Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-59(1)

Advertisement

praveenraj

Well-known member
Member
இனிமேலும் ஜெஸ்ஸி செபாவோடு சேர்ந்து ஓபி அடிக்க முடியாது என்று அவளை வாரினாள் மௌனி. அதில் செபாவுக்கும் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் இப்படி பணி நிமித்தமாக ஊருக்கு வந்தவளை இதற்கு மேலும் தன்னோடு வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு சிரமம் தர அவன் விரும்பவில்லை. இதே முடிவை தான் ஜெஸ்ஸியும் சற்று முன் செபாவிடம் தெரிவித்திருந்தாள். இவ்வளவு மாதங்களாக அருகே இருந்தும் தாமரை இலை நீரைப்போல் இருந்தவர்களுக்கு இந்த சில நாட்களின் நெருகத்திற்குப் பிறகான பிரிதல் அதிக வருத்தத்தைத் தந்தது என்னவோ உண்மை தான். ஆனால் இதொன்றும் அவர்கள் ஹனிமூன் பயணம் இல்லை என்பதால் பிரியத் தயாரானார்கள். அதைப் புரிந்துக்கொண்ட எல்லோரும் அமைதி காக்க, அனி தான் ஜெஸ்ஸியை வேண்டுமானால் அவர்களோடு போகச் சொல்ல அதை புன்னகையுடன் மறுத்தாள். என்ன நினைத்தானோ தெரியவில்லை செபா அங்கிருந்த அனைவரையும் நோக்கி ஒரு நன்றியைத் தெரிவித்தான். "உங்களால் தான் இன்னைக்கு என் லைஃப் நல்ல படியா மாறியிருக்கு அண்ட் மௌனி, ஹேமா, விவா, ரேஷா, பெனாசிர், ஜிட்டு எல்லோருக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ்" என்றான்.

"தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் ப்ரோ, இன்னைக்கு போல் என்னைக்கும் இருந்தாலே போதும்" என்ற பெனாசிருக்கு உறுதியளித்தான். அதே நிலை தான் இங்கே ரேஷு மற்றும் துஷிக்கு. செபா ஜெஸ்ஸியாவது மூன்று நாட்கள் ஒன்றாக இருந்தனர். துஷி ரேஷு இருவரும் பஞ்சாயத்தை முடித்தே சில மணிநேரங்கள் தான் ஆகிறது. இருவரும் கண்களால் பேசிக்கொள்ள,"அடடடடா! போதும்பா ராமன் சீதை காதலைக் காட்டிலும் ஓவரா தான் வழியிது" என்ற யாழ்,"என்ன ரேஷா உன் வீட்ல பேசிட்டியா இல்லையா?" என்று அதட்ட,"பேசிட்டேன்" என்றாள்.

அதற்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் கோரஸ் பாட,"சூப்பர். இருக்கு, அப்போ சீக்கிரமே ஒரு கல்யாணச் சாப்பாடு இருக்கு" என்றான் ஜிட்டு.

"ஆமாம் கல்யாணத்தை ஒடிஷாவுல வைங்கப்பா. அப்போ உங்க கல்யாணத்துக்கு வந்த சாக்குல ஒடிஷாவுக்கு ஒரு டூர் போயிடலாம்" என்றான் தியா.

"கரெக்ட்டா சொன்ன மாமு, விவான் தலைமையில் இன்னொரு டூர்" என்றதும் பொங்கினாள் நித்யா. "ஏன்டா நான் நல்லா இருக்கறது உனக்குப் பிடிக்கலையா? வேற எவன் தலைமையிலாவது பிளான் பண்ணுங்க" என்று முறைத்தாள். பின்னே இதனால் அவன் எவ்வளவு மனவுளைச்சலுக்கு ஆளானான் என்று அவள் தானே அறிவாள்?

அதற்குள் மணியைப் பார்த்தவன்,"டேய் ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு. கிளம்புங்க. அப்போதான் பனிரெண்டு மணிகுள்ளையாவது போக முடியும். நீங்களும் ரெஸ்ட் எடுத்தால் தானே நாளைக்கு ஊர்ச் சுற்றுவதற்கு" என்ற திவே அங்கே அவர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் கைடின் எண்ணைக் கொடுத்தான்.

"கலெக்டர் சார் அப்போ நீங்க வரலையா?" என்றான் ஹேமா.

"இல்ல ஹேமா. நானும் உங்க கூடவே ரெண்டு நாள் சுத்திட்டேன். நாளைக்கு சிஎம் வேற ஒரு பங்க்சனுக்கு இங்க வாராராம். நான் கண்டிப்பா இங்க இருக்கனும்" என்றான். அனேஷியா குழு, சரித்திரா அவள் தாத்தா தவிர்த்து அனைவரும் புறப்பட அந்த மஹிந்திரா ட்ராவெல்ஸில் ஏறினார்கள்.

துஷி - ரேஷு, செபா -ஜெஸ்ஸி, துவாரா - சரு என்று ஜோடிகள் பிரியாவிடை கொடுக்க விவான் யாழ் இருவரும் அனிக்கு சற்று ஆறுதல் சொல்லி இனிமேல் எந்த வருத்தமும் இல்லாமல் ஜாலியாக இருக்கும்படிச் சொன்னார்கள். திவே தன்னைக் காதலிப்பதைப் பற்றித் தெரிந்த அனி உண்மையில் திக் பிரமையில் தான் இருந்தாள். அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை ஆனால் பள்ளியிலிருந்து இன்று வரை தவறாமல் வாரம் ஒருமுறையேனும் அவளை அழைத்துப் பேசிவிடும் திவேவின் மனது கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு விளங்கியது. யாழ் திவேவின் சூழ்நிலையை அனிக்குத் தெரியப்படுத்திவிட்டாள் (அதாவது அன்று அவன் அன்னையிடம் பத்து நாளில் தன்னுடைய திருமணத்திற்கான சம்மதத்தைப் பற்றித் தெரிவித்ததை)

அனி குழம்ப,"இங்கப் பாரு அனேஷியா. உன் அப்பாவுக்கும் நீ இதே போலொரு வாக்கு கொடுத்திருக்க.(அனியும் இந்தப் பயணம் முடிந்ததும் திருமணத்திற்கான அவளது சமந்தத்தைத் தெரிவிப்பதாகக் கூறியிருந்தாள். அனி, திவே இருவரும் தங்கள் பெற்றோரிடம் சொன்ன சம்மதம் பற்றியும் கதையில் முன்பே கூறியிருந்தேன். ரெபர்!) சோ ரெண்டு பேரும் யோசிச்சு கலந்தாலோசிங்க.நீ துவாராவை உண்மையா விரும்பவில்லை அனி. துவாராவுக்கு தீங்கு செஞ்சிட்டோம்ங்கற குற்றயுணர்ச்சியும் உன் அம்மாவோட ஆசையும் அதற்கான பரிகாரமுமாகத் தான் துவாராவை நீ கல்யாணம் செய்ய முடிவெடுத்த. ஆனா நீ துவாராவை கல்யாணம் செஞ்சிக்க முடிவெடுத்து தான் இந்த மீட்டிங்கை நீ அரேஞ் பண்ணணு அவனுக்கும் தெரியும். ஒருவேளை துவாரா உன்னைக் கல்யாணம் செய்ய முடிவெடுத்திருந்தா அவன் காதல் கடைசி வரை உனக்குத் தெரியாமலே இருந்திருக்கும்.நான் சொன்னதை நல்லா யோசி உனக்கே எல்லாம் விளங்கும்" என்ற யாழ் திவேஷிடமும் வந்து,"திவே இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு ஈவினிங் இங்க வந்து அவ கிட்டக் கொஞ்சம் ப்ரீயா பேசு. உன் மனசுல இருப்பதை எல்லாம் சொல்லு" என்றவள் அந்த வாகனத்தில் ஏறினாள்.

விவான் வண்டியிலிருந்தபடி,"அனி யோசி" என்றான். பிறகு வாகனம் அங்கிருந்து புறப்பட்டது. அனேஷியா குழுவினர் எல்லோரும் மறுநாள் செய்யவேண்டியப் பணிகளைப் பற்றி ஆலோசித்து விட்டு உறங்கச் சென்றனர்.

......................................................................

பனிரெண்டு மணிவாக்கில் எல்லோரும் டெஸ்பூரை அடைந்தவர்கள் ஏற்கனவே புக் செய்யப்பட்டிருந்த ரிசார்ட்டில் தங்கினார்கள்.

துவாராவுக்கு மனதில் இருந்த குப்பையெல்லாம் நீங்கியதாக ஒரு எண்ணம். இப்போது கண்களை மூடி 'அந்த' நிகழ்வை யோசித்தவனுக்கு எவ்வித பயமோ, அவமானமோ தோன்றவில்லை. விவான் சொன்ன வார்த்தைகளும் சரித்திராவின் ஆறுதலும் யாழின் அரவணைப்பும் எல்லாவற்றுக்கும் மேல் அனேஷியாவின் மன்னிப்பும் அவனுக்கு ஒரு புதிய வாழ்வையே பரிசளித்ததாக ஒரு எண்ணம். இருந்தும் நெஞ்சின் ஓரத்தில் அனேஷியா மீது ஒரு கருணை தோன்றியது. இந்தப் பயணத்திற்கு முன்பு வரை எதுவெல்லாம் அவனுக்கு இடைஞ்சலாகவும் தடைக்கற்களாகவும் விளங்கியதோ அதெல்லாம் மறைந்துப்போனது. இருந்தும் தன் தந்தையை நேரில் சந்தித்து அவரிடம் மனதார மன்னிப்பு வேண்டும் வரை அவனுக்கு முழு நிம்மதி கிடைக்காது.

காலையில் தாமதமாகவே விழித்தவர்கள் தயாராகி அன்றையத் திட்டப்படி 'அக்னிகார்க்' எனப்படும் கோட்டையைச் சுற்றிப்பார்த்தனர். இதற்கும் மஹாபாரதத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறதாம். சுற்றிலும் நெருப்பால் சூழப்பட்டக் கோட்டையாகத் திகழ்ந்ததால் அக்னிகார்க் என்று பெயர் வந்ததாம்.இதன் உச்சியில் இருந்து பார்த்தால் டெஸ்பூரும் பிரம்மபுத்திரா நதியும் நன்றாகத் தெரியும். அவற்றையெல்லாம் நன்கு கண்டுக்களித்தனர்.அதன் பின்னர் சித்திரலேகா உதயன் என்னும் ஏரியில் போட்டிங் சென்றனர். பிறகு மதிய உணவை முடித்தவர்கள் அருகே இருக்கும் டா- பார்பதியா என்னும் பழமையான கட்டிட மற்றும் சிற்பங்கள் நிறைந்தக் கோவிலுக்குச் சென்றனர்.

600 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தக் கோவில் குப்தர்களின் கலைவண்ணத்தின் சாட்சியாக இன்னும் வீற்றிருக்கிறது.பிறகு பிரம்மபுத்திரா நதியில் கட்டப்பட்டுள்ள காளியா போமாரா என்னும் பாலத்தைப் பார்வையிட்டவர்கள் மாலையில் விடுதிக்குத் திரும்பினார்கள்.

மறுநாள் உலகப் புகழ்பெற்ற 'காஜிரங்கா உயிரியல் பூங்காவை' சுற்றிப்பார்த்துவிட்டு மாலையே அங்கிருந்து மஜூலி தீவிற்குப் பயணித்தனர். இந்த மஜூலி தீவு தான் உலகத்திலே மிகப்பெரிய நன்னீர் தீவாகும். அதாவது பெருபாலும் தீவுகள் கடல் நீரில் தான் இருக்கும். அந்தமான் நிகோபார், லக்ஷத்தீவு முதலியவை முதலியே வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகியவற்றில் இருக்கிறது. ஆனால் இந்த மஜூலி தீவானது மஜூலி என்னும் ஆற்றில் இருக்கிறது. இந்த மஜூலி ஆறானது பிரம்மபுத்திராவின் துணைநதியாகும். அதையும் பார்வையிட்டவர்கள் அங்கிருந்து மாலையிலே நேராக 'ஜோர்ஹட்' என்னும் ஊருக்குச் சென்றனர். அதாவது அசாமின் மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி அவர்கள் பயணித்துக்கொண்டே இருந்தனர்.

இந்த இரண்டு நாட்களில் தியாவும் மிருவிடம் எதையும் பேசவில்லை மிருவும் தியாவுடன் பேசவில்லை. பின்னே மிரு தான் அன்றே அவள் முடிவைத் தெரிவித்து விட்டாளே. தியாவும் அன்றே மிரு கூறியதை எல்லாம் அவன் அண்ணனிடம் தெரிவித்திருந்தான். நிச்சயம் தங்கள் அன்னை இதற்கு ஒற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தாலும் அதற்கும் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் சகோதரர்கள் இருவரும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதே போல் சித்தாராவும் விவியிடம் எதையும் தெரிவிக்கவில்லை விவியும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. அவள் நன்கு யோசிக்கட்டும் என்றும் அவளை குழப்பதிலோ இல்லை நிர்பந்தத்திலோ தள்ளி அதனால் ஒரு முடிவைப் பெற விவியன் விரும்பவில்லை. இப்படி இவர்கள் நால்வரும் அவர்களுக்குள்ளே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்க சரித்திரா மற்றும் அவள் தாத்தா இருவரும் ஊருக்குச் சென்றிருந்தனர். அவள் தாயோ அவர்களின் பயணம் பற்றியோ இல்லை சரித்திராவின் தந்தையைப் பற்றியோ கேட்டுக்கொள்ளவே இல்லை. அதனால் அவர்களும் எதையும் அவரிடம் தெரியப்படுத்தவில்லை. ஆனால் சரித்திராவின் திருமணத்தைப்பற்றி சருவின் தாத்தா ஆழ்ந்த யோசனையில் இருந்தார். அங்கே சரித்திராவோ நடந்த அனைத்தையும் கீர்த்தியிடம் தெரியப்படுத்தியிருக்க ஏனோ கீர்த்திக்கு துவாரா அனியை மன்னித்ததில் துளியும் உடன்பாடில்லை என்றாலும் அவள் துவாராவின் வாழ்வில் இல்லையென்பதே பெரும் நிம்மதி தந்தது.

...............................................................

அன்று துவாரா, யாழ் ஆகியோர் கௌஹாத்தியை விட்டுச் சென்றதும் மறுநாள் வழக்கம் போல் அனேஷியா அண்ட் டீம் அவர்களின் வேலையில் மூழ்கினர். லோகேஷிற்கு அனேஷியா மீதிருந்த பொறாமை, வஞ்சம் எல்லாம் முற்றிலும் மறைந்திருந்தது. உண்மையில் இப்போது அவர்கள் அறுவரும் நல்ல நண்பர்களாகி இருந்தனர். அனியும் ஒரு உயர்ந்த அதிகாரி என்னும் நிலையைத் தவிர்த்து நல்ல நண்பர்கள் போலவே அவர்களிடம் பழகினாள். இந்த நாட்களில் நிறைய பழங்குடியின மக்களைச் சந்தித்து அவர்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, உடல்நிலை போன்ற தகவல்களை எல்லாம் சேகரித்தனர்.

முன்பு சொன்னதைப் போல் பழங்குடியின மக்கள் பெரும்பாலும் தாய்வழி சமூகமாகத் தான் இருந்தார்கள். (தாய்வழி சமூகம் என்பது உறவுகளை தாயின் வழியில் கொண்டாடுவது. நாமெல்லாம் தந்தை வழியில் பெரியப்பா, சித்தப்பா அத்தை ஆகியோருக்குத் தானே முன்னுரிமை தருகிறோம்? மாறாக அவர்கள் அன்னை வழியில் கொண்டாடுவார்கள். இங்கே எவ்வாறு குடும்பத் தலைவன் இருக்கிறாரோ அங்கே குடும்பத் தலைவி இருப்பார். இதுபோலொரு நடைமுறை கேரளாவிலும் சிலர் பின்பற்றுகிறார்கள். மேலும் சொத்துக்கள் பெண்களின் வழியிலே கைமாறும். மேலும் விவரங்களுக்கு matrilineal, matriarchy பிரவுஸ் செய்யவும்) இவர்களின் ஆராய்ச்சிக்கு அருகேயுள்ள மேகாலயா மாநிலத்தில் வசிக்கும் 'காஷி' இன மக்களையும் திவேஷின் உதவியுடன் சந்தித்து தரவுகளைச் சேகரித்தனர்.

என்ன தான் பகலில் வேலை வேலை என்று அலைந்தாலும் இரவில் வழக்கம் போல் கேம்ப் பையர் போடுவது விளையாடுவது என்று கழிந்தது. தினமும் இரவு செபா ஜெசியோடும் துஷி ரேஷோடும் கடலை வறுத்துக்கொண்டு தான் இருந்தனர். முதல் நாள் திவேஷுடன் சரியாகப் பேசமுடியாமல் தவித்த அனேஷியா மறுநாள் முதல் நன்கு பேசினாள். கூடவே சிறிது கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்க திவே அவளை மேலும் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அனி அவன் காதலைப் பற்றி அனைத்தையும் கேட்டுத் தெரிந்துக்கொண்டாள். உண்மையில் அனேஷியா யாரையும் இதுவரை காதலிக்கவே இல்லை. அவளுக்கு பள்ளி முடிந்து கல்லூரி என்று செல்ல அப்போது தான் துவாராவின் உறவைப் பற்றித் தெரியஅதற்குள் அந்தச் சம்பவம் பிறகு வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டாள். அன்னையின் உடல்நிலை பற்றி அறிந்து மீண்டும் சென்னை வந்து அவரின் இழப்பு, குற்றயுணர்ச்சி, வலி, வேதனை என்று காலம் ஓடிவிட்டது. அவளின் அனைத்து கவலைகளுக்கும் மருந்தாகவே தன்னுடைய பணியில் கவனம் செலுத்த இந்த வயதிலே இவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்துவிட்டாள். இப்போது தான் மனம் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதியில் இருக்கிறது. இப்போது திவேஷின் காதலை எப்படி எடுத்துக்கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை.

டெஸ்பூர் சென்ற மறுதினமே கீர்த்தியை அழைத்தவன் இங்கு நடந்த அனைத்தையும் தெரியப்படுத்திவிட்டான். ஏனோ தன் அண்ணன் நல்ல மகனாகத் திரும்பி வருவான் என்று தீர்க்கமாக நம்பினாள்.

ஹேமா - மௌனி, நித்யா -விவான், இளங்கோ -பாரு, ஏன் ஜிட்டு - இதி வரை அனைவரும் ஒரு நிறைந்த காதல் ஜோடிகளாகவே வலம் வந்தனர். துவாரா, துஷி செபா மூவரும் தங்கள் ஜோடிகளை அதிகம் மிஸ் செய்தாலும் இந்தச் சுற்றுலாவை நன்கு கொண்டாடினர். அவர்களுக்கு கம்பெனியாக யாழ் மற்றும் இளா இருந்தனர். விவி, தியா இருவரும் சித்து, மிரு ஆகியோரின் சம்மதத்திற்காகக் காத்திருந்தாலும் துவாரா அண்ட் கோவோடு ஜிட்டுவை சீண்டிக்கொண்டும் நித்யா விவானை கலாய்த்துக் கொண்டும் இருந்தனர்.

அன்றையப் பொழுது நன்கு ஊர் சுற்றியவர்கள் மறுநாள் அஸ்ஸாமின் ஒரு புகழ்பெற்ற இடமான 'நகர்காட்டியா'வுக்குச் சென்றனர். இவ்விடம் டீ டவுன் (தேநீர் நகரம்) என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியின் நீட்சி அவர்களின் வரலாறு ஆகியவற்றால் இன்றளவும் இந்தியாவில் இமையமலையை ஒட்டி தேயிலை தோட்டங்கள் இருக்கிறது. அது ஷிம்லா ஆகட்டும் டார்ஜிலிங் ஆகட்டும் இல்லை அசாம் ஆகட்டும் எங்கெல்லாம் இல்லை எவ்வாறெல்லாம் இந்தியாவையும் இந்தியர்களையும் சுரண்டலாம் என்று யோசித்தவர்களின் முயற்சி தான் இந்தத் தேயிலைகள். ஒவ்வொரு தேயிலைகளுக்குப் பின்னும் வரலாற்றில் ரத்தக்கறை படிந்த சம்பவங்கள் இருக்கிறது என்பது மறுக்கப்படாத உண்மை. விவானுக்கு இங்கு எப்படி எஸ்டேட் மெயின்டெய்ன் செய்கிறார்கள் என்று அறிய ஆவல். எல்லோரும் சேர்ந்து அந்தத் தோட்டத்தை நன்கு சுற்றினார்கள். விவான் அவன் தொழிலுக்குத் தேவையான சந்தேகங்கள் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டான். இன்றோடு அஸ்ஸாமில் மட்டும் அவர்களது ஆறாவது நாள் நடக்கிறது. அநேகமாக இதுவே இந்தப் பயணத்தில் இவர்களது கடைசி பார்வையிடும் இடமாக இருக்கப் போகிறது. பின்னே இங்கிருந்து மீண்டும் கௌஹாத்திக்கு நானூற்றி ஐம்பது கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இன்று இரவோடு இரவாகவே பயணப்பட வேண்டும். அப்போது தான் நாளை மாலை ஐந்து மணிக்கு கெளஹாத்தியில் விமானம் பிடித்து இரவு ஒன்பது மணிக்குள் சென்னை வந்தடைய முடியும். நாளை ஞாயிற்றுக்கிழமை வேறு. துவாரா, விவி, செபா ஜிட்டு, இளங்கோ, மௌனி போன்ற வேலையில் இருப்பவர்கள் தங்களின் பணியில் சேரமுடியும். மொத்தமாக ஒன்பது நாட்கள் போனதே யாருக்கும் தெரியவில்லை. போன வெள்ளிக்கிழமை இரவு சென்னை எழும்பூரில் புறப்பட்டவர்கள் இந்த ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு மீண்டும் சென்னை சேரவேண்டும்.

மதியமே அந்த எஸ்டேட்டைப் பார்வையிட்டு முடித்ததும் பெண்கள் எல்லோரும் கோராஸாக ஷாப்பிங் செல்ல வேண்டும் என்று கேட்க உண்மையில் ஆண்களுக்கும் இங்கே வந்து சென்றதிற்கு நினைவுச்சின்னமாக ஏதேனும் வாங்க ஆசை கொண்டனர்.

"அப்போ நாளையோட நாம எல்லோரும் திரும்பவும் பழைய லைஃபுக்குள் போகணுமா?" என்று சோகமாய் வினவினாள் இதி.

"என்ன பண்ண? அதுக்குன்னு காலத்திற்கும் இங்கேயே தங்க முடியுமா என்ன?" என்று பதில் கேள்விக் கேட்டான் இளங்கோ.

"எல்லோருக்கும் வேலை இருக்குல்ல? உன் ஆள் தான் கவர்மெண்ட் எம்ப்லாய். மாசம் பிறந்தாலே காசு வரும். நாங்க எல்லாம் சாப்ட்வேர்ல இருக்கோம் தாயி" என்றான் செபா.

"டேய் நாங்க மட்டும் என்ன? பிரைவேட் காலேஜ்ல தானே ஒர்க் பண்றோம்" என்றான் விவி, துவாராவையும் தன்னுடன் சேர்த்து.

"ஹலோ பாஸ் அப்போ எங்க கதியெல்லாம் என்ன? நானும் தியாவும் சொந்தமா பிசினெஸ் பண்றோம் தான். ஆனா நாங்க போகலை எல்லோரும் டிமிக்கி கொடுத்திடுவாங்க" என்றான் ஹேமா.

"அப்போ நம்ம கேங்கிலே ரொம்ப சொகுசா வாழறது ஜிட்டு தான்" என்றான் இளங்கோ,"வருஷம் ஒரு கோடிப்பு ஒரு கோடி" என்று வார,

"ஒரு கோடி? நீ பார்த்த? ஒரு கோடி சம்பாதிச்சா நான் ஏன்டா என் சொட்டை தலை ஹெட் மேனேஜருக்கு கூழைக்கும்பிடு போட்டுட்டு இருக்கேன். டபிள்யூ டபிள்யூ டபிள்யூ ஜிட்டு டாட் காம்னு பிச்சுமணி வடிவேல் மாறி பைக்லேயே தோள் மேல கால் போட்டு போக மாட்டேனா? போடா வென்று" என்றான் ஜிட்டு.

எல்லோரும் அதில் சிரிக்க,"நம்ம கேங்கிலே முதலாளினா அது நம்ம விவான் தான்" என்றான் ஜிட்டு. அவனைத் திரும்பி முறைத்தவன்,"கரெக்ட் நான் அதிகம் சம்பாதிக்கிறேன் இல்ல இல்ல சம்பளம் கொடுக்கிறேன் தான். ஆனா அதுக்கு நான் படும் கஷ்டம் எனக்குத் தான் தெரியும். உண்மையிலே இந்த டூரை அரேஞ் பண்ண இன்னொரு முக்கியமான காரணம் என் பெர்சனல் லைஃப் தான். நித்யா கூடவும் இளா கூடவும் நான் ஸ்பென்ட் பண்ற டைம் ரொம்ப கம்மிடா. அதும் எப்போ அப்பா உடம்பு சரியில்லாம படுத்தாரோ மொத்த பிஸினஸும் நான் ஒருத்தன் தான் பார்க்கிறேன். வீட்டுக்கு வீடு வாசப்படி மாதிரி அவனவன் சம்பாதிக்கறதுக்கு ஏத்த பிரச்சனை அவனவனுக்கு இருக்கு. எஸ் நான் கோடிகள்ல தான் டர்ன் ஓவர் பண்றேன். ஆனா எனக்கு லட்சங்களில் செலவு இருக்கு. இந்த எட்டு நாளளோட வேலையை நான் சரிபண்ணி டேலி பண்ண எனக்குப் பத்து நாளாகும். அதுக்குள்ள அந்த டென் டேஸ் வேலை நிற்கும். எனக்குன்னு இல்ல நம்மளில் எல்லோருக்கும் அந்த மாதிரியான ஒரு நிலை இருக்கு"... read 59(2)
 
இந்த மாதிரி ஒரு டூர் போறது நாம கண்ட நல்ல கனவு மாதிரி....... கனவு முடிந்து எழுந்தாலும் அதன் இனிமை நம் மனதை நிறைக்கும்..... அது போல இந்த பயணத்தின் இனிமை என்றென்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும் (y)(y)
 
இந்த மாதிரி ஒரு டூர் போறது நாம கண்ட நல்ல கனவு மாதிரி....... கனவு முடிந்து எழுந்தாலும் அதன் இனிமை நம் மனதை நிறைக்கும்..... அது போல இந்த பயணத்தின் இனிமை என்றென்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும் (y)(y)
wow super i like the comparison❤ and i feel overwhelmed! tq?
 
Top