சிதறாத முத்தங்கள் -3

Advertisement

Sastika

Active member
Member
1774192749367.jpeg

‘தலைவனும், தலைவியும் விரும்பி ஆசையில் லயித்திருப்பது’

வேட்கை -3



புவியிடம் கை கோர்த்தது போதுமென முடிவு செய்து விட்ட பகலவன் அணையப்போகும் விளக்குப்போல பளீர் ஓளியை தந்து கொண்டிருந்தான். கடை வீதிகளில் கூட்டம் கணிசமாக இருந்தது, ஷாப்பிங் செய்யவென வம்படியாக ஸ்ரேயாவை அழைத்து வந்திருந்தனர் அவளது தோழிகள்.



“இப்ப நீங்க எதுக்கு பர்மிஷன் போட்டு என்னைய வம்பா இழுத்துக்கிட்டுப் போறீங்க..” அலுப்பாகக் கேட்ட ஸ்ரேயாவை, நடுவிலே விட்டு இருபக்கமும் கைகளை விடுவேனா என கோர்த்து கொண்டே நடையைத் தொடர்ந்தனர்.



“அழகா இருக்கல்ல... அதான் உன்னைய கடத்திட்டுப் போக ப்ளான் பண்ணோம்...” ஹரிதா இன்னும் ஸ்ரேயாவை இறுக்கினாள்.



“ஏய் விடுங்கடி... என்னைய என்னமோ தொலைஞ்சு போன குழந்தை மாதிரி டிரீட் பண்ணிக்கிட்டு...” இருவரின் கைகளை உதறிவிட்டு, விருவிருவென முன்னே நடக்கத் தொடங்கினாள்.



“ஆமா, உனக்கு எப்படி பேங்க்ல பர்மிஷன் கொடுத்தாங்க...?” என திரும்பி நின்று மாளவிகாவிடம் கேட்டாள்.

ஸ்ரேயாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், தங்கள் கையை உதறிய கோபத்தில் உம்மென இருவரும் பின்னே வர, தன் தோழிகளின் போக்கை உணர்ந்த ஸ்ரேயா அவர்களின் மெளனத்தை மதியாமல் தோள்களை சீசாசவாக மேல் ஏற்றி கீழ் இறக்கிவிட்டு முன் நோக்கி நடக்கத் தொடங்கினாள்.


ஸ்ரேயாவின் உதாசீனம் அவர்களை சீண்டிவிட ஓடிச் சென்று கழுத்தோடு கட்டியணைத்து இருவரும் முத்தம் வைத்தார்கள். ஜனங்களின் நடமாட்டம் மிதமிஞ்சி இருந்த அந்த சாலையில், அவர்களின் செய்கையை நோட்டம் விட்ட சிலர் சலன பேச்சுக்களை சிந்தவும், தன் இரு மலர்களையும் முறைத்து விட்டு அவர்கள் போக்குக்கே நடந்தாள்.


“ஹரி.. நான் கேட்ட பொருள் எந்த கடையில இருக்குனு நல்லா பார்த்துக்கிட்டே வா..” கடிவாளம் இட்ட குதிரையாக ஸ்ரேயா வர, மற்ற இருவரும் இரண்டு பக்கமும் கண்களை கோலி குண்டு உருண்டையாக உருட்டி கடைகளை அலசிப் பார்த்தனர்.


இவர்கள் எதற்காக கடை வீதிக்கு அழைத்திருக்கிறார்கள் என அறிந்த ஸ்ரேயா, அமைதியாக தோழிகளுக்கு உடன்பட்டாள். இல்லையெனில் சிறு மருப்பைக் கூறும் முன், அவர்களின் வசைப்பாடலோடு, அனுதாபம் காட்டும் கண்ணீருடன், தன்னை தாமே கொடூரனமானவளாக நினைக்க வைத்து விடுவார்கள் என்றே ஒதுங்கி அமைதியாக வருகிறாள்.


இது ஸ்ரேயா கண்ணனைப் பார்க்க ஊருக்கு செல்லும் தினங்களில் எல்லாம் நடக்கும் வழக்கமே. சிறு பாலகனுக்கு எதற்கு இத்தனை செலவு என்றோ, இவ்வளவு பொருட்கள் தேவையா என்றோயெல்லாம் உரைக்க இயலாது. ஸ்ரேயாவை அத்தனை பெரிய கடினமான பாசக் கயிற்றால் இருவரும் கட்டி வைத்துள்ளார்கள்.


“மாளு, ஹரி.. சொன்னா கேளுங்க, வாங்க போகலாம். லேட் ஆயிருச்சு பாரு, வீட்டுக்கு போயிட்டு திங்க்ஸ் வேற பேக் பண்ணனும், அப்புறம் இன்னைக்கு என்னோட குக்கிங் டே, சோ அதுக்கு வேற போயிட்டு குக் பண்ணி உங்களை சாப்பிட வச்சிட்டு கிளம்பனும்” இருவரிடமும் பல காரணங்களை சொல்லிப் போராடினாள் ஸ்ரேயா.


“ரே செல்லம்.. அத நினைச்சு டென்ஷன் ஆகாதடா, இன்னைக்கு நாம ஹோட்டல் போய் சாப்பிட போறோம். சோ சில் மேன்” என பக்கவாட்டில் நின்ற ஸ்ரேயாவின் தலையில் தன் தலையை மோதி சொன்னாள் ஹரிதா.


“இட்ஸ் டூ பேட் ஹரிமா, அவுட் புட் சாப்பிடக் கூடாதுனு நாம போட்ட கண்டிஷன ப்ரேக் பண்றீங்க..” தன் மகனைக் கண்டிக்கும் தோரணையில் கேட்டவளை சிரித்து மழுப்பினார்கள்.


“அ..து இன்னைக்கு மாளுதான் டிரீட் தாரேன்னு சொன்னா..” அவர்கள் இடையே சில விஷேச சலுகைகள் உள்ளது. ஏதேனும் முக்கிய நாட்களில் மட்டும் வெளி உணவுகளை எடுத்துக் கொள்ளும் சலுகை இருந்தது. இந்த கன்டிஷனை அமல்படுத்தியதும் மாளவிகா தான்.


“என்ன திடீருனு, இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..?” மாளவிகாவிடம் கேட்க, அவள் விழிப்பதைக் கண்டு, ‘போச்சு.. சொதப்ப போறா..’ என ஹரிதா தயங்க,


“டுடே பர்த்டே பார்ட்டிடா..” சமாளிக்க முயற்சி செய்தாள்.


“யாருக்கு..? இன்னைக்கு பர்த்டே..?” கேள்வியால் துளைக்க முயன்றாள் ஸ்ரேயா.


“இவளோட பாட்டிக்குதான்..” ஹரிதா முன் வந்து சொல்ல,


“எது.. செத்துப்போன பாட்டிக்கா..!” ஸ்ரேயா அதிர்ந்து கேட்டபடி இருக்க,


“ஆமா..பா, பாட்டி கனவில வந்து அவங்கள நான் மறந்திட்டேனாம், இப்பெல்லாம் அவங்கள நினைச்சுக் கூட பாக்க மாட்றேன்னு சொல்லி வருத்தப்பட்டாங்க, அதுக்காக அவங்களுக்கு ஹேப்பி மூட் செட் பண்ண பாட்டியோட ஜென்ம தினத்தை கொண்டாட நினைச்சேன் ரே.. நீ என்ன எல்லாத்துக்கும் கேள்வியா கேக்குற..?” என நகன்று பெரிய கடைக்குள் நுழைந்தாள்.


சென்னையின் லேண்ட் மார்க்காக பார்க்கப்படும் பிரபலமான கடை அது, மேல்தட்டு மக்களுக்கானது. குழந்தைகளுக்கான நியூட்ரிசன் தின்பண்டங்கள், விளையாட்டு சாமான்கள் முதல் அயல்நாட்டு கலாச்சார உடைகள் என பல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை அங்கே குவிந்து கிடக்கும்.

அக்கடையின் சிறப்பே, எதை எடுத்தாலும் பல ஆயிரம் ரூபாயை முழுங்கிவிடும். இத்தனை விலை உயர்ந்த பொருட்கள் தன் மகனுக்காக அவர்களின் சேமிப்பில் இருந்து விரயம் செய்வதில் ஸ்ரேயாவுக்கு உடன்பாடு இல்லை. அதை எத்தனை முறை எடுத்து சொன்னாலும் புரிந்துக் கொள்ள மறுக்கிறார்களே, அவளும் என்ன செய்ய இயலும்?


“அங்கயெல்லாம் போகாத மாளு.. வா ஹோட்டலே போயிறலாம்..” ஸ்ரேயா அவளை இழுக்க முயன்றாள்.


“இந்த கடையிலதான் கண்ணாக்கு பெரிய ரிமோட் கார் இருக்குனு, என்னோட கொலிக் சொன்னான். அத வாங்கணும் விடு என்னைய, நான் போய் பார்த்துட்டு வாரேன்” ஹரிதாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றாள்.


‘அய்யோ..!’ என தலையில் அடித்துக் கொண்டு பின்னாலேயே சென்றாள்.


“நீங்க வாங்கி குமிக்குற சாமானை நான் தனியா எப்படி தூக்கிட்டு போவேன்னு யோசிங்கடி...” என கத்திக் கொண்டே கடைக்குள் நுழைந்தாள். நேரம் சென்றதே தவிர கடையை விட்டு மூவரும் அசையவே இல்லை.

“ஹே ரே.. இந்த டிரஸ் பாரு, கண்ணாக்கும், உனக்கும் சேம் பேர்ட்ர்ன் டிரஸ் எடுத்து இருக்கேன்..” ஹரிதா செலக்ட் செய்த துணியை எடுத்து வந்து ஸ்ரேயாவிடம் காட்டினாள்.

“சூப்பரா இருக்குடா.. இதே பேர்ட்னல உங்களுக்கும் சேர்த்து எடு ஹரிமா.. நாம எல்லாரும் சேர்ந்து ஒரு போட்டோ ஷூட்டுக்கு ப்ளான் பண்ணோம்ல, அப்ப இந்த டிரஸ்ச போட்டுக்கலாம்” அந்த துணி பிடித்து போக அதைப் பற்றிய பேச்சில் இருவரும் தீவிரமாக இருந்தனர்.


இவர்களை பின் தொடர்ந்து ஒருவன் வருவதை இருவரும் கவனிக்கத் தவறினர். ஆனால் மாளவிகாவின் பார்வையில் அந்த ஒருவன் தப்பவில்லை.

அந்த ஆண்மகனை பார்ப்பதற்கு நேர்த்தியான உடை, பொருத்தமான முடி அலங்காரம் செய்து, டீனேஜர்ஸ் ஸ்டைல் பியட் வைத்திருந்த அவன், பெண்கள் பாராட்டும்படியும், அவனின் தோற்றம் வரம்பு மீறாமல் பொருந்தவே செய்தது. மாளவிகாவும் அவனை கண்டிக்க மறந்து அவனை ரசிக்கத் தொடங்கியிருந்தாள்.


“மாளு.. இங்க பாரு, உனக்கு இந்த டிரஸ் ஒகேதான..?” என ஸ்ரேயா கேட்டபடி அவளை நோக்கி வந்தாள். பதிலின்றி வெறித்து அவனையே பார்த்துக் கொண்டு இருக்க, மாளவிகா கையில் நறுக்கென கிள்ளினாள் ஹரிதா.


“அவுச்..ஆ.. எதுக்குடி கிள்ளுன..” வலித்த இடத்தை தேய்த்துவிட்டுக் கொண்டாள்.


“ரே.. கேட்டுக்கிட்டே இருக்கா..! நீ என்ன நின்னுக்கிட்டே தூங்குற?”


“ஒரு ஆளு.. ரொம்ப நேரமா நம்மளையே பாலோ பண்ணிட்டு வாரான்..” அப்போதும் பார்வை ரசனையாகவே இருந்தது.


“இது என்ன பழக்கம் மாளு.. பொறுக்கி பசங்கள இப்படியா சைட் அடிக்கிற மாதிரி பார்த்து வைப்ப..” ஸ்ரேயா அதட்ட,


“ஹேய் ரே, பார்க்க ஹான்ட் சம்மா, பக்கா டீசன்ட்டா தெரியுறாங்க..” ஆண் அவனுக்கு பரிந்துக் கொண்டு வந்தாள்.


“ஆமா.. பார்த்தவுடனே உனக்கு அப்படியே தெரிஞ்சுரும், வா போகலாம்..” என கூப்பிட, “அப்படியா தெரியுறான்.. எங்க?” என மாளவிகா பார்த்த இடத்தை ஹரிதாவும் நோக்கினாள். அவனை கண்டவள் ஒரு நொடி நிதானித்து பின்,

“எருமை.. அவர் என்னோட ஹெச்.ஆர்..” இவர்களிடம் மெதுவாக சொல்லிவிட்டு, அவனை நோக்கி கைகளை உயர்த்தி ஹாய் காட்டியபடி சென்றாள்.

“பாரேன்.. நம்மள இன்ட்ரோ கொடுக்காம போறா..!” என மாளவிகா புலம்பினாள்.

ஹெச்.ஆர்.ரிடம் பேசியபடியே இரு பெண்கள் நிற்கும் இடத்திற்கு அவனுடன் வந்திருந்தாள் ஹரிதா. “ஹேய்.. ஹி இஸ் மாதவன், என்னோட ஹெச்.ஆர், இது ஸ்ரேயா பேஷன் டிசைனரா இருக்கா, இவ மாளவிகா ஒர்க்கிங் எஸ் பேங்க் ப்ரொபஷனரி ஆபிசர்..”

“வாவ்.. கிரேட்..” தனது கரத்தை மாளவிகாவை நோக்கி முதலில் நீட்டினான்.

அவனை அருகில் பார்த்தவள், ‘தாடி வச்ச மாதவன்.. இந்த லேசான தாடிக்கூட எவ்வளவு அழகா இருக்கு இவனுக்கு..’ என மனதில் சிலாகித்தள் அவனின் கரங்களை தொட்டவுடன் சிலிர்த்துப் போனாள்.

“இவ்வளவு நாளா இது தெரியமா போச்சே..?” ஸ்ரேயா காது அருகில் கிசுகிசுத்தாள் மாளவிகா.

“எது..?” ஸ்ரேயா கேட்க,

“பேங்க் ப்ரொபஷனரி ஆபிசரா இருக்கிறது கிரேட்னு, நீ கவனிக்கலையா.. அவன் பாராட்டுனத.!” என்ற மாளவிகாவை முறைத்து வைத்தாள் ஸ்ரேயா.


“இவரோட அக்காக்கும், அவங்க பொண்ணுக்கும் டிரஸ் அண்ட் கிப்ட்ஸ் வாங்கணுமாம்.. அதுக்கு ஹெல்ப் கேக்குறாரு..” ஹரிதா விளக்கம் தந்தாள்.

“சாரிங்க.. அக்கா பேமிலிக்கு கிப்ட்ஸ் வாங்கி குடுக்கலாம்னு வந்துட்டேன், பட் எத எடுக்குறதுனு தெரியுல, அந்த டைம் ஹரிதா கண்ணுல பட்டாங்க.. ஹெல்ப் கேக்கலாம்னு அவங்க பின்னாடியே வந்துட்டேன்..” சுய விளக்கம் தந்தான்.

அவனின் சுணக்கம் பிடிக்காமல் போக மறுத்த மாளவிகா, “அதனால என்ன இருக்கு, இட்ஸ் ஒகே மேடி.. அப்படி கூப்பிடலாம்ல..?” என செல்ல பெயர் அழைப்புக்கு அனுமதி வாங்கினாள்.

“அப்படி கூப்பிடுறேன்னு சொல்லி, என்னைய வச்சு காமெடி பண்ணலனா, நோ அப்ஜெக்சன் பார் மீ..” என்றான் மாதவன்.

“ரே.. நீ கொஞ்சம் சப்போர்ட் பண்ணேன்..” மாதவனுக்காக பரிந்து பேசினாள் ஹரிதா.

“அது இல்லபா.. பஸ்ஸுக்கு டைம் ஆயிரும்” என ஸ்ரேயா தயங்க,

“அதையும் பேசிட்டேன் ரே, சாரே நம்மள வீட்டுல டிராப் பண்றேன்னு சொல்லிட்டார்..”

“அப்புறம் ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க, வாங்க சீக்கிரம் செலக்ட் பண்ணி கொடுப்போம்..” மாளவிகா அவனுடன் கிளம்ப முயற்சி செய்தாள்.

அவளின் கைகளை பிடித்துக் கொண்ட ஹரிதா, “ரே.. நீ சாரோட போ.. நாங்க பின்னாடியே வந்திடறோம்” என மாதவனும், ஸ்ரேயாவும் ஷாப்பிங்கை தொடர்ந்தனர்.

செல்பவர்களை பார்த்துக் கொண்டு இருந்த ஹரிதாவிடம், “வாடி.. போகலாம், பின்னாடியே வாரேன்னு சொல்லிட்டு இங்கேயே நிக்கிற..” தோழியின் கையைப் பிடித்து இழுத்தாள்.

“மாதவன் பாக்க எப்படி இருக்கார்..?” ஹரிதா தன் தோழிக்காக, தோழியிடம் விசாரித்தாள்.

“அவருக்கு என்னடி, சிரிச்சா ஆக்டர் மாதவன் மாதிரியே தான் இருக்கார். இத தெரிஞ்சே அவங்க பேரன்ட்ஸ் நேம் சூஸ் பண்ணிருப்பாங்க போல.. அழகன் டி..” புதிதாக தோன்றிய ரசனை உணர்வை தோழியிடம் லயித்துப் பேசினாள்.

“ம்.. நம்ம ரேக்கு மேட்சா இருப்பாருல..?” செல்லும் இருவரையும் பார்த்தபடியே கேட்டாள் ஹரிதா.

“என்ன சொல்ல வர?” சிறு அதிர்வு வெளிப்பட்டது மாளவிகாவிடம். எண்ணமும், பார்வையும் ஸ்ரேயா மீது இருந்ததில் மற்றொரு தோழியை கவனிக்க தவறிருந்தாள் ஹரிதா.

“ஒன்ஸ் எங்க டீம்ல.. சில பசங்க டிவோர்சி பெண்கள் பத்தி மட்டமா பேசி சிரிச்சுட்டு இருந்தாங்க, அப்ப அவங்கள வார்ன் பண்ணதோட இல்லாம.. அந்த குழ்நிலையில் வாழ்ற பெண்களோட கஷ்டத்தை பத்தி அவ்வளவு டீடைலா பேசுனாரு தெரியுமா..! மாதவன் சார் பெண்கள் மேல நிறைய மதிப்பு வச்சுருக்காரு. இப்படி பட்டவர் நம்ம ஸ்ரேயாவோட லைப்ல வந்தா, ஷீ இஸ் லக்கி யூ நோ..”

சில நொடிகள் முன் தோன்றிய தித்திப்பை தூரயெறிந்து தோழிக்காக சிந்திக்க தொடங்கி இருந்தாள் மாளவிகா.

“யா.. நீ ரேவுக்காக சூஸ் பண்ணி இருக்க ஆளு பார்க்க ஸ்மார்டா இருக்கான், கேரக்டர் கொஞ்சம் டீடைலா அனலைஸ் பண்ணி பார்த்துட்டு ஸ்ரேயாகிட்ட இவனைப் பத்தி பேசுவோம். அது வரைக்கும் இவன் மேல நாலு கண்ணையும் சேர்த்து வைப்போம்.” என தீவிரமாக பேசினாள் மாளவிகா.

தோழிகளின் திட்டத்திற்கு வித்திடும் விதமாக மாதவன், ஸ்ரேயாவின் நெருக்கம் அதிகரித்திருந்தது. இருவரிடமும் தென்படும் முகமலர்ச்சியைக் கண்டு தோழிகள் தங்களுக்குள்ளே திருப்திபட்டுக் கொண்டனர்.

பெண்கள் மூவரையும் இவனே ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இரவு உணவை தருவித்து பசியாற வைத்ததோடு, வீட்டிற்கு சென்று ஸ்ரேயாவின் பயணத்திற்கு தேவையான டிராவல் பேக்குகளுடன் அவளை பேருந்தில் ஏற்றியும் விட்டிருந்தான்.

இந்நிகழ்வு ஸ்ரேயாவின் இருமலர்களுக்கும் நெகிழ்ச்சியை தந்திருந்தது. தாங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு முன், ஸ்ரேயாவின் வாழ்க்கையை சீரமைத்து, கண்ணாவுக்கு ஓர் குடும்ப கட்டமைப்பைத் தந்துவிட தீர்மானித்தனர்.

ஸ்ரேயா ஊர் சென்று வருவதற்குள் இவர்கள் அடுத்த கட்ட திட்டத்திற்கு முடிவு செய்துவிட்டு உல்லாசமாய் இருந்தனர். இவர்களின் திட்டமிடலுக்கு ஸ்ரேயா தடையாக இருப்பாளோ என்கிற சுணக்கம் சிறிதும் இன்றி அவள் இல்லாத நாட்களை கடத்தினார்கள்.

ஏன் தடையாக இருக்க மாட்டாள் என நினைத்தார்கள்? ஒருவேளை கண்ணனை முன்னிறுத்தி இவர்களின் முடிவை வெற்றி பெற வைத்துவிடலாம் என்கிற மமதையில் இருக்கிறார்கள் போல்..!


*****


சாரி மக்களே.. சில நெருக்கடிகளால் தொடர்ச்சியாக அப்டேட் செய்ய முடியவில்லை, முடிந்தளவு இனி விரைவாக அப்டேட் செய்ய முயற்சிக்கிறேன். அதற்கு உங்களது ஊக்கம் மிக முக்கியம் மக்களே..
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top