Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-09

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-09

பஸ் பின்னாடியே வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான் பூவரசன். சிறிது தூரத்தில் பஸ் நின்றது. அதிலிருந்து இறங்கினாள் சுந்தரி. அவள் அருகில் வண்டியை நிறுத்தினான் பூவரசு.

“பஸ் எங்க போறது தெரியாம ஏறுவியா நீ, இது நம்ம ஊருக்கு போற பஸ் இல்ல. ஏறுடி வண்டில. “

அப்படியே காது கேட்காது போல் நின்றிருந்தாள்.

“பொம்மி உன்கிட்டதான பேசேறன்“.

“உன்ன பேச சொல்லிக் கேட்டனா, நான் மாட்டுக்கும் என் வேலைய தான பார்க்கிறேன்“.

வண்டியை ஸ்டார்ட் செஞ்சிட்டு, ஏறுடி,

அமைதியாக நின்றாள். வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்க, அந்த வழியாக போன பெரியவர்கள் இருவர், அதில் ஒருவர் கேட்க, “என்ன பூவரசு , அக்கா பொண்ணு என்ன சொல்லுது , ஏன் இப்படி நிக்குது முறைச்சிட்டு. “

“அவளுக்கு குச்சி மிட்டாய் வேணும்மா தாத்தா , இந்த ஊரில கிடைக்காது சொன்னா கேட்கிறாளா, பிடிவாதமா நிக்குது. “

“ஏன்ம்மா மாமா வாங்கித்தரன் சொல்லறான், உங்க ஊரில போய் வாங்கிக்கோ. வெயில் வேற மண்டைய பொலக்குது சொல்லிக்கொண்டே போனார்கள். “

“ஏய் எரும உனக்கு என்ன சண்டையின்னாலும் வீட்டுல வந்து போடு நடுத்தெருவில என்னைய அசிங்கப்படுத்தாதே. “

“உன்னைய யாரு நிக்கச்சொன்னது, முதல்ல நீ யாருடா எனக்கு அத சொல்லு. “

“என்ன மரியாதையில்லாம பேசற, நான் யாரு உனக்கு தெரியாதா, “ வண்டியை ஸ்டான்ட் போட்டு அவளை அடிக்க கையை ஓங்கி வந்தான்.

“டேய் மாப்பிள்ள என்னடா பன்னற, நிப்பாட்டு நிப்பாட்டு, எப்ப பார்த்தாலும் கையை ஓங்கிக்கிட்டு, என்ன பிரச்சனை உங்க இரண்டு பேருக்கும்“, அந்த பக்கமா வண்டியில் போன பரதன் பூவரசை தடுத்தான்.

“மாமா இவள வண்டியில வரசொல்லு என்னைய ரொம்ப படுத்தறா சொல்லிப்புட்டேன். “

“நான் ஏன் வரணும் இவன் வண்டியில, கட்டிக்க போறானே அவள வச்சி ஊர் ஊரா சுத்த சொல்லு, ஆடு, மாடு இவங்க ஜோடிய ஆன்னு பார்த்து ஆஹா என்ன ஜோடி பொருத்தம், பத்தாவது படிச்ச பையனுக்கு , பத்தாவது படிச்ச பொண்ணு“ கையை ஆட்டி ஆட்டி சுந்தரி பேச, அதை கேட்டு பரதன் ஆஆ என்று சிரிக்க, பூவரசனோ சுந்தரியை பார்த்து முறைத்தான்.

பரதா மாமா என்னை உன் வண்டியில கூட்டிட்டு போ சொல்லி ஏறி அமர்ந்தாள் சுந்தரி. வீடு வந்து சேரும் வரை பூவரசனை நிமிர்ந்து பார்க்கவில்லை. இதுவே அவன ஓதுக்கிற மாதிரி இருந்தது. வீட்டின் முன் வந்தவுடன், பூவரசு உன்கிட்ட பேசனும் உள்ளே வாடா என்று ஆனந்தவள்ளி கூப்பிட

“அக்கா எனக்கு வெளிய வேல இருக்குன்னு“ சுந்தரியை பார்த்துச் சொன்னான், அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அம்மா, “அக்கா எங்க, “ அவ பியூட்டி பார்லர் போயிருக்காடி ,பூவரசனை பார்க்காமல் உள்ளே சென்றாள் சுந்தரி.

பண்ணைவீட்டில், “ஏன்டா இப்படி குட்டிப்போட்ட பூனை மாதிரி நடந்துட்டு இருக்க“.

“மாமா இந்த பொம்மி என்ன கேள்வி கேட்டா தெரியுமா. “

“ஏன்டா நீ சொன்னத விடவா அவ கேட்டுஇருப்பா, நான் நினைச்சேன், நீ நல்லா அடிவாங்கிருப்பன்னு. “

“கொழுப்பு , திமிர் அவ எனக்கு பாரமா மாமா, எப்படி கேட்டா தெரியுமா, எனக்கிட்ட கெஞ்ச மாட்டாளாம். “

“டேய் பூவரசு உனக்கு அறிவு ஓண்ணு இருக்கா இல்லையா“

“மாம்மா. “

பின்ன என்னடா, வேற எங்கோ பொண்ண பார்த்தாலும் பரவாயில்ல, அவ அக்காவ கட்டிட்டு, உன்ன தினமும் பார்த்து சாவனுமா சுந்தரி , நல்ல பொண்ணுடா, அவ மனச நோக அடிச்சிட்டே.

“மாமா எல்லாதுக்கு காரணம் இந்த பவி எழுதின லட்டர், நேத்து நம்ம பாபு பையன் ஆறாவது படிக்கிறானே இந்த லட்டர கொடுத்தான் நான் பஸ் ஸான்ட்ல இருந்தேன் ,பிரிச்சி படிச்சா. “

அன்புள்ள மாமாவுக்கு,

பவி எழுதியது, என்னால உங்கள மறக்க முடியில, நான் உங்களை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். நீங்க இல்லாமல் என்னால் வாழ முடியாது நீங்க உடனே பெண் கேட்க வாங்க, அந்த நிலைமையில் இருக்கேன். நாம் கோவிலில் சந்திப்போம். இப்படிக்கு

உங்கள் பவி

இத படிச்சிட்டு நேரே அவகிட்டே போனே இந்த லட்டர் யாரு எழுதினது. நான்தான் மாமா ,

“யாருக்கு எழுதின“,

“ உனக்குதான் மாமா, நான் உங்கள காதலிக்கிறேன் “ சொல்லி தலையை குனிந்தாள்

இத உங்க அம்மாகிட்டவே சொல்லிற்கலாமே,

அது பயமா இருந்தது மாமா அதான்.

“அக்கா எனக்கும் உன் பெரிய பொண்ணுக்கும் நாளைக்கு நிச்சியதார்த்தம். எல்லாருக்கும் சொல்லிடு“.

“டேய் எதுக்குடா இந்த அவசரம், சுந்தரி வரட்டுமே ஒருவார்த்தை கேட்டுட்டு“

அவ பெரிய மனிஷி போக்கா. இதுதான் நடந்துச்சு மாமா. ஆனா எனக்கு பவிய பார்த்தா பொய் சொல்லுற மாதிரி தெரியுது, ரொம்ப பழகுன மாதிரி லட்டர் எழுதினா. அவ தையல் கிளாஸ் போன இடத்தில விசாரிக்குனும்.

உடனே நிச்சியம் சொன்னேன் அவ சரி மாமான்னு சொல்லுறா.

“மனச கொழப்பிக்காத மாப்பிள்ள, நிச்சியத்த கொஞ்சம் தள்ளிபோடு, மணி பத்தாகுது“.

மாமா நீ இல்லாத வாழ்க்கைய என்னால வாழ முடியாது. இன்னொருத்தியை கட்டிக்கிட்டு அவ கூட நீ இருக்கறதே என்னால பார்க்க முடியாது, எனக்கு நிம்மதியில்லாத இந்த வாழு தேவையில்ல, ஆனா நீ நல்லா இருக்குனும் மாமா அழுதுக்கொண்டே தூக்குகயிறில் தலையை விட்டாள்.

“பொம்ம்ம்மி என்னைய விட்டு போகாத“ பூவரசன் கத்தினான்.

“மாப்பிள்ள என்னடா ஆச்சி ஏதாவது கெட்ட கனவு காண்டியா“,“மாமா மாமா என் பொம்மி சாக போற மாமா“ என்று பூவரசன் துடிக்க,

“மாப்பிள்ள இது கனவு இந்தா தண்ணீ குடி. “

“மாமா நான் பொம்மிய பார்க்கணும். “

டேய் மணி இப்ப 12.00 ஆகுது, சுந்தரிக்கு போன் போட்டான், ரிங் போய் கொண்டே இருந்தது , போன் எடுக்கவில்லை.

தன் அக்காவுக்கு போன் செய்தான், மூணாவது ரிங்கில் ஆனந்தவல்லி போனை எடுத்தாள். என்னடா பூவரசு இந்த நேரத்தில

அக்கா நான் பொம்மிய பார்க்கணும் வரவா.

டேய் இது உன் வீடுடா.

ஆனா அவ உன் பொண்ணுக்கா, பார்க்கட்டுமா.

பார்த்துட்டு , போக சொல்ல அக்காகிட்ட பேசிட்டு போ, எப்ப வருவ.

அக்கா நான் அவ ரூமுக்கு முன்னாடிதான் நிக்கிறேன்.

இங்கயிருந்தே போனாடா, அக்கா இந்த நிச்சியம் வேணாக்கா, எனக்கு பொம்மியதான் கல்யாணம் பண்ணிக்க தோனுது.

இத சொல்லதான் மதியம் கூப்பிட்டேன் பூவரசு, நீ பேசாத போயிட்ட.

சரி நான் போனை வைக்கிறேன். கதவை திறந்து உள்ளே சென்றான். சிறிய பல்பு எறிந்தது , அந்த வெளிச்சதில் கட்டிலில் பார்த்தான், சுந்தரி இல்லை, பாத்ரூமின் கதவு வெளியே லாக் பண்ணியிருந்தது. எங்கே போயிருப்பா ஆள காணோம். லைட்டை போட்டான் ரூமில் காணோம், விசும்புற சத்தம் கேட்டு கட்டிலின் அடியில் குணிந்து பார்த்தான். தலையனை தலையில் வைத்து கட்டிலின் அடியில் படுத்திருந்தாள்.என்ன பண்ணுவாளோ பயந்து போய் வந்தா எங்க படுத்திருக்கு பெருச்சாளி.

பொம்மி என்று பூவரசன் கூப்பிட, திரும்பி பார்த்து

ஏன்டா உன் மூஞ்சிய எங்கிட்ட காட்டற. அவள் பக்கத்தில் படுத்தான்.

ஏன்டி இப்படி அழுவற உனக்குத்தான் கலையரசன், கவியரசன் யாராவது இருப்பாங்களே.

எனக்கு என் பூவரசன் தான் வேணும் சொல்லி அழுதாள்.

பொம்மியை கட்டி அனைத்தான். தொடக்கூடாது சொன்ன மாமா நம்மளை கட்டி அனைத்தாரா என்று அவன் முகத்தை பார்த்தாள்.

என்னால நீ இல்லாம இருக்க முடியாதுடி. நீ என்கிட்ட கெஞ்ச மாட்டியா,உனக்கு என்ன அப்படியோரு ஈகோ .நானே உன்னைய வேணா சொன்னாலும் நீ என்னைய யாருக்கும் விட்டுக்கொடுக்க கூடாது.

மாமா

,ம்ம் என் கணவுல நீ சாக போனத நினைச்சாலே என்னால தாங்க முடியில.

அவனைவிட்டு விலகி ஓ நான் தற்கொலை பண்ணிப்பேன் நினைச்சு இப்ப என்னைய பார்க்க வந்திருக்க , பத்தாத டயலாக் வேற என்ன சமாதானம் படுத்த

நிசமா சொல்லுறேன்டி.

அப்ப ஃருப் பண்ணு ,எப்படி என்று பூவரசன் கேட்க.எல் டூ எல் அடி அப்படின்னா லிப் லிப் கிஸ் செய்யி நான் நம்பறேன். இது சைன்டிஸ்ட் சொன்னது, நீ எவ்வளவு நேரம் அடிக்கிறீயோ அப்ப டீப்பா லவ் பண்ணுற அர்த்தம்.

பூவரசன் அவளை பார்த்து முறைத்தான், என்ன முறைக்கிற உங்க அம்மா முழுகாம இருக்கப்ப எங்க ஐயாவ முறைச்சி முறைச்சி பார்த்திருக்கும் போல அப்படியே பொறந்திருக்க நீ.

ஏய் நான் உன் முறை மாமான்டி அதான்.

அடேங்கப்பா மூணாவது படிக்க பையன் அடிச்ச ஜோக்க இப்பதான் சொல்லுற, நீ எப்ப வளர்ந்து பெரிய பையன் ஆயி நான் குடும்பம் நடத்திறது. தலையில் ஓரு கொட்டை வைத்து அதிகப்பிரசங்கி அந்த விஷியமெல்லாம் மாமாவுக்கு நல்லாவே தெரியும் நீ ரொம்ப சிலுத்துக்காதடி.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top