சிதறாத முத்தங்கள் - 6

Advertisement

Sastika

Active member
Member
1774892206428.jpeg

‘இருவரும் பிரிவின்றி வாழ்வதற்கும், காதலை அடைவதற்கும் திட்டமிட்டு கூறிக்கொள்ளுதல்’




ஆக்கஞ்செப்பல் - 6



ஒணம் பண்டிகைக்கு கேரள காட்டன் புடவையில் பெண்கள் அழகாக வலம் வர, ஆண்கள் வெள்ளை வேட்டியும், கழுத்தில் கதர் துண்டுடன் பாரம்பரியத் தோற்றத்தோடு களிப்புடன் கொண்டாடினார்கள். இங்கு கொச்சியில், அமரலிங்கம் வில்லா குடும்பத்தினரின் தலைமைப் பொறுப்பு இல்லாமல் அந்த பத்து நாட்களுக்கும் விழா நடைபெறுவதில்லை. கேசவ பெருமாள் கோவிலில் கொடியேற்றம் தொடங்கி கழியாட்டம், பைரவி விழா என அனைத்திலும் அவர்களுக்கான மரியாதை வழங்கிய பிறகே அனைத்து சடங்குகளும் துவங்கும்.


ஜெயமோகனும், திரிபுர சுந்தரியும் கோவில் பூஜைக்கு சென்றிருக்க, அமர்நாத் வள்ளம் கழியில் பங்கு பெற சென்றிருந்தான். ஜெயமோகனுக்கு உறவுகள் பெரிதாக இல்லாவிட்டாலும், திரிபுர சுந்தரியின் பூர்விகம் கேரளா என்பதால் அவரின் உறவுகளே வீட்டில் குறைந்தது ஐம்பது இருப்புகள் உறுதி. ஓணம் பண்டிகையின் அந்த பத்து நாட்களும் வில்லா முழுக்க பூக்கோலங்களின் மயக்கும் மனமும், வண்ண மின்விளக்குகளின் ஒளியால் மாயஜாலத்தால் தோற்றுவித்த பிம்பமாக இருந்தது.

ஓணம் பண்டிகைக்கு வந்திருந்த உறவினர்கள் அமரன் பங்குபெறும் வள்ளம் களிப் போட்டியை உற்சாகப்படுத்தக் கிளம்பியிருக்க, வீட்டில் சிலர் மட்டுமே இருந்து அன்றைய விழாவுக்கு வீட்டைத் தயார் செய்தனர்.

“அம்மா..ஆ.. அம்மே.. எனக்கு காபி இன்னும் வரல..” என கண்களை கசக்கியபடி கூடத்திற்கு வந்தான் லிங்கேஸ்வரன்.


“சேச்சி வீட்டில்லா மோனே.. சேச்சியும், அம்மாவானும் அம்பலம் போயிட்டுண்டு லிங்கா..” வெள்ளை ஜிப்பாவில் அமர்ந்திருந்தவர் சொல்லி முடிக்க,


“ஒ.. அவ்வளவு லேட் ஆயிருச்சா.. லேட் நைட் தூங்கினது.. எழுந்திருக்க முடியல மாமா..” தலை கலைந்து சோம்பலுடன் அமர்ந்தான் லிங்கேஸ்வரன்.


அருகில் அமர்ந்தவனை ஏறிட்டுக் கேட்டார், “அதிரவலே எழுந்துன்ட்டு ஒணம்சத்யாக்கு வானா குட்டிகலுமாய் கொண்டலாமே லிங்கா.” (சீக்கிரம் எழுந்து ஓணம் விருந்துக்கு வந்திருக்கும் பிள்ளைகளோட கொண்டாடலாமே லிங்கா..) திரிபுர சுந்திரியின் தம்பியாகப் பட்டவர் கேட்டார்.


“எத.. நீங்க பெத்து வச்சிருக்க அந்த தடி மாடு கூட ஊர் சுத்துறதுக்கா இவ்வளவு ஸ்மார்ட்டா வளர்ந்து நிக்கிறேன்.. ஏன் மாமா..! ஒத்த பிள்ளையாவது எனக்காக பொறுத்து பெத்து இருக்கலாமே..” தாய் மாமனிடம் உரிமையாக குற்றம் படித்தான். பெண் பிள்ளைகள் இரண்டும், ஆண் பிள்ளைகள் இரண்டும் என அயராத உழைப்பில் பெற்றெடுத்து இருந்தார் லிங்காவின் தாய்மாமா.


அங்கு காபியுடன் வந்தவர் திரிபுரசுந்தரியின் தங்கை, “எங்க அண்ணன் பொண்ணுக்கு என்ன குறைச்சல்.. ரதியா இரண்டு பிள்ளைகள் இருக்க.. நீ குற்றம் சொல்ற..” என லிங்காவை கேட்டார்.

“அய்யோ சித்தி, நான் மாமா மகளைச் சொல்லல. அவர் பெத்திருக்க இரண்டு பசங்களைச் சொன்னேன். அதோட பொண்ணப் பெத்து என்ன செய்ய, எனக்கு ஜோடியா ஒண்ணாவது இருக்கா..? என்னையவிட வயசு வேற அதிகம். அதையும் பரவாயில்லைனு யோசிச்சு கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா.. இவர் பெத்த இரண்டும் ஒண்ணு சொன்னாப்பல அந்த விஸ்வாமித்திரர் பின்னாடி சுத்திக்கிட்டு திரியுதுங்க. சப்போஸ் பியூச்சர் அண்ணியாக அஹான்.. அதுக்கு வாய்ப்பில்ல, இருந்தாலும் வந்துட்டா என்ன பண்றது.. என்னோட பிக் பிரதருக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன், இப்ப சொல்லுங்க சித்தி நான்.” முடிக்கும் முன் தலையில் நங்கென்று கொட்டு விழுந்தது, திரும்பி பார்க்க அங்கு மேல் சட்டை இல்லாமல் வேஷ்டியும், வெள்ளை துண்டை கழுத்தை சுற்றி போட்டு இருந்தான் அமரன்.


“அம்மே..” என கத்தியவனின் தலையை தேய்க்க விட்டுவிட்டு, சிறியவனுக்கு தயாரிந்திருந்த காபியை இவன் குடித்து முடித்தான்.


“மாமா.. அது என்னோட காபி..” என மாமனிடம் புகார் படித்த லிங்காவை பொருட்படுத்தாமல், ”அமரேயும் கூடே வந்தவரையெல்லாம் எவிடே?”


“யார் மாமா.. என்னோட யாருமே வரலையே..?” அமர் சொல்ல,


“அய்யா.. நீயும் எவிடே இல்ல.. அவர வள்ளம் கழி காஸி காணான் வந்தாலே”(அட.. உன்கூட வரலப்பா.. வள்ளம் கழி காண வந்தாங்களே அவங்கள கேக்குறேன்) என மாமன் கேட்டார்.


“தெரியல மாமா.. போட்டி முடிஞ்ச கரையில இருந்து நான் நேரா வந்துட்டேன். மத்தவங்க போட்டி ஆரம்பிச்ச இடத்துல இருந்து வர நேரம் ஆகும். போட்டி பார்க்க வந்த கூட்டம் அங்க கூடியிருக்கும். ஒருவேளை அந்த டிராபிக்ல மாட்டி இருப்பாங்க. அங்கிருந்து ஒவ்வொரு வெகிக்கிலா மூவாகி வர லேட்டாகும்.” அமர் கணித்துச் சொல்ல,


“இதாண்டா இவனும் சொல்லிக்கிட்டு இருந்தான். உன்னை பார்க்க வரணுமேனு என மருமகளுக சீவி அலங்கரிச்சிட்டு வந்தாங்க. நீ என்னனா அவங்கள பார்க்கவேயில்லனு சுலபமா சொல்லிட்ட.” லிங்கா சொல்லிய விஸ்வாமித்திரர் சுபாவம் இதுதானா என்று ஆராய்ந்தார்.


திரிபுர சுந்தரியின் தங்கை குடும்பம் தமிழ்நாட்டின் எல்லையில் வசிப்பதால் அவருக்கு தமிழில் சம்சாரிப்பது அத்தனை கடினமாய் இல்லை.


தனது சித்தியின் பேச்சில் மாமனின் முகம் சுருங்குவதைக் கண்ட அமரன், “பூஜைக்கு எல்லாம் தயாரா இருக்கா சித்தி.. இப்ப அம்மா, அப்பாவுடன் போன எல்லோரும் வந்துருவாங்க..”


“எல்லாம் தயாரா இருக்கு.. சேச்சி வந்தா பைனாப்பிள் பாயசம் செய்யணும், அப்புறம்.. மாவலி பாதம் வச்சு வீட்டுக்குள்ள கூப்பிட்டு வந்தா பூசையை ஆரம்பிச்சிரலாம்.”


ஓணம்சத்யாக்கு பணியாட்கள் பல உணவுகளை செய்து இருந்தாலும் சுந்தரி கையால் பைனாப்பிள் பாயசம் செய்து, மகாபலி சக்கரவர்த்தி பாதம் வரைந்து அவரைப் போல நியாயம் தவறாத மன்னனை தங்கள் வீட்டில் ஒருவராகக் கருதி வரவழைத்து ஓணம் பண்டிக்கையை கொண்டாடுவார்கள்.


“அப்பலானு விவாகம் களிக்கான் களியுகா என்னாரயிலா?” (நீ எப்ப கல்யாணம் பண்ணலாம்னு இருக்க அமர்?) இவனுக்காக தன்னுடைய பெண் பிள்ளைகள் காத்திருக்க, இவனின் மேம்போக்கான பேச்சு சுணக்கத்தைத் தர கேட்டுவிட்டார்.


அமரனின் பதில் வருவதற்கு முன்பு, அங்கே மிக சரியாக வந்த திரிபுரசுந்தரி, “இப்பவே இவனுக்கு கல்யாணம் பண்ண அவசியம் என்னயிருக்கு? வருஷத்துல மாச கணக்குல மட்டும் ஊருக்கு வந்துட்டு போறான், இவனுக்கு இப்பவே கல்யாணம் பண்ணி வர்ற பொண்ணை நாம கஷ்டப்படுத்தக் கூடாது. முதல்ல நிலையா ஓர் இடத்துல வந்து இருக்கட்டும்.” பேச்சு மகனைப் பற்றியதாக இருந்தாலும் பார்வை தன் தம்பியிடமே இருந்தது. அமரனுக்கு விளங்கியது தன் அன்னையின் இத்தகைய சாடல் எதற்கென்று?

அவர் தம்பியின் மனம் காயப்படாமல் இருக்க வேண்டும் என்பதைவிட தன் மகனை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றி, அவனது விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொண்டு செயல்படும் அன்னையை அமரன் உள்வாங்கிக் கொண்டான்.

பூஜை நேரம் உறவுகள் குழுமிவிட ஓனஷம்சகல் வாழ்த்துக்களுடன் விழாவை கொண்டாடி தீர்த்தனர்.

அமரனின் முறைப் பெண்கள் அப்படி ஒன்றும் குறைகள் கொண்ட அழகிகள் அல்ல. இருவரும் கேரளத்துப் பொன்னிறம் நிறைந்த கண் கொள்ளும் பேரழகிகள். ஆனால் இவனுக்கு ஏன் அவர்கள் மீது மையல் எழவில்லை என அவனுக்கே தெரியவில்லை. இவன் மனம் எதிர்பார்க்கும் பெண்களின் பட்டியல்தான் என்ன? தன்னவள் எப்படி இருக்க வேண்டும் என்கிற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் போது, தன்னை நேசிக்கும் பெண்ணை விவாகம் செய்யலாமே! இது பல முறை அவனாகவே கேட்டுக் கொண்டது. ஆனால் அந்த முடிவுக்கு அவனின் ஆழ்மனம் வெறுமை சுமக்கிறதே..!

****

மாதவன் நடுத்தரக் குடும்ப பின்னணியைக் கொண்டவன். அவனது அயராத உழைப்பே இந்த வயதில் இவ்வளவு பெரிய இடத்தை கைப்பற்ற முடிந்திருக்கிறது. குறுகிய காலத்தில் மென்பொருள் நிறுவனத்தின் உயரிய பதவியில் இருப்பதற்கு அவனது அத்தனை திறமையும், உழைப்புமே கைகொடுத்தது.

ஓய்வு கேட்டு கெஞ்சிய முதுகை இருக்கையில் தளர்த்தி, கண்களை அறையைச் சுற்றி ஓடவிட்டான். அறையின் கண்ணாடி சாளரம் அடைக்கப்பட்டு, குளிர்ந்த காற்று வெளியேறுவதும் தடுக்கப்பட்டிருந்தது. பளபளக்கும் கண்ணாடித் தடுப்பு வழியாக, முகில்கள் கருமேகத்தை சுமந்து வருவது தெரிந்தது. எழுந்து சென்று ஜன்னல்களைத் திறந்து, மழைக்கு முன் வரும் மண் வாசனையை முகர்ந்து, காற்றை நெஞ்சில் அடைத்தான். அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூறல் ஆரம்பமானது. தனது இடது கையை நீட்டி, மழைத்துளிகளைச் சேகரித்தான். இதற்கு முன்பு இந்தத் துளியைத் தீண்டியுள்ளானோ எனக் கேட்டால், மறுப்பே பதிலாக வரும்.

அன்று ஷாப்பிங் மாலில் ஹரிதாவுடன் வந்த மங்கையைப் பார்த்ததுமே அவள் மீதான ஈர்ப்பு மனதில் முட்டி மோதியது. அவளுடன் பழக வேண்டும் என்ற உந்துதலில், பித்தம் தலைக்கேறியவனைப் போலத் திரிந்தான் மாதவன். அந்த தோழிகள் வட்டத்தில், அலைப்பேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. அதன் பிரதிபலனாக, ஆபீஸ் டிரிப் நண்பர்களின் சுற்றுலா பயணமாக மாற்றம் பெற்றது. ஆபீஸிலிருந்து மாதவனுடன் ஆண், பெண்கள் என ஐவரும், ஸ்ரேயாவுடன் இரு மலர்களையும் சேர்த்து, இந்தியப் பெருங்கடலில் சிதறிக் கிடக்கும் தீவுக்கூட்ட நாடான மாலத்தீவுக்குக் கிளம்ப ஆயத்தமானார்கள்.

இந்த பயணத்திற்கான திட்டமிடலைப் பற்றி அறியாத ஸ்ரேயா, அங்கு தன் மகனுடன் அன்பளாவினாள். ஸ்ரேயாவுக்கான மணாளனைத் தேர்ந்தெடுத்து, இருவருக்கிடையேயான அன்னியோன்யம் மேம்படவே இந்த பத்து நாள் பயணத்தை அவளின் இருமலர்கள் உத்தேசித்தனர்.

வீடே அந்தலி சிந்தலியுமாகிக் கொண்டிருந்தது. வாசலில் ஸ்ரேயா, குகனை இடுப்பில் சுமந்தும், கண்ணாவை கையில் பிடித்தபடியும் நின்றிருந்தாள். அவளையும் குழந்தைகளையும் வெளியே நிற்க வைத்துவிட்டு, தம்பதியரான அகிலன், சாஸ்ருதி என்ன செய்கிறார்கள் என வீட்டிற்குள் தலையை நீட்டிப் பார்த்தாள். இருவரும் அங்கும் இங்குமாய் பரபரவென எதையாவது எடுத்து வைப்பதும், ஓடுவதுமாக இருந்தனர்.

“மாமா.. என்ன பண்றிங்க? நா வேணா உள்ள வரவா..?” ஸ்ரேயா வினவ,

“நத்திங் இஸ்யுஸ் டா.. இதோ வந்துட்டேன்..” டிராவல் டிராலியோடு அவள் அருகில் வந்து நின்றான்.

“எங்க மாமா போறோம்..? என்னோட லக்கேஜ் மட்டும் எடுத்துட்டு வந்துருக்கீங்க..”

“உன்னோடதா.. இல்லயே, ஒருவேளை இதை மாதிரி உன்கிட்டேயும் இருக்கா..?” பேச்சை மழுப்பினான் அகிலன்.

“என்னோட ரூம்ல இருந்துதான் இத துக்கிட்டு வந்தீங்க..?” அவளுடையது என்ற உறுதியுடனேயே கேட்டாள்.


“இல்லையே… எங்க ரூம்ல இருந்துதான் எடுத்தேன். அது நீ வாசல்ல நின்னு பாத்தால், லெப்ட் சைட்ல இருக்க எங்க ரூம் ரைட் சைட்ல இருக்க உன்னோட ரூம் மாதிரி தெரிஞ்சிருக்கும். நீ ரோட்டை பார்த்து நின்னுருந்தா, லெப்ட் சைட்ல எங்க ரூம்ல இருந்துதான் எடுத்தேன் என்று கரெக்டா சொல்லியிருப்ப…” அகிலனின் பேச்சில் மழுப்பல் இருந்தாலும், நயமாகவே பேசினான்.

“ரோட்டை பார்த்து நின்னா எப்படி மாமா சொல்ல முடியும்? எனக்கு என்ன கண்ணு முதுகுலயா இருக்கு?” அவனின் மழுப்பல் புரிந்தாலும், விடாப்பிடியாக கேட்டபடியே இருந்தாள்.

ஸ்ரேயா சென்னையிலிருந்து கிளம்பிய தினத்திலிருந்தே மாளவிகாவும் ஹரிதாவும் திட்டமிட்டு இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

ஸ்ரேயா ஊருக்குக் கிளம்பிய நாள் முதல்கொண்டு, எப்படியாவது மாதவனை ஸ்ரேயாவின் வாழ்வில் இணைத்துவிட வேண்டும் என அவளின் இருமலர்கள் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தனர்.

“அவன ஏன்டி… ரேக்காக ஷீஸ் பண்ண…?” தவிப்பும் சந்தேகமுமாகவே கேட்டாள் மாளவிகா.

“ஏன், அவனுக்கு என்ன? அம்சமாதான இருக்கான்…!” மாதவனுக்காக பரிந்து பேசினாள் ஹரிதா.

“அது மட்டும் போதுமா…?”

“வேற… ஒஹோ! ஸ்ரேயாவை அவ பெத்த பிள்ளைக்கே விட்டுக்கொடுக்க மாட்ட, இப்ப இவனை குறுக்க வரவிடக் கூடாதுனு ப்ளான் பண்ணுறியா? எனக்கும் கஷ்டமாதான் இருக்கு, கடந்த ஒரு வருஷமாதான அவ நம்மகூட பழகுறா… ஆனா பல வருஷம் நம்மோடவே இருந்த மாதிரி இருக்கு” ஸ்ரேயாவை விட்டுக்கொடுக்க இயலாமையில் திண்டாடுகிறாளோ என்றே பேசினாள் ஹரிதா.

“ம்… நம்ம ரெண்டு பேரும் காலேஜ்ல படிக்கிறப்போ இருந்தே ஹாஸ்டல் மேட்ஸ்தானே… ஸ்ரேயா இந்த ஒரு வருஷமாதான் நம்மளோட ஃப்ரெண்ட்டா இருக்கா… ஆனா லாங் டைம் கூடவே இருந்த மாதிரி ஃபீல் குடுத்துட்டா...” தோழியின் நற்குணத்தில் மமதை ஒட்டிக்கொண்டது மாளவிகாவின் முகத்தில்.

“நம்ம கூடவே அவ இருந்தா நல்லாதான் இருக்கும், இல்லையா? ஆனா கண்ணாவை யோசிக்கணுமே… அவனுக்குன்னு தனியா ஒரு ஃபேமிலி வேணும். அதுக்காக நம்ம ஸ்ரேயா மேரேஜ் பண்ணியே ஆகணும்.” இறுதியாக நிதர்சனத்துக்கு வந்தாள் ஹரிதா.

“சரி… எத வச்சு அந்த மாதவன ஸ்ரேயாக்கு லைஃப் பார்ட்னரா எப்படி சூஸ் பண்ண?” பொறுப்பாக கேட்டாள் மாளவிகா.

“ஆபீஸ்ல டீம் மீட்டிங் அப்ப சில பசங்க மேரிட்டல் ஸ்டேட்டஸ்ல டிவோர்சினு இருக்க பொண்ணுங்கள புல்லிங் பண்ணாங்க, அத கேட்டுட்டு மாதவன் சார் பயங்கரமா கோபப்பட்டு, அந்த பொண்ணுங்க நிலைமையை எக்ஸ்ப்ளைன் பண்ணதோட, இன்னொரு தடவை இப்படி நடக்க கூடாதுனு வார்னிங்கும் கொடுத்தார்.” என்றோ மாதவன் செய்ததை விளக்கி, ஸ்ரேயாவுக்கு இவனே பொருத்தம் என பேசினாள்.

“இது எத்தன நாள் ப்ளான்டி.. என்கிட்டக் கூட சொல்லாம நீயா முடிவு பண்ணிருக்க..?” என அவளைக் கடித்து வைத்தாள் மாளவிகா.

“ஏய் லூஸ், நேத்து ஷாப்பிங் மால்ல இரண்டு பேரையும் ஒண்ணா பாக்கவும் தோணுச்சுடி..” தோழி கடித்த இடத்தைத் தேய்த்து விட்டாள் ஹரிதா.

“அப்படியெல்லாம் பார்த்தவுடனே அந்த மேடிய செலக்ட் பண்ணிற முடியாது, நாளையிலிருந்து அவனோட ஃபேமிலி பேக்கிரௌண்ட் தீர விசாரிச்சு முடிவு பண்ணலாம்…” என்று தன்னை டிடெக்டிவாக நினைத்தாள்; டிடெக்டிவாகவே மாறினாள். அந்த ஒரு வாரத்தில், மாதவனைப் பற்றிய அனைத்து தகவல்களையும், ஏன் அவனுடைய பெற்றோருக்கே தெரியாத விஷயங்களைக் கூட இவர்கள் இருவரும் அறிந்துகொண்டனர்.

ஸ்ரேயாவுக்கு இவன் பொருத்தமானவன் என்பதைத் தீர்மானித்துவிட்டு, அவர்கள் இருவருக்குமான புரிதலை உருவாக்க ஒரு கடல் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

இவர்களின் சஸ்பென்ஸ்க்கு முழுவதும் துணைநின்றது அகிலன். ஸ்ரேயா அறியாதவாறு, அவளின் பயணத்திற்கு தேவையான துணி முதல் பாஸ்போர்ட் வரை இருமலர்களும் சேகரித்தனர்.

இதோ... என்னவென்று அறியும் முன் ஸ்ரேயாவை கோயமுத்தூர் ஏர்போர்ட் வரை அழைத்து வந்து விட்டனர்.

அங்கே ஸ்ரேயாவின் இருமலர்களையும் பார்த்து அதிர்ந்து நின்றாள். இவளை நோக்கி அவர்கள் வர, கட்டிக்கொள்ள ஓடி சென்றாள். அவர்களோ ஸ்ரேயாவை விட்டுவிட்டு கண்ணாவைத் தூக்கி அணைத்து கொஞ்சினார்கள். அதில் செல்ல முறைப்புடனும், விரிந்த புன்னகையுடனும், தன் மகனோடு சேர்த்து அவர்களையும் கட்டிக்கொண்டாள். சாஸ்ருதி, அகிலனுடன் தனது மகனுக்கும் பிரியாவிடை கொடுத்து, அங்கிருந்து கொச்சின் ஏர்போர்ட்டுக்குச் சென்றனர்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top