டாகாம இருக்க..?”
‘கழுத்துல தாலி ஏறிட்டா குழந்தை பிறந்திருமா, என்னடா கொடுமையா இருக்கு. இதுல எங்க அம்மாக்கு பிரச்சனை இருக்கானு எப்படி உள்குத்து வச்சு கேக்குது பாரு..! கெளசிகா என்னடா நீயும், உங்க அம்மாவும்...!’ மனப் புலம்பல் மட்டுமே வெளிப்பட்டது ஸ்ரேயாவிடம்.
ஸ்ரேயா அலுவல் சென்றிருக்க, அமுதாவின் செய்கையை குற்றம் சாட்டினான் கெளசிகன். “ஸ்ரேயா பாவம் மா, அவகிட்ட இப்படி பேசாத..”
“எப்படி பேசிட்டாங்க..? ஒத்த சுகமும் இல்லாதப்பவே உன் பொண்டாட்டிக்கு வரிஞ்சு கட்டிட்டு வர..” மகன் என்றும் பாராமல் வார்த்தைகளை கொச்சையாக பிதற்றினாள் அமுதா.
“லூசு மாதிரி பேசதமா, அவ சம்பாதிக்கிறத அவங்க அம்மா வீட்டுக்கு கொடுக்குறா அதப்போய் நீ ஏன்மா கேக்குற?” ஸ்ரேயாக்காக பரிந்து பேசினான்.
“ஏன்டா.. வீட்டுல இத்தன பொருள் வாங்கிபோட்டு மாசம்.. மாசம்.. அந்த கடன் அடைக்க நீ கஷ்டப்படுறியே? அவளும் தான இந்த வீட்டுல பகுமானமா இருக்கா, உனக்கு துணையா அவளும் பொறுப்பு எடுத்து கடன் அடைக்குட்டுமே..!”
“அப்படி நான் கஷ்டப்படக்கூடாதுனா அண்ணனுக்கு சொத்த எழுதி வச்சமாதிரி, என்னோட பங்கு சொத்த என் பேர்ல எழுதி வச்சுரு..?”
“பெரியவன் பிள்ள குட்டினு இருக்கான் எழுதி வச்சேன், உனக்கு அப்படியா?”
“தெரியுதுல.. அப்புறம் எதுக்கு ஸ்ரேயாகிட்ட குழந்தை பத்தி பேசி வச்சுருக்க?” தாயிடம் கடுகடுத்தான்.
“அவ முந்துறதுக்கு முன்னாடி நாம முந்திக்கலாம்னு தான், இப்பவே மட்டம் தட்டி மலடின்னு உட்காரவச்சுட்டா, பின்னாடி நீ திருப்தியா பிழைக்கலாம்..”
“அவள தேவையில்லாம வம்பு இழுக்கதமா. எனக்கு அவ வேணும், உன்னால எங்களுக்குள்ள பிரச்சனை வந்துச்சு, அவ்வளவுதான்..! அடுத்து பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்.” அமுதாவை எச்சரித்தான்.
“ஓர் பொண்ண லவ் பண்றேன், அவள கல்யாணம் செஞ்சுவை, அவ இல்லாட்டி செத்துருவேன்னு நாடகம் ஆடுனது மறந்து போச்சு போல! நீ சொன்னல்ல..?” தன்னை நியாயப்படுத்த மகனை குற்றம் சுமத்தினார்.
“இல்லனு சொல்லலியே! ஸ்ரேயா கல்யாணம் பண்றதுக்கு யோசனை சொல்லி வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் நீயும் சேர்ந்து தான வாங்குன, இப்ப அவ பேராசைப்பட்டு வாங்குன மாதிரி ஸ்ரேயாவ குறை சொல்லாத.. எனக்கு அவ வேணும்.!”
“வேணும்.. வேணும்னு பினாத்திக்கிட்டே இருக்க. அவள கரடி பொம்ம மாதிரி கட்டி பிடிக்க மட்டும்தான் முடியும்” ஏளனம் தெறித்த குரலில் அன்னை என்றும் பாராமல் பேசினாள் அமுதா.
“ஆமாமா.. அவ எனக்கு டெடிதான்... ஐ வான்ட் ஸ்ரேயா, அன்ட் ஐ நெவர் மிஸ்ட் ஹர்..” ஆங்காரமாக கத்தினான்.
கெளசிகனின் அதிர்ந்த குரலில் கையில் இருந்த ஹேன்ட் பேக்கை தவற விட்டிருந்தாள்.
வரவேற்பறைக்கும், நுழைவாயிலுக்கும் இடையில் பார்ட்டிஷன் அமைந்திருக்க, அவள் வந்ததோ இவர்களின் இரகசியம் அம்பலமானதையோ தாயும், மகனும் கவனிக்கவில்லை. டம்மென விழுந்த சப்தத்தில் இருவரும் ஸ்ரேயாவைக் கண்டனர்.
துரோகத்தை சந்திக்க இயலாமல் குனிந்த தலையுடன் இவள் வெளிப்பட, அமுதாவோ நிமிர்ந்து, “வா அம்மு.. இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துட்ட?” எவ்வளவு கரிசணை மருமகள் மீது என எள்ளலாக நினைத்தாள்.
“ம்.. இன்னைக்கு வேலன்டைன்ஸ் டே அதான் எல்லோரும் செலிபிரேட் பண்ண போயிட்டாங்க” தலை நிமிராமல் மெல்லிய குரலில் சொன்னாள்.
“ஆமா அம்மு.. உன் புருஷன்கூட சொல்லிக்கிட்டு இருந்தான், உன்ன அழைச்சுகிட்டு ஏதோ ஹோட்டலுக்கு போயிட்டு அப்படியே சினிமா போயிட்டு வாரோம்னு, என்னையும் வர சொன்னான் எனக்கு என்ன காலம் போன கடைசில, வீட்டுல இருக்க பழசு என்னத்தையோ சாப்பிட்டுக்கிறேன்.. நீங்க ஜோடியா போயிட்டு வாங்க..”
அமுதாவின் துரோகம் ஸ்ரேயாவுக்கு கசப்பையும், வெறுமையும் இணைந்தே கொடுத்தது.
‘ஆமா..ஆமா... எத்தனை பெரிய தியாகம்னு சொல்லி கண்டிப்பா இவங்க கால்ல விழணும் போல..! எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இந்த பொம்பளைக்கு’
இன்னும் இவன் மீது காதல், நம்பிக்கை இருக்கிறதா? ஸ்ரேயா மனசாட்சி அவளை காரி உமிழ்ந்தது. கெளசிகன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. அறைக்கு சென்று கதவை அடைத்தாள். சிறு உதாசீனமோ வெறுப்பான சொல்லோ அவளிடம் இருந்து வெளிவரவில்லை. ஜடமாக அவனுடன் இருந்தாலே ஒழிய ஏமாற்றத்தையோ, ஆங்காரத்தையோ காட்டவில்லை.
தன் மூளையில் உதிக்கும் சந்தேகங்களை கேட்கவும் துணிவில்லை அவளிடம்!
அமுதா ஊருக்கு கிளம்பிவிட, அவளுக்கு முடிந்தால் உணவு சமைத்தாள், இல்லையெனில் ஆர்டர் செய்து உணவை உட்கொண்டாள். அவனுடன் சேர்ந்து உண்ணும் பழக்கத்தை தவிர்த்து இருந்தாள். கெளசிகனை ஏறெடுத்தும் பார்க்காமல் தவிர்த்தாள். இரவில் தாமதமாக வீட்டிற்கு வந்து, ஹால் சோபாவில் சுருண்டாள், அவர்கள் பேசியதை கிரகித்துக் கொள்ளவும் திறனற்று திரிந்தாள்.
ஓரு வாரம் சென்றிருக்கும், இவளின் உதாசீனத்தை தாங்க இயலாதவன், ஜிம்மில் அதிக ஒர்க்கவுட் செய்ததின் விளைவாக நீர்சத்து வற்றி, இயல்புக்கு மாறாக இதயத்துடிப்பு அதிகரித்து, மயங்கிய நிலையில் விழுந்தவன் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான்.
ஜிம்மில் இருந்து அழைத்து மருத்துவமனையில் அனுமதித்திருப்பதை தெரிவித்திருந்தார்கள். காலை எழுந்தவுடன் தகவல் கிடைக்கவும் இரவு பைஜாமா உடையில் அப்படியே சென்றுவிட்டாள். அங்கே சென்றவளுக்கு எதுவும் சிந்திக்க முடியா நிலை. சாஸ்ருதியை தொடர்பு கொண்டு ஆஸ்பத்திரிக்கு வர சொல்லிவிட்டாள். அவள் வரவும் இணைந்து சென்றே மருத்துவரை சந்தித்தனர்.
இரு சகோதரிகளையும் கண்ட டாக்டர், “கெளசிகன் ரிலேட்டிவா நீங்க..?”
“எஸ் டாக்டர், என் சிஸ்டரோட ஹஸ்பண்ட் அவர்..”
“ப்ளிஸ் சிட்.. பெரிய ப்ராப்ளம் எல்லாம் இல்ல.. ஓவர் ட்ரெயினிங், தூக்க குறைபாடும் சேர்ந்து சின்னதா மசுல் அன்ட் லிக்மென்ட் ட்யர்ட்நெஸ் அப்புறம் லூக்கோபீனியா இருக்கு. இரண்டு நாள் இங்க இருக்கட்டும். நத்திங் ஓரி நல்லா ரெஸ்ட்டும், ஹெல்தி ஃபுட்டும் எடுத்தாலே போதும். முக்கியமா குறைஞ்சது ஒரு மாசம் ஜிம் பக்கமே போகக் கூடாது, டேக் கேர் ஹிம். இப்ப நீங்க போய் பாருங்க..” மருத்துவராக ஆலோசனையோடு நிறுத்திக்கொண்டார்.
கெளசிகனை சென்று பார்க்காமல் சோர்ந்து போய் அமர்ந்தாள் ஸ்ரேயா.
“ஒண்ணும் இல்லனு சொல்லிட்டாங்கல்ல.. பயப்படாதடி, இரண்டு நாள்ல வீட்டுக்கு கூப்பிட்டு போயிரலாம்..” கணவனை எண்ணி தவிக்கிறாள் என ஆறுதல் கூறினாள் சாஸ்ருதி.
குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தவளின் முகவாய் பிடித்து, “சாப்பிட்டியா..?” என்றாள், மறுப்பாக தலையசைக்கவும்.
“சரிவா.. முதல்ல போய் வயித்த நிறைச்சுட்டு வருவோம்” என இழுத்து சென்றாள். காபி, சேன்விட்சால் வயிற்றை நிரப்பவும் மனம் திறந்தாள் ஸ்ரேயா. தாயும், மகனும் பேசிக் கொண்டதை சாஸ்ருதியிடம் அப்படியே சொன்னாள்.
“நீ எதுவும் கேக்கல.. அப்படியே எனக்கு என்னனு மெளன விரத போராட்டம் நடத்துனியாக்கும்..” ஸ்ரேயா அழவும், “நீ அழுதுகிட்டே இரு..” அழுபவளை சமாதனம் செய்ய முயலாமல், மருத்துவர் அறை நோக்கி சென்றவள், கெளசிகனின் முழு உடல் பரிசோதனை செய்ய கோரிக்கை தந்தாள்.
சாஸ்ருதி கேட்ட பரிசோதனை படிவம் அடுத்த இருபத்திநாலு மணி நேரத்தில் கையில் இருந்தது. அப்படிவத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரேயாவுடன் மருத்துவரை அனுகினார்கள்.
“பிளட் சுகர் டெஸ்ட், என்.சி.எஸ்(nerve conduction study), ஹார்மோன் டெஸ்ட், டாப்ளர் ஸ்கேன்.. எல்லா டெஸ்டும் எடுத்தாச்சுமா, அவருக்கு இருக்குறது பி.என்.எஸ் ப்ராபளம்”
சகோதிரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை, அவர்களின் பார்வை பரிமாற்றமும், சுருங்கிய நெற்றி முடிச்சும் இளம் பெண்களுக்கு இதை விவரிப்பது அவசியம் என உணர்ந்தவர், விளக்கினார்.
“பி.என்.எஸ்.ல(peripheral nervous system) குறைபாடு இருந்துச்சுனா மூளைக்கும், பெனிஸ்க்கும் இடையே செல்லும் செக்சுவல் சிக்னல்ஸ் ஈடுபாட்டை குறைக்கும். ஆரோசலை PNS தான் கட்டுப்படுத்துகிறது. நரம்புத் தளம் சரியாக வேலை செய்யாததே எரக்டிங் டிஸ்பங்சனுக்கு முக்கிய காரணம். அதன் பாதிப்பாக ஈர்ப்பு வராது, வந்தாலும் பாதியில் போய்விடும். செக்சுவல் ப்ளேஸ்சர் ரெஸ்பான்ஸ் குறையவும், அரோசல் வருவது ரொம்ப குறையுறதுக்கு வாய்ப்பு அதிகமா இருக்கு.” டாக்டர் முடிக்கவும்,
சாஸ்ருதி, “அப்போ.. கெளசிகன் இம்போட்டன்ட்னு சொல்றிங்களா?”
டாக்டரின் ஆமோதிப்பில் சகோதரிகள் இருவரும் நொடித்து போயினர். ஸ்ரேயாக்கோ தான் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்பட்டு இருப்பதில் தனக்குள்ளே முட்டாளாகிய எண்ணம் சிந்தையை மட்டுப்பட செய்திருந்தது.
கெளசிகன் அறைக்கு சகோதரியை இழுத்துக் கொண்டு சாஸ்ருதி சென்றாள். அங்கு கண் முழித்து இருந்தவன் முதலில் உள்ளே நுழைந்த சாஸ்ருதியைக் கண்டு தன் மனைவி என புன்னகைத்து,
“வா.. ஸ்ரேயா” என்றான்.
அதில் கடுப்படைந்தவள், “இப்ப எதுக்கு இந்த டிராமானு தெரிஞ்சுக்கலாமா..?” அவனின் மருத்துவ வாசத்திற்கான காரணியை ஆராய்ந்து கேட்டாள்.
“இல்ல ஸ்ரேயா..” அவன் முடிக்கும் முன்னே,
“ஹலோ.. மிஸ்டர் உங்க பொண்டாட்டி யாரு.. பொண்டாட்டியோட அக்கா யாருனு வித்தியாசம் தெரியல.. இதுல லவ் மேரேஜ் வேற..?” இளக்காரமாக கேட்டவளை விழி விரித்துப் பார்த்தான்.
“ஸ்ரேயா எங்க..?” குரலில் கோபம் வெளிப்பட்டது. தன்னைக் காணவும் அவள் வரவில்லையா என்கிற ஆதங்கம் ஆங்காரமாய் வர எத்தனிக்க,
“எதுக்கு அவ? இதுவரைக்கும் அவள ஏமாத்தினது போதாதா, உன்னையெல்லாம் கம்ப்ளைண்ட் பண்ணி உள்ள தள்ளனும் ராஸ்கல்..” அவளது ஏச்சுகளை உதாசீனப்படுத்தி,
“ஸ்ரேயா.. ஸ்ரேயா..” என கத்தியபடி படுக்கையைவிட்டு எழ முயற்சிக்க, காலில் இட்ட கட்டு அசைய இயலாமல் செய்ய, மேலும் அவனின் இரைச்சல் அதிகமாகியது.
அவனின் கதறலில் பதறி உள்ளே வந்தவளை, “ஸ்ரேயா என்னாச்சு? நீ ஏன் பாக்க வரல..? தனியா இருந்தேன் தெரியுமா?”
கொஞ்சல் குரலை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளின் சோகம் படிந்த முகத்தில் விரக்தி புன்னகை தெரிய, ‘எதுக்கு இப்படி பண்ண? நான் என்ன தப்பு பண்ணேன்?’ என பார்வையால் ஸ்ரேயாவின் கேள்வி தொக்கி நிற்க, அவளின் வேதனையை அறிந்தும் கொள்ளும் புரிதல் தான் அவனிடம் இல்லை..!
“ப்ளீஸ்.. ஸ்ரேயா? என்கிட்ட பேசு.. நீ பேசாம இருக்கப்ப செத்துறலாம்னு தோணுது..”
“ஒ.. ப்ளாக் மெயில் பண்ணி மறுபடியும் இவள கூப்பிட்டு போய் என்ன செய்றதா உத்தேசம் மிஸ்டர்? நீ இம்போட்டன்ட்னு தெரிஞ்சுருச்சு. இனியும் ஸ்ரேயா உன்கூட வாழ மாட்டா..” ஸ்ரேயாவை வெளியே அழைத்து வந்தாள்.
கெளசிகனிடம் பேசிக்கொள்ளவும் இல்லை, அவனின் கதறலோ எதுவும் தெரியவில்லை இவளுக்கு..! தன்னை சிந்திக்க முடியாத வலையில் சிக்க வைத்த தாய், மகன் இருவரிடமும் ஆதங்கம் கொட்டிக் கிடந்தாலும் அதை வெளியேற்ற தெரியாத இருளில் மங்கிக் கிடந்தாள்.
இச்சூழலில் தாயின் அரவணைப்பும், உடன்பிறப்பின் ஆதரவான வார்த்தையும் மிக தேவையாக இருந்தது ஸ்ரேயாவிற்கு. ஆனால் மாறாக தாயின் புலம்பலிலும், சகோதிரியின் ஏச்சுமான சூழலிலும் இருந்தவளுக்கு சிந்திக்கும் திறன் மட்டுப்பட்டு குறுகிய மனப்பான்மையில் துவளத் தொடங்கினாள்.
Last edited: