சிதறாத முத்தங்கள் - 5

Advertisement

Sastika

Active member
Member
1774503141848.jpeg

‘காதலர்களை மற்றவர்கள் எளிதில் கண்டு கொள்ளும் படிநிலை இது, காதலர் பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால் ஊன் உறக்கமின்றி இளைத்துப்போதல்’



மெலிதல் – 5



“ம்மா.. அம்மா.. என்ன பாரு..” சின்னஞ்சிறு மழலைக் குரலில் கொஞ்சினான் ஸ்ரேயாவின் புதல்வன்.

“பாக்குறேன்டா.. நீ கவனமா விளையாடு” என ஒரு வயது நிரம்பிய சாஸ்ருதியின் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டே பதில் அளித்தாள்.

“உன் கண்ணா நல்லா குதிக்கே மா..” என டிரம்போலின் மீது குதித்துக் கொண்டே கேட்டான் சிறுவன்.

“ம்.. ஆமா.. தங்கம்..” மகனை சிலாகித்துப் பேசும்போது ஸ்ரேயாவின் வதனம் மலர்ந்திருந்தது.

“அகிபா நீயும் கண்ணா பார்..” சிறுவனுக்கு பக்கபலமாக அருகில் நின்று இருப்பவனையும் கவனிக்க சொல்லி ஏங்கியது குழந்தை.

“டேய்.. நான்தான் பக்கத்துலயே நிக்கிறேனே, அப்புறம் என்ன?” என்றான் அகிலன்.

“அகிலா.. அகிலா..” என கத்தியபடியே அங்கு வந்தாள் சாஸ்ருதி. அவளின் வருகை தெரியவும், “சாஸ்.. இங்க பாரு.. நானு ஸ்பைடர் மேன் மாதிரி குதிக்கேன்..” என அவளிடமும் பெருமை படித்தான்.

“கண்ணா தப்பு.. மரியாதை இல்லாம பேசக் கூடாது, அம்மா சொல்லணும்.. ஒகே..” கண்டித்தாள் ஸ்ரேயா.

“இதுல என்ன இருக்கு ஸ்ரேயா.. அகிலன் கூப்பிடுறத பார்த்து இந்த சில்வண்டும் கூப்பிடுறான்.”

“நோ..சீ..வண்டு, மை நேம் இஸ் கண்ணா..” சாஸ்ருதியின் சில்வண்டு எனும் அழைப்பு செல்ல கோபத்தை தந்திருந்தது சிறுவனுக்கு.

“நீங்க இரண்டு பேரும் ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க.. இவன பார்த்து அடுத்து குகனும் பேச ஆரம்பிச்சிருவான். இதுக்கெல்லாம் அலோ பண்ணாதீங்க” என கண்டிப்பு விதித்தாள் ஸ்ரேயா.

“அப்ப பாத்துக்கலாம் ஸ்ரேயா.. பீ கூல்..” ஸ்ரேயாவிடம் சொல்லிவிட்டு தன் மனைவியைப் பார்த்து, “ஓய்.. தக்காளி சாஸ்.. எவ்வளவு தைரியம் இருந்தா, என் கண்ணாவ சில்வண்டுனு சொல்லுவ.. குண்டு தக்காளி.. குண்டு தக்காளி..” என தன் மனைவியை சீண்டினான்.

இரு சகோதரிகளிடமும் பேசிக் கொண்டே கண்ணாவை தூக்கி முத்தமிட்டான். இப்போது சினம் சாஸ்ருதியிடம் எக்குத்தப்பாக முன்னேறியது அவனின் குறும்பு பேச்சில் கண்ணாவோ அகிலனின் கேலியில் வாய் பொத்தி சிரித்தான்.

“அப்படி கூப்பிடாத அகிலா.. குழந்தை பிறந்தா எல்லோருமே வெயிட் போடுவாங்க தான், அதுக்காக அதை வச்சு மாக் பண்ணாதடா.. கோபமா வருது..”

“என் கண்ணாவ நீ சில்வண்டுனு சொன்னா, நாங்களும் மாக்.. வாக்.. எல்லாம் பண்ணுவோம்” என கண்ணாவை தூக்கிப் போட்டு பிடித்தான்.

“போடா..” என்றவள், ஸ்ரேயா கையில் இருந்த தன் மகனை வாங்கிக் கிண்ணத்தில் பிசைந்து எடுத்து வந்திருந்த உணவை ஊட்டிக் கொண்டே பேச்சை வளர்த்தாள்.

“நீ மட்டும் எப்படி ஸ்ரேயா கண்ணா பிறந்த பிறகும் பிட்டா இருக்க..” ஏதோ மனத்தாங்கலில் யோசனையற்று கேட்டுவிட,

“ஸ்ருதி.. ஸ்டாபிட்..” ஆங்காரம் கொண்டு கத்திவிட்டான் அகிலன்.

அப்போதே உதிர்த்த வார்த்தைகளை உணர்ந்தவள், “சாரி ஸ்ரேயா..” மனம் வருந்தி மன்னிப்புக் கோரினாள்.

“நீ இப்ப என்ன தப்பா பேசிட்ட.. அகி மாமா நீங்க எதுக்கு கோவப்படுறீங்க, டைம் ஆச்சு பாருங்க. இந்நேரம் அபி கிளம்பி இருப்பா, மெய்ட் சமைச்சு வச்சுட்டு போயிட்டாங்க, வேகமாக உங்க கையால ஏதாவது ஸ்பெஷலா குக் பண்ணி வைங்க.. அபி வரப்பவே பசியோடு வருவா..” சாஸ்ருதியிடம் ஆரம்பித்து அகிலனையும் விரட்டி அடித்தாள்.

அவளின் உத்தேசம் புரிந்து அவனும் கோபத்தை விடுத்து, “மறந்துட்டேன்.. நீ கண்ணாவ பிடிச்சுக்கோ..” என ஸ்ரேயாவிடம் தந்துவிட்டு, சாஸ்ருதியை முறைத்துக்கொண்டே சமையல்கட்டை நோக்கிச் சென்றான்.

அப்ஸரா, விஸ்வா அவர்களின் குழந்தை நற்றமிழ் மங்கையின் இன்றைய வருகையை நியாபகப்படுத்தி, அகிலனின் கோபத்தை தடுத்திருந்தாள் ஸ்ரேயா.

அகிலன் அதட்டியதில் உம்மென்ற முகத்துடன் இருந்த சாஸ்ருதியை கண்ட ஸ்ரேயா இயல்புக்கு மீட்க, “ஜானு கால் பண்ணாளா ஸ்ருதி..?”

“ம்.. பேசினா, லீவு விட்டாக்கூட இங்க வரது இல்ல, ஸ்டடிஸ்ல ரொம்ப பிசியா இருக்கா. விசா அத்தையும், அபி அம்மா, அப்பாவோட சேர்ந்து ஆல்இந்தியா டூர்க்கு அடிக்கடி போயிருவாங்க.. அபிதான் டைம் கிடைக்கிறப்ப பேமிலியா அப்ப.. அப்ப வந்து போறா..”

“சூப்பர்ல.. இன்னைக்கு அபி வந்த பிறகு செம்ம பன்னாயிருக்கும்” என குதூகளித்தாள் ஸ்ரேயா.

“அது என்னமோ.. என்னையவிட அவங்க ப்ரென்ட்ஷிப் கேங்க்ல நீ நல்லா ஜெல்லா ஆயிட்டயே..”

“ம்.. ஷீ இஸ் சோ ஸ்வீட். அவள மாதிரி ஒரு பொண்ணு பக்கத்துல இருந்தா செம்ம பாஸிட்டிவிட்டி தெரியும்ல. அச்சோ.. அபி வரதுக்குல பிரெஷ்-அப் ஆகிட்டு வர்றேன், இல்லன்னா கோவப்படுவா..” என எழுந்து செல்ல இருந்தவளை நிறுத்தி,

“சாரி ஸ்ரே.. வேணும்னு பேசல, அது தெரியாம..” சகோதரியை உணர்ந்தவளாக சாஸ்ருதி பேச்சை இடையில் நிறுத்தினாள்.

“ஏய்.. என்ன ஸ்ருதி..! நீ எப்படி என்னைய ஹர்ட் பண்ணுவ.. அது உனக்கே தெரியாம பேசுனது, அதெப்படி நான் சீரியஸா எடுத்துப்பேன். பிரியா விடு ஸ்ருதி..” இருவருக்கும் இடையில் இருந்த உருவ ஒற்றுமை குகன் பிறந்த பிறகு சாஸ்ருதியின் உடல் பருமனில் அது இருவரையும் வேறுபடுத்திக் காட்டியது.

அவர்களின் வழக்கத்தைப் போல் இன்றும் அப்ஸராவின் ஆஸ்தான குடிலில் இரவு உணவை முடித்துவிட்டு குழந்தைகளுடன் அபியும், அகிலனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

“இவங்க மாறவே மாட்டாங்களா விஸ்வா..? இன்னும் சின்ன புள்ளத்தனமாவே இருக்காங்க..” என சாஸ்ருதி கேட்க,

விஸ்வா பதில் அளிப்பதற்கு முன்பு ஸ்ரேயா, “அப்படி நடக்க வாய்ப்பே இல்ல.. அவங்க எவ்வளவு விளையாட்டுத்தனமா இருந்தாலும் தே ஆர் வெல் மெச்சூர்ட்..” நண்பர்களை நன்கு புரிந்தவளாக வாதாடினாள்.

“அந்த வானரக் கூட்டத்துல இப்ப நீயும்தான் ஐக்கியமாயிட்டியே..!” என விஸ்வா, ஸ்ரேயாவுடன் வம்பு ஆடினான்.

விஸ்வா மங்கையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லவும், சாஸ்ருதி குகனையும், கண்ணாவையும் தூங்க வைக்க அறைக்கு செல்லும் முன், “நைட்டுல மூணும் பேரும் லேட் பண்ணாம வந்துருங்க.. மிட் நைட் தாண்டுச்சுனா கதவ திறக்க மாட்டேன்.. இட்ஸ் மை வார்னிங்..”

“நீ கதவ திறக்காட்டி போ.. நாங்க அபி வீட்டுக்கு போயிக்கிறோம்..” என ஸ்ரேயா அளவம் காட்டினாள்.

“அங்க இன்னும் மோசம் ஸ்ரே.. அவ மாமி கேட் குளோஸ் பண்ணிட்டு நாய வேற கழட்டி விட்டுருவாங்க.. அத்தனை நாயும் உன் உயரத்துக்கு இருக்கும்” பதறிப் போய் அகிலன் சொன்னான்.

“ஏய் சாஸ் டியர்.. அப்படியெல்லாம் செஞ்சிறாத சீக்கிரம் வந்துறோம்..” என மனைவியிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே கிளம்பினான் அகிலன்.

முழு நிலவு அற்ற இரவில் அலைகளின் இறுதி மூச்சு தீண்டும் இதத்தை கால்களில் நனைத்தபடி மூவரும் ஐஸ்கீரீமைத் தீண்டிக் கொண்டிருந்தனர்.

“போதும்டீ.. ஓவர் லோட் போகுது, இதுக்கு மேல ஐஸ்கீரீம் கேட்டுறாத..” வழக்கம் போல் கண்டித்தான் அகிலன்.

“ம்ச்.. ஒகே.. ஏண்டா, மங்கையை மட்டும் செல்லம்னு கொஞ்சுற, இப்பெல்லாம் என்னை அப்படி கூப்பிடவே மாட்டேங்கிற?” எரிச்சல் படுத்திய அழைப்பு இப்போதெல்லாம் ஏக்கமாக மாறி இருந்தது.

“நீதான் ரொம்ப பிகு பண்ணுவல்ல, அதான் உன்ன டீல்ல விட்டுட்டேன். உன்னைவிட என் செல்லத்த அப்படி கூப்பிடதான் ரொம்ப பிடிச்சிருக்கு..” எப்பவும் போல் குழந்தைத்தனமான சீண்டலே வந்தது.

“அப்படி சொல்லாதடா கம்போடியா குரங்கு.. மங்கையவிட நான்தான் உனக்கு ரொம்ப இம்பார்டன்ட், அதனால என்னயதான் நீ அப்படி கூப்பிடனும்” சிறுமியாகவே நட்பு என்னும் புரிதலில் வழக்காடினாள் அப்ஸரா.

அவர்களின் உரிமைப் போரை ரசித்தபடி முரல் முறுவல் தந்தவள், “அகி மாமா.. எனக்கு இன்னொரு சாக்கோபார் ப்ளீஸ்..” நயமாகக் கேட்டாள் ஸ்ரேயா.

“ஒகே டா..” எழுந்தவனை,

“பாருடா.. நான் கேட்டா நோ.. ஸ்ரேக்கு மட்டும் எஸ்ஸா.. இட்ஸ் டூ பேட் அகி..” மல்லுக்கு வந்தாள் அபி.

“அவ என்னோட ஃபிரென்ட் மட்டும் இல்ல கொழுந்தியாவுமாச்சே எப்படி.. சோ என்னோட பெருந்தன்மையை காட்ட வேண்டிய நேரம்பா..” சட்டை காலரை கெத்துக் காட்டி தூக்கி விட்டு கிளம்பியவனின் பாதங்களை தடுமாற செய்து விழ வைத்தாள். ஈர மண்ணில் விழுந்தவனின் நெற்றியில் மண் துகள் ஒட்டிக் கொண்டது.

“பரவாயில்லயே அகி.. நீ கீழே விழுந்தாலும் மீசைல மண் ஓட்டல டா..! உனக்கு..” என்றவளை முறைத்துப் பார்த்தவன், அபி மடி மீது ஒரு கை மண்ணை அள்ளி போட்டுவிட்டான்.

அகிலனின் செய்கையால் ஸ்ரேயா கலகலத்து சிரிப்பை அள்ளித் தெளித்தாள். அதில் ஆசுவாசம் ஏற்பட்டாலும், “நீயுமா ஸ்ரே.. இந்த அப்பாவி மாமாவ பார்த்து சிரிக்கிற..?” அவளின் சிரிப்பு தொடர, அகிலன் தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான். அவன் செல்லவும் கையில் இருந்த கடைசித் துண்டு கோனை வாயில் அதக்கிவிட்டு, “ம்.. சொல்லு, என்ன பிரச்சனை..?”

“பிரச்சனையா..? அப்படி எதுவும் இல்ல அபி..”

“அழகா வாயடிக்கிற.. அதவிட அழகா சிரிக்கிற.. பட் இது எதிலேயும் ஜீவன் இல்ல..” என முகத்திற்கு நேராக ஆள்காட்டி விரலைக் காட்டி வட்டம் வரைந்தாள்.

தோள்களைத் தூக்கி அசால்டாக, “தெரியலயே அபி...”

“அப்ப உன்னோட இருமலர்கள் எப்படி இருக்காங்க..? இவ்வளவு நாள் எப்படி உன்ன இங்க விட்டாங்க..?”

“ஆஹான்.. நல்லா இருக்காங்க. கண்ணாக்காக விட்டு வச்சுருக்காங்க. அம்மாவா பக்கத்துல இருந்து பிள்ளைய வளர்க்கனுமாம். இதுல கண்ணாவ சென்னைக்கு கூட்டிட்டு வர சொல்லி ஒரே புலம்பல் வேற..” மலர்ந்த முகமாக பதில் தந்தாள்.

“ம்..ம்.. அவங்க சொல்றதும் கரெக்ட்தான். நீ என்ன டிசைட் பண்ணிருக்க..?”

“நான் டிசைட் பண்ண என்ன இருக்கு.. விதி கூப்பிட்டுப் போற போக்குல போக வேண்டியதுதான்.. நானா எடுக்குற முடிவு எப்பவும் தப்பாதான் போக போகுது.. அதனால எதைப் பத்தியும் நான் யோசிக்கிறது இல்ல..” மேம்போக்கான பதிலைத் தந்தாள் ஸ்ரேயா.

“எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கலாம்னு நினைக்கிற..?” கடந்து வந்த பாதையை எண்ணி வருந்துகிறாள் என கணித்தே கேட்டாள்.

“என்னைய நேசிக்கிறவங்களும், நான் பாசம் காட்டுற மனுசங்களும் என்னை சுத்தியே இருக்காங்க.. அப்புறம் எத யோசிக்கச் சொல்ற அபி எனக்குப் புரியல..” என அப்பாவியாகக் கேட்டாள். இந்த குணத்தை வைத்துதானே இவளின் கடந்தகால வாழ்க்கை சிக்கலாக மாறியது.

“இப்பெல்லாம் எப்படி நீ பீல் பண்ற..? உன்னால ரியளைஸ் பண்ண முடியுதா? இல்ல இதுக்கும் மக்கு மாதிரி தெரியலனு பதில் தர போறியா?” ஸ்ரேயாவின் ஆழ்குணத்தில் வீற்றிருக்கும் அந்த பர்பெக்சனிஸ்ட் விழித்துக் கொண்டாள்.

“சும்மா எதையாச்சும் சொல்லாத அபி, எத சொல்லு சொல்லுங்கிற..! என்னைய சுத்தி எத்தனை பேர் இருந்தாலும், ஏதோ மனசு முழுக்க வெறுமனா இருக்கு போதுமா..!” ஸ்ரேயா சினம் மேலேற பேச்சை தொடர்ந்தாள். அப்ஸராவின் விழிகளோ தீட்சிண்யம் அதிகரித்து, சொல்லு.. நீயே சொல்லு..! என குறுக்கே பேசாமல் அமைதி காத்து இருந்தாள்.

“குழந்தை வந்த பிறகு எல்லாம் சரியா ஆயிரும்னு நினைச்சேன், நல்லாவும் போன மாதிரி இருந்துச்சு. அம்மா இறந்த பிறகு ஏற்பட்ட வெறுமையோட சேர்த்து இப்பெல்லாம் குற்றவுணர்வும் அதிகமா இருக்கு..” மனம் கனத்துப் போய் சீறினாள்.

ஸ்ரேயா உணராமல் உதிர்த்த ஆழ்மன காயங்களை அபி புரிந்து கொண்டாள், ‘குற்றவுணர்வா..! ஒருவேளை கண்ணாவை நினைச்சு இருக்குமோ..’ என எண்ணினாள் அப்ஸரா. ஆனால் அடுத்து அவள் பேசியதில் அதுவும் இல்லை என்று ஆனது.

“நான் லவ்ல தோத்து, மேரேஜ் லைப்ல ஏமாந்து போயிருக்கிறத பார்த்து மாளவிகா, ஹரிதா இரண்டு பேரும் கல்யாணமே வேண்டாம்னு இருக்காங்க.. ஒரேயடியா கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லி இருந்தாக் கூட பரவாயில்ல..

நான் மேரேஜ் பண்ணிக்க ஒத்துக்கிட்டா அவங்களும் கல்யாணம் பண்ணுவாங்களாம். கண்ணாவுக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்தித் தரணும்னு வேற மல்லுக்கட்டுறாங்க. அது இன்னும் இருக்குற வேதனையில படுமோசமா போய்க்கிட்டு இருக்கு.. இதுல எங்க.. எத.. நான் யோசிக்கிறது..? மண்டைய பிச்சுகலாம்னு இருக்கு..” இரு கைகளாலும் முன் தலை முடியைப் பிடித்து தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.

அந்த இருளும், கடல் அலைகளின் ‘ஒ’வென்ற இரைச்சலும் அவளை நிதானத்திற்கு அழைத்து வர, அதுவரை ஆறுதலோ, கரிசனையோ காட்டாமல் தேமனென அமர்ந்திருந்தாள் அப்ஸரா. அவளின் காய்ந்த வடுக்களை ஆறவிடாமல் அவளே அடிக்கடி கீறிவிடுகிறாள். இதை அவளே நிறுத்தினால் மட்டுமே உண்டு..!

இருளில் கண்ணுக்குப் புலப்படாத கடல் அலைகளை அலை பாயாத தன் நேத்திரம் வழியே நோட்டம் விட்டாள்.

“அப்ப லவ் பண்ண வேண்டியதுதான..?” என கேட்டுவிட்டு பதில் தேவையில்லை என்று எழுந்து கொண்டாள் அப்ஸரா.

ஒரு நொடி அதிர்ந்த ஸ்ரேயா பின், “ஒரு தடவை பட்டது பத்தலையா? மறுபடியும் முதல்ல இருந்தா.. வேண்டாமே..!” என அவள் பின்னோடு எழுந்து நடக்கத் துவங்கினாள்.

“இன்னும் அந்த கெளசிகன நினைச்சுட்டு இருக்கியா?” தன் அருகில் வருபவளை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்து கேட்டாள்.

“ச்சே.. இல்லவே இல்ல..” அருவறுத்துச் சொன்னாள் ஸ்ரேயா.

ஸ்ரேயாவின் முக சுழிப்பைக் கண்டபின் தொடர்ந்தாள், “அப்ப நீ இன்னும் உன்னோட வாழ்க்கையில காதலிக்கவே இல்ல.. முடிஞ்சா அந்த உனக்கே உனக்கான காதல தேடு.. இல்ல கண்டிப்பா உன்ன தேடி வரும். அப்படியும் இல்லேனா நாங்க தேடி தாரோம்.. வந்து கல்யாணம் பண்ணிக்கோ.” மீண்டும் அதே சீண்டல்.

“காதல தேடுறது எல்லாம் இருக்கட்டும், அது எப்படி நான் அவன காதலிக்கவே இல்லனு சொல்லுவா.. இல்லாத காதலுக்கா அத்தனையும் அவனுக்காக பொறுத்துப் போய், அவமானப்பட்டேன். யூ

ஆர் டாக்கிங் ரப்பிஸ் அபி..” கொதித்தே விட்டாள்.

“யாரு நான் ரப்பிசா..! ஒருதலையா காதலிச்சு, ஒருத்தற்காக மட்டுமே மொத்த அன்பையும் காட்டுறது லவ் இல்ல. போத் ஆர் நீட் லவ் பாண்டிங். அதுல ஒருத்தர் மட்டுமே சுமை தாங்கியா வாழ்றது காதல் இல்ல ஸ்ரேயா.

காதல் கண் பார்த்து தொடங்கினாலும் அது மனசுல நின்னு வாழுற உணர்வு, அது வெறும் உணர்வுவோட முடியாது...! எங்க உனக்கு வலிச்சுருமோன்னு முன்கூட்டியே உன்னோட ரணத்தை உணரும் பாரு அதுதான் உண்மையான காதல். நான் உன்னை நேசிக்கிறேன் என்பதல்ல.. நீ இருப்பதால் நான் முழுமை அடைகிறேன் என்பதே மெய்யான காதல்!

ஆனா பார்த்தவுடனே பத்து பொருத்தமும் பக்கவா இருக்குனு நினைச்சு தொபுக்கடீர்னு குதிக்கிறது சுத்த ஹம்பக், ஷேம்லஸ் லவ். அந்த ஹம்பக் லவ் பண்ணிட்டு நானும் காதலிச்சேன்னு காலர் தூக்கிவிட்டு சுத்துறதை நிறுத்து முதல்ல..” நீண்ட விளக்கம் தந்ததோடு ஸ்ரேயாவின் காதைப் பிடித்து வலிக்கும் விதமாக திருகியும் விட்டாள்.

“இன்னொரு தடவ நானும் காதலிச்சேன்னு சொல்லிட்டு திரிஞ்ச, அவ்வளவுதான்.. நீ இன்னும் அப்படிபட்ட காதலை பாக்கல..”

“எனக்குதான் அத தெரிஞ்சுக்க வாய்ப்பு இல்லாமலேயே போயிருச்சே, அதுக்கு எனக்கு கொடுத்தும் வைக்கல. ஐஸ்கீரிம் வாங்கிட்டு வாரேன்னு சொல்லிட்டுப் போன அகி மாமாவ வேற இன்னும் காணோம்..” போதும் இந்த காதல் பாடம் என எண்ணினாளோ என்னவோ அப்பேச்சை ஒதுக்கினாள்.

ஸ்ரேயாவின் உணர்வை விளங்கியவளாக, “அவன் இன்னேரம் நல்லா கார்ல படுத்து தூங்கிப் போயிருப்பான்..”

“அப்ப ஐஸ்கீரிம்..”

“மிட்னைட் தாண்டியாச்சுல அதனால இந்த குளிருக்கு ஒத்துக்காதுன்னு வாங்கித் தரமாட்டான்..”

“அப்ப நம்ம பேசட்டும்னு விட்டுட்டு போனாரா..?” அப்ஸராவின் இதழ் கடையோரம் விரிந்த சிரிப்பே ‘ஆம்’ என்ற உறுதியைத் தந்தது.
 
Last edited:
அருமையான பதிவு ❤️ ❤️
அப்சரா 🥰🥰🥰
காதலுக்கான விளக்கம்.... சூப்பர் 😳 😳 👌 👌 😍😍😍💕💕💕💕
 

Advertisement

Advertisement

Back
Top