Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சில நேரங்களில் சில கேள்விகள்... #SPOILER_ALERT

Advertisement

for your extra information kaa.. ivanga wife inga thaan irukaanga... anni ?? avanga ipo thaan sonnanga kaa ithuvarai thaan eluthirunthaangalaam munnadiye... inime laam yosichu thaan type pannanumaam ud vaangurathu namma saamarthiyam ?
Don't worry sissy
for your extra information kaa.. ivanga wife inga thaan irukaanga... anni ?? avanga ipo thaan sonnanga kaa ithuvarai thaan eluthirunthaangalaam munnadiye... inime laam yosichu thaan type pannanumaam ud vaangurathu namma saamarthiyam ?
Anni Inga tan irukangla super duper.... don't worry sissy namma bro tan solirukare weekly two uds tharenu so avar vakku thavara mattarnu nambuvom... Nambikkai athane elam???
 
நண்பர்களே...

‘மீ. வி.’ கதையைப் பலரும் உற்சாகத்துடன் படித்துக் கருத்து சொல்லியும் கேள்விகள் கேட்டும் வருகின்றனர்... பெரும்பாலும் கேள்விகளுக்கு நான் நேரடியாக / முழுமையாக விடையளிக்கவில்லை (பின்னர் கதையில் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால்!)

ஆனால், முதல் பகுதி முடிந்த நிலையில், கடைசி அத்தியாயத்தில் பலர் சில தீவிரமான கேள்விகளைக் கேட்டிருந்தார்கள், தட்டவியலாமல் நானும் அவர்களுக்கு ஓரளவு விடை அளித்திருக்கிறேன்...

அந்தக் கேள்வி-பதில்களின் தொகுப்புதான் இது...

2ம் பகுதிக்குள் நுழையுமுன் இதைப் படித்து வைத்தல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணி இதைத் தனிப்பதிவாக இங்கு இடுகிறேன்...

#spoiler_alerṭ

முதல் பகுதியின் இறுதியில் வெளிப்பட்ட சில தகவல்கள், விடைகள் போன்றவை இங்கு விவாதிக்கப்பட்டிருப்பதால் முதல் பகுதியை முழுமையாக (11 அத்தியாயங்கள்) படித்தபின் இதைப் படிக்கவும், இல்லையேல் அவற்றைப் படிப்பதில் உள்ள சுவாரசியம் குறைந்துவிடும்!
**********************​

நண்பர்களே,

இந்தப் பதிவில் நீங்கள் பலரும் பல கேள்விகளைக் கேட்டிருந்தீர்கள், நான் அவற்றுக்கு அப்போதே பதிலளிக்கத் தவறிவிட்டேன் (வேலைப்பளு காரணமாக!)

அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த உங்கள் பொறுமைக்கு ஒரு பெரிய நன்றியோடு இதோ சில விடைகள்:

1. பிரியா மோகன்:
/இதுல சொன்ன ஆந்திரா உஜ்ஜயினிதான் ரியல் உஜ்ஜயினியா??? அந்த சிலை விக்ரமனா நிஜமா!???/

பதில்: இல்லை! ஹி ஹி! இது என் கற்பனை! சொல்லப்போனால் கதையின் தொடக்கத்தில் எனக்கு இந்த யோசனை இல்லை, இறுதியில்தான் வாராங்கல்லை உஜ்ஜைனி ஆக்கினேன்! (அந்த வருட கோடை விடுமுறையில் நாங்கள் அங்குச் சென்றிருந்தோம்! அதான் படத்தைப் பார்த்திருப்பீர்களே! ஹி ஹி!)

பொதுவாகவே இந்தக் கதை 99% எனது கற்பனைதான்... விக்ரமாதித்யர் என்ற அடிப்படை அமைப்பை (framework) மட்டும் எடுத்துக்கொண்டு எனது கற்பனையைப் புனைந்துள்ளேன்!

2. காவ்யாஜெயா:
/விஷாலிக்கு என்ன ஆச்சு?/
பதில்: அது இரண்டாம் பகுதியில் தெரியும்... ஹிஹி!

[நான் வேலைக்குப் போக வேண்டும் என்ற காரணத்திற்காக என்னை ‘நொச்சு’ பண்ணாமல் சும்மாவிடும் காவியாஜெயாவின் பெரிய மனத்திற்கு ஒரு சலாம்! வந்தனம்! நமோஸ்கார்! டாங்கே!]

3. மைதிலிமணிவண்ணன்:
/விக்ரமாதித்ய தன்னை காளிக்கு காணிக்கையாக்கியது அவருடைய ஆயுள் நீட்டிப்பிற்கான வரத்திற்காகவா?/

பதில்: (/ஆனால், அதற்காக மட்டுமென்று எண்ண முடியவில்லை/ என்று அவரே ஒரு விடையையும் சொல்லிவிட்டார்!
ஆம் + இல்லை! :) மூலக் கதைப்படி விக்ரமர் இந்திர சபையில் ஒரு சிக்கலுக்குத் தீர்வு சொல்ல, அதில் மகிழ்ந்த இந்திரன் அவருக்கு (அந்தப் புகழ்பெற்ற) சிம்மாசனத்தையும் அதில் அமர்ந்து ஆயிரம் ஆண்டுகள் ஆளும் வரத்தையும் அளிக்கிறார். இதை அறிந்த பட்டி காளிதேவியை வேண்டி தான் 2000 ஆண்டுகள் வாழும் வரத்தை வாங்கிக்கொள்கிறான். பட்டி மட்டும் 2000 ஆண்டுகள் வாழ்வான், தான் 1000 ஆண்டுகள்தான் வாழ்வோமா என்று விக்ரமர் விசனப்பட, அவரும் 2000 ஆண்டுகள் வாழும் யோசனையாகத்தான் பட்டி ‘நாடாறு மாதம், காடாறு மாதம்’ யோசனையைச் சொல்கிறான்... அதாவது, விக்ரமர் சிம்மாசனத்தில் அமர்ந்து 1000 ஆண்டுகள் ஆள்வார் என்பதே இந்திரனின் வரம், எனவே, அவர் ஆறு மாதம் மட்டும் ஆட்சி செய்தால் 2000 ஆண்டுகள் உயிர் வாழலாம் அல்லவா?

இந்தக் கணக்கு இப்படி இருக்க, காளிமாதா வேறொரு கணக்குப் போடுகிறாள் (இது என் கதை!) எனவே, விக்ரமனை இடையிலேயே தன்னைத் தானே பலியிட்டுக்கொள்ளச் சொல்கிறாள்... ஆயுள் நீட்டிப்பு ஒன்று, விக்ரமனை பலியிட்ட பலன் ஒன்று என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... சரி, விக்ரமனைப் பலியிட்ட பலன் என்ன? அது பின்னர் தெரியும்... பொ.இ.பா! (பொறுத்து இருந்து பாருங்கள்... ஹிஹி!)

/ஈராயிரம் ஆண்டுகள் சாகா வரம் பெற்றதால்தான் அருங்காட்சியகத்தில் பட்டி (செழியன்) தாங்கிக் கொண்ட விஷய் தோய்ந்த குறுவாளால் அவருக்கொன்றும் நேரவில்லையா?/

பதில்: இது ஒரு அருமையான வினா! கூர்மையான அவதானிப்பு! நன்றி அக்கா...
ஆம். மேலும், வராகமிகிரரும் உடனே வந்துவிட்டாரே (யார் அவர்? அதற்கும் விடை வரும்!) எல்லாவற்றிற்கும் மேலாக, குறுவாள்கள் வீசப்பட்டதெல்லாம் விஷாலியின் மீதே என்பதை நாம் உணர்ந்துகொண்டோம், மேலும், எதுவுமே அவளைக் கொல்லும் நோக்குடன் எய்யப்படவில்லை என்பதையும் வாசகர்கள் கவனித்திருக்க வேண்டும்... அப்படி என்றால் அன்று வீட்டில் தாக்கப்பட்ட போதே விஷாலி இறந்திருக்க வேண்டும்... சகர்களின் நோக்கம் அவளைக் கடத்துவதுதான்... ஏன்? எதற்கு? எதனால்? விடை: இரண்டாம் பகுதியில்! (திட்டாதீங்க மக்கா, எல்லாத்தையும் இப்படி பதிலாச் சொல்லிட்டா கதை சப்புனு ஆயிடாதா?!)

/எதிரிகளுக்கு பட்டியை ஏன் இனங்கான முடியவில்லை? விக்ரம் கணையாழியை அணியும்போதெல்லாம் அவனுக்கு பட்டியின் காட்சிகள் ஏன் தோன்றவில்லை?/

பதில்: மீண்டும் சில அற்புதமான ஆழமான அழகான வினாக்கள்...
(வகுப்பில் மாணவன் கேட்கும் கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால் இப்படித்தா ‘அற்புதம், ஆழம், அழகு’ என்றெல்லாம் சொல்ல வேண்டியிருக்கும்... ஹி ஹி!)

பட்டிதான் சகர்களின் தலைவன், அவன் ஒரு நோக்குடன் (மேலே உள்ள பதிலைக் காண்க, என்ன நோக்கு என்பது புரியும்!) இவர்களிடம் வருகிறான், இவர்களால் அவனைக் கண்டுகொள்ளும்படியா வருவான்?

மேலும், விக்ரம், விஷாலி போன்ற யாருக்குமே தொடக்கத்தில் தங்களின் பழைய நினைவுகள் இல்லை, எனவே அவனது வேலை எளிதாகியது!

செழியனுக்கும் வராகமிகிரருக்கும் அவன் சகரைச் சேர்ந்தவன் என்பது தெரிந்தே இருந்திருக்கிறது. வராகமிகிரர் விக்ரமனை எச்சரித்துள்ளார். ஆனால், அந்நிலையில் விக்ரமிற்கு வராகமிகிரர் மீதே ஐயங்கள் இருந்ததால் அவன் அந்த எச்சரிக்கையை முழுதாக எடுத்துக்கொள்ளவில்லை. செழியன் அந்தப் போலிப் பட்டியின் போக்கிலேயே சென்று அவனை மடக்குவோம் என்று விளையாடியிருக்கிறார், விளையாட்டு விபரீதமாகிவிட்டது!

மேலும், விக்ரமனை விக்ரமாதித்யராகக் கொண்டு வருவதிலேயே செழியனின் கவனம் அதிகமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது!

விக்ரம் இன்னும் முழுமையாக கணையாழியை உள்வாங்கிக்கொள்ளவில்லை ஆதலால் அவனால் போலிப் பட்டியை அடையாளம் காண இயலவில்லை!

4. AshrafHameedaT:
/உஜ்ஜைனியையும் வாரங்கல்லையும் இணைப்பது உங்களின் முழுக் கற்பனையா?/
பதில்: ஆம்! (மேலே விளக்கியுள்ளேன்!)

/பட்டிகிட்ட ஆரம்பத்துலேர்ந்தே ஏதோ சரியில்லை/

ஆமாம், அதுதான் வாசகர்களுக்கான துப்பு (clue!)

/ஏன் ஒருத்தரும் அவன் பொய் சொல்றான்னு சொல்லவே இல்லை? அவனுக்கு அவர்கள் மேல் ஏதோ ஒரு காழ்ப்பு இருந்தால் அவர்கள் அவனை ஏளனமாகப் பேசும்போதெல்லாம் ஏன் அவன் அமைதியாகவே இருந்தான்?/

பதில்: இதற்கு நான் மேலே மல்லிகா அக்காவின் கேள்விகளில் ஒருவாறு பதில்சொல்லிவிட்டேன்... (இவையும் அருமையான கேள்விகள்!)

போலிப்பட்டியின் நோக்கம் விக்ரமை விக்ரமாதித்யர் ஆகவிடமால் முளையிலேயே அழித்துவிடுவதுதான். ஆனால் அதற்கு முன் அவனுக்குச் சில தேவை இருக்கின்றன (ஒன்று அந்த வாள், அது எங்கிருக்கிறது என்று அறிய வேண்டுமே!) மற்றவை... (அவற்றுக்காகத்தான் விஷாலியைக் கடத்தும் முயற்சிகள்! விஷாலி யார்??! விடைகள் 2ம் பகுதியில்...)

5. Rabi:
/செழியன் தான் பட்டியா? பட்டினு ஏமாத்திட்டு இருந்தவன் யாரு?/

பதில்
: அவன் சகர்களின் தலைவன்! 2ம் பகுதியில் அவன் பெயர் சொல்லப்படும்...

6. Vijayaranjani:
/செழியனுக்கு அவர்தான் பட்டினு முன்னாடியே தெரியுமா? எப்ப தெரியும்... எப்படி தெரியும்.../

பதில்: இந்தக் கேள்விக்கு நன்றி!
டெக்னிக்கலி, பட்டிக்கு 2000 ஆண்டு உயிர்வாழும் வரம் இருக்கிறது. ஸோ, பட்டியின் வாழ்க்கை 2000 ஆண்டுகளா தொடர்ந்து வரும் ஒன்று... அவன் முதுமை அடையாமல் 2000 ஆண்டும் அப்படியே இருப்பான்... எனவே, அவனுக்கு அவன் யார் என்பது எப்போதுமே (1800 ஆண்டுகளுக்கு முன்பே!) தெரியும்... (இந்த 2000 ஆண்டுகள் வாழும் பட்டியை வெச்சு சில ’ஸ்பின் - ஆஃப்’ கதைகள் எழுதனும்னு ஆசை எனக்கு... பார்ப்போம்!)

7. Kavitha:

(இவங்க சில ரொம்ப லாஜிக்கலான கேள்விகளை எழுப்பியிருக்காங்க... செம்ம! உண்மையில் இவர்கள் கேட்டதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை, இக்கதையில் வரும் ‘மாயாஜாலம்’ பற்றிய என் கணக்கு பெரும்பான்மையும் உள்ளுணர்வால் (intuition) அமைந்துவிட்டது... இவர்கள் கேட்ட பின்னர்தான் நான் அதை அலசிப் பார்த்தேன்...)

/விஷாலி ரத்னாங்கிப் பதுமையா?/

பதில்: ஆம்! (ஆனால், அதுமட்டுமில்லை! குழப்புகிறேனா? பின்னர் தெளிவாகும், பொ.இ.பா!)

/எம்.ஐ.பி. (மென் இன் பிளாக் - ஐ, நல்லாருக்கே! :) ) ஊர் வாசல்லயே நிறுத்திட்டீங்க/

பதில்: நிக்கட்டும்! 2ம் பகுதியின் தொடக்கத்தில் அவங்களைக் கவனிச்சுப்போம்! :)

/அவங்களை அழிக்கும் ஆயுதங்களை அவங்களே கொடுத்துட்டானுங்க.../

ஆமா... ஹா ஹா :)

/இவங்க கை பட்ட ஆயுதங்கள் மறையவில்லை, ஆனால், இவங்க கை பட்டு கொலை பண்ண சக வீரர்கள் உடல்கள் மட்டும் எப்படி மறைந்தன?/

பதில்: (இதுதான் நான் குறிப்பிட்ட ஆழமான கேள்வி! சபாஷ்! நன்றி!)
அதாவது, உடல்கள் கரிமப் பொருள்கள் (organic) எனவே அவை மறைந்துவிட்டன. ஆயுதங்கள் உலோகங்கள், அவை மறையவில்லை!
மேலும் விளக்குவதானால், உயிருள்ள பொருள் இறந்த பின் மறைகிறது, ஆயுதங்களுக்கு உயிரில்லை, அவற்றில் உள்ள மந்திரதின் படி அவற்றைக் கையாளும் நபருக்கு அவை சொந்தம், எனவே அவை இவர்களுடனே தங்கிவிட்டன... (உடல்கள் அந்த உயிருக்குச் சொந்தம், உயிர் போன பின் மறைந்துவிட்டன!)

[கதைகளில் ‘மந்திரம்’ என்பதைக் கையாளும்போது நிலையான, உறுதியான விதிகளை அமைத்துக்கொண்டு கையாள வேண்டும். அப்போதுதான் கற்பனை கதை என்றாலும் அதிலும் ஒரு சுவாரசியம் இருக்கும், ‘மந்திரம்தானே’ என்று இஷ்டத்திற்கு வளைத்துக்கொள்ளக் கூடாது என்பது எழுதுவதற்கான விதி! நான் முன்பே குறிப்பிட்டபடி என் உள்ளுணர்வினால் இந்த விதியை நான் பின்பற்றியிருந்தாலும், அதாவது சகர்களின் மந்திரத்தன்மைக்கான் ஒரு இயக்கு விதி என் உள்ளத்தில் அடிப்படையாக இருந்த போதிலும், அதை நான் வெளிப்படையாக அலசவோ, கட்டமைத்துக்கொள்ளவோ இல்லை என்பதை இவரின் இந்தக் கேள்வி எனக்கு உணர்த்திவிட்டது! இனி வரும் அத்தியாயங்களில் இந்தத் தவறை நான் செய்யமாட்டேன்!]

********
நம் வாசகர்கள் எவ்வளவு நுட்பமாகக் கவனிக்கிறார்கள், அவர்களின் கருத்துகள் எனக்கு எவ்வளவு உறுதுணையாய் உதவியாய் வழிகாட்டியாய் உள்ளன என்பதற்கு இங்குள்ள கேள்விகள் எடுத்துக்காட்டு... நன்றி மக்களே!
********

கதையைப் படித்து சிறந்த கருத்துகளைச் சொல்லி, சரியான கேள்விகளைக் கேட்டு என்னை மேன்மேலும் உற்சாகத்துடன் கதையை எழுதத் தூண்டும் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...

அன்புடன்
வி :giggle: :giggle: ? ?
Thanks for the replies Prof.organic inorganicnnu oru mini class eduthuteenga :D ... ippa sagargaloda rule sollitaanga illaya...ini follow pannuvom... (y)

Padumaigal andha kaala social bots! :)
 
இவ்வுலவு நாள் நான் இந்த பயணத்தை மிஸ் பண்ணிட்டேன்.... இனிமே விட மாட்டேன்..... சூப்பர்....
 
Top